தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

இந்தியாவின் ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி


இந்தியா : 2008-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு
இந்தியப் பொருளாதார வளர்ச்சி....


இந்தியப் பொருளாதாரம்.... 1985-ஆம் ஆண்டில், 200 பில்லியன் டாலராக இருந்தது.
அது வளர்ச்சி பெற்று, 1995-ஆம் ஆண்டில் 400 பில்லியன் டாலரை அடைந்தது.
மேலும் வளர்ச்சி பெற்று, 2004-ஆம் ஆண்டில் 700 பில்லியன் டாலரை அடைந்தது.
வளர்ச்சி வேகம் மேலும் அதிகரித்து, 2006-ஆம் ஆண்டில் 800 பில்லியன் டாலரை அடைந்தது.
2007-ஆம் ஆண்டில், 1 டிரில்லியன் (1000 பில்லியன்) டாலரை தொட்டது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி....
(பில்லியன் டாலரில்)
1985....200
1995....400
2004.....700
2005.....800
2007....1000இந்தியப் பொருளாதார வளர்ச்சி....


1985---200 பில்லியன் டாலர்
1995---400 பில்லியன் டாலர்
2004---700 பில்லியன் டாலர்
2006---800 பில்லியன் டாலர்
2007---1000 பில்லியன் டாலர்


உலகின் டாப் 15 பொருளாதார நாடுகள் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில்

வரிசை எண் 1980 1990
1. அமெரிக்கா அமெரிக்கா
2. ஜப்பான் ஜப்பான்
3. ஜெர்மனி ஜெர்மனி
4. பிரான்ஸ் பிரான்ஸ்
5. இங்கிலாந்து இத்தாலி
6. இத்தாலி இங்கிலாந்து
7. சைனா கனடா
8. கனடா ஸ்பெயின்
9. ஸ்பெயின் பிரேசில்
10. அர்ஜெண்டினா சைனா
11. மெக்ஸிகோ ஆஸ்திரேலியா
12. நெதர்லாண்ட் இந்தியா
13. இந்தியா நெதர்லாண்ட்
14. சவுதி அரேபியா தென்கொரியா
15. பிரேசில் மெக்ஸிகோ

1980-ஆம் ஆண்டில், இந்தியா உலகப் பொருளாதாரப் பட்டியலில், 13-ஆம் நிலையில் இருந்தது. ஆனால் 1990-ஆம் ஆண்டில் 12-ஆம் நிலைக்கு முன்னேறியது.


உலகின் டாப் 15 பொருளாதார நாடுகள் 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில்

வரிசை எண் 2000 2007
1. அமெரிக்கா அமெரிக்கா
2. ஜப்பான் ஜப்பான்
3. ஜெர்மனி ஜெர்மனி
4. இங்கிலாந்து சைனா
5. பிரான்ஸ் இங்கிலாந்து
6. சைனா பிரான்ஸ்
7. இத்தாலி இத்தாலி
8. கனடா ஸ்பெயின்
9. பிரேசில் கனடா
10. ஸ்பெயின் பிரேசில்
11. மெக்ஸிகோ ரஷ்யா
12. தென்கொரியா இந்தியா
13. இந்தியா தென்கொரியா
14. ஆஸ்திரேலியா மெக்ஸிகோ
15. நெதர்லாண்ட் ஆஸ்திரேலியா

2000-ஆம் ஆண்டில், இந்தியா பொருளாதாரப் பட்டியலில், 13-ஆம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், 2007-ஆம் ஆண்டு மறுடியும் 12-ஆம் நிலைக்கு வந்தது.

இந்த செயற்கையான உலகில், இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம் !


27 ஆண்டு கால உலகப் பொருளாதார மாற்றம்.... டாப் 15 நாடுகள் 1980.... 2007...

வரிசை எண் 1980 2007
1. அமெரிக்கா அமெரிக்கா
2. ஜப்பான் ஜப்பான்
3. ஜெர்மனி ஜெர்மனி
4. பிரான்ஸ் சைனா
5. இங்கிலாந்து இங்கிலாந்து
6. இத்தாலி பிரான்ஸ்
7. சைனா இத்தாலி
8. கனடா ஸ்பெயின்
9. ஸ்பெயின் கனடா
10. அர்ஜெண்டினா பிரேசில்
11. மெக்ஸிகோ ரஷ்யா
12. நெதர்லாண்ட் இந்தியா
13. இந்தியா தென்கொரியா
14. சவுதி அரேபியா மெக்ஸிகோ
15. பிரேசில் ஆஸ்திரேலியா

1980-ஆம் ஆண்டில், 7-ஆம் நிலையில் இருந்த சைனா 4-ஆம் நிலைக்கு முன்னேறி உள்ளது. சைனா முன்னேறிய அளவு ஏன் இந்தியா முன்னேறவில்லை?

இந்தியர்கள் பிறப்பிலேயே அறிவு ஜீவி !


இந்தியா - ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம், 1947-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, ஒரு டிரில்லியன் டாலர் அல்லது 1000 பில்லியன் டாலர், அதாவது ரூபாய் 50 லட்சம் கோடி என்ற மிகப்பெரிய உன்னதமான நிலையை அடைந்தது.

இந்தியா 2007
..... 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடு
..... 1 டிரில்லியன் பொருளாதார நாடு.இந்தியா - ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களில், விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இந்த ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார சாதனையை இந்தியா நிகழ்த்தி உள்ளது.

இந்த இமாலய வெற்றிக்குப் பின்னால் கோடானு கோடி இந்தியர்களின் சீரிய சிந்தனை அயராத உழைப்பு மற்றும் தியாகம் உள்ளது.

1 டிரில்லியன் டாலர் இந்தியா


இந்தியா ஒரு பில்லியன் மக்கள் தொகை நாடு... ஒரு டிரில்லியன் பொருளாதார நாடு....

இந்த உலகத்தில் உள்ள 200 நாடுகளில் 12-வது நாடாக, இந்தியா 1 டிரில்லியன் டாலர் அல்லது 1000 பில்லியன் டாலர், அதாவது ரூபாய் 50 லட்சம் கோடி என்ற உயர்ந்த நிலையைப் பொருளாதாரத்தில் அடைந்து உள்ளது.

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டு, உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய இந்த நிகழ்வு இந்தியாவில் நிகழ்ந்து உள்ளது.


ஏப்ரல் 25 இந்தியப் பொருளாதார சாதனை நாள்.
ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைக் கொண்டாடுவது போல், இனி வரும் ஆண்டுகளில் , இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைந்த அந்த நாளை ஏப்ரல் 25- ஆம் தேதியை பொருளாதார சாதனை நாளாகக் கொண்டாட முயற்சிப்போம்.
கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு SMS -ல் செய்தித் துளி அனுப்புவோம்


அமெரிக்கா... ஜப்பான்... இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா அமெரிக்காவை விட 38 ஆண்டுகளும், ஜப்பானை விட 27 ஆண்டுகள்தான் பின்தங்கி உள்ளது.


ஜெர்மனி .. பிரான்ஸ்..இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா ஜெர்மனியை விட 20 ஆண்டுகளும், பிரான்ஸை விட 18 ஆண்டுகள்தான் பின்தங்கி உள்ளது.


இத்தாலி... இங்கிலாந்து...இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா இத்தாலியை விட 17 ஆண்டுகளும், இங்கிலாந்தை விட 17 ஆண்டுகள்தான் பின்தங்கி உள்ளது.சைனா.. ஸ்பெயின்.. இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா சைனாவை விட 9 ஆண்டுகளும், ஸ்பெயினை விட 3 ஆண்டுகள்தான் பின்தங்கி உள்ளது.


கனடா..பிரேஸில் .. இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா கனடாவை விட 2 ஆண்டுகளும், பிரேஸிலை விட 1 ஆண்டுதான் பின்தங்கி உள்ளது.


ரஷ்யா....இந்தியா
ஒரு டிரில்லியன் டாலர்க் குறியீட்டை அடைந்த நாளில் இந்தியா ரஷ்யாவை விட 1 ஆண்டுதான் பின்தங்கி உள்ளது.


2008 - ல் வளரும் இந்தியா
2008 - ஆம் ஆண்டில் , இந்தியா ஒரு வளரும் நாடு. இந்தியப் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ரூபாய் 50 லட்சம் கோடி அளவுக்கு மொத்தமாக பொருள் உற்பத்தி செய்யும் உயரிய பொருளாதாரம்.2025-ல் வளர்ந்த இந்தியா
இந்தியப் பொருளாதாரம் இன்றைய 1 டிரில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து 2025 ம் ஆண்டில் 5 மடங்கு வளர்ச்சி அடைந்து 5 டிரில்லியன் டாலர் அதாவது ரூபாய் 250 லட்சம் கோடி என்ற வலுவான நிலையை அடையும் என்று பல உலக அரிஞர்கள் கணித்து உள்ளனர்.


2050 -ல் வல்லரசு இந்தியா

2050 - ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் இன்று உள்ளதைப் போல் 28 மடங்கு வளர்ச்சி அடைந்து 28 டிரில்லியன் டாலர் அதாவது ரூபாய் 1400 லட்சம் கோடி என்ற மிகப் பெரிய பொருளாதார நிலையை அடைய உள்ளது.வலிமையான பாரதம்

2014 - ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும்.
2025 - ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும்.
2050 - ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும்.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி
அமெரிக்கா நாடு 1776 ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் 1969 ஆம் ஆண்டுதான் அமெரிக்கா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைந்தது.
1970 ஆம் ஆண்டுகளில் 1..2...3...டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்து வளர்ந்த நாடாக உருமாறியது. அதாவது அமெரிக்கா பின் தங்கிய நாடாக இருந்து வளர்ச்சி அடைந்த நாடாக மாற எடுத்துக் கொண்ட கால அவகாசம் 200 ஆண்டுகள்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

இந்தியா 1974 - ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது. 2007- ஆம் ஆண்டு இந்தியா 1 டிரில்லியனுக்கு மேல் பொருளாதார வளர்ச்சி கண்டு வளர்ந்த நாடாக உருமாறியது. இந்தியா பின் தங்கிய நாட்டில் இருந்து வளர்ச்சி அடைந்த நாடாக மாற எடுத்துக் கொண்ட கால அவகாசம் 60 ஆண்டுகள் மட்டுமே.


இன்றைய இந்திய இளைஞனின் வியர்வைத் துளி.. நாளைய இந்தியாவின் வளர்ச்சி

கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ள இன்றைய இந்திய இளைஞனிடம் சிந்தனை இருக்கிறது. செயல் இருக்கிறது. இதைக் கொண்டு சாதாரண சாதனையைதான் செய்ய முடியும். இன்றைய இந்திய இளைஞர்களிடம் தேவை .. மாறுபட்ட சிந்தனை . மாறுபட்ட செயல்.
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in