இந்தியப் பொருளாதார வளர்ச்சி

இந்தியா: 2050 ஆம் ஆண்டில் 28 டாலர்ப் பொருளாதாரம்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி... அவர்களை உயர்த்தப் போராடு..
" தாய்நாட்டின் சேவைக்குத் தயார் செய்து கொள்வது என்பதே மாணவர்களின் உயரிய இலட்சியமாக இருக்க வேண்டும். தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்வதுதான், ஒருவன் தன் தேசத்துக்கு செய்யக்கூடிய சிறந்த சேவையாகும் -- மகாத்மா காந்தி


வலிமையான பாரதம்

2014-ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும்
2025-ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும்
2050-ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும்


OPPORTUNITYNOWHERE

மேலே உள்ள வார்த்தையைப் படியுங்கள் ...
நன்றாகப் படியுங்கள்.

OPPORTUNITY NO WHERE

"வாய்ப்புகள் இல்லை" என்றுதானே படித்தீர்கள். அது சரி! இந்த உலகில் முன்னேற வாய்ப்புகள் இல்லை !! அப்படித்தானே ..

Lucky means who gets the opportunity ...



OPPORTUNITY NO WHERE
"வாய்ப்புகள் இல்லையா ?
இந்த உலகில் முன்னேற வாய்ப்புகளே இல்லையா?
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை இந்த பூமியில் !


வாய்ப்புகள் இருக்கின்றன.
OPPORTUNITY NOW HERE

" வாய்ப்புகள் இருக்கின்றன " என்று படித்தீர்களா ? அதுவும் சரிதான்
இந்த உலகில் முன்னேற வாய்ப்புகளே இன்றே, இப்பொழுதே உள்ளது !!
வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேற்றம் நிச்சயம்.
Winner means who use the opportunity ..


வாய்ப்புகள் இருக்கிறதா ? இல்லையா ?
OPPORTUNITY NOWHERE

OPPORTUNITY NO WHERE --> முன்னேற வாய்ப்புகள் இந்தியாவில் இல்லை !

OPPORTUNITY NOW HERE --> முன்னேற வாய்ப்புகள் இந்தியாவில் இருக்கிறது !


வாய்ப்புகள் இல்லை
உலகம் என்ற பாத்திரத்தில் , வெற்றி என்ற தண்ணீரைப் பருக வாய்ப்புகள் இல்லை ?
காகம் போன்ற மனிதர்கள் மெதுவாக.. பழுதான நோக்கத்தோடு பலப்பல முயற்சி என்ற பலப்பல கூழாங்கற்களைக் கொண்டு சிறிய சிறிய முயற்சி மற்றும் செயல்களின் மூலம் வெற்றியை மெதுவாக அடைகிறார்கள்.
அத்தகைய முயற்சியைக் கூட செய்யாதவர்கள் தோற்றுவிடுவார்கள்.


வாய்ப்புகள் இருக்கின்றன.
உலகம் என்ற பாத்திரத்தில் , வெற்றி என்ற தண்ணீரைப் பருக வாய்ப்புகள் இன்றே, இப்பொழுதே இருக்கின்றன.

ஸ்ட்ரா காகம் போன்ற மனிதர்கள் வேகமாகவும், தெளிவான நோக்கத்தோடும், ஒரே சிந்தனையோடும் பெரிய பெரிய முயற்சி மற்றும் செயல்களின் மூலம் வெற்றியை வேகமாக அடைகிறார்கள்.
வெற்றிக்கனியை வேகமாக அவர்களின் சிந்தனை வேகத்தால் அடைந்து விடுகிறார்கள்.


இளைஞனே உலகில் வாய்ப்புகள் இல்லை.

இளைஞனே "கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய நூற்றாண்டு சிந்தனையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் கூழாங்கல் காகம் போன்ற பல மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள்.


இளைஞனே உலகில் வாய்ப்புகள் இருக்கின்றன.

அதே சமயம் " சிந்தனையோடு கூடிய கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை " என்ற இன்றைய நூற்றாண்டு சிந்தனையோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் "ஸ்ட்ரா காகம்" போன்ற சில ம் மனிதர்களும் நம்மை சுற்றி இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த ரகம் ?
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் !!


இந்தியா 2050 -28 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

அடுத்த 41 ஆண்டுகளில் , அதாவது 2050-ல் ஆண்டுக்குள், இந்தியப் பொருளாதாரம் குறைந்தபட்சம் 28 டிரில்லியன் டாலர் என்ற குறியீட்டை அடையும் என்றும், அதிகபட்சமாக 37 டிரில்லியன் என்ற குறியீட்டை அடையும் என்றும், தெளிவாக கணித்து உள்ளனர்.


இந்திய இளைஞன் முன்னேற 28 மடங்கு வாய்ப்பு

இத்தகைய வாய்ப்பு, இதுவரை இந்த இந்தியாவில் வாழ்ந்த நேற்றைய இளைஞர்களுக்கு கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பு.
இந்த மிகப் பெரிய வாய்ப்பை ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக இன்றைய கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள இளைஞர்கள் முதலில் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்திய இளைஞன் முன்னேற 28 மடங்கு வாய்ப்பு

ஒவ்வொரு இந்திய இளைஞனும் தனக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய வாழ்க்கை வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


சராசரி இந்திய இளைஞனின் அடிமன எண்ண ஓட்டங்கள்....

இன்றைய சராசரி இந்திய இளைஞர்கள் பலர் மனதளவில் முடங்கி போய் பத்தாம் பசலி எண்ணத்தில் திளைத்து உள்ளனர். கீழ்கண்ட எண்ணங்களே பல இளைஞர்களின் மனதில் வேரூன்றி உள்ளது.

சிறுகக் கட்டிப் பெருக வாழ் !
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து !!
தனிமரம் தோப்பாகாது !!
மெதுவான நிதானமான வாழ்க்கை வெற்றியைத் தரும் !!
ஊரோரு ஒத்து வாழ் !
பொறுத்தார் பூமி ஆள்வார் !!
கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை !!


இந்திய இளைஞனின் சின்ன சின்ன ஆசை.
அத்தகைய அடிமனத்தில் புதைந்து உள்ள எண்ணத்தின் விளைவு, இந்திய சராசரி இளைஞனுக்கு பெரிய அளவில் சிந்திப்பதிலேயே முதலில் தயக்கம். அவ்வாறு பெரிய அளவில் சிந்திக்கும் சில இளைஞர்களுக்கு பெரிய அளவில் கனவு காண்பதில் தயக்கம். பிறகு பெரிய அளவில் எண்ணக் குதிரையை தினம் தினம் ஓட விடுவதிலே தயக்கம்.


இந்திய இளைஞனின் தயக்கம்.......
இதையெல்லாம் தாண்டி வந்தால் பெரிய செயல்களில் முழு மூச்சாக, மன ஈடுபாட்டோடு, சரியான பாதையில், சரியான வேகத்தில் செல்வதில் மிகப் பெரிய தயக்கம்.

இதையெல்லாம் தாண்டி வந்தால் பெரிய சிந்தனையை,பெரிய செயல்களை, பெரிய சாதனைகளாக மாற்ற முயற்சி எடுப்பதில் தயக்கம் .. தயக்கம் .. தயக்கம் .. இத்தயக்கம் மனம் சார்ந்தது.


இந்திய இளைஞனின் தயக்கம்.......
இன்றைய இந்திய சராசரி இளைஞனின் மனம் ஊனமாகி இருக்கிறது. இந்த மன ஊனத்தை கடந்து, கற்பனைத் தடைகளை விட்டு வெளிவந்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வல்லரசு இந்தியாவை உருவாக்க முடியும்.


உடல் ஊன இந்திய இளைஞர்கள்

உடல் அளவில் ஊனமுற்றவர்களை இந்த சமுதாயம் உடல் ஊனமுற்றவர்கள் என்று அழைக்கிறது.அதே போல் மனது அளவில் ஊனமுற்றவர்களை மனம் ஊனமுற்றவர்கள் என்று ஏன் அழைக்கத் தயங்குகிறது ?

இன்றைய இந்திய இளைஞர்களில் உடல் அளவில் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 5 % க்கும் குறைவு. ஆனால் மன அளவில் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 95 % க்கும் சற்று அதிகம்.


மன ஊன இந்திய இளைஞர்கள்
மனது அளவில், என்னால் முடியாது.. நான் ஒரு சாதாரண மனிதன் .. நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன் ...
நான் ஒரு நடுத்தர பொருளாதாரக் குடும்பத்தை சார்ந்தவன் ...நான் சாதாரண படிப்பு படித்தவன் ...

நான் கிராமத்தை சார்ந்தவன் ...நான் கான்வெண்ட்டில் படிக்கவில்லை ... என்று ஒவ்வொரு நாளும் எதிர் மறையான எண்ணங்களை நமது இளைஞர்கள் மனதிற்குக் கொடுத்து கொண்டே இருக்கின்றனர்.
விளைவு, பல இந்திய இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி உதயமாகாமல்,
ஆரம்பக் கட்டத்திலேயே அஸ்தமனம் ஆகிவிடுகிறது.


5...4...3...2....1

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் அபரிதமான வளர்ச்சி அந்த நாட்டில் உள்ள இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வையில்தான் உள்ளது.

ஆனால் சராசரி இந்திய இளைஞர்களின் வாழ்க்கைக் கனவு 5...4...3...2....1 என்ற குறுகிய எல்லை கட்டிய நிலையிலேயே முடிந்து விடுகிறது.



அது என்ன 5...4...3...2....1 ?
ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட்டை வானத்தில் இந்தியா அனுப்பும் போது சொல்லும் கவுண்ட் டவுன் போல் உள்ளதே என்பதுதானே உங்கள் கேள்வி ?
இதன் பொருள்

5... ஐந்து இலக்க சம்பளம்
4... நான்கு சக்கர வாகனம்
3... மூன்று அறைகள் கொண்ட வீடு
2... இரண்டு குழந்தைகள்
1... ஒரு வாழ்க்கைத் துணை


வேண்டும் உயர்ந்த இலட்சியம்
இலட்சியம் தான் வாழ்க்கை . இலட்சியம் இல்லாத வாழ்க்கை இறப்புக்கு சமானம்.உங்கள் இலட்சியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் நோக்கம், அடுத்தவருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.உங்கள் எண்ணம், நாட்டம் எதுவென்று முதலில் பாருங்கள். அவற்றை சீர்தூக்கி பார்த்து உங்கள் நோக்கம் எதுவென்று முடிவு செய்யுங்கள். அது போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், இலட்சியத்தை அடையும் பாதையில் வீறு நடை போட்டு செல்லுங்கள். உங்கள் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் தடைகள் தானாக உடையும். வெற்றி உங்களை தேடி வரும்.
- சுவாமி விவேகானந்தர்


5...4...3...2....1...0

நேற்றைய மற்றும் இன்றைய இந்திய இளைஞனின் சாதாரணக் கனவு

5... ஐந்து இலக்க சம்பளம்
4... நான்கு சக்கர வாகனம்
3... மூன்று அறைகள் கொண்ட வீடு
2... இரண்டு குழந்தைகள்
1... ஒரு வாழ்க்கைத் துணை
0... நாட்டைப் பற்றி நினைக்க நேரம் இல்லை.


37....28....5...1...1...0...0

நாளைய இந்திய இளைஞனின் அசாதாரணக் கனவு

37.. மடங்கு 2050-ல் இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவு மற்றும் செயல் வெறி

28.. மாடிகள் கொண்ட பல அடுக்கு மாடி வீடு கட்ட வேண்டும் என்ற கனவு.
5....ஐந்து இலக்க சம்பளம் ஆயிரம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்ற கனவு.
1... ஒரு குழந்தை.
1.... ஒரு வாழ்க்கைத் துணை
0... கெட்ட எண்ணம் இல்லாத வாழ்க்கை
0... கெட்ட செயல்கள் செய்யாத வாழ்க்கை


ஆக்க வழியில் செயல்.
இந்த வல்லரசு இந்தியா 2050 என்ற ஆயிரம் மைல்க்கல் பயணத்திற்கு இந்திய இளைஞர்கள் தயாரா?
சரியான பாதையில் முதல் அடி எடுத்து வைக்க தயாரா ?
21-ம் நூற்றாண்டில் உலக அளவில் இந்திய இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்பு கனிகளை சுவைக்க தயாரா ?
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.


வல்லரசு நாடுகள் உருவான முறை.
இன்று வல்லரசு நாடுகளாக உள்ள பல நாடுகளின் வளர்ச்சி சரித்திரத்தை புரட்டி பார்த்தால் ஒரு உண்மைத் தெளிவாக தெரியும்.
அத்தகைய நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல ஆயிரகணக்கான தனிமனிதனின் மாறுபட்ட சிந்தனை, மற்றும் மாறுபட்ட செயல்பாட்டின் வெளிப்பாடேஅந்த நாடுகள் கண்ட மிகப்பெரிய வளர்ச்சிக்கான ஆணிவேர்..


அத்தகைய பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இளைஞர்களை பல்வேறு வகைகளில் ஊக்குவித்ததின் விளைவாக , மாறுபட்ட செயல்கள் வெளியாகின. இதுவே உலக சாதனையாக பரிணமித்தது.
குறிப்பாக , அமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு பின்னால் 50 லட்சம் இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை மற்றும் செயல்பாடே உள்ளது.


அமெரிக்கா -மில்லினர்களின் எண்ணிக்கை

அமெரிக்கா 1900-ஆம் ஆண்டு ஒரு வளரும் நாடு. 2000- ஆம் ஆண்டு ஒரு வல்லரசு நாடு. இந்த மாற்றம் 100 ஆண்டுகளில் நிகழ்ந்து உள்ளது. இந்த வளர்ச்சிக்கு பின்னால் பல லட்ச இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை மற்றும் சாதனை உள்ளது.

1900 - ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 5000 மில்லினர் பணக்காரர்கள் இருந்தனர்.

2000 - ஆம் ஆண்டில் 50 லட்சம் மில்லினர் பணக்காரர்கள் இருந்தனர்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.