சாதாரண, அசாதாரண நாள்.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் !

மனிதா .... மனிதா .....

22 வருடம் 8 மணி நேரம் தூக்கம்

2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல்

2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு

2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு

22 வருடம் 8 மணி நேரம் வேளை

8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம்

3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம்

1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம்

65 வருடம் 24 மணி

சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு

நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!!


சாதாரண நாள்

சாதாரண மனிதன் வாழ்வில். 24 மணி நேரம் கொண்ட ஒரு இனிய நாளில், பலப்பல சம்பவங்கள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் அமைந்து விடுகிறது. ஆகவே, அது ஒரு சாதாரண நாள்


அசாதாரண நாள்

அதே சமயம், சாதனையாளனின் வாழ்வில், 24 மணி நேரம் கொண்ட ஒரு இனிய நாளில், பலப்பல சாதனைகள் மற்றும் சிலச்சில சம்பவங்கள் நிகழ்கின்றன.

சில சமயம் சாதனையாளனின் வாழ்வில், சிலச்சில சாதனைகள் மற்றும் பலப்பல சம்பவங்களின் தொகுப்பாக அமைகிறது. ஆகவே அது ஒரு அசாதாரண நாள்.


சாதாரண நாள்

மனித வாழ்க்கையில், பலப்பல சாதாரண நாட்கள் வரும் போகும். சாதாரண நாளில் சம்பவங்கள் பல செய்ய எந்தவிதமான தனிமனித முயற்சியும் மற்றும் பயிற்சியும் தேவை இல்லை.

ஒரு நாளில், பலப்பல சம்பவங்களை செய்ய மனிதனுக்கு பகுத்து உணர்ந்து செய்யும் பகுத்தறிவோ அல்லது ஆறாவது அறிவோ அல்லது நேர நிர்வாகமோ தேவை இல்லை !

ஒரு நாளில், பலப்பல சம்பவங்களை செய்ய மனிதனுக்கு நேர நிர்வாகம் தேவை இல்லை !


அசாதாரண நாள்

தனி மனித வாழ்க்கையில் சிலச்சில அசாதாரண நாள் தான் வரும். அதுவும், அசாதாரண நாள் தானாக வராது. இந்திய இளைஞனே, நாம் தான் அத்தகைய அசாதாரண நாளை உருவக்கிக் கொள்ள வேண்டும் !

மனிதன், தன்னுடைய பகுத்தறிவை கொண்டு, நேரத்தை நிர்வகித்தால்தான் சாதாரண நாள் அசாதாரண நாளாக மாறும்.

அசாதாரண நாளில் சாதனைகள் பல நிகழ்த்த தனிமனிதனிடம் தொகை நோக்குப் பார்வை, தெளிவான திட்டம், மற்றும் திட்டம் வழி செயல்கள், சிந்தனையோடு கூடிய முயற்சி அல்லது பயிற்சி கட்டாயம் தேவை.


சம்பவ நாள், சாதனை நாள்

மனித வாழ்வின் நோக்கமே, வாழ்க்கையின் நோக்கத்தை உணர்ந்து, பலப்பல சம்பவங்களின் கோர்வையாகிய வாழ்க்கையில், சிலச்சில சாதனைகள் நிகழ்த்த திட்டமிடுவது.

பிறகு, திட்டமிட்டபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

அதன் பிறகு, முறையாக தினம் தினம் திட்டமிட்ட செயலுக்கு என்று நேரம் ஒதுக்குவது என்று பலப்பல செய்லகளின் விளைவுதான் அந்த அசாதாரண நாள்.


சம்பவ நாள், சாதனை நாள்

தனி ஒரு மனிதன், சாதாரண நாளாக ஒரு நாளை அமைத்துக் கொள்ள நேர மேலாண்மை மற்றும் நேரநிர்வாகம் தேவை இல்லை !

ஆனால், தனி ஒரு மனிதன், அசாதாரண நாளாக ஒரு நாளை மாற்ற தெளிவான மிகத்துல்லியமான நேர மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் தேவை !!

இளைஞனே, 24 மணி நேரம் கொண்ட ஒரு உன்னதமான நாளை, விழிப்பு உணர்வோடு நெருப்பு ஆற்றை கடப்பது போல் .... 24 நிமிட நேர நிர்வாக விழிப்பு உணர்வு என்ற கவச உடை கொண்டு கடந்து சமச்சீர் வாழ்க்கை நடத்து .... உலகம் உன் கால்டியில்.

ஒரு நாளில் பலப்பல சம்பவங்கள் நிகழ எந்த ஒரு அசாத்திய சுயக்கட்டுப்பாடும் தேவையில்லை, மற்றும் எந்தவித மனித முயற்சியோ தேவை இல்லை.

அதே நேரத்தில், ஒரு நாளில் சிலச்சில சாதனைகளை நிகழ்த்த, அசாத்திய சுயகட்டுப்பாடும் மற்றும் மனித முயற்சியும் தேவை.

அதைவிட முக்கியம் நேர விழிப்பு உணர்வு மற்றும் நேரக்கட்டுப்பாடு மிக அவசியம்.

ஒரு நாளில், 24 நிமிட நேர விழிப்பு உணர்வே, 24 மணி நேர விழிப்பு என்ற உணர்வு !

24 மணி நேர விழிப்பு உணர்வே,
ஒரு நாள் நேர விழிப்பு உணர்வு !
ஒரு நாள் நேர விழிப்பு உணர்வே,
ஒரு வார நேர விழிப்பு உணர்வு !!
ஒரு வார நேர விழிப்பு உணர்வே
ஒரு மாத நேர விழிப்பு உணர்வு!!!
ஒரு மாத நேர விழிப்பு உணர்வே
ஒரு வருட நேர விழிப்பு உணர்வு !
ஒரு வருட நேர விழிப்பு உணர்வே,
ஒரு மனித வாழ்வின் நேர விழிப்பு உணர்வு !

24 நிமிட நேர விழிப்பு உணர்ச்சி இல்லை என்றால், ஒரு நாள், 24 மணி நேரம், சாதாரணமாக சம்பவங்களாக போய்விடும்.

அதே நேரத்தில், 24 நிமிட நேர விழிப்பு உணர்வு இருந்தால், அந்த நாள் (24 மணி நேரம்), சாதனை நாளாக மாறி விடும்.

சுருங்க சொன்னால், வாழ்க்கையை பலப்பல சம்பவங்களாகவோ அல்லது பலப்பல சாதனையாக மாற்றிக கொண்டது, ஒரு இளைஞன் ஒவ்வொரு நாளையும் நேர விழிப்புணர்வோடு செய்ல்படுத்தும், 24 நிமிட நேர நிர்வாகத்தில் தான் உள்ளது.


கால நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்

ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இனிய நாள். அந்த நாளை சாதாரண நாளாக அல்லது அசாதாரண நாளாக மாற்றுவது ஒவ்வொரு மனிதனின் கையில்தான் உள்ளது.

நம் வாழ்க்கை .... நக் கையில் !
இல்லை ... இல்லை ...
நம் வாழ்க்கை ... நம் நேரத்தின் கையில் !!
நம் வாழ்க்கை ... நம் நேர நிர்வாகத்தின் கையில் !!!
நேரத்தை முறையாக நிர்வாகிப்போம் ... வாழ்க்கையில்
முறைப்படுத்திக் கொள்வோம் !!!!

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.