கடிகாரத்தை பற்றிய சிந்தனை

பொழுது போகவில்லை
இந்த உலகில் சிலருக்கோ, பொழுது போகவில்லை ! அதாவது 24 மணி நேரம் ஒரு நாளில் போதவில்லை.
இந்த உலகில் பலருக்கோ, பொழுது போகவில்லை
பொழுது போகவில்லை என்ற கூட்டத்தினர், ஒரு நாளில் உள்ள மணி நேரத்தை எப்படி தள்ளுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
விளைவு, முளையை மழுங்க அடிக்கும் TV -க்கு முன்னால் உட்கார்ந்து தினம் தினம் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் செலவு செய்கிறார்கள்.

இத்தகைய சாதாரண இளைஞர்கள் பொழுது போக்கு என்ற போர்வையில் ஒரு நாளில் வீணாக நண்பர்களீடம் அரட்டை, தொலைபேசியில் அரட்டை, TV -யில் பல மணி நேரம் என்று நேரத்தை தொலைப்பவர்கள்.

இத்தகைய இளைஞர்கள் கடைசியில், தனக்கு அதிர்ஷ்டம் இல்லை... எல்லாம் என் விதி என்று பழியை ஜாதகத்தின் மேல் போட்டு விட்டு , வாஸ்துகளில் மேல் பழியை போட்டு விட்டு வாழ்க்கை முழுவதும் குண்டுக்கல் போல் உட்கார்ந்து இருப்பார்கள்.

இந்த உலகில் உள்ள சில இளைஞர்களுக்கு பொழுது போதவில்லை !!

இத்தகைய இளைஞர்களுக்கு , ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் திட்டமிட்டு செய்ய வேண்டிய செயல்களுக்கு நேரம் போதவில்லை. மனம் செய்ய நினைக்கும் செயல்களுக்கு ஒரு நாளில் உள்ள 24 மணி நேரம் போதுமானதாக இல்லை.



தனி மனிதன், பணத்தை செலவழிக்கும் போது, பார்த்து பார்த்து செலவு செய்வது போல, ஒவ்வொரு நாளும் நேரத்தை தனி மனிதன் செலவு செய்யும் முன் அதைப்பற்றி தெளிவாக சிந்திக்க வேண்டும். பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய செயல்களை அலசி ஆராய வேண்டும்.

சாதாரண இளைஞன் , வாழ்வின் நோக்கத்தை அடைய செய்ய வேண்டிய உயரிய செயல்களுக்கு முன்னுரிமை அளித்து ,சாதாரண செயல்களுக்கு பின்னுரிமை அளித்து நேரத்தை சரியான வகையில் நிர்வகிக்கின்றனர். விளைவு வாழ்வில் வெற்றி


24 நிமிடத்தில் .. என் மூச்சு இருக்கும்
சாதாரண இளைஞன் , ஒரு நாளில் பல வேலைகளை செய்ய முயல்கிறான்.

அலுவலகத்தில் அல்லது தொழிலில் பல வேலைகள், குடும்பத்தில் பல வேலைகள் மற்றும் தனி மனித அளவில் பல வேலைகள் என்று வேலைப் பளுவை அதிகரித்துக் கொண்டு , டென்சன்.... டென்சன் அல்சர் லிமிடெட் என்று அலைகிறார்கள்.

இத்தகைய இளைஞர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பலப்பல சாதாரண நாளாக சென்றுவிடுகிறது.

சாதாரண இளைஞன் , ஒரு நாளில் பலப்பல 24 நிமிடங்களை பிரித்துக் கொண்டு வேலைகளை திட்டமிட்டு செய்ய முயல்கிறான்.

அலுவலகத்தில் அல்லது தொழிலில் பல வேலைகள், குடும்பத்தில் பல வேலைகள் மற்றும் தனி மனித அளவில் பல வேலைகள் என்று வேலைப் பளுவை சிந்தனைத் தெளிவோடு சமப்படுத்துகிறான். விளைவு நோ டென்சன்.... நோ ..அல்சர் லிமிடெட் கட்டாயம் வாழ்வில் ஆனந்தம்.

விளைவு வாழ்க்கை முழுவதும் பலப்பல சாதனை நாள் தானாக உருவாகி விடுகிறது.

இளைஞனே, ஒரு நாளை ...24 மணி நேரத்தை .. பயனுள்ளதாக மாற்ற பலப்பல 24 நிமிடங்களாக பிரித்துக் கொண்டு திட்டமிட கற்றுக் கொள். பிறகு திட்டமிட்டபடி ஒவ்வொரு 24 நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்.


கடிகாரத்தைக் கவனியுங்கள்

உங்கள் கடிகாரத்தைக் அடிக்கடி கவனியுங்கள். அவைகள் உங்கள் ஒவ்வொரு மணி நேரத்தையும் , தெளிவாக திட்டமிட மற்றும் பயனுள்ள செயல்கள் செய்யும் திட்டமாக மாற்ற உதவும்.

Watch your watch , they become your time plan !


நேர திட்டத்தை கவனியுங்கள்

உங்கள் தினசரி நேர திட்டத்தை சரியாக கவனியுங்கள். அவைகள் உங்கள் 24 மணி நேர நிர்வாகமாக மாற உதவும், அதாவது திட்டமிட்டபடி நாள் முழுவதும் செயல்களை செய்ய உறுதுணையாக அமையும். திட்டத்திற்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து நினைத்ததை சரியான நேரத்தில் , சரியாக செய்யும் அனுபவம் வரும்.

Watch your time plan ,: they become time execution !


எண்ணத்தை கவனியுங்கள்
உங்கள் எண்ணத்தை தினம் தினம் கவனியுங்கள். தினம் தினம் உங்கள் மனதில் எழும் உயரிய , தனித்துவ எண்ணங்களைக் கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் வார்த்தைகளாக மாறுகின்றன.

Watch your thoughts , they become your words !!


வார்த்தைகளை கவனியுங்கள்
உங்கள் வார்த்தைகளை தினம் தினம் கவனியுங்கள். உங்கள் தனித்துவ எண்ணத்தில் விளைந்த தனித்துவ வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் செயல்களாக மாறுகின்றன.

Watch your words , they become your actions !


செயல்களைக் கவனியுங்கள்
உங்கள் செயல்களைக் தினம் தினம் கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் பழக்கங்களாக மாறுகின்றன.

Watch your actions , they become your habits !


பழக்கங்களை கவனியுங்கள்

உங்கள் பழக்கங்களை தினம் தினம் கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் வாழ்க்கையின் நல்ல முடிவுகளாக மாறுகின்றன.

Watch your habits , they become your destiny !


நேர நிர்வாகம்
உங்கள் கடிகாரத்தைக் கவனியுங்கள். அவைகள் உங்கள் நேரத்தை தெளிவான திட்டமாக மாற்றுகின்றன.

உங்கள் நேரத் திட்டத்தை கவனியுங்கள். அவைகள் உங்கள் நேர நிர்வாகமாக மாறுகின்றன.

உங்கள் எண்ணத்தை கவனியுங்கள். அவைகள் உங்கள் வார்த்தைகளாக மாறுகின்றன.

உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள். அவைகள் உங்கள் செயல்களாக மாறுகின்றன.

உங்கள் செயல்களை கவனியுங்கள். அவைகள் உங்கள் பழக்கங்களாக மாறுகின்றன.

உங்கள் பழக்கங்களை கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் வாழ்க்கையின் நல்ல முடிவுகளாக மாறுகின்றன.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.