Posts

நேர நிர்வாக கலை

நேரமே வாழ்க்கை நேரமே வாழ்க்கை.... வாழ்க்கை நேரம் நேரத்தை இழந்தவன் வாழ்க்கையை இழக்கிறான். நேரம் ஒரு மனிதனை நிர்வகிக்கும் முன் ,மனிதன் நேரத்தை நிர்வகிக்க பழகிக் கொள்ள வேண்டும். இதைத் தான் நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார். "மற்றவர்கள் உனக்காக பிரார்த்தனை செய்யும் முன் , நீங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்." நேர நிர்வாகம். நேரத்தை நிர்வகிப்பது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை கலை. மனிதன் ஆய கலைகள் 64 யும் தெரிந்து கொண்டு இந்த ஒரு நேர நிர்வாகக்கலையை முறையாக தெரிந்து கொள்ளவில்லை என்றால் மொத்த மனித வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். நேர நிர்வாக கலையை எந்த ஒரு நபரும் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தெரிந்து கொள்ளலாம். 6 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொருவருக்கும் நேர நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். பிறகு அந்த விழிப்பு உணர்வு வழி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கிய நேரம் சாதாரண மனிதன் வாழ்க்கையின் முதல் பாதியில் , அதாவது 60 வயது வரை உடல் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தி, மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றான். பிறகு, வாழ்க்கையின் அடுத்த...

இந்திய இளைஞனுக்கு முத்தான உறுதிமொழிகள்

உறுதி மொழி -1 " நான் ஒரு இந்தியன். இந்தியனாக பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ". உறுதி மொழி -2 " நான் ஒரு இந்திய அறிவு ஜீவி. என்னிடம் 5000 வருட பாரம்பரிய தொடர் அனுபவம் மற்றும் சக்தி மூளையில் தொகுப்பாக உள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ". உறுதி மொழி -3 " நான் இன்று செய்ய இருக்கும் சாதாரண செயல்களில் , மாறுபட்ட சிந்தனைகளை கொண்டு, அசாதாரண செயல்களை செய்ய முற்படுவேன். அதன் மூலம் , இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கும் மற்றும் உலக மறுமலர்ச்சிக்கும் ஒரு கருவியாக மற்றும் கிரியா ஊக்கியாக இருப்பேன்." விழித்தெழு இந்தியா... விழித்தெழு ..... "விழித்தெழு இந்தியா... விழித்தெழு வேளை வந்துவிட்டது. வேலைக்கு போவதற்கல்ல.. மற்றவர்கள் உனக்காக வேலை செய்யும்படியாய் செய்வதற்கு பொறியியல் பட்டம் இருக்கிறது என்பதாலேயே நீ பொறியாளர் ஆக வேண்டிய அவசியமில்லையே. எது உன் சிறப்பம்சம் என்று எண்ணுகிறாயோ அதை செய். அப்போதுதான் நீ எதை எண்ணுகிறாயோ அதில் சிறந்து விளங்குவாய். சொந்தமாக தொழில் தொடங்கு சொந்தமாக எதையாவது தொடங்கு. அப்போதுதான் உன்னை யாரும் வேலையை விட்டு நீக்க மாட்டார...

இந்திய இளைஞனே நாளை நமதே

நாட்க்குறிப்பின் அவசியம் "ஒவ்வொரு நாளும் நீங்கள் டைரியின் நாட்க்குறிப்புகளை எழுதிக் கொண்டே இருப்பீர்களானால் 365 நாட்கள் கொண்ட ஒரு ஆண்டில் விலை மதிப்பற்ற எத்தனை காலத்தை நீங்கள் வீணே போக்கி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள் -- மஹாத்மா காந்தி உலகம் முதுமை அடைகிறது. உலக நாடுகள் பலவற்றில் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. விளைவு, கிழக்கத்திய உலகம் மற்றும் மேற்கத்திய உலகம் முதியவர்கள் உலகமாக மாறிவிட்டது. சுருங்க சொன்னால் உலக நாடுகள் பலவற்றில் முதுமை ததும்புகிறது. இந்தியாவில் மட்டும் தான் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. இளைய உலகத்தில் இளைய பாரதத்தின் பங்கு உலக இளைஞர்களில் 20% இந்தியாவில் தான் உள்ளனர். இவர்கள் தான் வருங்காலத்தில் இந்தியாவின் தலைவிதியை மட்டும் அல்ல, உலகத்தின் தலைவிதியையே மாற்ற உள்ள மிகப்பெரிய உந்து சக்தி. நேற்றைய இந்திய இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை, செயல் மற்றும் அவர்கள் சிந்திய சிந்தனைத் துளி.. இல்லை ...இல்லை வியர்வைத் துளியின் விளைவுதான் நாம் இன்று காணும் வளரும் இந்தியா. 205...

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

இந்தியா: 2050 ஆம் ஆண்டில் 28 டாலர்ப் பொருளாதாரம் உனக்கும் கீழே உள்ளவர் கோடி... அவர்களை உயர்த்தப் போராடு.. " தாய்நாட்டின் சேவைக்குத் தயார் செய்து கொள்வது என்பதே மாணவர்களின் உயரிய இலட்சியமாக இருக்க வேண்டும். தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்வதுதான், ஒருவன் தன் தேசத்துக்கு செய்யக்கூடிய சிறந்த சேவையாகும் -- மகாத்மா காந்தி வலிமையான பாரதம் 2014-ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும் 2025-ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும் 2050-ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும் OPPORTUNITYNOWHERE மேலே உள்ள வார்த்தையைப் படியுங்கள் ... நன்றாகப் படியுங்கள். OPPORTUNITY NO WHERE "வாய்ப்புகள் இல்லை" என்றுதானே படித்தீர்கள். அது சரி! இந்த உலகில் முன்னேற வாய்ப்புகள் இல்லை !! அப்படித்தானே .. Lucky means who gets the opportunity ... OPPORTUNITY NO WHERE "வாய்ப்புகள் இல்லையா ? இந்த உலகில் முன்னேற வாய்ப்புகளே இல்லையா? வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை இந்த பூமியில் ! வாய்ப்புகள் இருக்கின்றன. OPPORTUNITY NOW HERE " வாய்ப்புகள் இருக்கின்றன ...

இந்தியப் பொருளாதாரம்...

எண்ணத் தூய்மை ... வினைத்தூய்மை... "எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் மாணவர்கள் பரிசுத்தமானவர்களாக விளங்க வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் படித்திருந்தாலும் அதனால் பயன் இல்லை - மகாத்மா காந்தி உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் உலகம் முழுவதும் உற்பத்தி வருடத்திற்கு வருடம் குறைந்தபட்சம் 4 டிரில்லியன் டாலர் (ரூபாய் 200 லட்சம் கோடி) அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வேகத்தில் சென்றால் 2020-ல் ஆண்டு உலக உற்பத்தி 80 டிரில்லியன் டாலர் (ரூபாய் 4000 லட்சம் கோடி) என்ற நிலையை அடையும். 2050-ல் ஆண்டு உலக உற்பத்தி 220 டிரில்லியன் டாலர் (ரூபாய் 11,000 லட்சம் கோடி) என்ற உற்பத்தி நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் 2007---------- உலகப் பொருளாதாரம் : 52 டிரில்லியன் டாலர் இந்தியப் பொருளாதாரம் : 1 டிரில்லியன் டாலர் 2007-ம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 52 டிரில்லியன் என்ற நிலையில் இருந்தது. இதில், இந்தியாவின் பங்கு 1 டிரில்லியன் என்ற அளவில் மிக மிகக் குறைவாகத்தான் இருந்து உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 52-ல் ஒரு பங்குதான் இந்தியாவைன் பங்களிப்பாக இருந்தது. இந்தியப் ப...

வல்லரசு நாடுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி

நீ நாட்டுக்கு என்ன செய்தாய் ? " நாடு இன்று எவ்வளவு பெரிய நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்." - மகாத்மா காந்தி. இங்கிலாந்து சூரியன் ஆங்கிலேயர் சாம்ராஜ்ஜிய எல்லையில் அஸ்தமிப்பதே இல்லை. ஏன் அஸ்தமிப்பதே இல்லை? ஒரு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்தது. அதன் விளைவாக, இங்கிலாந்தில் சூரியன் அஸ்தமம் ஆனால், உலகின் மற்றொரு பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜிய நாட்டில் சூரியன் உதயமாகி இருக்கும். அத்தகைய ஆங்கிலேயரின் உலக சாம்ராஜ்ஜிய காலக்கட்டம், 20- ம் நூற்றாண்டின் முதல் பாதியோடு முடிந்து விட்டது. அமெரிக்கா முதல் உலக்ப் போரின் முடிவில் அமெரிக்க நாடு உலகப் பொருளாதாரத்தில் மெதுவாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து உச்ச நிலையை அடைந்தது. யு.எஸ்.எஸ்.ஆர்...... அதே போல ரஷ்யக் குடியரசும், ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர...

உலக பொருளாதாரம் இவ்வளவு தான்.

ஆசிரியர் பணி ஒரு அறப்பணி.. அதற்கு உன்னை அர்ப்பணி... " ஆசிரியர்கள் இப்போது தளிர்த்த இளம் தளிர்கள். இந்த தளிர்கள் முற்றிய பிறகு காலக்கிரமத்தில் உதிர்ந்து விடும் . ஆனால் மாணவர்களாகிய நீங்களோ பழுத்த இலைகளுக்கு பதிலாகப் புதிய இலைகளை தளிர்க்க செய்யவல்ல கிளைகள் " - மகாத்மா காந்தி 2005 -ல் உலக மக்கள் தொகை... உலக மக்கள் தொகையில்......... வளரும் நாடுகளின் (193 நாடுகள் ) மக்கள் தொகை 85 % வளர்ந்த நாடுகளின் (G7- 7 நாடுகள் ) மக்கள் தொகை 15 % 2005 - ல் உலகப் பொருளாதாரம். உலகப் பொருளாதாரத்தில்......... வளரும் நாடுகளின் (193 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 15% வளர்ந்த நாடுகளின் (G7- 7 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 85 % 2005 - ல் வளர்ந்த நாடு மக்கள் தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்கு வளர்ந்த ஏழு நாடுகளின் (G7- 7 நாடுகள் ) பங்கு மக்கள் தொகையில் 15 %. ஆனால், வளர்ந்த ஏழு நாடுகளின் (193 நாடுகள் ) பங்கு உலகப் பொருளாதாரத்தில் 85%. 2005 - ல் வளரும் நாடு மக்கள் தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பங்கு வளரும் 193 நாடுகளின் பங்கு உலக மக்கள் தொகையில் 85 %. ஆனால், வளரும் 193 நாடுகளின...