ஆனந்த, பேரானந்த வாழ்க்கை.

கால நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்து இருக்காது "
ஒரு நாள் மனித வாழ்க்கையில் கழிந்து விட்டது என்றால், இந்த சமுதாயத்திற்கு ஒரு தனிமனிதன் செய்ய வேண்டிய செயலுக்கு மற்றும் கடமைக்கு அளிக்கப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பான ஒரு நாள் கழிந்து விட்டது என்று பொருள்.

உள்ளத்திலே களக்கம் , உடலிலே நோய்


சாதாரண நாள், அசாதாரண நாள்

இளைஞனே ! ஒவ்வொரு நாளும் ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் இனிய நாள். அந்த நாளை சாதாரண நாளாகவோ அல்லது அசாதாரண நாளாகவோ மாற்றுவது உன் கையில் தான் உள்ளது.

சாதாரண மனிதன் சாதாரண நாளில் சாதாரண செயல்களை செய்து சாதாரணமான நாளாக மாற்றுகிறான்.
அதே நேரத்தில், அசாதாரண மனிதன் சாதாரண நாளில் அசாதாரணமான செயல்களை செய்து அசாதாரணமான நாளாக மாற்றுகிறான்.

உள்ளத்திலே ஒளி , உடலிலே ஆரோக்கியம்


வாழ்க்கையில் வெற்றி

மனித வாழ்க்கையின் வெற்றி 5 வார்த்தைகளில் அடங்கி உள்ளது. அந்த 5 வார்த்தைகள்...
வேலைகளைத் திட்டமிடு !
திட்டமிட்டபடி வேலைகளை செயல்படுத்து !

இந்த உலகில் உள்ளவர்களில் 98 % மக்கள் வேலைகளைத் திட்டமிடுவதே இல்லை !.

மீதம் உள்ள 2 % மக்களில், 1.5 % மக்கள் திட்டமிட்டாலும், அந்த திட்டத்தின் வழி வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வது இல்லை !!.


வாழ்க்கையைத் திட்டமிடு

" திட்டமிடு " என்றால் என்ன ?
இளைஞனே , முதலில் உன் வாழ்க்கைக் குறிக்கோளை திட்டமிடு !.
அடுத்ததாக, ஐந்து ஆண்டுகளுக்கான உன் வாழ்க்கைக் குறிக்கோளை திட்டமிடு !!
பிறகு, ஒரு ஆண்டுக்கான உன் வாழ்க்கைக் குறிக்கோளை திட்டமிடு !!
அடுத்த ஒரு ஆண்டு, ஐந்து ஆண்டு, வாழ்க்கை முழுவதும் என்று குறிக்கோளை சரியாக திட்டமிட்டு அந்த குறிக்கோளின் படி தினம் , தினம் செயல் திட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்படி வாழ்வதுதான் திட்டமிட்ட வாழ்க்கை


சாதகன் சாதிப்பான்
இளைஞனே ! மிகத் துல்லியமாக, தீர்க்க தரிசனத்தோடு உன் வாழ்க்கையைத் திட்டமிட்டாலே உன் வெற்றிக்கான பாதை அமைந்தாகி விட்டது என்று பொருள்.
பிறகு, திட்டமிட்ட குறிக்கோளை அடைய துடிப்புடன் தினம் தினம் இளைஞன் சாதகம் செய்ய வேண்டும்.


சாதாரண வாழ்க்கை
"தின்று , திரிந்து உறங்கிடவா நாம் பிறந்தோம் "

என்று ஒரு அறிஞர் இளைஞர்களைப் பார்த்து கேட்கிறார்.
தினம் தினம் மூன்று வேளை மூக்கைப் பிடிக்க விதவிதமாக சாப்பிடுவது, மனம் போன போக்கில் திரிந்து பாட்டு, ஆட்டம், பாட்டம் என்று பலப் பல வேலைகளை தினம் தினம் செய்வது, இரவில் தூங்குவது. இதுதான் வாழ்க்கையா ?

இதுதான் மனிதப் பிறவியின் நோக்கமா ? சற்று சிந்தனை செய் இளைஞனே !!


சாதாரண மனிதன்
"தின்று , திரிந்து உறங்கிடவா நாம் பிறந்தோம் "
சாதாரண இளைஞன் சொல்கிறான் " ஆமாம் சார், தின்று , திரிந்து உறங்கிடத்தான் பிறந்தேன் "

அதை விட தினம் தினம் என்ன முக்கியமான வேலை !
இந்த உலகை அனுபவிக்கனும் சார், அதற்குத்தான் நாம் பிறந்துள்ளோம் என்று சொல்லும் இவர்கள் "வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவேன் " என்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள்..


சாதனையாளன்

இந்த வகையை சேர்ந்த சாதாரண இளைஞன், ஒரு நாளில் 24 நிமிட நேரத்தின் அருமையை புரிந்து கொள்ளாமல், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறேன்.

"தின்று , திரிந்து உறங்கிடவா நாம் பிறந்தோம் "

அதே வேளையில், சாதனையாளன் சொல்கிறான். "இல்லை, இல்லை நான் தின்று , திரிந்து உறங்கிடப் பிறக்கவில்லை, சாதிக்கப் பிறந்துள்ளேன் " என்கிறான்.


வாழ்க்கை .. 1.34 வருடத்தில்

சாதனையாளன் வாழ்க்கைக் குறிக்கோளைத் தெளிவாக நிர்ணயிக்கின்றான். பிறகு, அந்த குறிக்கோளை நோக்கி தினம் தினம் தெளிவாக முன்னேறுகிறான். சடைசியில் சாதிக்கிறான்.
மனித வாழ்க்கையில், நேர நிர்வாகம் என்பது மனித வாழ்க்கைக் காலமான 120 ஆண்டுகால நேர நிர்வாகத் திட்டத்திலோ, அல்லது சராசரி இந்திய வாழ்க்கையான 65 ஆண்டு கால நேர நிர்வாகத் திட்டத்திலோ இல்லை.

மாறாக, 65 வருட வாழ்க்கையில், 1.34 வருட காலத்தை நிர்வகிப்பதிலேயே உள்ளது. குறிப்பாக ஒரு நாளில் 24 நிமிட் நேரத்தை, சரியாக நிர்வகிப்பதில்தான் உள்ளது.


ஆனந்த வாழ்க்கைக்குத் தேவை

2. தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1. தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்.

முறையற்ற நேர நிர்வாகம் தான் வாழ்க்கையில் மனிதன் படும் இன்னல்கள் மற்றும் நோய்களுக்கு மூலகாரணம்


ஆனந்த வாழ்க்கைக்குத் தேவை

4 தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்.
3 தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்.
2 தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1 தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்.


ஆனந்த வாழ்க்கைக்குத் தேவை

6 தினசரி நிதான முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம்.
5 தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்.
4 தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்.
3 தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்.
2 தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1 தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்.


ஆனந்த வாழ்க்கைக்குத் தேவை

8 தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
7 தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்.
6 தினசரி நிதான முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம்.
5 தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்.
4 தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்.
3 தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்.
2 தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1 தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்.


உடல் சக்தி நிர்வாகம்

தினசரி மனித உடல் சக்தி நிர்வாகமே, தினசரி திறம்பட செயல்கள் செய்யத் தேவையான சக்தி நிர்வாகம் ;
தினசரி மன சக்தி நிர்வாகமே, தினசரி மனித உடல் சக்தி நிர்வாகம் ;
தினசரி உணர்ச்சி நிர்வாகமே, தினசரி மனித மன சக்தி நிர்வாகம்;
தினசரி ஜீவகாந்த சக்தி நிர்வாகமே, தினசரி மனித உணர்ச்சி நிர்வாகம்;
தினசரி உயிர் சக்தி நிர்வாகமே, தினசரி மனித மன ஜீவகாந்த சக்தி நிர்வாகம்;


ஆன்மீக சக்தி நிர்வாகம்
தினசரி ஆன்மீக சக்தி நிர்வாகமே, தினசரி மனித உயிர் சக்தி நிர்வாகம்
சமச்சீர் வாழ்க்கை நிர்வாகமே, தினசரி மனித ஆன்மீக சக்தி நிர்வாகம்
ஆரோக்கிய வாழ்க்கை நிர்வாகமே, மனித சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்
மனிதனின் நேர நிர்வாகம் என்பது தனி ஒரு மனிதனின் சக்தி நிர்வாகம் மற்றும்
நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகத்தில் அடங்கியுள்ளது.


ஆனந்த வாழ்க்கை
இளைஞனே நேர விழிப்பு உணர்வோடு , ஒவ்வொரு நாளையும் 24 மணி நேரத்தையும் சரியான வகையில் நிர்வகிப்போம். ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம்.

நேர விழிப்பு உணர்வோடு , ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம். நேர விழிப்பு உணர்வோடு ஒவ்வொரு மாதத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம்.
நேர விழிப்பு உணர்வோடு ஒவ்வொரு வருடத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம். ஒவ்வொரு வருட வாழ்க்கையையும் சரியான வகையில் நிர்வகிப்போம்.
வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக , நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great