சிந்தனை மாற்றம் தேவை இக்கணம்.

மனிதனும் தெய்வமாகலாம்.
" கோபம், பகை, காமம், பயம் , பொறாமை போன்ற தீய சக்திகள் இடைவிடாமல் மனிதனை மிருகத்தின் நிலைக்கு கொண்டு வருகின்றன. இவைகளுக்கு எதிராக அற உணர்ச்சி, அறிவு, அன்பு, போன்ற சக்திகள் தீய சக்திகளிடம் இருந்து நம்மை விடுவித்து நமக்கு சாந்தியையும், சுதந்திரத்தியும் அளிக்கின்றன." - மகாத்மா காந்தி


நேற்றைய இந்திய இளைஞர்களின் வேர்வை துளி.. இன்றைய வளரும் இந்தியா

ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ரோமானிய நாடு ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. மாறாக பல மனிதர்கள் பல வருட உழைப்பால் உருவாக்கப்பட்டது.
அதேபோல், இந்தியா கண்ட 2007 ஆம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பின்னால் பல லட்சக்கணக்கான இந்திய மக்களின் சிந்தனை துளிகள்.. மற்றும் அவர்கள் பட்ட பல அரும்பாடுகள் மற்றும் தியாக உணர்வுகள் அடங்கி உள்ளன.



நேற்றைய இந்திய இளைஞர்களின் வேர்வை துளி.. இன்றைய வளரும் இந்தியா

நேற்றைய இந்திய இளைஞர்களின் சிந்தனைத் துளி மற்றும் வேர்வைத் துளியின் வெளிப்பாடுதான் நேற்று இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியா இன்று கண்டு கொண்டு இருக்கும் பொருளாதார வளர்ச்சி.

இன்றைய இந்திய இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனைத் துளி மற்றும் வேர்வைத் துளியின் வெளிப்பாடுதான் நாளைய வல்லரசு இந்தியாவிற்கு அடித்தளமாக அமையும்.


பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்
கடந்த 100 ஆண்டுகளில் இந்திய நாடு பொருளாதாரத்தில் நாம் கண்ட வியத்தகு மாற்றம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு காரணம்....

1.... ஒரு டாட்டா
1.... ஒரு பிர்லா
1.... ஒரு விஸ்வேஸ்வரய்யா
1.... ஒரு அம்பானி
1.... ஒரு நாராயணமூர்த்தி
1.... ஒரு அசிம் பிரேம்ஜி


இந்தியா 2050---- 28 மடங்கு வளர்ச்சி

2050 ஆம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க குறைந்த பட்சமாக
28.... புதிய டாட்டாக்கள் தேவை
28.... புதிய பிர்லாக்கள் தேவை
28.... புதிய விஸ்வேஸ்வரய்யாக்கள் தேவை
28.... புதிய அம்பானிகள் தேவை
28.... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
28.... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை


இந்தியா 2050 ---37 மடங்கு வளர்ச்சி

2050 ஆம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க அதிக பட்சமாக
37.... புதிய டாட்டாக்கள் தேவை
37.... புதிய பிர்லாக்கள் தேவை
37.... புதிய விஸ்வேஸ்வரய்யாக்கள் தேவை
37.... புதிய அம்பானிகள் தேவை
37.... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
37.... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை


வளரும் இந்தியா

இன்று 2008 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளரும் நாடு..
நாளை 2025 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளர்ந்த நாடு..
2050 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வல்லரசு நாடு..

2050 ஆம் ஆண்டில் , இந்தியா உலகின் மூன்று மிகப் பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக பரிணமிக்க உள்ளது.
ஆம்.. இது ஒரு காகிதக் கனவோ மற்றும் தனி ம்னிதன் கனவோ இல்லை.. இந்த இந்தியக் கனவு நனவு ஆக்ககூடிய சாத்தியக்கூறுகள் நம் முன்னால் தெள்ளத் தெளிவாக இன்றே தென்படுகிறது.


வளரும் இந்தியா
இந்தியா வல்லரசாக உலகை ஆள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், எந்த ஒரு நாடும் இந்தியா அடுத்த 41 ஆண்டு காலக்கட்டத்தில் அடைய இருக்கும் இமாலய வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.
2050 -ம் ஆண்டுகளில் உலகத்திலேயே 3 மிகப் பெரிய வல்லரசு நாடுகள் தான் இருக்கும். அவை சைனா, இந்தியா மற்றும் அமெரிக்கா.


வல்லரசு இந்தியா
இன்று சைனா உலகில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை அடுத்த மூன்றாவது பெரிய சைனா, ஜெர்மனி நாட்டை நான்காம் நிலைக்கு தள்ளிவிட்டது.
2050 ஆம் ஆண்டில் , முதல் மூன்று உலக வல்லரசு இடங்களுக்கான பட்டியலில் இந்தியத் திருநாடு கட்டாயம் இடம் பெறும்.


தற்போது இந்திய இளைஞர்கள் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் உலக பொருளாதாரத்தில் 12 ஆம் நிலையில் உள்ள இந்திய பொருளாதாரம், அடுத்த 41 ஆண்டு காலத்தில் உலக அளவில் முதல் இடத்தை பிடிக்கப் போகிறதா? அல்லது இரண்டாம் இடத்தை பிடிக்கப் போகிறதா? அல்லது மூன்றாம் இடத்தை பிடிக்கப் போகிறதா? என்பதுதான் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?


இளைஞனின் கனவு.. நாட்டின் வளர்ச்சி...
இன்று உலகில் உள்ள எந்த ஒரு சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடும் , ஒரு தனிமனிதனால் ஒரு நாள் இரவில் உருவாக்கப்படவில்லை.
எந்த ஒரு சிறந்த வளர்ந்து உள்ள நாடும் , வல்லரசு நாடும் பலப் பல இளைஞர்களின் உன்னதமான தொலைநோக்குப் பார்வையில் உருவானது தான்.


வல்லரசு நாடுகள் உருவான முறை
மாறுபட்ட சாதனை செய்தவர்களின் உலகளாவிய வளர்ச்சி, பின்னாளில் வல்லரசு நாடுகளின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு ஆணி வேராக இருந்து இருக்கிறது.
இத்தகைய தனிமனித மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உண்மை நிலை அமெரிக்காவிற்கு பொருந்தும் மற்றும் எல்லா வல்லரசு நாடுகளுக்கும் பொருந்தும் .

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.