இந்திய இளைஞனே நாளை நமதே

நாட்க்குறிப்பின் அவசியம்
"ஒவ்வொரு நாளும் நீங்கள் டைரியின் நாட்க்குறிப்புகளை எழுதிக் கொண்டே இருப்பீர்களானால் 365 நாட்கள் கொண்ட ஒரு ஆண்டில் விலை மதிப்பற்ற எத்தனை காலத்தை நீங்கள் வீணே போக்கி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள் -- மஹாத்மா காந்தி


உலகம் முதுமை அடைகிறது.

உலக நாடுகள் பலவற்றில் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
விளைவு, கிழக்கத்திய உலகம் மற்றும் மேற்கத்திய உலகம் முதியவர்கள் உலகமாக மாறிவிட்டது. சுருங்க சொன்னால் உலக நாடுகள் பலவற்றில் முதுமை ததும்புகிறது. இந்தியாவில் மட்டும் தான் இளமை ஊஞ்சல் ஆடுகிறது.


இளைய உலகத்தில் இளைய பாரதத்தின் பங்கு

உலக இளைஞர்களில் 20% இந்தியாவில் தான் உள்ளனர். இவர்கள் தான் வருங்காலத்தில் இந்தியாவின் தலைவிதியை மட்டும் அல்ல, உலகத்தின் தலைவிதியையே மாற்ற உள்ள மிகப்பெரிய உந்து சக்தி.

நேற்றைய இந்திய இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை, செயல் மற்றும் அவர்கள் சிந்திய சிந்தனைத் துளி.. இல்லை ...இல்லை வியர்வைத் துளியின் விளைவுதான் நாம் இன்று காணும் வளரும் இந்தியா.


2050- ல் பிரிக் நாடுகளின் பொருளாதாரம், G7 நாடுகளின் பொருளாதாரத்தை விட அதிகமாக இருக்கும். 2050 - ல் உலகம் பிரிக் நாடுகளிடம் தலை வணங்கும். குறிபாக இந்தியாவிடம் தலை வணங்கும்.


2014 -ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும்
2025 -ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும்
2050 -ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும்


நேற்றைய இந்திய இளைஞர்களின் வேர்வைத் துளி... இன்றைய வளரும் இந்தியா

ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ரோமானிய நாடு ஒரே நாளில் உருவாக்கப்படவில்லை. பல மனிதர்கள் பல வருட உழைப்பால் உருவாக்கப்பட்டது.
அதேபோல் இந்தியாவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குப் பின்னால் லட்சகணக்கான இளைஞர்களின் வேர்வைத் துளிகள்.... இல்லை...இல்லை... சிந்தனைத் துளிகள் மற்றும் அவர்கள் செய்த செயற்கரிய செயல்கள் மற்றும் தியாகங்கள் புதைந்து கிடக்கின்றன.


நேற்றைய இந்திய இளைஞர்களின் வேர்வைத் துளி... இன்றைய வளரும் இந்தியா

நேற்றைய இந்திய இளைஞர்களின் சிந்தனைத் துளி மற்றும் வேர்வைத் துளி. .. இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.

இன்றைய இந்திய இளைஞர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு, சிந்த இருக்கும் சிந்தனைத் துளி மற்றும் வேர்வைத் துளி தான் நாளைய இந்தியாவின் பொருளாதார வலிமைக்கான அடித்தளம்.


பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்

கடந்த 100 ஆண்டுகளில் இந்திய நாடு பொருளாதாரத்தில் கண்ட முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு காரணம்......

1..... ஒரு டாட்டா
1..... ஒரு பிர்லா
1..... ஒரு விஸ்வேஸ்வரய்யா
1..... ஒரு அம்பானி
1..... ஒரு நாராயணமூர்த்தி
1..... ஒரு அசிம் பிரேம்ஜி


சிந்தனை செய்.

2050 -ம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க குறைந்த பட்சமாக

28..... புதிய டாட்டாக்கள் தேவை
28..... புதிய பிர்லாக்கள் தேவை
28..... புதிய விஸ்வேஸ்வரய்யாக்கள் தேவை
28..... புதிய அம்பானிகள் தேவை
28..... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
28..... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை


இந்தியா 2050... 37 மடங்கு வளர்ச்சி
2050 -ம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க அதிக பட்சமாக
37..... புதிய டாட்டாக்கள் தேவை
37..... புதிய பிர்லாக்கள் தேவை
37..... புதிய விஸ்வேஸ்வரய்யாக்கள் தேவை
37..... புதிய அம்பானிகள் தேவை
37..... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
37..... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை

அவர்கள் எங்கே இப்போது இருக்கிறார்கள்? நீங்கள் தான். என்ன புரியவில்லையா ? இன்றைய பள்ளி மற்றும் கல்லூரியில் சிந்தனைத் தெளிவோடு உள்ள மாணவர்கள்தான் நாளைய டாட்டா.....நாளைய பிர்லா.....நாளைய அம்பானி.....நாளைய நாராயணமூர்த்தி.....நாளைய விஸ்வேஸ்வரய்யா.....


இளைஞனே ... நீ மரக்கட்டையா ? அல்லது மீன் குஞ்சா?

ஆற்றோடு போவது ஆற்றலற்ற மரக்கட்டைகள்தான்.
மீன் குஞ்சுகள் கூட எதிர் நீச்சல் போடவே விரும்புகின்றன.
மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் ஊற்று எடுத்து வருகிறது. அந்த தண்ணீர் ஊற்றுப் பெருக்கு எடுத்து வரும் வேகத்தில் மரக்கட்டைகளையும் மற்றும் மீன் குஞ்சுகளையும் தண்ணீர் அடித்து வருகிறது.
மரக்கட்டை ஆற்றோடு அடித்து செல்லப்படுகிறது. ஆனால், மீனோ எதிர் நீச்சல் அடித்து வாழ விரும்புகிறது.
மனிதன் மட்டும் விதிவிலக்கு ஆகலாமா?


இளைஞனே விதி வழி வாழ்வா ? மதி வழி வாழ்வா ?
இந்திய இளைஞனே கண நேரம் சிந்தி ! விதியை நினைத்து நொந்து கொள்ளாதே .... விதியை மதியால் வெல்லலாம். புதிய சரித்திரம் படைக்க இப்பொழுதே புறப்படு.

துன்பத்திலும் சோதனையிலும் எதிர் நீச்சல் போடும் போதுதான் உடலும், உள்ளமும் வலிமை பெறுகின்றன. இலட்சிய இளைஞர்களுக்கே எதிர் நீச்சல் போடும் எண்ணம் வரும். வெற்றி வேண்டுமா ? போட்டுப் பாரடா எதிர் நீச்சல்..


இந்திய இளைஞனே, சிங்க இளைஞனே உனக்கு தெரியாது உன்னுடைய திறமையை பற்றி, திறமைகளுக்குத் திரையிடாதே ! தன்னம்பிக்கைக்குத் தீயிடாதே !

உன்னுடைய அர்த்தமற்ற 5....4.....3.........2....1 சின்ன சின்ன ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு உன் வாழ்க்கை லட்சியங்களை வல்லரசு இந்தியா என்ற அளவுக்கு வளர்த்துக் கொள்.
தனி ஒரு இளைஞனின் மன மாற்றமே உலக மாற்றம்


இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞனின் பங்கு.....

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான காரணம் 4.

1. பிரம்மாண்டமாக சிந்தியுங்கள்.
2. வேகமாக சிந்தியுங்கள்.
3. வேகமாக செயலாற்றுங்கள்.
4. வேகமாக இலக்கை அடையுங்கள். மற்றவர்கள் சிந்திக்க துவங்கும் முன் இலக்கை அடைந்து விடுங்கள்.

இந்த 4 வரிகளை வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஏற்று , வளமான வல்லரசு பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.