நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்

ஒரு நாள் நிர்வாகமே.... வாழ்நாள் நிர்வாகம் :                          

நேரத்தை சரியாக நிர்வகிக்க முடியாத ஒரு இளைஞனால், வாழ்க்கையை சரியாக நிர்வகிக்க முடியாது. இதைத்தான் நம் முன்னோர்கள், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றனர்.
நேர நிர்வாகமே .. வாழ்க்கை நிர்வாகம்.


வாழ்க்கை வெற்றிதனிமனிதனின் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, ஆரோக்கியம், நோய், மகிழ்ச்சி, சோகம் என்ற பல நிலைகள் தனிமனிதனின் கையில் தான் உள்ளது.
சராசரி இந்தியனின் வாழ்க்கை காலம் 65 ஆண்டுகள் . அதில் தனிமனிதன் தன்னைத்தானே தற்சோதனை செய்து கொள்ள உள்ள கால அவகாசம் நேரம் 1.34 வருடங்கள்.

அதாவது, சாதாரண மனிதன் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள , தன்னுடைய திறமையைப் பற்றி அறிந்து கொள்ள உள்ள காலம் 1.34 வருடங்கள்


6-ல் இருந்து 60 வரை நேர நிர்வாகம்65 ஆண்டுகால சராசரி மனித வாழ்க்கையில் , அந்த உன்னதமான 1.34 வருட நேரத்தை , நேர விழிப்புணர்வு இல்லாமல் இழந்த ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையின் முழு வாய்ப்பையும் இழக்கிறான்.
ஒரு நாளில் தனிமனித தற்சோதனை நேரமான, 24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட மறப்பவன், ஒரு நாளை முதலில் இழக்கின்றான். பிறகு படிப்படியாக 1.34 வருடத்தை 65 வருட கால கட்டத்தில் இழந்து, முழு வாழ்க்கையையும் இழக்கின்றான்.


நேர நிர்வாகமே... வாழ்க்கை நிர்வாகம்24 நிமிட நேர நிர்வாகமே, ஒரு நாள் அல்லது 24 மணி நேர நிர்வாகம்.
ஒரு நாள் அல்லது 24 மணி நேர நிர்வாகமே, ஒரு வார அல்லது ஏழு நாள் நேர நிர்வாகம்.
ஒரு வார அல்லது ஏழு நாள் நேர நிர்வாகமே, ஒரு வருட அல்லது 52 வார நேர நிர்வாகம்.

ஒரு வருட அல்லது 52 வார நேர நிர்வாகமே, வாழ்க்கை அல்லது 65 வருட கால நேர நிர்வாகம்.


உன்னதமான 24 நிமிடம்ஒரு நாளில் தனி ஒரு மனிதனுக்கு கிடைக்கும் 1440 நிமிடத்தில் , அந்த உன்னதமான 24 நிமிடத்தில்....
....வேண்டாம் வெட்டி பேச்சு...
....வேண்டாம் கேளிக்கைக் கூத்து...
....வேண்டாம் கேளிக்கை ஆட்டம்...
....வேண்டாம் கேளிக்கை விளையாட்டு...


உன்னதமான 24 நிமிடம்

ஒரு நாளில் தனி ஒரு மனிதனுக்கு கிடைக்கும் 1440 நிமிடத்தில் , அந்த உன்னதமான 24 நிமிடத்தில்....
....வேண்டும் நல்ல சிந்தனை...
....வேண்டும் தொலைநோக்குத் திட்டம்...
....வேண்டும் உடற்பயிற்சி...
....வேண்டும் மனப் பயிற்சி...
....வேண்டும் ஆன்மீகப் பயிற்சி...
....வேண்டும் தொலைநோக்குத் திட்டதோடு கூடிய செயல்...


நேர விழிப்புணர்ச்சி


இந்தியாவின் மக்கள் தொகை 114 கோடி. அதில் இளைஞர்களின் எண்ணிக்கை 57 கோடி. இந்தியாவின் எதிர்காலம் இந்த 57 கோடி இந்திய இளைஞர்களின் கையில்.
இன்றைய அத்தகைய இளைஞர்களில், 98 % இளைஞர்களுக்கு, ஒரு நாளில் இந்த 24 நிமிடத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. மீதம் உள்ள 2 % இளைஞர்களுக்கு ஓரளவு நேர விழிப்புணர்வு உள்ளது.
இத்தகைய நேர விழிப்புணர்வு உள்ள 2 % இளைஞனுக்கு மனநிர்வாகம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

மனநிர்வாகம்
மனநிர்வாகம் என்றால் என்ன?
மனம் சொல்லும்படி ஐம்புலன்கள் இயங்க வேண்டும். ஆனால், சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஐம்புலன்கள் சொல்லும்படி மனம் இயங்குகிறது. விளைவு நேரத்தை நிர்வகிக்க முடியவில்லை.


ஐம்புலன்கள் நிர்வாகம்


மனித ஐம்புலன்கள் நிர்வாகம் என்றால் என்ன?
கண்,காது, மூக்கு, வாய், தோல் நிர்வாகம் .
கண் நிர்வாகம் என்பது நமது இரண்டு கண்களால் இந்த உலகில் உள்ள நல்லதைப் பார்க்கும் நிர்வாகம்.

காது நிர்வாகம் என்பது நமது இரண்டு காதுகளால் இந்த உலகில் நிகழும் நல்லதைப் கேட்கும் நிர்வாகம்.

மூக்கு நிர்வாகம் என்பது நம்மை சுற்றி உள்ள நல்ல காற்றை சுவாசிக்கும் மற்றும் நருமணத்தை நுகரும் நிர்வாகம்.

வாய் நிர்வாகம் என்பது நம்முடைய நாக்கை மற்றும் சுவை உணர்வுகளை செய்யும் நிர்வாகம்.

தோல் நிர்வாகம் என்பது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு நிர்வாகம்.


உணவு நிர்வாகம்கண் நிர்வாகம், காது நிர்வாகம், மூக்கு நிர்வாகம், வாய் நிர்வாகம் மற்றும் தோல் நிர்வாகம் ஆகியவற்றில் மிக முக்கியமான நிர்வாகம் வாய் நிர்வாகம் !.
வாய் நிர்வாகத்தில் பேச்சு நிர்வாகம் மற்றும் உணவு நிர்வாகம் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.


நாக்கு நிர்வாகம்


உணவு நிர்வாகத்திலும் நாக்கு நிர்வாகம் மிக மிக அவசியம். நம்மில் அதிகமானோர் உடல் சக்திக்காக இல்லாமல், மன சக்திக்காக சாப்பிடாமல் நாக்கிற்கு அடிமையாகி உடலுக்கு பொருந்தாத பல வகை உணவுகளை உண்டு உடலையும், மனதையும் பாழ் படுத்திக் கொள்கிறோம்.


குடல் நிர்வாகம்நம்மில் அதிகமானோர் உடல் இயக்கம் மற்றும் மன இயக்கத் தேவைக்கு மேல் நாக்கிற்கு அடிமையாகி உணவு உண்கிறோம். விளைவு, குடல் நிர்வாகத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லை.

உதாரணமாக , சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிட வேண்டுமா? அல்லது சாப்பிடுவதற்கு முன் பழம் சாப்பிட வேண்டுமா?

உங்ககளுடைய உடனடி பதில், சாப்பிட்ட பிறகுதான். ஏனென்றால், நாம் திருமண வீடு மற்றும் பல விருந்துகளில் பழத்தை தாம்பூழத் தட்டோடு வைத்திருப்பார்கள். சாப்பிட்ட பின் நாம் பழத்தை சாப்பிடுவோம். இந்த பழக்கம் தவறு.


குடல் நிர்வாகம்
பழம் இலகுவாக நமது உடலில் உள்ள குடலில் ஜீரணமாக கூடிய பொருள். அதனால்தான் நம்முடைய உறவினர்களோ , நண்பர்களோ நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவர்களுக்கு நாம் பழம் வாங்கி செல்கிறோம்.

நாம் சாப்பிடும் திட உணவு பொருள் இலகுவாக ஜீரணமாகாது. எனவே பழத்தை முதலில் சாப்பிட்டால் அது ஜீரணமாகி வழிவிடும். அதே சமயம் திட உணவு ஜீரணமாக 4 அல்லது 5 மணி நேரமாகும். அதற்குள், நாம் சாப்பிட்ட பழம் ஜீரணமாகி, புளித்து போய், அஜீரணத்திற்கு அடிகோலும்.

நமது முன்னோர்கள் உணவே மருந்து என்று பார்த்து உண்டனர். ஆனால், இன்று நம்மில் அதிகமானோர் மருந்தே உணவு என்ற நிலைக்கு மாறி உள்ளோம்.

மனித குடல் நிர்வாகமே, மனித நாக்கு நிர்வாகம் !
மனித நாக்கு நிர்வாகமே, மனித உணவு நிர்வாகம் !
மனித உணவு நிர்வாகமே, மனித ஐம்புலன்கள் நிர்வாகம் !
மனித ஐம்புலன்கள் நிர்வாகமே, மனித மன நிர்வாகம் !
மனித மன நிர்வாகமே, மனித நேர நிர்வாகம் !
மனித நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம் !


நிதான முடிவெடுக்கும் நிர்வாகம்நம்மில் அதிகமானோர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உணவை உண்கிறோம். விளைவு...
நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் ?
நாம் எதற்காக சாப்பிடுகிறோம் ?
நாம் சாப்பிடும் பொருள் எத்தகைய விளைவை உடலில் ஏற்படுத்தும் ?
நாம் சாப்பிடும் பொருளில் புரதசத்து எவ்வளவு உள்ளது ?
நாம் சாப்பிடும் பொருளில் மாவுசத்து எவ்வளவு உள்ளது ?
நாம் சாப்பிடும் பொருளில் கொழுப்புசத்து எவ்வளவு உள்ளது ?


நிதான முடிவெடுக்கும் நிர்வாகம்

நாம் உணவு உண்ணும் ஒவ்வொரு வேளையும் திட உணவு, நீர் உணவு, காற்று உணவு அல்லது வெற்றிடம் எந்த விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் ?

நாம் சாப்பிடும் பொருளில் கலோரி எவ்வளவு உள்ளது ?

நம்முடைய காலை உணவை விட மதிய உணவு அதிகம் இருக்க வேண்டுமா அல்லது குறைந்து இருக்கு வேண்டுமா?

நாம் சாப்பிட்ட பின் தண்ணீர் சாப்பிட வேண்டுமா அல்லது சாப்பிடும் பின் தண்ணீர் சாப்பிட வேண்டுமா ?
என்று நாம் சிந்தித்து எப்பொழுதாவது ஒரு வேளை உணவை இந்த நாள் வரை சாப்பிட்டிருக்கிறோமா ?


நிதான முடிவெடுக்கும் நிர்வாகம்
இளைஞனே, உன்னுடைய உங்களுடைய விடை இல்லை என்பதுதானே.. உனக்கு இக்கணத்தேவை. நிதான முடிவெடுக்கும் நிர்வாகம் குறிப்பாக, உணவைப் பற்றி நிதான முடிவெடுக்கும் நிர்வாகமே !

மனித நிதான முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித குடல் நிர்வாகம் !
மனித குடல் முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித நாக்கு நிர்வாகம் !
மனித நாக்கு முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித உணவு நிர்வாகம் !
மனித உணவு முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித ஐம்புலன்கள் நிர்வாகம் !
மனித ஐம்புலன்கள் முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித மன நிர்வாகம் !
மனித மன முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித நேர நிர்வாகம் !
மனித நேர முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம் !


சக்தி நிர்வாகம்ஒரு தனிமனிதனின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இந்த சக்தி நிர்வாகத்தில் தான் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு எரிக்கப்பட்டு உடல் சக்தியாக மாறி உடலையும் மனதையும் பலப்படுத்துகிறது.

நாம் சாப்பிடும் உணவின் தரத்திற்கேற்ப அந்த உணவு மாறி உடல் இயக்கம் மற்றும் சக்திக்கு ஒரு பங்கும், மன இயக்கம் மற்றும் சக்திக்கு ஒரு பங்கும் என்று பிரிந்து உடலையும், மனதையும் சம நிலையில் இயங்க ஏதுவாகிரது.

தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி நிதான முடிவெடுக்கும் நிர்வாகம் !
மனித நிதான முடிவெடுக்கும் நிர்வாகமே, மனித குடல் நிர்வாகம் !
மனித குடல் நிர்வாகமே, மனித நாக்கு நிர்வாகம் !
மனித நாக்கு நிர்வாகமே, மனித உணவு நிர்வாகம் !
மனித உணவு நிர்வாகமே, மனித ஐம்புலன்கள் நிர்வாகம் !
மனித ஐம்புலன்கள் நிர்வாகமே, மனித மன நிர்வாகம் !
மனித மன நிர்வாகமே, மனித நேர நிர்வாகம் !
மனித நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம் !

குறைந்த உணவு ... குறைந்த தூக்கம்
குறைந்த பேச்சு .. நிறைந்த வாழ்க்கை
அதிக உணவு .. அதிக தூக்கம்
அதிக பேச்சு .. குறைந்த வாழ்க்கை

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great