வாழ்க்கை ஒரு கணக்கு.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் !

மனிதா .... மனிதா .....

22 வருடம் 8 மணி நேரம் தூக்கம்

2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல்

2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு

2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு

22 வருடம் 8 மணி நேரம் வேளை

8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம்

3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம்

1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம்

65 வருடம் 24 மணி

சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு

நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!!


வாழ்க்கை ஒரு கணக்கு

மனித வாழ்ககையே ஒரு கணக்கு தான் !

நல்ல சிந்தனையை, நல்ல செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கூட்டிக் கொள் (+)

தீய சிந்தனைகளை, தீய செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கழித்துக் கொள் (-)

அறிவை மற்றும் ஞானத்தை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் பெருக்கிக் கொள் (*)

24 மணி நேரத்தை, 24 நிமிட நேரத்தில் திட்டமிட்டு இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் வகுத்துக் கொள் (/)

இந்திய சிங்க இளைஞனே வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக்கி (=)

தினம் தினம் வாழ்க்கையில் அமைதியை மற்றும் பேரின்பத்தை தேடு !

மனித வாழ்க்கை ஒரு கணக்கு தான்

இந்திய இளைஞனே ! தினசரி வாழ்க்கையில் அன்பைப் பெருக்கிடு (>), இந்திய இளைஞனே ! தினசரி வாழ்க்கையில் ஆணவத்தைக் குறைத்திடு (<).

இந்திய இளைஞனே ! தினம் தினம் உடறபயிற்சி செய்து உடற்சக்தியை சமநிலை (=) படுத்திடு.

இந்திய இளைஞனே ! வாழ்வில் கீழ்த்தர எண்ணத்தின் வழி செலவைக் குறைத்திடு (<).

இளைஞனே ... வாழ்வில் மேல்நிலை வழி எண்ண வரவைப் பெருக்கி (>), புதிய புதிய அறிவை வளர்த்து, மனதில் தனி மனித நோக்கத்தை காத்திடு !!


வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம் வெறும் பணம் சம்பாதிப்பதற்கும் மற்றும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்கும் மட்டும் அல்ல.

சமச்சீர் வாழ்க்கை வாழ்ந்து, வாழ்வை முறைப்படுத்திக் கொள்வது.

சமச்சீர் வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும், மன நிறைவுடனும், ஆன்மத் தெளிவுடனும் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும் விழிப்பு உணர்வுடன் வாழ்வதே !

உன்னையே நீ அறிவாய்

பிறரை வெல்வதை விட தன்னைத் தானே வெல்வது மேலானது - புத்தர்


வாழ்க்கை ஒரு கணக்கு

இளைஞனே ! வாழ்க்கையின் ஒரு அங்கமான ஏட்டுக் கல்வியில், குறிப்பாக கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கத் துடிக்கும் இளைஞனே ... முழு வாழ்க்கையில், வாழ்க்கைக் கல்வியில், நூற்றுக்கு நூறு வாங்க துடி !

அது என்ன வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு? என்பதுதானே உன்னுடைய கேள்வி !


25 மார்க்

தினம் தினம் உடற்பயிற்சி

உடற்பயிற்சி மதிப்பெண்

இளைஞனே, தினம் தினம் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாய் என்றால், உனக்கு நீயே .... 25 மதிப்பெண் போட்டுக் கொள் !

தினம் தினம் உடற்பயிற்சி

மனப் பயிற்சி மதிப்பெண்

இளைஞனே, தினம் தினம் மனப்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக சமச்சீர் நிலையில் வைத்துக் கொண்டாய் என்றால், உனக்கு நீயே .... 25 மதிப்பெண் போட்டுக் கொள் !!


50 மார்க்

உடற்பயிற்சி மதிப்பெண்

மனப் பயிற்சி மதிப்பெண்

உடற்பயிற்சி மற்றும் மனப் பயிற்சி மதிப்பெண்

இளைஞனே, தினம் தினம் உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு மற்றும் மனதை ஆரோக்கியமாக சமச்சீர் நிலையில் வைத்துக் கொண்டாய் என்றால், உனக்கு நீயே .... 50 மதிப்பெண் போட்டுக் கொள் !!


25 மார்க்

தினம் ஆன்மப்பயிற்சி

ஆன்மப்பயிற்சி மதிப்பெண்

இளைஞனே, தினம், தினம் ஆன்மப் பயிற்சி செய்து, விஞ்ஞான யுகத்தில் விளைந்த பலப்பல கருவிகளின் வழி வாழும் செயற்கை வாழ்க்கையில் இருந்து பிரிந்து, சிறிது நேரம் இயற்கையோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்டாய் என்றால் ... உனக்கு நீயே 25 மதிப்பெண் போட்டுக் கொள் !


உடற்பயிற்சி மதிப்பெண்

மனப் பயிற்சி மதிப்பெண்

ஆன்மப்பயிற்சி மதிப்பெண்

உடற்பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மப்பயிற்சி மதிப்பெண்

இளைஞனே, தினம், தினம் உடற்பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மப் பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மனதை சமச்சீர் நிலையில் வைத்துக் கொண்டு மற்றும் இயற்கையோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்டாய் என்றால் உனக்கு நீயே 75 மதிப்பெண் போட்டுக் கொள் !!!


25 மார்க்

தினம், தினம் தற்சோதனை

தற்சோதனை மதிப்பெண்

சிந்தனை செய் மனமே !!

தினம், தினம் தற்சோதனை செய்து எண்ணத்தை சீரமைத்துக் கொண்டாய் என்றால், கொடுத்துக் கொள் ... உனக்கு நீயே 25 மதிப்பெண் போட்டுக் கொள் !


50 மார்க்

உடற்பயிற்சி மதிப்பெண்

தற்சோதனை மதிப்பெண்


உடற்பயிற்சி மற்றும் தற்சோதனை

தினம, தினம் உடற்பயிற்சி மற்றும் தற்சோதனை செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உனக்கு நீயே 50 மதிப்பெண் போட்டுக் கொள் !!


75 மார்க்

உடற்பயிற்சி மதிப்பெண்

மனப் பயிற்சி மதிப்பெண்

தற்சோதனை மதிப்பெண்

உடற்பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் தற்சோதனை

தினம, தினம் உடற்பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் தற்சோதனை செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக அமைதியாகவும் வைத்துக் கொண்டால், உனக்கு நீயே 70 மதிப்பெண் போட்டுக் கொள் !!!


உடற்பயிற்சி மதிப்பெண்

மனப் பயிற்சி மதிப்பெண்

ஆன்மப்பயிற்சி மதிப்பெண்

தற்சோதனை மதிப்பெண்

உடற்பயிற்சி, மனப் பயிற்சி, ஆன்மப்பயிற்சி மற்றும் தற்சோதனை மதிப்பெண்

இளைஞனே, தினம் தினம் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, ஆன்மப்பயிற்சி மற்றும் தற்சோதனை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மனதை சமச்சீர் நிலையில் வைத்துக் கொண்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து, எண்ணத்தை சீரமைத்துக் கொண்டாய் என்றால் உனக்கு நீயே 100 மதிப்பெண் கொடுத்துக் கொள் !!!!


வாழ்க்கை ஒரு கணக்கு

இளைஞனே, தினம் தினம் உனக்கு நீயே வாழ்க்கைக் கல்விக்கு மார்க் போட்டுக் கொள்.

இன்றைய வாழ்க்கையில் ... இன்றைய நாளில் .... நீ பாஸா? அல்லது பெயிலா?

பாஸா ! சபாஷ் என்று உங்கள் முதுகில் நீங்கள் தட்டிக் கொள்ளுங்கள் .... மேலும் தினம், தினம் சாதகம் செய்து வாழ்வில் பல செல்வங்கள் பெற்று, வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

பெயிலா !, கவலைப படாதே சகோதரா ... "24 நிமிட மேலாண்மை டுடோரியல்" இருக்கு.... வாருங்கள் 24 நிமிட மேலாண்மை டுடோரியலுக்கு, உங்களை வாழ்க்கையில் பாஸ் பண்ண வைக்கிறோம். பிறகு, உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கிய மதிப்பெண் பெற வைக்கிறோம்.


நேர இழப்பு.... வாழ்க்கையே இழப்பு....

வாழ்க்கையில் ... பணத்தை இழந்தவன் ....
வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை !
வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவன் ....
வாழ்க்கையில் கால் பங்கை இழக்கிறான் !!
வாழ்க்கையில் ஒழுக்கத்தை இழந்தவன் ...
வாழ்க்கையில் அரை பங்கை இழக்கிறான் !!!
வாழ்க்கையில் நேரத்தை இழந்தவன் ...
முழுமையான வாழ்க்கையையே இழக்கிறான் !!!!

Wealth is lost, nothing is lost !
Health is lost, something is lost !!
Character is lost, significant life is lost !!!
Time is lost, entire life is lost !!!!

Comments


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன் மற்றும் க.பா.தருண் கிருஷ்ணா

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great