சிந்தனை சிற்பி,  பேராசிரியர்,  
துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன். 
B.E, M.B.A, M.Phil (Mgt) , D.C.P.I.C., P.G.D.F.M., Ph.D. 

சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்:

சிந்தனை சிற்பி, பேராசிரியர் திரு. க. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர்.

சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர்,

1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant):

சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 85க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார்.

2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor):

தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 25,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர்.

UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர்.

3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)

மனித வள மேம்பாடு பயிற்சியாளர், கடந்த 16 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மேலாளலர்களுக்கு தனி மனித மேம்பாட்டு வகுப்புகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

திருச்சி BHEL, HRDC நிறுவனத்தில் மட்டும் 5000 ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர்.

மேலும் 1000க்கும் மேற்பட்ட TNAE (Tamilnadu Agriculture Engineering), TAMIN, SPIC மற்றும் அரசு துறை UCO BANK, VYSYA BANK அரசு சார்ந்த் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களுக்கு மற்றும் இஞ்சினியர்களுக்கு தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர்.

4. மேலாண்மை புத்தக எழுத்தாளர்(Management Book Writer):

26 மேலாண்மை புத்தகங்களை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். இவர் சிறந்த ஒரு நிர்வாக பயிற்ச்சியாளர்.

இவருடைய மேலாண்மை புத்தகம் (Enterprise wide Information System) பாரதிதாசன் பல்கலைகழகத்தில் BCA, B.Sc (CS) பயிலும் மாணவர்களுக்கு 5 ஆம் பருவத்திற்க்கு Emerging Trend in Information Technology என்ற பாடத்திட்டத்திற்க்கு ஒரே பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டிலுள்ள பல கல்லூரிகளில் Strategic Management, BPR, SCM, ERP, CRM போன்றவற்றிக்கு இவருடைய புத்தகங்கள் பாட புத்தகங்களாக கருதப்பட்டுள்ளது.

5. சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர்(Self Development Book Writer):


பேராசிரியர் சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள்  பாதம்பதிப்பகம் எனும் நிறுவனத்தை நிறுவி இதுவரை 10 தன்னம்பிக்கை நூல்களை தமிழ் மண்ணிற்கு அளித்துள்ளார். கடந்த 24 மாதங்களில், இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனை மூலம் லட்சகணக்கான தமிழர்களின் வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

6.  பொது புத்தக எழுத்தாளர் (General Book Writer)

உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் பொருட்டு துளசியின் அற்புதங்களை 8 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார்.  அதுவல்லாது, சூரிய ஒளியின் மூலம் மின்சாரம், காற்றாலையின் மூலம் மின்சாரம் ஆகியவற்றிக்கு தொலை நோக்கு பார்வையில் முத்தான கையடக்க புத்தகங்கள் மற்றும் தேவையற்றது என ஒதுக்கப்பட்ட மின்சாதன பொருட்களின் உதிரி பாகங்களை அடிப்படையாக கொண்டு மின்சார கண்ணா புத்தகம் என்று தன் பொது புத்தக தொகுப்பை விரிவுபடுத்தி கொண்டிருக்கிறார்.

7. தன்னம்பிக்கை பேச்சாளர்(Motivational Speaker):


பேராசிரியர் சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் 50,000 -க்கும் மேற்பட்டோர் வாழ்வில் தன்னம்பிக்கை தனிநல ,பொதுநல உணர்வுகளை வளர்த்துள்ளார்.

இந்திய நாடு 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த 40 ஆண்டுகளில் 37 மடங்கு பொருளாதார வளர்ச்சி பெற்று உலக அரங்கில் வல்லரசு விளங்க உள்ளது. இந்தியாவில் 10000 தில் ஒருவருக்கு கூட இவ்விழிப்புணர்ச்சி இல்லை.

எனவே சிந்தனை சிற்பி கே. பாலசுப்பிரமணியன் அவர்கள் இத்தகைய தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்ச்சி சிந்தனையை பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.


8. சமூக சேவகர்: (Social Worker):

சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் Genius Academy என்ற அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகளை தமிழகத்தின் பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டும் விதமாக இந்திய வருமான வரித்துறை, இவருடைய அமைப்பிற்க்கு வழங்கப்படும் பொதுமக்களின் நன்கொடைக்கு 80G பிரிவின் கீழ் வரிவிலக்கு அளித்துள்ளது.

Genius Nursery & Primary School என்ற பள்ளியை 4 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாநகரில் நிறுவி சீறும் சிறப்போடும் நிறுவி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முழுமையான கல்வியை நவீன தரத்துடன் அளித்து அந்த மாவட்டத்தின் மாதிரி பள்ளி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இண்டிராக்ட், ரோட்டராக்ட் மற்றும் ஜேஸிஸ் இயக்கங்கள் மூலம் சமுதாயத்தொண்டு ஆற்றியவர்.ஜேஸிஸ் இயக்கத்தில் மண்டல பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய ஜூனியர் சேம்பரின் தமிழக மண்டல ஆலோசகர்.


9.  தொலைநோக்கு பார்வையாளர் (Vision Observer):  

சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் பூமி வெப்பமையமாதல், காற்று மாசுபடுதல், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை எதிர்கால நோக்கில், கூரிய தொலை நோக்கு பார்வையால் ஆராய்ந்து நம் பூமிதாயை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பாதுகாக்கும் முறைகள், வளிமண்டலத்தில் கரிய-மில-வாயுவின் (CO2) ஆதிக்கத்தை குறைத்தல், துளசி செடியை அனைத்து பகுதிகளிலும் வளர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 மணிநேரம் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்தல், தேவையற்றதென கழிக்கபட்ட மின்சாதனங்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுதல் போன்ற பல்வேறு செயல்களை உலக மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செய்து வருகிறார்.

தனது துள்ளிய தொலை நோக்கு பார்வையால் மின்சார தட்டுப்பாட்டை சீர்செய்ய இந்திய மற்றும் உலக நிறுவனங்களோடு கைகோர்த்து சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரித்தல் ஆகியவற்றை திறம்பட செய்து வருகிறார்.

பள்ளிகள், கல்லூரிகள், ஆலயங்கள், மக்கள் கூடும் இடங்கள், அலுவலகங்கள், வீட்டின் மேற்கூரை (மாடி), பூங்காக்கள், தோட்டங்கள், வயல்வெளிகள் என அவரவர் தம் இடவசதிகேற்ப துளசி செடிகளை நட்டு அதனை சிறப்பான முறையில் வளர்த்தால் இனி வரும் சந்ததியானது வாழும் காலம் வரை தூய காற்று, சுகாதாரம், நோயில்லா நீண்ட பெருவாழ்வு கிடைக்கபெறும் என்பதில் துளியும் ஐயமில்லை.







பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.