இளைய பாரதமே வா வா...
இளைய பாரதமே வா... வா.... உலகம் உன் காலடியில். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் "ஒவ்வொரு வீடும் ஒரு கலாசாலை. பெற்றோர்களே ஆசிரியர்கள். இன்றைய இந்தியாவில் இந்தப் புனிதமான கடமையைப் பெற்றோர்கள் மறந்துவிட்டனர்." - மகாத்மா காந்தி முதுமை உலகம்... இளைய பாரதம் இன்றைய உலக மக்கள் தொகை 690 கோடி. இதில் இந்தியாவின் பங்கு 113 கோடி மக்கள். உலகம் முழுவதும் முதுமையான மக்களின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கை முதுமையான மக்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். உலகம் முதுமை உலகமாக மாறிவிட்டது. ஆனால், இந்தியா இளைய பாரதமாக, வலுவான பாரதமாக உருப்பெருகிறது. முதுமை உலகம் உலகம் முதுமை அடைகிறது! உலக நாடுகள் அனைத்திலும் முதுமையான மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. World is getting older and older. இளமை இந்தியா இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்கள், அதாவது 25 வயதுக்குக் குறைவானவர்கள், உலக இளைஞர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இளமை அதிகமாக ஊஞ்சல் ஆட...