வல்லரசு நாடுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி

நீ நாட்டுக்கு என்ன செய்தாய் ?
" நாடு இன்று எவ்வளவு பெரிய நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்." - மகாத்மா காந்தி.


இங்கிலாந்து
சூரியன் ஆங்கிலேயர் சாம்ராஜ்ஜிய எல்லையில் அஸ்தமிப்பதே இல்லை.
ஏன் அஸ்தமிப்பதே இல்லை?
ஒரு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்தது.
அதன் விளைவாக, இங்கிலாந்தில் சூரியன் அஸ்தமம் ஆனால், உலகின் மற்றொரு பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜிய நாட்டில் சூரியன் உதயமாகி இருக்கும்.
அத்தகைய ஆங்கிலேயரின் உலக சாம்ராஜ்ஜிய காலக்கட்டம், 20- ம் நூற்றாண்டின் முதல் பாதியோடு முடிந்து விட்டது.


அமெரிக்கா
முதல் உலக்ப் போரின் முடிவில் அமெரிக்க நாடு உலகப் பொருளாதாரத்தில் மெதுவாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து உச்ச நிலையை அடைந்தது.


யு.எஸ்.எஸ்.ஆர்......
அதே போல ரஷ்யக் குடியரசும், ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
1920 -ல் ஆரம்பித்த இந்த ரஷ்யக் குடியரசின் வளர்ச்சி, 1970 ம் ஆண்டுகள் வரைத் தொடர்ந்தது.
20 -ம் நூற்றாண்டின் முதல் பாதியில், வல்லரசு இங்கிலாந்தின் வீழ்ச்சி, வல்லரசு ரஷ்யக் குடியரசின் எழுச்சி இரண்டாவது பாதியில், அமெரிக்கா மற்றும் ரஷ்யக் குடியரசுகள் உலகத்தின் வல்லரசு நாடுகளாக உருவெடுத்தன.


வளர்ந்த நாடுகளின் பொற்காலம் அஸ்தமனம்....
19 ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பொற்காலம் முடிந்து விட்டது.
20 ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடாக இருந்த ரஷ்யக் குடியரசின் பொருளாதார பொற்காலம் 20 ஆம் நூற்றாண்டோடு முடிந்து விட்டது.


அமெரிக்கா
இன்று அமெரிக்கா தனிப்பெரும் உலக வல்லரசாக உலகப் பொருளாதாரத்தில் விளங்குகிறது. வல்லரசு அமெரிக்காவி ஆதிக்கம் அதிக காலம் நிலைத்து இருக்காது. வலுவான அமெரிக்கப் பொருளாதாரமும் இன்று ஆட்டம் கண்டு, இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.


அடுத்து எந்த நாடு வல்லரசாக உருப்பெரும்...
இங்கிலாந்து நாட்டின் உலக வல்லரசு சாம்ராஜ்ஜியம் 20-ம் நூற்றாண்டின் மத்தியோடு முடிந்து விட்டது.
20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யக் குடியரசுகள் உலகப் பொருளாதார வல்லரசுகளாக உருப்பெற்றன.
அதில், ரஷ்யக் குடியரசு 1992 -ம் ஆண்டு சிதைந்து விட்டது. தற்போது அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கம் பொருளாதார அளவில் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அடுத்தது எந்த நாடு வல்லரசாக உருப்பெரும் ?


வளரும் நாடுகளின் பொற்காலம் உதயம்......

20 ம் நூற்றாண்டு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா என்ற " G8 " நாடுகளின் பொற்காலம் எனலாம். ஆனால், அந்த பொற்காலம் முடிந்து விட்டது.
21-ம் நூற்றாண்டில் நேற்றைய வளரும் நாடுகளாக இருந்த பல நாடுகள், இன்று வளர்ந்த நாடுகளாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றன மற்றும் வல்லரசு நாடுகளாக உருமாற்றம் பெற உள்ளன. சுருக்கமாக சொன்னால் இந்த 21-ம் நூற்றாண்டு வளரும் நாடுகளின் பொற்காலம்.


மக்கள் வாங்கும் சக்தியில் டாப் 22 நாடுகள் 2007 ஆம் ஆண்டில் முதல் 12 நாடுகளின் நிலை

வரிசை எண் நாடு ஆண்டுப் பொருள் உற்பத்தி
1 இங்கிலாந்து 46.099
2 அமெரிக்கா 45.73
3. கனடா 43.67
4 பிரான்ஸ் 42.034
5 ஜெர்மனி 40.40
6 இத்தாலி 35.74
7 ஜப்பான் 34.296
8 தென்கொரியா 20.015
9 மெக்ஸிகோ 9.717
10 துருக்கி 9.569
11 ரஷ்யா 9.075
12 பிரேஸில் 6.938மக்கள் வாங்கும் சக்தியில் டாப் 22 நாடுகள் 2007 ஆம் ஆண்டில் முதல் 10 நாடுகளின் நிலை

வரிசை எண் நாடு ஆண்டுப் பொருள் உற்பத்தி
1 ஈரான் 3.961
2 சைனா 2.483
3. இந்தோனீசியா 1.925
4 எகிப்து 1.739
5 பிப்பைன்ஸ் 1.626
6 நைஜீரியா 1.161
7 இந்தியா 0.942
8 பாகிஸ்தான் 0.909
9 வியட்நாம் 0.829
10 பங்களாதேஷ் 0.463


G7 நாடுகளின் அஸ்தமம்.. பிரிக் நாடுகளின் வளர்ச்சி.....
உலகில் உள்ள 200 நாடுகளில், "G7" என்ற வளர்ந்த 7 நாடுகள் தவிர, 193 வளரும் நாடுகள் உள்ளன. 21-ம் நூற்றாண்டு வளரும் நாடுகளின் பொற்காலம்.

வளரும் நாடுகளில் குறிப்பாக "பிரிக்" நாடுகள் என்று அழைக்கப்படும் 4 நாடுகள்தான் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடைய உள்ளன. 21-ஆம் நூற்றாண்டு G7 நாடுகளின் அஸ்தமம்.. பிரிக் நாடுகளின் எழுச்சி.


G8 மாநாடு ............... G7 மாநாடு

20-ஆம் நூற்றாண்டில் G8 மாநாடு நடக்கும். அதில் 8 வல்லரசு நாடுகளில் தலைவர்கள் கலந்து கொண்டு, உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் கடைசியில் ரஷ்யக் குடியரசு சிதறியதால் G7 நிலைக்கு G8 நாடுகள் தள்ளப்பட்டன.


20-ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை G7 நாடுகள் நிர்ணயித்தன. ஆனால், 21-ஆம் நூற்றாண்டில் G20 நாடுகள் நிர்ணயிக்கின்றன.நவம்பர் 2008-ல் நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த G20 உலகப் பொருளாதார மாநாட்டில் முதன் முதலாக இந்தியா கலந்து கொண்டது. இந்தியர் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய நிகழ்ச்சி.

இன்றைய காலக்கட்டத்தில் உலகை ஆட்டிப் படைத்த வளர்ந்த நாடுகளின் வீழ்ச்சி, உலகை ஆட்டிப் படைக்க உள்ள வளரும் நாடுகளின் வீழ்ச்சி


G20 நாடுகள்
G20 என்று சொல்லப்படும் குளோபல் 20 நாடுகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, கனடா, சைனா, இந்தியா, ரஷ்யா, பிரேஸில், மெக்ஸிகோ, தென் கொரியா, துருக்கி, இந்தோனோசியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய யூனியன்.

இந்த 20 நாடுகள் தான் இந்த 21 நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்.


G20 நாடுகளின் பொருளாதாரத்தில் - முதல் 9 நாடுகள்
1. ஐரோப்பிய யூனியன் ==>14.71
2. அமெரிக்கா ==>13.84
3. சைனா ==>6.99
4. ஜப்பான் ==>4.30
5. இந்தியா ==>2.98
6. ஜெர்மனி ==>2.81
7.பிரிட்டன் ==>2.14
8.ரஷ்யா ==>2.09
9.பிரான்ஸ் ==>2.05


இந்தியப் பொருளாதாரம் - பறவைக் கண்ணோட்டம்
1.பொருள் உற்பத்திக் குறியீடு
(Gross Domestic Product - GDP)
1,33 டிரில்லியன் டாலர்.

2.மக்கள் வாங்கும் சக்தியில் குறியீடு
(Purchase Power Parity - PPP):
5.31 டிரில்லியன் டாலர்.
3.பொருள் உற்பத்திக் குறியீடு வளர்ச்சி
(GDP Growth) 7:9

4.பணவீக்கம் :5.2 %பிரிக் பொருளாதாரம் இவ்வளவுதான்
(பிரிக் பொருளாதாரம் நேற்று, இன்று, நாளை)

2007 ஆம் ஆண்டில் G20 நாடுகளின் பொருளாதாரம்
உலகத்தில் உள்ள 200 நாடுகளில் G20 நாடுகள் 85 % உலகப் பொருளாதாரத்தை தங்களிடம் வைத்து இருக்கின்றன. மீதம் உள்ள 185 உலக நாடுகள் 15 % உலகப் பொருளாதாரத்தை தங்களிடம் வைத்து இருக்கின்றன.
21 ஆம் நூற்றாண்டு உலகப் பொருளாதாரத்தை இந்த G20 அணியில் உள்ள 20 நடுகள் தான் நிர்ணயிக்க உள்ளன.


வருங்காலத்தில் குறிப்பாக அடுத்த 12 ஆண்டுகளில் 4 பிரிக் நாடுகள் தான் உலகப் பொருளாதாரத்தை ஆட்டி படைக்க உள்ள நாடுகள்.அவை பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சைனா ஆகும்.


பிரிக் நாடுகளின் வருங்கால வளர்ச்சி - சிறப்புப் பார்வை
பிரிக் நாடுகள் அடுத்த 41 ஆண்டுகளில் அடைய இருக்கும் வளர்ச்சியை கார் பயன்பாடு மற்றும் கார் உற்பத்தியை அடைய இருக்கும் அபரிதமான வளர்ச்சியைக் கொண்டு கணித்துக் கொள்ளலாம்.


G8 மாநாடு
2007-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த G8 நாட்டு நிதி மந்திரி மற்றும் அதிபர்க


உலகப் படத்தில் பிரிக் நாடுகள்

21-ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்க உள்ள பிரிக் நாடுகள்

பிரேஸில்
ரஷ்யா
இந்தியா
சைனா


பிரிக் தலைவர்கள் - 2008

21-ஆம் நூற்றாண்டில் பொருளாதார வல்லரசு நாடுகளான பிரிக் தலைவர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2008 மாநாட்டில், இந்திய நாட்டுப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ரஷ்ய நாட்டுத் தலைவர் டிமிற்றி மேட்வேடேவ், சைனத் தலைவர் ஹிவ் ஜிண்டோ மற்றும் பிரேசில் நாட்டுக் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனேஷியோ லூலா டாசில்வா.


பிரேசில் சிறப்பு பார்வை

1. மொத்த நிலப்பரப்பு :85,11,965 சதுர கிலோ மீட்டர்
2. நிலப்பரப்பு : 84,56,510 சதுர கிலோ மீட்டர்
3. மக்கள் தொகை : 16,00,15,000 (சுமார் 16 கோடி)
4. தலைநகரம் :பிரேஸிலியா
5. பணம் : குருசீரியா


பிரேசில் பொருளாதாரம் - பறவைக் கண்ணோட்டம்

1.பொருள் உற்பத்திக் குறியீடு 1.27 டிரில்லியன் டாலர்
2. மக்கள் வாங்கும் சக்தியில் குறியீடு : 1.97 டிரில்லியன் குறியீடு
3. பொருள் உற்பத்திக் குறியீடு வளர்ச்சி : 4.5 சதவீதம்
4.பணவீக்கம் : 4.196 சதவீதம்.ரஷ்யா சிறப்பு பார்வை

1. மொத்த நிலப்பரப்பு :1,70,75,200 சதுர கிலோ மீட்டர்
2. நீர்நிலப்பரப்பு : 1,69,95,800 சதுர கிலோ மீட்டர்
3.மக்கள் தொகை : 14,93,40,600
4. தலைநகரம் :மாஸ்கோ
5.பணம் : ரூபில்


ரஷ்யா பொருளாதாரம் - பறவைக் கண்ணோட்டம்

1.பொருள் உற்பத்திக் குறியீடு 1.42 டிரில்லியன் டாலர்
2. மக்கள் வாங்கும் சக்தியில் குறியீடு : 2.08 டிரில்லியன் குறியீடு
3. பொருள் உற்பத்திக் குறியீடு வளர்ச்சி : 6.3 சதவீதம்
4.பணவீக்கம் : 7.8 சதவீதம்.


இந்தியா சிறப்பு பார்வை

1. மொத்த நிலப்பரப்பு :32,87,590 சதுர கிலோ மீட்டர்
2. நிலப்பரப்பு : 29,73,190 சதுர கிலோ மீட்டர்
2. நீர்நிலப்பரப்பு : 3,14,400 சதுர கிலோ மீட்டர்
3.மக்கள் தொகை : 1,13,00,00,000 (சுமார் 113 கோடி)
4. தலைநகரம் :புது டில்லி
5.பணம் : ரூபாய்


இந்தியா பொருளாதாரம் - பறவைக் கண்ணோட்டம்

1.பொருள் உற்பத்திக் குறியீடு 1.33 டிரில்லியன் டாலர்
2. மக்கள் வாங்கும் சக்தியில் குறியீடு : 5.31 டிரில்லியன் குறியீடு
3. பொருள் உற்பத்திக் குறியீடு வளர்ச்சி : 7.9 சதவீதம்
4.பணவீக்கம் : 5.2 சதவீதம்.


சைனா சிறப்பு பார்வை

1. மொத்த நிலப்பரப்பு :95,71,300 சதுர கிலோ மீட்டர்
2. நிலப்பரப்பு : 93,23,410 சதுர கிலோ மீட்டர்
2. நீர்நிலப்பரப்பு : 2,70,550 சதுர கிலோ மீட்டர்
3.மக்கள் தொகை : 1,19,63,27,000 (சுமார் 113 கோடி)
4. தலைநகரம் :பீகிங்
5.பணம் : யுவான்


சைனா பொருளாதாரம் - பறவைக் கண்ணோட்டம்

1.பொருள் உற்பத்திக் குறியீடு 3.94 டிரில்லியன் டாலர்
2. மக்கள் வாங்கும் சக்தியில் குறியீடு : 12.19 டிரில்லியன் குறியீடு
3. பொருள் உற்பத்திக் குறியீடு வளர்ச்சி : 10.1 சதவீதம்
4.பணவீக்கம் : 3 சதவீதம்.உலகப் பொருளாதாரத்தில் பிரிக் நாடுகளின் நிலை இன்று (2008) .. நாளை (2050)
நல்ல பண்பே வாழ்க்கை

"மாணவர்களிடம் சிறந்த பண்புகள் இல்லை என்றால் அது அவர்களுடைய குற்றமில்லை. பெற்றோரும், ஆசிரியர்களும், அரசுமே இதற்கான குற்றவாளிகள் - மகாத்மா காந்தி

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great