6 லிருந்து 60 வரை

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் !

மனிதா .... மனிதா .....

22 வருடம் 8 மணி நேரம் தூக்கம்

2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல்

2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு

2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு

22 வருடம் 8 மணி நேரம் வேளை

8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம்

3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம்

1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம்

65 வருடம் 24 மணி

சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு

நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!!


20 வயதில் நேர நிர்வாகம்

ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 20-ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மீதம் உள்ள 45 ஆண்டு கால வாழ்க்கையில் குறிக்கோளை சரியாக நிச்சயித்து, நேரத்தை சரியாக நிர்வாகம் செய்து சாதனைகள் பல செய்ய முடியும்.

மனிதன் 20 - ஆம் வயதில், ஒவ்வொரு வருட வாழ்க்கையும் முக்கியம். ஏனென்றால், மனம் சொல்வதை உடல் செய்ய போதிய சக்தி இருக்கும்.

மனிதனின் 20 - ஆம் வயதில், ஒவ்வொரு வருட வாழ்க்கையும் முக்கியம்.


வாழ்நாள் தனி மனித நேரம் தனி மனித நேரம்
(வருடத்தில்) (நாட்களில்)

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 வருடம் 1.34 வருடம் 487 நாட்கள்
( - ) சம்பவங்களாக சென்ற
வாழ்க்கை 20 வருடம் 0.41 வருடம் 150 நாட்கள்
வாழ்க்கையில் சாதனைகள்
செய்ய உள்ள மீத காலம் 45 வருடம் 0.93 வருடம் 337 நாட்கள்

20 வயதில், மனிதனின் வாழ்க்கை வெற்றி மீதம் உள்ள 337 நாட்களின் நேர நிர்வாகத்தில் அடங்கி உள்ளது.


30 வயதில் நேர நிர்வாகம்

ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 30 ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் சிறிது தான் பாதிப்பு ஏற்படும்.

சராசரி மனித வாழ்நாளான 65 ஆண்டு காலத்தில், மீதம் உள்ள 35 ஆண்டு கால வாழ்ககையில் குறிக்கோளை சரியாக நிச்சயித்து, நேரத்தை சரியாக நிர்வாகம் செய்து சாதனைகள் பல செய்ய முடியும்.

மனிதனின் 30-ஆம் வயதில், ஒவ்வொரு மாத வாழ்க்கையும் முக்கியம். ஏனென்றால், மனம் நினைப்பதை உடல் செய்யப் போதிய சக்தி உடலில் இருக்காது.

மனிதனின் 30 - ஆம் வயதில், ஒவ்வொரு மாத வாழ்க்கையும் முக்கியம்.


வாழ்நாள் தனி மனித நேரம் தனி மனித நேரம்
(வருடத்தில்) (நாட்களில்)

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 வருடம் 1.34 வருடம் 487 நாட்கள்
( - ) சம்பவங்களாக சென்ற
வாழ்க்கை 30 வருடம் 0.62 வருடம் 225 நாட்கள்
வாழ்க்கையில் சாதனைகள்
செய்ய உள்ள மீத காலம் 35 வருடம் 0.72 வருடம் 262 நாட்கள்

30 வயதில், மனிதனின் வாழ்க்கை வெற்றி மீதம் உள்ள 262 நாட்களின் நேர நிர்வாகத்தில் அடங்கி உள்ளது.


40 வயதில் நேர நிர்வாகம்

ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 30 ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

மீதம் உள்ள 25 ஆண்டு கால வாழ்ககையில் குறிக்கோளை சரியாக நிச்சயித்து, நேரத்தை சரியாக நிர்வாகம் செய்து சாதனைகள் பல செய்ய முடியும்.

மனிதனின் 40-ஆம் வயதில், ஒவ்வொரு வார வாழ்க்கையும் முக்கியம். ஏனென்றால், மனம் நினைப்பதை உடல் செய்யப் போதிய சக்தி மேலும் குறைந்து விடும்.

மனிதனின் 40 - ஆம் வயதில், ஒவ்வொரு வார வாழ்க்கையும் முக்கியம்.


வாழ்நாள் தனி மனித நேரம் தனி மனித நேரம்
(வருடத்தில்) (நாட்களில்)

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 வருடம் 1.34 வருடம் 487 நாட்கள்
( - ) சம்பவங்களாக சென்ற
வாழ்க்கை 40 வருடம் 0.82 வருடம் 300 நாட்கள்
வாழ்க்கையில் சாதனைகள்
செய்ய உள்ள மீத காலம் 25 வருடம் 0.52 வருடம் 187 நாட்கள்

40 வயதில், மனிதனின் வாழ்க்கை வெற்றி மீதம் உள்ள 187 நாட்களின் நேர நிர்வாகத்தில் அடங்கி உள்ளது.


50 வயதில் நேர நிர்வாகம்

ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 30 ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் மேலும் பெரிய பாதிப்பு ஏற்படும்.

மீதம் உள்ள 15 ஆண்டுகளில் கால வாழ்ககையில் குறிக்கோளை சரியாக நிச்சயித்து, நேரத்தை சரியாக நிர்வாகம் செய்து சாதனைகள் சில செய்ய முடியும்.

மனிதனின் 50-ஆம் வயதில், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் முக்கியம். உடலில் பலப்பல நோய்கள் விளைவு, மன இயக்கப் போராட்டம் .... மற்றும் உடல் இயக்கப் போராட்டம் ....

மனிதனின் 50 - ஆம் வயதில், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் முக்கியம்.

வாழ்நாள் தனி மனித நேரம் தனி மனித நேரம்
(வருடத்தில்) (நாட்களில்)

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 வருடம் 1.34 வருடம் 487 நாட்கள்
( - ) சம்பவங்களாக சென்ற
வாழ்க்கை 50 வருடம் 1.12 வருடம் 375 நாட்கள்
வாழ்க்கையில் சாதனைகள்
செய்ய உள்ள மீத காலம் 15 வருடம் 0.22 வருடம் 112 நாட்கள்

50 வயதில், மனிதனின் வாழ்க்கை வெற்றி மீதம் உள்ள 112 நாட்களின் நேர நிர்வாகத்தில் அடங்கி உள்ளது.


60 வயதில் நேர நிர்வாகம்

ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 60 ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.

மீதம் உள்ள 5 ஆண்டுகளில் கால வாழ்ககையில் குறிக்கோளை சரியாக நிச்சயித்து, நேரத்தை சரியாக நிர்வாகம் செய்து சாதனைகள் ஒன்று அல்லது இரண்டு செய்ய முடியும்.

மனிதனின் 60-ஆம் வயதில், ஒவ்வொரு மணிநேர வாழ்க்கையும் முக்கியம். நோயின் போக்கு மேலும் அதிகரித்து மேலும் பல மனப் போராட்டம் ....

மனிதனின் 60 - ஆம் வயதில், ஒவ்வொரு மணிநேர வாழ்க்கையும் முக்கியம்.


வாழ்நாள் தனி மனித நேரம் தனி மனித நேரம்
(வருடத்தில்) (நாட்களில்)

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 வருடம் 1.34 வருடம் 487 நாட்கள்
( - ) சம்பவங்களாக சென்ற
வாழ்க்கை 60 வருடம் 1.24 வருடம் 450 நாட்கள்
வாழ்க்கையில் சாதனைகள்
செய்ய உள்ள மீத காலம் 5 வருடம் 0.10 வருடம் 37 நாட்கள்

60 வயதில், மனிதனின் வாழ்க்கை வெற்றி மீதம் உள்ள 37 நாட்களின் நேர நிர்வாகத்தில் அடங்கி உள்ளது.


நீர்க்குமிழியாம் வாழ்க்கை

விஞ்ஞான முன்னேற்றம் அடையாத காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் 70 + 80 + 90 + வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

இன்றைய நவநாகரீக மனிதன், விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்த காலத்தில் வாழ்கின்ற இந்திய மனிதன் சராசரியாக 65 ஆண்டு காலம் தான் வாழ்கிறான்.

அந்த 65 ஆண்டு காலக் கட்டத்திலும் நூற்றுக்கணக்கான வியாதிகள், மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.

வாழ்க்கையை பத்து.... பத்தா... பிரிச்சுக்கோ !
நீ எந்த பத்தில் இப்ப இருக்கேன்னு பார்த்துக்கோ !!


இந்தியனின் வாழ்க்கை

உடல் பராமரிப்பு மற்றும் உள்ள பராமரிப்பு இல்லாத இந்தியனின் வாழ்வின் 45 வயதில் வாழ்க்கையின் முதல் எச்சரிக்கை மணி அடிக்கிறது இதயத்தில் முதல் அடைப்பு.

55 வயதில் வாழ்க்கையின் இரணடாம் எச்சரிக்கை மணி அடிக்கிறது, இதயத்தில் இரண்டாம் அடைப்பு, 65 வயதில் வாழ்க்கையின் மூன்றாவது கடைசி மணி அடிக்கிறது இதயத்தில் மூன்றாம் அடைப்பு.

வாழ்க்கையில், நீ எந்த பத்தில் இருக்கேன்னு பார்த்துக்கோ !
நேரத்தை விழிப்பு உணர்வோடு நிர்வகிச்சுக்கோ !!


அறிவாளி, முட்டாள்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது "நாற்பது வயதில் ஒருவன் வைத்தியன் ஆகிறான் அல்லது அவன் மூடன் ஆகிறான்.

அறிவாளி, மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறான். முட்டாள், தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறான்.

அதாவது முதல் 40 ஆண்டு கால வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு வாழ்க்கையை சீரமைத்துக் கொள்பவன் அறிவாளி.

6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டாயம் தேவை. அதுவே வாழ்க்கை நிர்வாகம் !

இளைஞனே ! உன் வாழ்க்கையை பத்து ... பத்து வயதா பிரிச்சுக்கோ.... நீ எந்த பத்தில் இருக்கேன்னு பார்த்துக்கோ !

மனிதனின் 20-ஆம் வயதில் ஒவ்வொரு வருட வாழ்க்கையும் முக்கியம்.

மனிதனின் 30-ஆம் அல்லது 40-ஆம் வயதில் ஒவ்வொரு மாத/வார வாழ்க்கையும் முக்கியம்.

மனிதனின் 50-ஆம் வயதில் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் முக்கியம்.

மனிதனின் 60-ஆம் வயதில் ஒவ்வொரு மணி நேர வாழ்க்கையும் முக்கியம்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.