வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

நேற்று இருந்த உடல் ஆரோக்கியம் இன்று நம்மிடம் இல்லை !

இன்று நம்மிடம் இருந்த உடல் ஆரோக்கியம் நாளை இருக்காது ! !

மாற்றம்.....உடல் மாற்றம்....

இளமை....முதுமை....

முதுமை பயணத்தில் உடல் ஆரோக்கித்தை காப்பது நமது கடைமை !
2.1 உடல் வளர்ச்சியன் பருவங்கள்:

ஒரு பெண்ணில், முதல் இருபது ஆண்டுகால வாழ்க்கையை நான்கு பருவங்களாக பிரிக்கலாம்.

1. பிள்ளைப் பருவம் (6 வயது வரை)
2. பின் பிள்ளைப் பருவம் ( 6 - 9 வயது வரை)
3. வளரிளம் முன் பருவம் ( 9 - 14 வயது வரை)
4. வளரிளம் பின் பருவம் ( 15 - 19 வயது வரை)
2.1.1 பிள்ளைப் பருவம்:

குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான காலகட்டத்தை பிள்ளைப் பருவம் என்று அழைப்பது வழக்கம்.


2.1.2. பின்பிள்ளைப் பருவம் ( 6-9 வயது வரை)

இந்த வயதில் பிள்ளைகள் பெரியவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்விக்க அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறவும் விரும்புகின்றனர்.

தங்களுக்கென்று நண்பர்கள் குழுவை அமைத்துக் கொண்டு, அவர்களுடன் தங்களை எப்போதும் இணைத்துக் கொள்வதையே விரும்புன்றனர். ஒத்த இயல்புடைய நண்பர் குழுவை அமைத்துக் கொள்வதில் இப்பருவமே தொடக்கமாக அமைகிறது.

ஆண்களும், பெண்களும் தனித்தனியே நண்பர்கள் குழுவை அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.

புதிய அனுபவங்களைத் தேடுகின்றார்கள், அதில் தாங்களாகவே சில முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.


2.1.3. வளரிளம் முன்பருவம் (9 - 14 வயது வரை)

உடலில் ஏற்படும் மாற்றங்களால் பொதுவான குழப்பம் வருகிறது.

தன் வயதினரோடு சேர்ந்து பழகக் கற்றுக் கொள்கிறார்கள்.

மனசாட்சி, நன்னடத்தை, வாழ்வின் உயர்நிலைகளை மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகிய இருவரும் பயன்மிக்க வினாக்கள் எழுப்புகின்றனர்; ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கட்டளைகள் பிறப்பித்தல், பிடிவாதமாக அவர்களை எரிச்சல்படுத்தும் காரியங்களைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டு எப்போதும் விளையாட்டில் கவனம், ஒழுங்கற்று ஆடை அணிதல், பிடிவாதமான பழக்கவழக்கங்கள், உரத்து இசைத்தல், கொச்சை மொழியைப் பயன்படுத்துதல், பள்ளியில் பாடம் தொடர்பான செயல்களையும், வீட்டு வேலைகளையும் புறக்கணித்தல்.

சுற்றியுள்ள சமூகத்தில் ஆண் அல்லது பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள்.


2.1.4 வளரிளம் பின்பருவம் (15-19 வரை)

ஒத்த வயதினரிடையே இரு பாலரிடத்தும் பழகுவதில் அதிக மன் முதிர்ச்சி பெறுகிறார்கள்.

சமுதாயப் பொறுப்புக்களை விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்பட எண்ணுகிறார்கள்.

பெற்றோர்கள், பெரியவர்கள் ஆகியவர்களிடம் இருந்து நல்ல பழக்கத்தை கற்றுக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் உயர்நிலைகளையும் நீதி நெறிகளையும் தங்கள் வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்ளுதல் - போன்ற குறிக்கோளை வளர்த்துக் கொள்கிறார்கள்.

பாலியல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. தன் உடலமைப்பில் அக்கறை கொள்கிறார்கள்.

எதிர் இனத்தின்பால் (ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் ஈடுபாடு கொள்கிறார்கள்.

உடலில் உண்டாகும் மாற்றங்களைக் கண்டு, அதை அறிய அக்கறை கொள்ளுதல் மற்றும் ஐயத்தை போக்கிக் கொள்ள விழைகிறார்கள்.

எண்ணங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன்.

சிறிய செயலுக்குக் கூட பெரிதாக வருந்துவார்கள்; கோபமாகப் பேசுவார்கள்.

மன உறுத்துதல், அமைதியின்மை, கோபம் போன்ற குணங்கள் அதிகமாகக் காணப்படுகினறன.

இப்பருவத்தில் தங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். பெற்றோர்களிடம் இதுவரை காட்டிவந்த குழ்ந்தை தனமான பிணைப்பிலிருந்து விடுபட்டுத் தாங்களே அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.2.2 குடும்ப பாரம்பரியம்:

வளரிளம் பருவத்தில் இரு பாலருக்கும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஆண்களை விட பெண்கள் உயரமாக இருப்பார்கள். பருவ வயதினை எப்போது அடைகிறார்கள் என்பதைப் பொறுத்தும் குடும்ப பாரம்பரியமாக பல தனிப்பட்ட வேறுபாடுகள் ஏற்படுகின்றன.2.3 மென்மையான உடல் வளர்ச்சி:

ஆணுக்கு பலமாக தசை வளர்ச்சியும், பெண்ணுக்கு மென்மையான உடல் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. பெண்களுக்கு பூப்பெய்தியவுடன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.


2.4 உயரமும்....வளர்ச்சியும்

ஆண்களுக்கு வளர்ச்சி சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் உயரமும், வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.


2.5 உடல் எடை:

இந்த வளரிளம் பருவத்தில் அவரவர் உயரத்திற்கேறப அவர் தம் உடலின் எடையும் கூடும். இது அவர்கள் உட்கொள்ளும் உண்வைப் பொறுத்தது. உடலின் எடையும் உயரமும் குறிப்பிட்ட விகிதத்தில் வளர்ச்சி பெறும்.


2.6 இன உறுப்பு வளர்ச்சி:

வளர் இளம் பருவ்த்தின் போது ஆண், பெண் இரு பாலருக்கும் இன உறுப்புகள் முழுமையால வளர்ச்சி பெறுகின்றன. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவை செயல்படக் கூடிய பக்குவம் பெறுகின்றன.2.7 மார்பக வளர்ச்சி:

மார்பக வளர்ச்சி சிறுமிக்கு 8 வயது முதல் 13 வயதிற்குள் தொடங்குகின்றது. இந்த வளர்ச்சி 13 வயது முதல் 18 வயதிற்க்குள் முடிந்து விடுகிறது.2.8 இடை வளர்ச்சி:

பெண்களுக்கு குழந்தைப் பேற்றின் போது இடை எலும்பு விரிவடைவதற்க்கு ஏற்றார்போல் குழந்தயிலேயே இடை அமைப்புத் தோன்றி விடுகிறது.

இடைப்பகுதியின் விரிவும், வளர்ச்சியும் முதன்மையானது. வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் பத்தரை வயதில் தொடங்கும், அது ஒன்பதரை வயதில் தொடங்கவும் வாய்ப்புள்ளது.2.9 இளைய வயதில் பருவம் அடைதல்:

வளர்ந்து வரும் தலைமுறையில் பெண்கள் அதிகமான உயரம் வளர்வதும், குறைந்த வயதில் பூப்பெய்தலும் நிகழ்ந்து விடுகின்றன. பருவம் அடைதல் பெண்களின் சிறு வயதில் நிகழ்கிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் முன்னால் பூப்பெய்தும் பருவம் 14 வயதாக இருந்த நிலைமாறி தற்போது சராசரி 11 வயதாக மாறி உள்ளது. சத்துள்ள உணவும் சீரான உடல் நலமும் இதற்கான காரணங்களாகச் சொல்லப்ப்டுகின்றன.

தொலைக்காட்சியும் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். பூப்படையும் இக்கால கட்டத்தில் பெண்கள் உடலிலும், உணர்ச்சிகளிலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.


2.10 மாதவிலக்கு:

மாதவிலக்கு தொடங்குவது என்பது பெண் வளர்ச்சியடைந்து விட்டாள் என்பதற்கான அறிகுறி ஆகும்.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great