வாழ்வின் நோக்கம்.

இன்பம்
துன்பம்
அமைதி

மெய்ஞான பயணமா ? விஞ்ஞான பயணமா ?

மனித வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்க்கும் மற்றும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு போவதற்க்கு மட்டுமா? என்றால், பதிலோ, இல்லை, என்பதுதான்.

வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியதுடனும், மன மகிழ்ச்சியுடனும், ஆன்மதெளிவுடன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் வாழ்வதர்கே ! !. பணம் நோக்கிய மனிதனின் வெளி நோக்கிய, உலகளாவிய பயணம். ஆரோக்கியம் நோக்கி சற்று உள் நோக்கிய பயணமாக திரும்ப வேண்டும். அதுதான் மன நிறைவின் முதல் படி.

வருங்காலம் என்பது வரலாறாக எழுதபடுவதற்குள் வாழ்ந்து தீரப்பட வேண்டிய காலமாகும். ----------நேரு.வாழ்வின் உயரிய நோக்கம் என்ன ?

முதலில் ஒருவன் தன் அள்வில் மன அமைதியுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

பிறகு தான் அனுபவித்து வரும் மன அமைதி போல, உலகில் மன அமைதிக்காக ஏங்கும் பல உயிர்களுக்கு வழிகாட்டியாக அமையுமாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, அல்லது அமைத்துக் கொள்ள் முயல்வது, போன்றவைதான் மனித வாழ்வின் உயரிய நோக்கமாகும்......இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் ?.

வாழ்க்கை வரப்பிரசாதத்தை எண்ணிப்பார்............

உங்களுடைய வாழ்க்கையே உங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

அத்தகைய வரப்பிரசாதத்தை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பாருங்கள். இந்த உலகில் உங்களுக்கு கீழ் வசதி வாய்ப்புகள் இல்லாமல் வாழ்பவர்கள் கோடான கோடி மக்கள்.

அவர்களை பற்றி கண நேரம் நினைத்துப் பார்த்து, நம் வாழ்வில் நிம்மதி மட்டும் நாடாமல், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கும் நம் உடலால், நம்முடைய அறிவால் என்ன செய்ய ம்ய்டியும் என்ற மாறுபட்ட எண்ணத்தை மனதில் விதைத்து, அதன்படி, செயல்களை வடிவமைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதையை சீர்செய்து கொள்வோம்.மாறுபட்ட சிந்தனை............

தனி ஒரு மனிதனின் மாறுபட்ட எண்ணம் தான், இந்த உலகில் மாற்றத்தின் ஆரம்பம்.

தனி ஒரு மனிதனின் மாறுபட்ட சிந்தனை தான், இந்த உலகளாவிய பலப் பல புரட்சிகளுக்கான வித்தி என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்துவோம்.

சிறிய அளவில் தான், தன் குடும்பம், தன் சுற்றம் என்ற நிலை தாண்டி,

நம்மால் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்ய இன்றே நம் நேரத்தை ஒதுக்குவோம் !!
எங்கே...........நிம்மதி......... !

திருச்சி பெல்லில், சமீபத்தில் எல்லா தொழிற்ச் சங்க யூனியன் தலைவர்களுக்கும் மற்றும் செயாலாளர்களுக்கும் பிரத்தியேகமாக ஒரு நால் மனித வள மேம்பாட்டு பயிற்சி வகுப்பி, "மாற்றம்............மாற்றம்........" என்ற தலைப்பில் நடத்தும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்தப் பயிற்சி வகுப்பில் பங்குப் பெற்ற ஒரு அன்பர் க.பாலுசாமி எனக்கு அவை எழுதிய ஒரு நூலை எனக்கு அன்பு பரிசாக அளித்தார். அந்த நூலின் பெயர் " எங்கே நிம்மதி......!!".


திருச்சி பெல் தொழிற்சாலையில், உற்பத்தி துறையில் உள்ள க.பாலுசாமி, தன்னுடைய பெயரை க.கண்ணநேசன் என்று மாற்றிக் கொண்டு "எங்கே.....நிம்மதி....... ! ", என்ற அர்புதமான வகையில் பத்தகத்தி, 222 பக்கங்களில் பலரும் சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதி உள்ளார்.

அந்த நூலின் பின் அட்டையில் அவை எழுதி உள்ள ஒரு கவிதையை அடுத்த இரண்டு பக்கத்தில் கொடுத்துள்ளேன்.....படியுங்கள்....நன்றாகப் படியுங்கள்.நினைத்துப் பார்............

"கைத்தேர்ந்த கல்வியும்
கைநிறைய ஊதியமும்
கண்நிறைந்த மனைவியும்
களித்து மகிழப் பிள்ளைகளும்"....

"விரும்பியது போல கட்டிய வீடும்
வீடு நிறைந்த பொருட்களும்
வேலைக்கு ஆட்களும்
வேளா வேலைக்கு சாப்பாடும்"


நினைத்துப் பார்............

"ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும்
ஆர்ப்பரிப்பும் அகங்காரமும்
அனைத்துமே நம் வசம்தான் - ஆயினும்

"நிம்மதியும் நித்திரையும் நிறைவும் மகிழ்ச்சியும்
நம் வசமற்று போனது ஏன்.... ?"

நிம்மதி வாழ்க்கை............

"நிம்மதியும் நித்திரையும் நிறைவும் மகிழ்ச்சியும் நம் வசமற்று போனது ஏன்?

இன்று, ஒவ்வொரு தனிமனிதனும், இந்த இயந்திரமயமான உலகத்தில் தனக்கு தானே, தினம் தினம், மனசாட்சியை கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வியை, அன்பர் கண்ண நேசன் நம் முன் வைக்கிறார்.

நித்தம் நிம்மதி வாழ்க்கைக்கு, நமது உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்க்கு சிறிது நேரம் ஒதுக்குவோம். தேவை பொறுப்பு உணர்ச்சி மற்றும் மன மாற்றம்.........

இன்று 21 ஆம் நூற்றாண்டில் நம்முடைய வசதி, வாய்ப்புகள் நமது முன்னோர்கள் அனுபவித்ததைவிட பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், அதற்க்கு எற்றாற் போல் , நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நிம்மதி உயர்ந்துள்ளதா? என்றால் விடை..........இல்லை........இல்லவே இல்லை, என்பதுதான்.

"எங்கே நிம்மதி..........அங்கே எனக்கு இடம் வேண்டும்....", என்று கவியரசர் கண்ணதாசன் அன்றே இயற்கையை வேண்டினார். அந்த தேடல் இன்று 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகரித்துள்ளது.பிரபஞ்ச சக்தி..........

இயற்கை அன்னை நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிமிடமும் ஒரு உண்மையை ஒவ்வொரு நிமிடமும் ஒரு உண்மையை ஒவ்வொரு விதத்தில் வெட்ட வெள்ச்சமாக்கிக் கொண்டே இருக்கிறாள்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அறியாமை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துக் கொண்டே இருக்கிறோம். இந்த பயணம் தொடர் பயணமாக வாழ்க்கை முழுவதும் நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் சரசரி மனிதன் அந்தப் பாடங்களை மனம் எல்லை கட்டிய நிலையில் கற்க மறுக்கிறான்.
உள்ளத்திலே களங்கம்..............

மனம் எல்லைக் கட்டிய நிலையின் விளைவு... "உள்ளத்திலேயே களங்கம், உடலிலே நோய்", தவறான எண்ணங்களால், தவறான செயல்களால், தவறான பழக்க வழக்கங்களால், தினம் தினம் மனித மனம் மாசு அடைகிறது.

தினம் தினம் உடலை, உடல் குப்பையை சுத்தம் செய்ய குளிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் மனதை, மன குப்பையை சுத்தம் செய்கிறோமா? இல்லை.. விளைவு .. உடலிலேயே நோய் தொற்றிக் கொண்டு விட்டது மற்றும் மனம் மாசு அடைந்து, கலங்கம் அடைந்து விட்டது.நோய் இல்லாதவன் வாலிபன்.........

இந்த உலகில் நம்மை சுற்றி எத்தனை 50 வயதுக்கும் மேல் ஆன நோய் இல்லாத உடல் மற்றும் உள்ள ஆரோக்கிய வாலிபர்கள் உள்ளனர்? அவ்வளவு ஏன், 40 வயதுக்கும் மேல் ஆன நோய் இல்லாத உடல் மற்றும் உள்ள ஆரோக்கிய வாலிபர்கள் உள்ளனர்?
பதில், விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உள்ளனர்.
மனிதனின் வாழ்க்கைக்குப் பொருந்தாத எண்ணத்தாலும், செயலாலும், அதை திரும்ப திரும்ப செய்து மனதில் கலங்கம் ஏற்பட்டு உடலில் நோயாக உருப்பெருகிறது.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great