தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

மன நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

ஆனந்த வாழ்க்கைக்கு தேவை...........

8. தினசரி நிதானமாக முடிவெடுக்கும் மனோபாவ நிர்வாகமே, தினசரி நேர நிரிவாகம்,
7. தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின், நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்.
6. தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம்.
5. தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்.
4. தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்.
3. தினசரி உணவு நிர்வாகமே, மனித மன நிர்வாகம்.
2. தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்.
1. தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிரிவாகம்.

மன நிர்வாகம்.

மன நிரிவாகமே வாழ்க்கை நிர்வாகம்.
Mind Management is Life Management.

தனி ஒரு மனிதனின் மன நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்க்கு அடிப்படையாக அமைகிறது.

இதைத்தான், 'உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்' மற்றும் 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்', என்று நம் சான்றோர்கள் சொல்கிறார்கள்.


நல்லதை நினை...........நல்லததைச் சொல்................
நல்லதை செய்.........நல்லது தானாக நடக்கும்...................

மனதில் நல்லதை நினையுங்கள்...
மனதில் நினைத்த நல்ல எண்ணத்தை இனிமையாக சொல்லுங்கள்...............

மனதில் நினைத்த நல்ல, தூய சமூக மேம்பாட்டு எண்ணத்திற்க்கு செயல் வடிவம் கொடுங்கள்...............

உங்களது வாழ்க்கையில் நல்லது தானாக நடக்கும்....!

மேல்நோக்கிய உயரிய சிந்தனை.............. வெற்றி

கெட்டதை நினை...........கெட்டதைச் சொல்....
கெட்டதைச் செய்........கெட்டது தானாக நடக்கும்.........

மனதில் கெட்டதை நினையுங்கள்..........மனதில் நினைத்த கெட்ட எண்ணத்தை கடுமையான சொல்லாகச் சொல்லுங்கள்...

மனதில் நினைத்த கெட்ட, சமூக சீர்கேட்டு எண்ணத்திற்க்கு செயல் வடிவம் கொடுங்கள்......

உங்களது வாழ்க்கையில் கெட்டது தானாக நடக்கும் !

கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை தோல்வி

உங்களது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்ளுங்கள்......

தனி மனிதனின் உண்மையான எதிரி வெளி உலகில் இல்லை. தனி மனிதனின் உண்மையான எதிரி உள் உலகில் உள்ளான். அது என்ன உள் உலகம் ? அதாவது, ஒருவனுடைய மனதில் எழும் முறையற்ற எண்ணங்களே.

உள்ளத்திலே கலங்கம், உடலியே நோய்.

ஒரு தனிமனிதனின் உயரிய வாழ்க்கை, தனிமனிதனின் கையில் தான் உள்ளது.

குறிப்பாக, தனி ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வாழ்க்கை, தனிமனிதனின் எண்ணத்தின் வழியில்தான் உள்ளது.

மனிதனின் மேல்நோக்கிய உயரிய சிந்தனை.....வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.

மனிதனின் கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை............... வாழ்க்கையில் தோல்வியைத் தழுவச் செய்யும்.

மேல் நோக்கிய உயரிய சிந்தனை -- வெற்றி
கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை -- தோல்வி

மன நிர்வாகம் என்றால் என்ன ?

மனம் சொல்லும் படி ஐம்புலங்கள் இயங்க வேண்டும். ஆனால், சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஐம்புலங்களின் சொல்லும்படிதான் மனம் இயங்குகிறது. விளைவு நேரத்தை சரியாக திட்டமிட்டபடி நிர்வகிக்க முடியவில்லை.

மனித ஐம்புலங்களின் நிர்வாகமே,
மனித மன நிர்வாகம் !

மனித மன நிர்வாகமே,
மனித நேர நிர்வாகம் !!

மனித நேர நிர்வாகமே
மனித வாழ்க்கை நிர்வாகம் !!!

விதி வழி வாழ்க்கை...........

எல்லாம் என் விதி என்று பலர் இந்த உலகில் தினம், தினம் புலம்புகிறார்கள்.

அப்படி என்றால் என்ன ?

ஐம்புலங்களின் வழி மனம் சென்றால் தனி மனிதனின் வாழ்க்கை விதி வழி செல்கிறது என்று பொருள்.

விதி வழியில் மனித வாழ்க்கை............

நேரம் மனிதன் கையில் இல்லை............
நேரத்தின் கையில் மனிதன் !!

மிருகத்தில் இருந்து பரிமாண வளர்ச்சி அடைந்த ஆறாவது அறிவு பெற்ற மனிதன், பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கொண்டே இருக்கிறான். கடைசியில் மிருகத் தன்மையே மனிதத்தன்மையை வெற்றி பெற்று விட்டது.

விளைவு, விதி வழி வாழ்க்கை !

அதாவது ஐம்புலங்களின் வழி மனம் சென்று நேரத்தை நிர்வாகிக்க முடியாமல், நேரப் போராட்டத்தில் மனிதன் போராடித் வாழ்க்கையைத் தொலைக்கிறான்.

மதி வழி வாழ்க்கை

மனம்---------கண், காது, மூக்கு, வாய், தோல்.
மதி வழி வாழ்க்கை ! - மனிதன் கையில் நேரம்

மனத்தின் வழி கண், காது, மூக்கு, வாய் மற்றும் தோல் என்ற ஐம்புலங்களின் செயல்பாடு அமைகிறது !

நேரம் நமது கையில் !!

மனம் வழி ஐம்புலங்கள் சென்றால் தனி மனிதனின் வாழ்க்கை மதி வழி வாழ்க்கை செல்கிறது என்று பொருள்.

மதி வழி வாழ்க்கை,
மனிதன் கையில் நேரம் !!

மிருகத்தில் இருந்து பரிணாம வளரிச்சி அடைந்த ஆறாவது அறிவு பெற்ற மனிதன், பழ்க்கத்திற்க்கும் விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கடைசியில் அவனிடம் உள்ள மனிதத் தன்மை வெற்றி பெற்று விட்டது.

விளைவு மதி வழி வாழ்க்கை !

அதாவது மனம் வழியில் ஐம்புலங்கள் சென்று நேரத்தி சரியாக நிர்வகித்து அதன் மூலம் வாழ்க்கையை நிர்வகிக்க முடியும்.

நேரப் போராட்டத்தில் மனிதன் வாழ்நாள் முழுவதும் போராடி, போராடி முழு வாழ்க்கையும் தொலைக்கிறான்.

மதி வழி வாழ்க்கை,
மனிதன் கையில் நேரம் !!

விதி மற்றும் மதி வழி வாழ்க்கை:

விதி: கண், காது, மூக்கு, வாய், தோல் ------மனம்

திட்டமிடாத ஐம்புலங்களின் வழி மனித மனம் செல்லும் வாழ்க்கை திட்டமிட்டு ஒரு தனிமனிதனை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்.


மதி: மனம்-------கண், காது, மூக்கு, வாய், தோல்.

திட்டமிட்டு மனித மனம் வழி ஐம்புலங்கள் செல்லும் வாழ்க்கை திட்டமிட்டு ஒரு தனிமனிதனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

விதி வழி வாழ்க்கை !
நேரத்தின் கையில் மனிதன் !!

கண், காது, மூக்கு, வாய், தோல் ------மனம்


மதி வழி வாழ்க்கை !
மனிதன் கையில் நேரம் !!

மனம்-------கண், காது, மூக்கு, வாய், தோல்.

இரண்டு மனம் வேண்டும். நேரத்தி நிர்வாகம் செய்ய !!

வேலை, குடும்ப, சமுதாய நிர்வாகம்

மன நிர்வாகமே.....
வேலை மற்றும் தொழில் நேர நிர்வாகம்,

மன நிர்வாகமே.....
பண மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே........
குடும்ப மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே.........
சமூக சேவை நேர நிர்வாகம்,

மன நிர்வாகமே..........
சமுதாய மேம்பாட்டு நிர்வாகம்,

மன நிர்வாகமே.......
நேர நிர்வாகம்,

நேர நிர்வாகமே........
வாழ்க்கை நிர்வாகம்.

முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

மனித வாழ்வியல் நிலைகள்

தனி மனிதன் ஒரு நாளை நான்கு வகைளில் தான் செலவு செய்யலாம்.

1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம்

இந்த உலகில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலும் அனுபவித்தது, இந்த 4 நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை மட்டும்தான்.

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண் மனிதன் அனுபவித்துக் கொண்டு இருப்பது இன்பமோ அல்லது துன்பமோ என்ற நிலைகளைத்தான்.

அமைதியான வாழ்க்கை:

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களில் பலர், வாழ்வின் பெரும்பகுதி அமைதி மற்றும் பேரின்ப நிலையில் தன் வாழ்நாளைக் கழித்தனர்.

நம் முன்னோர்கள் கிராமங்களில் வாழ்ந்து, விவசாயம் செய்து, சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.

மனிதன் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு வாழ்க்கையின் முதல் பாதியில் பணம் சம்பாதிக்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்த பாதியில் சம்பாதித்த அனைத்தையும் உடல் ஆரோக்கியத்தைத திரும்பப்பெற செலவு செய்கிறான்.

நவநாகரீக மனிதன் செல்வத்தை சேர்க்கும் ஒரே குறிக்கோளோடு உடல் ஆரோக்கியதை, மன ஆரோக்கியத்தை, ஆன்ம ஆரோக்கியதை ஒவ்வொரு நாளு ம் தொலைத்துக் கொண்டுருக்கிறான். என்ன மடமை ! !.

நம் முன்னோர்களின் அர்த்தமான வாழ்க்கை:

நம் முன்னோர்கள் அமைதி மற்றும் ஆனந்தத்திற்க்கு வெளியில் தேடாமல், தனக்குள்ளேயே தேடினார்கள்.

நம் முன்னோர்கள், இன்பம் மற்றும் துன்பம் என்ற சாதாரண மனநிலையைத் தாண்டி அமைதி நிலையை தினம் தினம் அடைந்தனர். மேலும், அமைதியிலேயே மனதை நிறுத்தி பராமனந்தத்தைக் கண்டுபிடித்து, அந்த பேரின்ப நிலையில் திளைத்து, அர்த்தமுள்ள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது.
பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்திலும் உள்ளது.

-திருமந்திரம்.
நம் முன்னோர்களின் அர்த்தமான வாழ்க்கை:

சற்று சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப் புரியும், நம் முன்னோர்கள், எப்படி உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்று.

அவர்கள் எளிமையான மற்றும் ஆடம்பரமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள், விளைவு, அமைதியான நிறைவான வாழ்க்கை. அவர்களுடைய அருள் நோக்கிய உன்னத பயணத்தில் பொருள் வறுமை நிலவியது உண்மைதான். ஆனால், அறிவு நிறைவு அடைந்தது, விளைவு, நம முன்னோர்கள் மனதளவில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள், பொருள் அளவில் சாதாரண் நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.

நம் முன்னோர்களின் மெஞ்ஞானப் பயணம்:

நம் முன்னோர்களின் ஞானப் பயணம், உள்ளே இருந்து வெளியே சென்றது. அதாவது, மனதின் உள்ளே இருந்து இந்த உலகத்தை நோக்கி சென்றது.

'நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிய உண்மை.
உன்னை உன் உடலை, மற்றும் மனதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்த உலகை சரியகப் புரிந்து கொள்ளலாம்.

நம்முடைய போலி வாழ்க்கை:

இன்று நம்மில் பல இளைஞர்கள், விட்டில் பூச்சியாக, விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக உருவான பல தேவையற்ற பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். விளைவு, வெளியே ஆடம்பர வாழ்க்கை மற்றும் பகட்டான வாழ்க்கை வாழ மனிதன் ஆசைப்படுகிறார்கள்.

இத்தகைய நவநாகரீக மனிதனின் ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, அசாதாரண் மனித வாழ்க்கையில், அசாதாரண் மனிதன், சாதரண் மனிதர்களாக வாழ்கின்றனர். விளைவு, உன்னதமான மனித வாழ்க்கை மனதளவில் வெறுமை மற்றும் போலி வாழ்க்கையில் போய் முடிகிறது.

நம்முடைய போலி வாழ்க்கை:

ஆனந்தம் மற்றும் அமைதி நம்மிடம் இருப்பது தெரியாமல், அமைதியை வெளியில் தேடி, தேடி கிடைல்லாமல் நவநாகரீக மனிதன் வாழ்நாள் முழுவதையும் மன நிம்மதியின்றி வீணடிக்கின்றான்.

இன்றைய விரைவான உலகத்தில், இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதைப் புரிந்துகொண்டால் போரும், என்று நினைக்கிறார்கள். தன், உடலை, தன் மனதை, மருத்துவர் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் இன்றைய படித்த மேல்தட்டு வர்க்கம் மற்ரும் நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்து உள்ளது.

நம்முடைய விஞ்ஞான பயணம்....... போலி வாழ்க்கை:

நம் நாகரீக மனிதனின் விஞ்ஞானப் பயணம், வெளியே இருந்து உள்ளே செல்கிறது.

இன்றைய இளைஞர்கள் நினைப்பதெல்லாம "தரணியை தான் ஆண்டால், தன்னை டாக்டர் ஆள்வார்", என்பது தான். மேலும் இந்த உலகத்தை இண்டர்நெட் மூலம் புரிந்து கொண்டால், தன்னை, தன் உடல் நலத்தை மற்றும் மனநலத்தை டாக்டர் (மருத்துவர்) பார்த்துக் கொள்வார் என்ற கருத்து அவர்களிடம் நிலவுகிறது.

என்ன மடமை ?

சென்ற 20ஆம் நூற்றாண்டு வாழ்க்கை:

நம் முன்னோர்கள்...............

..................மெதுவாக உணவு (Slow Food) உண்டனர்.
..................மெதுவாக செல்வம்(Slow Money)ஈட்டினர்.
..................மெதுவாக வாழ்க்கை(Slow Life)வாழ்ந்தனர்.
..................மெதுவான இறப்பு(Slow Death)நிகழ்ந்தது.

நிதானமான இளமை வேகம்...........
முதுமையில் விடை பெறு !
நோயற்ற வாழ்க்கை..............முழுமையான வாழ்க்கை !!

இளமையில் நிதான வாழ்க்கை...........முதுமையில் மரணம். இந்த அருள் நோக்கிய பயணத்தில் அறிவு, நிறைவு, ஆனால் பொருள் வறுமை என்ற நிலை நம் முன்னோர்களுக்கு இருந்தது.

இந்த 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கை.............

இன்றைய விரைவான வாழ்க்கையில் மனிதர்கள்............

......வேகமான / துரித உணவு(Fast Food) உண்ணுகின்றனர்.
..................வேகமாக செல்வம்(Fast Money)ஈட்டுகின்றனர்.
..................வேகமாக வாழ்க்கை(Fast Life)வாழ்கின்றனர்.
..................வேகமான இறப்பு(Fast Death)நிகழ்கிறது.

இந்த பொருள் நோக்கிய பயணத்தில் மனிதனுக்கு அறிவு வறுமை அதிகமாகிறது, ஆனால் பொருள் நிறைவு கிடைக்கிறது. உண்மை அறிவை விட்டு, பொருள் அறிவை அதிகரித்துக் கொண்டு நவீன கால மனிதன் அல்லல் படுகிறான்.

நிதானமற்ற இளமை வேகம்............இளமையில் விடைபெறு ! !
இளமையில் திசை தெரியாத வேகம்......இளமையிலேயே நோய்...........
முழுமையற்ற வாழ்க்கை..........இளமையில் மரணம்.

நோயற்ற வாழ்க்கை.....இன்றைய வாழ்க்கை......

மெய்ஞானப் பயணம்.........

அமைதியை நோக்கிய உன்னத மெய்ஞானப் பயணம்

தன்னை ஆண்டால் தரணியை ஆளலாம் !

ஆடம்பரத்தை நோக்கிய, போலி விஞ்ஞானப் பயணம்

தரணியை ஆண்டால், தன்னை மருத்துவர் ஆள்வார் !!

நேற்றைய நம் முன்னோர்கள் வாழ்க்கை......

நமது முன்னோர்கள் மெதுவான, உள்நோக்கிய உயரிய சிந்தனை வாழ்க்கை (Intutive thinking) என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனால் மெதுவான இறப்பு நிகழ்ந்தது.

இன்றைய நவநாகரீக வாழ்க்கை..............

இன்றைய நவநாகரீக மனிதன், வேகமான வெளிநோக்கிய சாதாரண் சிந்தனை () என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்கின்றனர். அதனால் வேகமான இறப்பு அல்லது இளம் வயதிலேயே இறப்பு நிகழ்கிறது.

நம்முடைய போலி வாழ்க்கை........

கவியரசர் கண்ணதாசன் சொல்லியது போல் சராசரி மனிதன், சராசரி வாழ்நாளில்............

................ஆடிய ஆட்டம் என்ன ?
................பாடிய பாட்டும் என்ன ?

கூடுவிட்டுப் கூடு போனால் கூடவே வருவது என்ன ?

வாழ்நாள் முழுவதும் அலைந்து அலைந்து சம்பாதித்த பணமா?.........இல்லை, தேடித்தேடி கிடைத்த புகழா.......இல்லை......பதவியா.........இல்லை, பட்டமா...........இல்லை.

இனிய வாழ்க்கை.......

ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடைசி காலத்திற்க்கு தேவை மூன்றுதான். அவைகள், உடல் அரோக்கியம், உள்ள ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம்.

இன்றைய விரிவான வாழ்க்கை முறையில், இலட்சத்தில் ஒருவருக்கு கூட அத்தகைய, உடல் ஆரோக்கியத்துடன், உள்ள ஆரோக்கியத்துடன் மற்றும் ஆன்ம ஆரோக்கியத்துடன் கூடிய பரிபூரண வாழ்க்கை கிடைப்பதே இல்லை.

அவ்வாறு மூன்று ஆரோக்கியம் அமையப்பெற்ற சிலரை நாம் பாக்கியசாலிகள் அல்லது கொடுத்துவைத்தவர்கள் என்று அழைக்கலாம்.

நவநாகரீக மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம், அதுவும் ஒரே ஒரு போராட்டம் தான் அந்தப் போராட்டம் - நேரப் போராட்டம்.

மனிதன் ..........தேவையற்ற எண்ணங்களைத் தேவையாக்கிக் கொண்டான். விளைவு, வாழ்க்கைச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்.

கடைசியில், தேவையான பலப்பல எண்ணங்களை நினைக்க நேரம் இல்லாமல் முழுவதும் தத்தளிக்கிறான்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் இந்த உன்னத நிலை தெளிவாகப் புரியும்.

திட்டமிட்ட நாள்....திட்டமிட்ட வாழ்க்கை....

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

நாட்குறிப்பு

நம்மில் பலரிடம், நாட்குறிப்பு இருக்கும். வருலம் தோறும், டிசம்பர் மாதக் கடைசியில் நாட்குறிப்பு வாங்குவோம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு தவறாமல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளது ?

இந்தியாவில் உள்ள இளைஞர்களில் நூறு பேரை எடுத்துக் கொண்டால், ஒருவருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ நாட்குறிப்பு அழுதும் பழக்கம் இருக்கலாம்.

மீதம் உள்ள 98 சதவீதம் அல்லது 99 சதவீத இளைஞர்களுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமே கிடையாது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் நான் கேட்டு கிடைத்த விடையைக் கொண்டுதான் தொளிவாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

ஏன் இந்த அவல நிலை ?

நாட்குறிப்பு - பணம் இல்லை ? சோம்பேறித்தனம் ?

இந்த 98 முதல் 99 சதவீத இந்திய இளைஞர்களிடம் நாட்குறிப்பு வாங்க பணம் இல்லையா என்று வினவினால், பணம் ஒரு பிரச்சனை இல்லை.

இவர்களில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று அடுத்த ஆண்டிற்க்கான நாட்குறிப்பை வாங்கி, ஜனவரி மாதம் முதல் நாள் மட்டும் எழுதி விட்டு மற்ற நாட்கள் எல்லாம் எழுதாமல் விட்டவர்களாக இருப்பார்கள்.

டைரி அல்லது நாட்குறிப்பு எழுதாதவர்களிடம் காரணம் கேட்டால், பலரிடம் இருந்து பலக் காரணங்கள் பளிச்சென்று வெளிவரும்.

நாட்குறிப்பு ஏன் எழுத வேண்டும் ?

பல இந்திய இளைஞர்களிடம் நாட்குறிப்பு இருக்கிறது. ஆனால், எழுத சோம்பேறித்தனம், எழுத மனம் இல்லை. அத்தகைய இளைஞர்களின் மனதில் பல வகைக் கேள்விகள்...

* ஏன் நாட்குறிப்பு எழுத வேண்டும் ?
* எதற்க்காக நாட்குறிப்பு எழுத வேண்டும் ?
* நாட்குறிப்பில் என்ன எழுத வேண்டும் ?
* நாட்குறிப்பு எழுதாமல் வாழ்க்கை நடத்த முடியாதா?
* நாட்குறிப்பு எழுதாமல் வாழ்க்கையில் சாதிக்க முடியாதா?

நாட்குறிப்பு எதற்க்காக எழுத வேண்டும் ?

இன்னும் தொளிவாகச் சொல்லப் போனால், நம்மில் பல இளைஞர்கள், நாட்குறிப்பு எழுதும் நேரம் ஒரு நாளில், ஐந்து அல்லது பத்து நிமிட நேரம், ஒரு நாளில் மற்றும் வாழ்க்கையில் வீண் செய்யும் நேரம் என்று கருதுகிறார்கள்.

மேலும் சில இளைஞர்கள், நான் செய்ய வேண்டிய வேலைகளை நாட்குறிப்பு எழுதாமலேயே மனதில் திட்டமிடுவேன். ஆகவே, எனக்கு இந்த நாட்குறிப்பு எழுதும் பழக்கம் தேவை இல்லை என்று ஜம்பமாக சொல்லிக் கொள்வார்கள்.

இதையும் தாண்டி சில இளைஞர்கள் மேலும் விளக்கமாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை பற்றி கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.

* நாட்குறிப்பு கட்டாயம் ஒருவர் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பு தினம் தினம் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பை அந்த நாள் முடிந்த பிறகு இரவு நேரத்தில் எழுத வேண்டுமா ?

நாட்குறிப்பை எப்படி எழுத வேண்டும் ?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* நாட்குறிப்பை ஒரு நாள் முன்னால் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பில் என்ன, என்ன விசயங்கள் எழுத வேண்டும் ?
* ஒரு நாளில், ஒவ்வொரு மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா ?
* ஒரு நாளில், ஒவ்வொரு அரை மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா ?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* ஒரு நாளில் ஒவ்வொரு 1/4 மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பை எழுத வேண்டுமா?
* ஒரு நாளில் 8 மணி நேரம் வெளியில் தொழில் மற்றும் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா?
* ஒரு நாளில் 18 மணி நேரம் வீட்டில் செலவு செய்யும் நேரத்தில் 8 மணி நேரம் செலவு செய்யும் குடும்ப நேரத்தைப் பற்றி நாட்குறிப்பை எழுத வேண்டுமா?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* ஒரு நாளில், 16 மணி நேரம் வீட்டில் செலவி செய்யும் தனி மனித நேரத்தைப் பற்றி எழுத வேண்டுமா ?
* ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சாதரண சம்பவங்கள் பற்றி எழுத வேண்டுமா?
* ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சாதனைகளை அல்லது அசாதாரண சம்பவங்களைப் பற்றி எழுத வேண்டுமா?

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

இன்றைய இளைஞன். குறிப்பாக நவநாகரீக இளைஞன் கட்டாயம் நாட்குறிப்பு எழுத வேண்டும்.

ஏன் ? எதற்கு ?

இன்றைய விரைவான உலகத்தில், பலப்பல வேலைகளை திறம்பட, குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய நிலையில் இந்திய இளைஞன் இருக்கிறான்.

திட்டமிட்ட வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

அதே வேளையில், திட்டமிடாத வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்.

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

இந்த உலகில் நம்மைச் சுற்றி பலர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால், தோல்வி.....தோல்வி...என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியையே மருந்துக்கூட பார்ப்பது இல்லை.

காரணம், பலர் ஒரு செயலை திட்டமிடாமல் செய்துவிட்டு, தோல்வியடைந்துவிட்டு, பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். மேலும், பலர் பல சமயம் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது கிடையாது.

நம்மைச் சுற்றி பல தோல்வியடைந்த மனிதர்கள் உள்ளனர். அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களே உள்ளனர்.

தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட வாழ்க்கை முறையைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும் வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனை அவர்கள் அடைகிறார்கள்.

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

"கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது.

"சிந்தனையோடு கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பதுதான் இன்றைய காலகட்டத்துக்கு உகந்த கோட்பாடு.

கடினமாக உழைப்பவர்கள் அதுவும் திட்டமிடாமல் கடினாமாக உழைப்பவர்கள் வெற்றியடைய முடியாது. திட்டமிடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான வேலையை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாக அர்த்தம்...

"செயல்களை திட்டமிட்டு திட்டமிட்டபடி செயலாற்று"


என்று சொல்வது மிக மிக எளிது.

ஆனால், இந்த உலகில் நூறு பேரில், ஒருவர்தான் இதை வாழ்வில் குறிப்பாக தினசரி வாழ்வில் செயல்படுத்துகிறார். மற்றவர்கள் செயல்படுத்துவது இல்லை ஏன் ?

"செயல்களை திட்டமிடுவதே இல்லை !
பிறகு எப்படி திட்டமிட்டபடி செயலாற்றுவது ?

அதன் பிறகு, திட்டமிட்ட செயலை, திட்டமிட்ட படி, சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு செய்தால் வெற்றி.

திட்டமிட்ட வாழ்க்கை

இப்பொழுது தெளிவாகப் பார்போம். ஏன் நாட்குறிப்பு எழுத வேண்டும் என்று.....தினம், தினம் இந்திய இளைஞன் தன்னிடம் உள்ள நிறை என்ன ? குறை என்ன ? என்று தற்சோதனை செய்ய வேண்டும் ?.

பிறகு, நிறைய தினம் தினம் அதிகரிதுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே வேளையில், குறைகளை தினம் தினம் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த நிறை, குறை சமன்பாட்டை ஒரு இளைஞன் முறையாகச் செய்யும் பொழுது கட்டாயம் அந்த இளைஞன் பிற்காலத்தில் செயற்கரிய செயல்களைச் செய்ய முடியும்.

நாட்குறிப்பை இரவில் எழுதுவதை விட, முதல் நாள் இரவே. அடுத்த நாள் செய்ய இருக்கும் செயல்களைத் தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு அதன்படி, செயல்களை அமைத்துக் கொள்ளும் பொழுது அந்த ஒரு நாள் இனிய நாளாக மாறுகிறது.

அதாவது, ஒரு இளைஞனின் வாழ்வில் பலப்ல சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில சாதனை நிகழ்வுகள் தான் நடைபெறுகின்றன. சுருங்கச் சொன்னால், ஒரு இளைஞன் நாட்குறிப்பு எழுதுவதன் மூலம், நேரத்தை சரியாக நிர்வகித்து, சாதனை நிகழ்வுகளுக்கான அடித்தளம் அமைத்துக் கொள்கிறான்.

தனி ஒரு மனிதன், சாதாரண நாளாக ஒரு நாளை அமைத்துக் கொள்ள நேர மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் தேவை இல்லை !

ஆனால், தனி ஒரு மனிதன் அசாதாரண நாளாக ஒரு நாளை மாற்றத் தெளிவான மிகத்துல்லியமான நேர மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் தேவை !

இளைஞனே 24 மணி நேரம் கொண்ட ஒரு உன்னதமான நாளை, விழிப்புணர்வோடு நெருப்பு ஆற்றைக் கடப்பது போல் 24 நிமிட நேர நிர்வாக விழிப்புணர்வு என்ற கவச உடை கொண்டு கடந்து சமச்சீர் வாழ்க்கை நடத்து, உலகம் உன் காலடியில்.

சமச்சீர் வாழ்க்கை

24 மணி நேர வாழ்க்கை

ஒரு நாள் மனித வாழ்க்கை என்பது 24 மணிநேரத்தைக் கொண்டது. இந்த வாழ்க்கையை காற்று அடைந்த ஒரு பலுனோடு ஒப்பிடலாம்.
இதைத்தான் நம் முன்னோர்கள்...
"காயமே இது பொய்யடா...
வெறும் காற்றடைத்தப் பையட"
"வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால்
ஆவதென்ன?"
என்று பல வகையில் விளக்கியுள்ளார்.
ஒரு தனிமனிதனின் நேரம் ஒரு நாளில், 3 பெரிய வகைகளில் செலவு ஆகிறது. அவைகள்...
1 . வேலை நேரம்
2 .குடும்ப நேரம்
3 . தனிமனித நேரம்

சமச்சீர் வாழ்க்கை

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இயற்கை அன்னையால் கொடுக்கப்பட்ட உயரிய, சமமான சொத்து, நேரம் மட்டும் தான். சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரம்தான் நம்முடைய மிகப்பெரிய மனித சொத்து.

அந்த உன்னதமான 24 மணி நேரத்தை வேலைக்கு 8 மணி நேரம், குடும்பத்திற்கு 8 மணி நேரம் மற்றும் தனிமனிதனுக்கு 8 மணி நேரம் என்ற 3 வகையில் முறைப்படுத்திக் கொண்டு, சமன் செய்து வாழ்வதுதான் ஆரோக்கிய வாழ்க்கை முறை!!

சமச்சீர் வாழ்க்கை வாழ நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகவும் எளிது. ஆனால் திட்டமிட்டபடி சமச்சீர் வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினம். சமச்சீர் வாழ்க்கை வாழ முதல்படி மன நிர்வாகம். அதைத்தான் மனநிர்வகமே நேர நிர்வாகம் என்று தெளிவாகச் சொல்கிறோம். குறிப்பாக, ஒரு நாளில் 24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை:

சமச்சீர் வாழ்க்கை:

சமச்சீர் வாழ்க்கை வாழ நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகவும் எளிது. ஆனால் திட்டமிட்டபடி சமச்சீர் வாழ்க்கை வாழ்வது மகவும் கடினம். சமச்சீர் வாழ்க்கை வாழ முதல் படி மன நிர்வாகம். அதைத்தான் மனநிரிவாகமே நேர நிரிவாகம் என்று தெளிவாகச் சொல்கிறோம். குறிப்பாக, ஒரு நாளில் 24 நிமிட நேர நிரிவாகமே, 24 மணி நேர சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

நேரப் போராட்டம்:

* ஒரு நாளில், நாம் வேலைக்கு செலவு செய்யும் நேரத்தை ' < ' என்ற குறியீட்டால் குறிப்போம்.
* ஒரு நாளில், நாம் வேலைக்கு செலவு செய்யும் நேரத்தை ' > ' என்ற குறியீட்டால் குறிப்போம்.
* ஒரு நாளில், நாம் தனிமனித ஆரோக்கியத்திற்க்கு செலவு செய்யும் தனிமனித நேரத்தை ' ^ ' என்ற குறியீட்டால் குறிப்போம்.

ஒரு மனிதன் ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை வாழ்ந்தால் மூன்று கோணங்களும் (<, >, ^) சேர்ந்து சமமான் முக்கோண் நாளை, பரிபூரண நாளை உருவாக்கும்.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை:

ஆரோக்கிய வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்று ஒருவர் வாழ்ந்தால் கிடைக்காது. மாறாக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒருவர் வாழ்க்கையை முறைப்படுத்தி, வாழ்க்கையை வரையறைப்படுத்தி, அதன்படி, தினம், தினம் வாழ்வதால் கிடைப்பது.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை என்பது தனி மனிதன் ஒரு நாளில் 8 மணி நேரம் தனிமனித செயல்களுக்கும், 8 மணி நேரம் குடும்ப செயல்களுக்கும் மற்றும் மீதமுள்ள 8 மணி நேரம் பொருள் ஈட்டும் வேலைகளுக்கும் என்று ஒரு நாளைத் திட்டமிட்டு, பிறகு நேர விழிப்புணர்வோடு செலவு செய்ய வேண்டும்.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத வாழ்க்கை:

நம்மில் அதிகமானோர் சமச்சீராக நேரத்தை செலவு செய்யாமல், ஒரு நாளில் தொழிலுக்கு மற்றும் அலுவலக வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நேரம் செலவு செய்கின்றோம். விளைவு, 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை வேலை ம்ற்றும் வேலைக்குச் செல்லும் பயண நேரத்திற்க்கு செலவு செய்யும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இன்று சமுதாயத்தில் நிலவுகிறது.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத குடும்ப வாழ்க்கை:

இன்றைய விஞ்ஞான உலகில் மனிதன் பணம், பணம் என்று பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அலைகிறான். விளைவு, ஒரு நாளில் தனிமனிதனின் வாழ்க்கையில், 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை வேலை மற்றும் தொழிலுக்கே சென்றுவிடுகிறது. தனிமனிதன், குடும்பத்திற்க்காக மற்றும் தனிமனித ஆரோக்கியத்திற்க்கு செலவி செய்யும் நேரம் ஒரு நாளிக் மகவும் சுருங்கிவிட்டது.

"குடும்ப நேரம்" என்பது வீட்டில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சிபெட்டி முன் செலவு செய்யும் நேரம் இல்லை. நல்லதொரு குடும்பம்தான் பல்கலைக கழகம். குடும்ப மக்களை நல்ல குணநலன்கள் கொண்ட குடிமக்களாக நல்ல வழியில் உருவாக்கி நாட்டிற்க்கும், வீட்டிற்க்கும் பெருமை சேர்க்கும் உதவும் நேரம்.

"குடும்ப நேரம்" என்பது அத்தகைய நல்லதொரு இனிமையான பல்கலைக் கழகத்தை உருவாக்க முயலும் ஆக்கப்பூர்வமான நேரம்.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத தனிமனித வாழ்க்கை:

அதைவிட, பரிதாபம் என்னவென்றால் தனி ஒரு மனிதன், தன்னைப் பற்றி சிந்திக்கும் நேரமான 'தனிமனித நேரம்" ஒரு நாளில் மிக மிக சுருங்கிவிட்டது.

நீ உன்னை அறிந்தால்.....நீ உன் 24 மணி நேரத்தின் அருமையை உணர்ந்தால்...நீ உன் 24 நிமிட நேரத்தின் உட்பொருளை உணர்ந்தால்...இந்த உலகத்தில் கடைசி வரைப் போராடலாம்....உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் நீ தலைவணங்காமல் வாழலாம்.......

உடல், மன, ஆன்ம ஆரோக்கியம்

மன நிர்வாகமே .....
உடல் ஆரோக்கிய நேர நிர்வாகம்.

மன நிர்வாகமே.....
மன ஆரோக்கிய நேர நிர்வாகம் .

மன நிர்வாகமே.....
ஆன்ம ஆரோக்கிய நேர நிர்வாகம் .

மன நிர்வாகமே.....
நேர நிர்வாகம்

நேர நிர்வாகமே.....
வாழ்க்கை நிர்வாகம்

பரிபூரண வாழ்க்கை

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

வாழ்க்கை

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை இல்லை ! இப்படித்தான் வாழவேண்டும் என்று அறுதியிட்டு நேரத்தை சரியாக நிரிவாகம் செய்து ஆக்க வழியில் அறிவை செலுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

திட்டமிடாமல் வாழ்வது என்பது வாழ்க்கை அல்ல. திட்டமிட்டு குறிப்பாக நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்டபடி வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை.

பரிபூரண வாழ்க்கை


நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கையை சாதாரண வகையில் அமைத்துக் கொள்வதா ? அல்லது பரிபூரண் அசாதாரண நிலையில் அமைத்துக் கொள்வதா ?

பரிபூரண வாழ்க்கைதான் (Holistic Life) ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்க வேண்டிய உயரிய நிலை. அது தான் உயரிய அசாதாரண வாழ்க்கை.

பரிபூரண வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு தனிமனிதன் வாழ்க்கையை, குறிப்பக தினம் தினம் வெவ்வேறு செயல்களுக்கு செலவு செய்யும் நேரத்தி திட்டமிட்டு பயன் உள்ள் செயல்களை சமன் செய்ய முற்பட வேண்டும்.

பரிபூரண வாழ்க்கை

ஒரு நாள் வாழ்க்கையை ஒரு மனிதன் எந்த எந்த செயல்களுக்கு செலவு செய்ய வேண்டும் ?

தனி ஒரு மனிதன் தனக்குக் கிடைக்கும் உன்னதமான ஒரு நாளை, ஆறு வகைகளில் செலவு செய்யலாம்.

அந்த ஆறு வகைகள்:

1. பணத்தை மேம்படுத்த.........
2. குடும்பத்தை மேம்படுத்த.........
3. உடலை மேம்படுத்த.........
4. மனதை மேம்படுத்த.........
5. ஆன்ம பலத்தை மேம்படுத்த.........
6. சமுதாயத்தை மேம்படுத்த.........

வாழ்கை மேம்பாடு

ஆனால், நம்மில் அதிகமானோர் ஒரு நாளை இரண்டு அல்லது மூன்று வகைகளில் மட்டும் தான் செலவு செய்கிறோம்.

அந்த முன்று வகைகள்...
1 . பணத்தை மேம்படுத்த...
2 . குடும்பத்தை மேம்படுத்த...
3 . சார்ந்துள்ள நிறுவனத்தின் மூலம் சமுதாயத்தை மேம்படுத்த...

விளைவு, முறையற்ற வாழ்க்கை மற்றும் தெளிவற்ற வாழ்க்கை. மேலும், அசாதாரண மனிதன், சாதாரண மனிதனாக வாழ்ந்து, மடிகிறான்.

சிந்தனை செய் மனமே!

முறையற்ற வாழ்க்கையை மாற்றியமைத்து எப்படி முரண்படுத்துவது?
பிறகு முரன்படுத்தப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு சமன் செய்து வாழ்வது?

உடலை மேம்படுத்த

நாம் ஒரே ஒரு முறைதான் இந்த உலகில் வாழ்கிறோம். அந்த அறிய வாழ்க்கையின் அருமையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உயரிய நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் வாழ முற்படவேண்டும்.

தினமும் ஒவ்வொரு மணித்துளியும், நம்மை நாமே நான் யார்? என்னுடைய திறமைகள் என்ன? இந்தத் திறமைகளை என் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த வகையில் செலவு செய்ய வேண்டும்? என்று கேட்டுக் கொண்டு, நம் வாழ்க்கை முறையை சீரமைத்து ஒழங்கு படுத்திக் கொள்ள கேட்க வேண்டிய கேள்வி...

நாம் வாழ்வின் நோக்கம் அறிந்து சரியான, முரண்பாடற்ற வாழ்க்கையை வாழ்கின்றோமா? இல்லை. நம்மில் அதிகமானவருக்கு உடலை மேம்படுத்த நேரமில்லை.

பலருக்கு தினமும் மனதை மேம்படுத்த நேரம் இல்லை.. குறிப்பாக, மேலும் பலருக்கு தினமும் உடலையும் மற்றும் மனதையும் மேம்படுத்த நேரம் இல்லை.
தினமும் உடற்பயிற்சிக்கு 24 நிமிடம் மற்றும் மனப்பயிற்சிக்கு 24 நிமிடம் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம்.

தினமும் கலையில் எழுந்த்வுடம், மனப்பயிற்சி என்றால் தியானம் மட்டும் அல்ல, நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து அதில் சில அல்லது பல அத்தியாயத்தைப் படித்து மனதை வளப்படுத்திக் கொள்ளலாம். இதைத்தான் நம் முன்னோர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

ஆன்மபலத்தை மேம்படுத்த

முழு ஆரோக்கியம் என்றால் என்ன?
...உடல் ஆரோக்கியம்... மன ஆரோக்கியம் மற்றும்
...ஆன்மா (உயிர்) ஆரோக்கியம்.
சுருங்கச் சொன்னால்,
"நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை".
இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல், மனம் மற்றும் ஆன்ம ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.
இன்றைய நவநாகரிக இளைஞயர்களுக்கு, ஆன்ம பலத்தை மேம்படுத்த நேரம் இல்லை. குறிப்பாக, உடலையும், மனதையும், மற்றும் ஆன்ம பலத்தையும் மேம்படுத்த நேரம் இல்லை.

சிந்தனை சிற்பியை பற்றி ஓர் அறிமுகம்


கே .பாலசுப்பிரமணியன்
B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M.,1. சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர்:

பகுதி நேரமாகவும் , தற்சமயம் முழு நேர தமிழ் எழுத்தாளராக 20 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்களை எழுதி கொண்டிருக்கிறார்.
அவருடைய எழுத்துகள் E-Book வடிவில் www.thannambikai.com, www.thannambikai.net என்ற இணையதளத்தில் உள்ளது.

புத்தக வடிவில் பெற www.pathampathipagam.com இதை தவிர www.chinthanaicirpi.blogspot.com என்ற புதிய இணைத்தளம், இணையதள உலகில் புதியதோர் விடியல் ஏற்படுத்த 02 .04 .2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள ஆன்றோர்கள், சான்றோர்கள் படித்து பயன் பெரும் வகையில் சிந்தனை சிற்பியின் சிந்தனை தொகுப்புகள் E-Book வடிவிலும் physical book வடிவிலும் கிடைக்கிறது. தமிழக இளைஞர்களை கேடான எண்ணங்களிலிருந்து மாற்றி ஆக்க பூர்வமான வழியில் அகிலம் வெல்ல இந்த இணையதளம் பாதை அமைத்து தருகிறது.

2. மேலாண்மை பேராசிரியர்:

10 பல்கலைகழகங்கள் , 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்(MBA மேலாண்மை) சிறப்பு பேராசிரியராக பணியாற்றி கடந்த 17 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்கள் திறம்பட உருவாக்கி உள்ளார்.

3. மேலாண்மை புத்தக எழுத்தாளர்:

26 மேலாண்மை புத்தகங்களை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார்.

நிர்வாக பயிற்சியாளர்: 6000 -க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்களுக்கும் ,நிர்வாகத்தினர்க்கும் சிறந்ததொரு பயிற்சியாளர் .

4. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)

6000 க்கும் மேற்பட்டோருக்கு சிந்தனையில் புதியதோர் மற்றம் ஏற்பட வித்திட்டவர்.( குறிப்பாக திருச்சி BHEL லில் மட்டும் சுமார் 3500 மேற்பட்டோருக்கு சிந்தனை புரட்சியை ஏற்படுத்தியவர்) பல நிறுவனங்களில் ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர்.

5. தன்னம்பிக்கை பேச்சாளர்:

பேராசிரியர் அவர்கள் இதுவரை 25,000 -க்கும் மேற்பட்டோர் வாழ்வில் தன்னம்பிக்கை தனிநல ,பொதுநல உணர்வுகளை வளர்த்துள்ளார் .

6. சமுக சேவகர்:

இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு 80 G சான்றிதழ் கொடுத்துள்ளது.

7. மேலாண்மை ஆலோசகர்:

கே.பாலசுப்பிரமணியன் அவர்கள் 75 க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் நிர்வாகம் ஆலோசகராக உள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள

24 மணித்துளி நிர்வாகம்

24 மணித்துளி நிர்வாகம்.
நேர நிரவாகம் என்பது
24 மணி நேர நிர்வாகம் இல்லை.
24 மணித்துளிகள் நிர்வாகம்.


தூக்கம்

சாராசரி இந்தியன் ஒரு நாளில், தூக்கத்திற்கு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை செலவு செய்கிறான்.

சாராசரி இந்தியன் 65 வருட கால வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திற்காக மட்டும் செலவு செய்கிறான். அதாவது 22 வருடம்.

வாழ்க்கைத் தூக்கம் போக

சராசரி இந்தியனின் வாழ்நாள் - 65 வருடம்
தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை - 43 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

வேலை

சாராசரி மனிதன் தன் வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அதாவது 22 வருடம், மற்றும் ஒரு நாளில் 8 மணி நேரத்தைப் படிப்பு மற்றும் அலுவலக வேலைக்கு மட்டும் செலவு செய்கிறான். இல்லத்தரசிகள் அதே அளவு நேரத்தை, சமைத்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்புக்கு செலவு செய்கிறான்.

வாழ்க்கைத் தூக்கம், வேலை போக

சராசரி மனிதன் வாழ்நாள் - 65 வருடம்
தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
படிப்பு, வேலைக்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை - 21 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

காலைக்கடன்

தனி மனிதன் ஒரு நாளில், காலைக்கடன் மற்றும் குளிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் சுமார் ஒரு மணி நேரம் . சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடத்தைக் காலைக்கடன் மற்றும் குளிக்க, உடை உடுத்த, மேனியை அலங்கரித்துக் கொள்ள எடுத்துக் கொள்கிறான்.

உணவு

மனிதன் ஒரு நாளில் காலை உணவு, காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று 3 வேளை உணவு அருந்த எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் சுமார் 1 மணி நேரம். ஆக சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம், உணவு அருந்த மட்டும் செலவு செய்கிறான்.


"1 வேளை உணவு உண்பவன் யோகி
2 வேளை உணவு உண்பவன் போகி
3 வேளை உணவு உண்பவன் ரோகி
4 வேளை உணவு உண்பவன் நடைப்பிணம். "


பயணம்.

சராசரி மனிதன் தன்னுடை வாழ்க்கைப் பயணத்தில் பைக், கார், பஸ், ரயில் விமானப் பயணத்திற்காக மட்டும் செலவு செய்யும் கால அவகாசம் ஒரு நாளில் ஒரு மணி நேரம் . ஆக, சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் பயணத்திற்காக மட்டும் செலவு செய்கின்றான்.

ஓடி, ஓடி உழைக்கணும்...
தேடி தேடி செல்வம் சேர்க்கணும்...
சேர்த்த பணத்தை ஊருக்கெல்லாம் கொடுக்கனும்....

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு

சராசரி இந்தியன் வாழ்நாள், தூக்கம் மற்றும் வேலை போக -- 21 வருடம்
காலைக்கடன் மற்றும் குளியல் -- 2.75 வருடம்
3 வேளை உணவு அருந்த -- 2.75 வருடம்
பைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு -- 2.75 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை -- 12.75 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

குடும்பம்

சராசரி மனிதன் தன்னுடை வாழ்நாளில், குடும்பத்திற்காக செலவு செய்யும் நேரம் ஒரு நாளிலொரு மணி நேரம். ஆக, சராசரி மனிதன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் மட்டும் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறான்.
தனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி.

நண்பர் மற்றும் சொந்தம்

சராசரி மனிதன், நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களின் பிறந்த நாள், திருமணம் மற்றும் துக்கக் காரியங்களில் பங்கு கொள்வது போன்றவற்றிர்க்காக மட்டும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்காக மட்டும் செலவு செய்கின்றான்.

வெற்றிக்கான 9 விஷயங்கள்

1.உண்மையே பேசு
2.நன்மையே பேசு
3.அன்பாக பேசு
4.மெதுவாக பேசு
5.இனிமையாக பேசு
6.சிந்தித்து பேசு
7.சமயமறிந்து பேசு
8.சபையறிந்து பேசு
9.பேசாதிருந்தும் பழகு

செல்போன் மற்றும் கடை

செல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவது, இ-மெயில் அனுப்புவது, எஸ் எம் எஸ் அனுப்புவது மற்றும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் செல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு
சராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 12.75 வருடம்
குடும்பம் ---- 2.75 வருடம்
நண்பர் மற்றும் சொந்தம் ---- 2.75 வருடம்
செல்போன் மற்றும் கடை ---- 2.75 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை -- 4.5 வருடம்
குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

தொலைக்காட்சி மற்றும் வானொலி

தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது ஆக, சராசரியாக 1 மணி மற்றும் 36 நிமிடம் செலவு செய்கிறான். சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 3.13 வருடம் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.
சிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !!

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு
சராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 4.5 வருடம்
தொலைக்காட்சி மற்றும் வானொலி கேட்பது ---- 3.13 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை --1.34 வருடம்

சுயம் அறியும் நேரம்

ஒரு இந்திய மனிதன் 65 வருடம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால், அவனுக்கு சுயம் அறியும் நேரம் கிடைப்பது 1.34 வருடம் மட்டுமே.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 65 வருட காலக்கட்டத்தில், தனியாக, தன்னைப் பற்றி, தன் வாழ்க்கையின் நோக்கம் பற்றி சிந்திக்கக் கிடைக்கும் நேரம் வாழ்நாளில் 1.34 வருடம் மட்டுமே. சரியாக சொன்னால் ஒரு நாளில் 24 நிமிடம் மட்டுமே!.

இந்தியனின் 65 வருட வாழ்க்கை செலவு கணக்கு

22 வருடம் - தூக்கம்
2.75 வருடம் - காலைக் கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் - 3 வேளை உணவு
2.75 வருடம் - பைக் , கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு
22 வருடம் - படிப்பு, வேலை
8.75 வருடம் - குடும்ப நேரம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் நேரம்
3.13 வருடம் - தொலைக்காட்சி நேரம்

1.34 வருடம் - தனி மனித தற்சோதனை நேரம்

சிந்தனை செய் மனமே !

நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க, பயணம் செய்ய இருக்கும் வாழ்க்கைப் பாதையைத் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படக் கிடைக்கும் மிக மிக அரிய நேரம் 1.34 வருடம் அல்லது ஒரு நாளில் 24 நிமிடமாகும்..
ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொண்டு சிந்தனை செய் ! செய்தால், நேரத்தின் அருமை புரியும் !!. சீரிய சிந்தனைப்படி, செயல் செய்தால் வாழ்க்கை செம்மையான வழியில் இருக்கும் !!.

நம் வாழ்க்கை ... 24 நிமிடத்தில்
நம் வாழ்க்கையில் நமக்காக நம் சிந்தனைக்காக கிடைக்கும் நேரம் மிக மிகக் குறுகிய காலம் என்பதை உணர்வோம். சுருங்க சொனால் தனி மனிதன் 65 வருட கால உயிர் வாழ்ந்தால், நம்மை பற்றி நாம் சிந்திக்க கிடைக்கும் கால அவகாசம், 1.34 வருடம் மட்டுமே.
ஆனால், மனதில் ஆயிரம் கனவுகள், அந்த கனவுகள் எல்லாம் எப்போது நனவு ஆவது ? எல்லாம் எப்படி ஒரு மனிதன் , ஒருநாளில் தன்னிடம் உள்ள அந்த பொன்னான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் பயன்படுத்துகிறான் என்பதிலேயே உள்ளது.

நீர்க்குமிழியாம் வாழ்க்கை

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்.
நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம் . சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள். இந்த 65 ஆண்டு கால வாழ்க்கையை இளைஞர்களுக்குக் கண்மூடி கண்திறப்பதற்குள் முடிகின்ற மிகக் குறுகிய கால வாழ்க்கை, குறிக்கோளை நிர்ணயிப்போம். வாழ்க்கைக் குறிக்கோளின் படி வாழ திட்டமிடுவோம். திட்டமிட்ட படி வாழ்ந்து சாதனை படைப்போம்.

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம் ------------ 8 மணி
வேலை ----------- 8 மணி
காலைக்கடன், குளியல் ------------1 மணி
உணவு (3 வேளை) ------------1 மணி

18 மணி

Hero to Zero or Zero to hero purely depends on 24 minutes time management of a day

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 8 மணி
பயண நேரம் ------------1 மணி
குடும்ப நேரம் ------------1 மணி
நண்பர் மற்றும் உறவினர் நேரம் ------------1 மணி
செல்போன் மற்றும் கடையில் பொருள் வாங்குக் நேரம் ---------1 மணி

22 மணி

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 22 மணி
தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது------------1 மணி 36 நிமிடம்

23 மணி 36 நிமிடம்

ஒரு நாளில் மீதம் உள்ள நேரம் ..24 நிமிடம் வாழ்வின் நோக்கம் அறிய கிடைக்கும் அரிய நேரம்தான் அந்த 24 நிமிடம்.

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

8 மணி நேரம் தூக்கம்
1 மணி நேரம் காலைக் கடன் மற்றும் குளியல்
1மணி நேரம் 3 வேளை உணவு
1மணி நேரம் பைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு
8மணி நேரம் வேலை
3மணி நேரம் குடும்ப நேரம், நண்பர் மற்றும் சுற்றத்தார் நேரம்
1மணி நேரம் 36 நிமிடம் தொலைக்காட்சி நேரம்

24 நிமிடம் தனி மனித தற்சோதனை நேரம்

ஒரு நாள் - 24 மணியா ? 24 நிமிடமா ?

சராசரியாக இந்தியனின் ஒரு நாள் வாழ்க்கையைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 24 மணி நேரத்தில் நமக்கு நம்மை பற்றி சிந்திக்க மிஞ்சுவது ஒரு நாளில் அந்த 24 நிமிடம் தான் !

அந்த 24 நிமிடத்தில் ... அறிவை ஆக்கத்துறையில் மற்றும் நல்ல வகையில் செலவு செய்து, ஊக்கமுடன் உழைத்தால், உயர்வு நிச்சயம்.

ஒரு நாள்..........24 நிமிடமே

மனிதா ! இரை தேடுவதோடு ... மன அமைதியையும் தேடு....

மனிதா ! இரை தேடுவதோடு ... இனிய உடல் ஆரோக்கியத்தையும் தேடு....
Vision without action is merely a dream;
Action without vision just passes time.
While vision with action can change the world -- J.J IRANI

நேற்றைய, இன்றைய மனித வாழ்க்கை.

நேற்றைய மனித வாழ்கை....................

ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் 120 வருடம். நேற்றைய மனிதர்கள் 120 வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், 100 வயது வரை வாழ்பவரை காண்பதே மிக அரிதாகி விட்டது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தால் ஒரு தொண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

120 வருட மனித வாழ்க்கை நிலைகள்:

தனி மனிதனின் 120 வருட வாழ்க்கையை 3 நிலைகளாகப் பிரிக்கலாம்.....................

முதல் நிலை 0-40 வயது : வளர்ச்சி
இரண்டாம் நிலை,41-80 வயது: பராமரிப்பு
மூன்றாம் நிலை, 81-120 வயது: தளர்ச்சி

இன்றைய இந்தியனின் வாழ்க்கை...........65 வருடம்

ஒரு இந்தியனின் சராசரி வயது 65 வருடம். அதற்க்கு மேல் இந்தியன் வாழ்வது இயற்க்கைத் தனி மனிதனுக்கு 'அளித்த போனஸ்' நாட்கள்.

அரை....குரை....வாழ்க்கை

120 வருடம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய இந்திய மனிதனின் வாழ்க்கை, ..........பாதியிலேயே முடிந்து விடுகிறது.
சராசரி இந்திய மனிதனின் வாழ்க்கை.........65 வருடம்.........

இயற்கை

நேற்றைய மனிதன்.....இயற்க்கையோடு ஒன்றி
ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தான்.
வாழ்க்கை இனிமையாக இருந்தது.
இன்றைய மனிதன்....செயற்கையோடு ஒன்றி வாழ்கிறான்.
ஆரோக்கியம் காற்றில் பறந்து விட்டது...ஆனந்தம் சந்திர மண்டலத்திற்கு சென்றுவிட்டது. வாழ்க்கையின் இனிமையை தேடி தேடி இந்த பூமியில் கிடைக்காமல் சந்திர மண்டலத்திற்கு பொழுது போக்காக மனிதன் பயணம் செய்ய ஆயத்தமாகிறான். என்ன மடமை.

இந்தியனின் வாழ்க்கை

உடல் பராமரிப்பு மற்றும் உள்ள பராமரிப்பு இல்லாத இந்தியனின் வாழ்வில் 45 வயதில் வாழ்க்கையின் முதல் எச்சரிக்கை மணி, இதயத்தில் முதல் அடைப்பு மூலம் வெளிப்படுகிறது.

55 வயதில் வாழ்க்கையின் இரண்டாம் எச்சரிக்கை மணி, இதயத்தில் இரண்டாம் அடைப்பு மூலம் வெளிப்படுகிறது.

65 வயதில் வாழ்க்கையின் மூன்றாவது கடைசி மணி, இதயத்தில் மூன்றாவது அடைப்பு மூலம் வெளிப்படுகிறது. இதயத்தை காப்போம், உடற்பயிற்சி மற்றும் மனப் பயிற்சி கொண்டு !!


இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இருந்தால் முதல் இரண்டு எச்சரிக்கையை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கை முறையை சீரமைத்து இருந்தால், மூன்றாவது கடைசி மணியை 100 வயதுக்கு மேல் தள்ளிப் போட்டு இருக்கலாம். ஆம் விதியை மதியால் வெல்லலாம். மன உறுதியோடு உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி செய்தால்.

திட்ட மிட்ட வாழ்க்கை, திட்ட மிடாத வாழ்க்கை.


பழக்கம் .... விளக்கம் ...போராட்டம்.......

பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு இருப்பவன் தான் இன்றைய நவநாகரீக மனிதன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை முறையை மனிதன் தெளிவாகத் தெரிந்து கொள்கிறான்.ஆனால் அதை அமைத்துக் கொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.
விதி வழி வாழ்க்கையா ? மதி வழி வாழ்க்கையா ?
சரியான நேர நிர்வாகம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இருந்தால், விதியை மதியால் வெல்லலாம்.

இன்றைய மனிதன்....

நவநாகரீக மனிதன்.. நவநாகரீகம் என்ற போர்வையில் தேவையற்ற மேலைநாட்டு பழக்கத்தை (பீடி, சிகரெட்) தேவையாக்கி, மிக மிக தேவையான யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற வழிகளைக் பழக நேரம் இல்லாமல் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறான்.

உண்மை வாழ்க்கை.......

உடலைக் கவனிக்க நேரம் இல்லை....
மனதக் கவனிக்க நேரம் இல்லை...
ஆன்மா கவனிக்க நேரம் இல்லை...

இதுதான் இன்றைய இந்திய நவநாகரீக மனிதனின் உண்மையான, யதார்த்த, போலி வாழ்க்கை. மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். பணத்தை மட்டுமே. ஆனால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை வாழும் முறை பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

வாழ்க்கை:

நம்மில் எத்தனை பேர், இந்த வருடம், இந்த நாள் வரை ஒரு நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி உள்ளோம்?. நூற்றுக்கு ஒருவர் கூட இருக்க முடியாது. நம்மில் 99 சதவீத மக்களுக்கு திட்டமிட்ட வாழ்க்கை கிடையாது என்பதின் வெளிப்பாடுதான் இந்த நாட்குறிப்பு எழுதாத செயல் மூலம் வெளிப்படுகிறது.

"திட்டமிடாத வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனைத் தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்"

When we fail to plan, We plan to fail

உடல் ஆரோக்கியத்திப், பொறுமையோடும், நிதானத்தோடும் வளர்ப்போம், அல்லது குறைந்த பட்சம் பராமரிப்போம் !

நோய் வருமுன் காப்போம்....

வருமுன் காப்போம்... இது ஒரு அரசு திட்டம் மட்டும் இல்லை, நோய் வரும் முன் ஆரோக்கியத்தைக் காப்போம், என்பது எல்லோருக்கும் பொருந்தும். ஒவ்வொரு இந்தியனுக்கும் உடல், மனம் மற்றும் ஆன்மா விழிப்புணர்வு தேவை.

இன்றே....இப்போதே.....தேவை.............
திட்டமிட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ,
நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை
பழகிக் கொள்வோம்.

Live for Today, Dream for Tomorrow, Learn from Yesterday.
ஆரோக்கிய வாழ்வே.....ஆனந்த வாழ்வு...............

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இன்று நம்மில் எத்தனை பேருக்கு அள்ள அள்ள குறையாத ஆரோக்கியமான உடம்புச் செல்வம் இருக்கிறது. மற்றும் அள்ளக் குறையாத ஆரோக்கிய மனச் செல்வம் இருக்கிறது.

ஆரோக்கிய உடம்பை விட, ஆரோக்கிய மனத்தை விட உயர்ந்த செல்வம் இந்த உலகில் உள்ளதா? சிறிது சிந்திப்போம் !

தினமும் என்னை கவனி....என்று நம் உடலும், உள்ளமும் நம்மிடம் கெஞ்சுகிறது !.


தினமும் என்னை கவனி

பழைய காலத்து லாரியில் உள்ள பேட்டரியின் மீது "தினமும் என்னை கவனி" என்று எழுதி இருப்பார்கள். அதன் அர்த்தம், தினமும் பேட்டரியில் தண்ணீரை நிரப்பு என்று லாரி ஓட்டுனருக்கு நினைவூட்ட எழுதப்பட்ட் வாசகம்.

அதே போல், தினமும் உங்களை முதலில் கவனியுங்கள்...............உலகை பிறகு கவனியுங்கள்.

ஆயிரத்தில் ஒருவராகத் திகழ வேண்டுமா? தினமும் சிறிது நேரம் உடலை கவனியுங்கள்.

இந்த் உலகில் இலட்சத்தில் ஒருவராக திகழ வேண்டுமா? தினமும் சிறிது நேரமாவது உடம்பை மற்றும் மனதைக் கவனியுங்கள்....

திட்டமிட்ட வாழ்க்கை

வாழ்க்கையில் நேரத்தை, திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும். வாழ்க்கையில் பலருக்கு இந்த வழிப்புணர்வு இல்லை.

அத்தகைய நேர விழிப்புணர்வு உள்ள சிலருக்கு, திட்டமிட சோம்பேறித்தனம், நாட்குறிப்பு எழுத சோம்பேறித்தனம்.

அத்தகைய சோம்பலுக்கு காரணம், நமது உடலும் நமது மனமும் சொல்லியபடி ஒத்துழைப்பு நல்கவில்லை.
நேரம் இல்லை................நேரம் இல்லை................

உடல், மற்றும் மன முரண்பாடுகளுக்குக் காரணம் உடற்பயிற்சி இன்மையே !

உடற்பயிற்சி செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?
மனப்பயிற்சி செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?
தற்சோதனை செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?

சுருங்கச் சொன்னால் நமது வாழ்க்கையில்
பிரச்சனை அனைத்துக்கும் மூல காரணம் நாம் சரியாக நேரத்தை திட்டமிட்டு, சிந்தித்து செலவு செய்யாதது தான் நேரத்தை திட்டமிட்டு, வரவு செலவு கண்க்குப் பார்க்காததுதான் காரணம்.

Where there is a will, there is a way,
Where there is no will, there are excuses.

காந்தி காட்டிய வழி வாழ்வோம்.


காந்தியின் எளிமையான வாழ்க்கை....

"எளிமையான வாழ்க்கை உயரிய எண்ணம்"


காந்திஜியின் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் இருந்தும், தனது வாழ்நாளில் கடைசி நாள் வரை தன்னுடைஉஅக் கோட்பாட்டின் படி, மிக ..மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.ஆடம்பர வாழ்க்கை

காந்தி அடிகள் ஒவ்வொரு இந்தியனையும் எளிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டினார். அதே நேரத்தில் எண்ணத்தை உயரியதாக அமைத்துக் கொள்ள வேண்டினார். அத்தகைய உயரிய எண்ண வழி வாழ தற்சோதனை செய்ய சொன்னார்.

ஆனால், இன்று நம்மில் அதிகமானவர், "ஆடம்பர வாழ்க்கை மற்றும் மலிவான, குறுகிய எண்ணம்" என்ற முரண்பாடான வாழ்க்கை முறைக்கு அடிமை ஆகிவிட்டோம்.உயரிய எண்ண வறுமை....

அத்தகைய ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, தேவையற்றப் பொருட்களைத் தேவை என்று ஆக்கி, தேவையைப் பல மடங்கு பெருக்கி , துனபம் விளையக் கண்டோம் !!
சென்ற நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல உயரிய எண்ணம் மற்றும் சில சில மலிவான எண்ணங்கள் என்ற நிலை மாறி, இந்த நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல மலிவான எண்ணங்கள் மற்றும் சில சில உயரிய எண்ணங்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதான் நமது விஞ்ஞான முன்னேற்றமா? சமுதாய வளர்ச்சியா?

உயரிய எண்ணமே ........ வாழ்க்கையின் வெற்றி......

நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
உயரிய எண்ணம் = உயரிய வாழ்க்கை

மலிவான எண்ணமே ........ வாழ்க்கையின் வீழ்ச்சி....

நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
மலிவான எண்ணம் = மலிவான வாழ்க்கைநியூட்டனின் மூன்றாவது விதி

நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
உயரிய எண்ணம் = உயரிய வாழ்க்கை
மலிவான எண்ணம் = மலிவான வாழ்க்கை
பட்டினியில் வாழும் மனிதனுக்கும், வறுமையில் முழுகிய நாட்டுக்கும் சுதந்திரம் என்பது பொருளற்ற சொல் -- நேரு.

நேற்றைய வாழ்க்கை ... இன்றைய வாழ்க்கை

அருள் நோக்கிய உன்னதப் பயணம்..
அறிவு நிறைவு.. பொருள் வறுமை....
பொருள் நோக்கிய பயணம்..
பொருள் நிறைவு... அறிவு வறுமை...


சென்ற 20ம் நூற்றாண்டு வாழ்க்கை

நம் முன்னோர்கள்...
மெதுவான உணவு உண்டனர்.
மெதுவான செல்வம் ஈட்டினர்.
மெதுவான வாழ்க்கை வாழ்ந்தனர்.
மெதுவான இறப்பு நிகழ்ந்தது.

நிதானமாக இளமை வேகம்.. முதுமையில் விடை பெறு. இளமையில் நிதான வேகம்.. நோயற்ற வாழ்க்கை ... முழுமையான வாழ்க்கை .. முதுமையில் மரணம்..
இந்த அருள் நோக்கிய பயணத்தில் அறிவு நிறைவு. ஆனால் பொருள் வறுமை என்ற நிலை நம் முன்னோர்களுக்கு இருந்தது.

இந்த 21 ம் நூற்றாண்டு வாழ்க்கை

இன்றைய விரைவான வாழ்க்கையில் மனிதர்கள்...
வேகமான / துரித உணவு உண்ணுகின்றனர்.
வேகமாக செல்வம் ஈட்டுகின்றனர்.
வேகமாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
வேகமான இறப்பு நிகழ்கிறது.
இந்த பொருள் நோக்கிய பயணத்தில் மனிதனுக்கு அறிவு வறுமை அதிகமாகிறது. ஆனால் பொருள் நிறைவு கிடைக்கிறது. உண்மை அறிவை விட்டு, பொருள் அறிவை அதிகரித்துக் கொண்டு நவீன கால மனிதன் அல்லல் படுகிறான்.
நிதானமற்ற இளமை வேகம்..இளமையில் விடைபெறு !!
இளமையில் திசை தெரியாத வேகம்.. இளமையிலேயே நோய்..முழுமையற்ற வாழ்க்கை ... இளமையில் மரணம்.

24 நிமிடம்...

நம் முன்னோர்கள்ம் சிறுகக் கட்டி, பெருக வாழ்ந்தார்கள். ஆனால் நாமோ, பெருகக் கட்டுவதாக நினைத்து, நம்மை அறியாமல் சிறுக வாழ்கிறோம்.
சிறு துளி பெரு வெள்ளம். ஆம், ஒரு நாளில் நமக்கு கிடைக்கும் அரிய 24 நிமிட நேரத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்வின் உண்மை நோக்கமான ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கிப் பயணம் செய்து அதில் வெற்றி அடைவோம். வேகமான வாழ்க்கையில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல்வோம்.
?


ஒரு கணம் சிந்திப்போம்

ஏசி அறை..ஏசி வீடு.. ஏசி கார்..ஏசி அலுவலகம்.. இன்று நம்மை சுற்றி எல்லாம் ஏசி மயம்.. அவ்வளவு கடைசி பயணம் கூட ஏசிதான்.

ஆம், மனிதன் உயிர் விட்ட பின் சடலத்தை ஆரோக்கியமாக சிறிதுக் காலத்திற்குப் பாதுகாத்து வைக்கும் அந்த சவப்பெட்டிகூட ஏசிதான்.யோசி .. கொஞ்சம் யோசி....

பிறப்பு முதல் இறப்பு வரை ஏசி .. ஏசி ... கொஞ்சம் யோசி தேவையா இந்த ஆடம்பர வாழ்க்கை ? வியர்வையே காணாத ஏசியில் மனிதன் இருந்தால் இயற்கை கழிவான வியர்வை எப்படி வெளியேறும்? வியர்வைத் துளிதான் உடல் ஆரோக்கிய துளி. அதை உணர்ந்து செயல்படுவோம்.மெய்ஞானம்.

ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கை தேவை இல்லை !. விஞ்ஞான முன்னேற்றமே தேவை இல்லை !! என்று நான் சொல்லவில்லை.....

உடலைப் பாழ்படுத்திக் கொண்டு, உள்ளத்தை அழித்துக் கொண்டு, வியர்வை வெளியேராத சொகுசு வாழ்க்கை தேவையா? என்றுதான் கேட்கிறேன். மெய்ஞானம் கண்டு நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகளுக்கும் சற்று செவி சாய்த்து அதன் உட்பொருளை உணர்ந்து ஆரோக்கியமாக வாழப் பழகுவோம்.

வாழ்வின் நோக்கம்.

இன்பம்
துன்பம்
அமைதி

மெய்ஞான பயணமா ? விஞ்ஞான பயணமா ?

மனித வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்க்கும் மற்றும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு போவதற்க்கு மட்டுமா? என்றால், பதிலோ, இல்லை, என்பதுதான்.

வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியதுடனும், மன மகிழ்ச்சியுடனும், ஆன்மதெளிவுடன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் வாழ்வதர்கே ! !. பணம் நோக்கிய மனிதனின் வெளி நோக்கிய, உலகளாவிய பயணம். ஆரோக்கியம் நோக்கி சற்று உள் நோக்கிய பயணமாக திரும்ப வேண்டும். அதுதான் மன நிறைவின் முதல் படி.

வருங்காலம் என்பது வரலாறாக எழுதபடுவதற்குள் வாழ்ந்து தீரப்பட வேண்டிய காலமாகும். ----------நேரு.வாழ்வின் உயரிய நோக்கம் என்ன ?

முதலில் ஒருவன் தன் அள்வில் மன அமைதியுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

பிறகு தான் அனுபவித்து வரும் மன அமைதி போல, உலகில் மன அமைதிக்காக ஏங்கும் பல உயிர்களுக்கு வழிகாட்டியாக அமையுமாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, அல்லது அமைத்துக் கொள்ள் முயல்வது, போன்றவைதான் மனித வாழ்வின் உயரிய நோக்கமாகும்......இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் ?.

வாழ்க்கை வரப்பிரசாதத்தை எண்ணிப்பார்............

உங்களுடைய வாழ்க்கையே உங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

அத்தகைய வரப்பிரசாதத்தை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பாருங்கள். இந்த உலகில் உங்களுக்கு கீழ் வசதி வாய்ப்புகள் இல்லாமல் வாழ்பவர்கள் கோடான கோடி மக்கள்.

அவர்களை பற்றி கண நேரம் நினைத்துப் பார்த்து, நம் வாழ்வில் நிம்மதி மட்டும் நாடாமல், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கும் நம் உடலால், நம்முடைய அறிவால் என்ன செய்ய ம்ய்டியும் என்ற மாறுபட்ட எண்ணத்தை மனதில் விதைத்து, அதன்படி, செயல்களை வடிவமைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதையை சீர்செய்து கொள்வோம்.மாறுபட்ட சிந்தனை............

தனி ஒரு மனிதனின் மாறுபட்ட எண்ணம் தான், இந்த உலகில் மாற்றத்தின் ஆரம்பம்.

தனி ஒரு மனிதனின் மாறுபட்ட சிந்தனை தான், இந்த உலகளாவிய பலப் பல புரட்சிகளுக்கான வித்தி என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்துவோம்.

சிறிய அளவில் தான், தன் குடும்பம், தன் சுற்றம் என்ற நிலை தாண்டி,

நம்மால் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்ய இன்றே நம் நேரத்தை ஒதுக்குவோம் !!
எங்கே...........நிம்மதி......... !

திருச்சி பெல்லில், சமீபத்தில் எல்லா தொழிற்ச் சங்க யூனியன் தலைவர்களுக்கும் மற்றும் செயாலாளர்களுக்கும் பிரத்தியேகமாக ஒரு நால் மனித வள மேம்பாட்டு பயிற்சி வகுப்பி, "மாற்றம்............மாற்றம்........" என்ற தலைப்பில் நடத்தும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்தப் பயிற்சி வகுப்பில் பங்குப் பெற்ற ஒரு அன்பர் க.பாலுசாமி எனக்கு அவை எழுதிய ஒரு நூலை எனக்கு அன்பு பரிசாக அளித்தார். அந்த நூலின் பெயர் " எங்கே நிம்மதி......!!".


திருச்சி பெல் தொழிற்சாலையில், உற்பத்தி துறையில் உள்ள க.பாலுசாமி, தன்னுடைய பெயரை க.கண்ணநேசன் என்று மாற்றிக் கொண்டு "எங்கே.....நிம்மதி....... ! ", என்ற அர்புதமான வகையில் பத்தகத்தி, 222 பக்கங்களில் பலரும் சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதி உள்ளார்.

அந்த நூலின் பின் அட்டையில் அவை எழுதி உள்ள ஒரு கவிதையை அடுத்த இரண்டு பக்கத்தில் கொடுத்துள்ளேன்.....படியுங்கள்....நன்றாகப் படியுங்கள்.நினைத்துப் பார்............

"கைத்தேர்ந்த கல்வியும்
கைநிறைய ஊதியமும்
கண்நிறைந்த மனைவியும்
களித்து மகிழப் பிள்ளைகளும்"....

"விரும்பியது போல கட்டிய வீடும்
வீடு நிறைந்த பொருட்களும்
வேலைக்கு ஆட்களும்
வேளா வேலைக்கு சாப்பாடும்"


நினைத்துப் பார்............

"ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும்
ஆர்ப்பரிப்பும் அகங்காரமும்
அனைத்துமே நம் வசம்தான் - ஆயினும்

"நிம்மதியும் நித்திரையும் நிறைவும் மகிழ்ச்சியும்
நம் வசமற்று போனது ஏன்.... ?"

நிம்மதி வாழ்க்கை............

"நிம்மதியும் நித்திரையும் நிறைவும் மகிழ்ச்சியும் நம் வசமற்று போனது ஏன்?

இன்று, ஒவ்வொரு தனிமனிதனும், இந்த இயந்திரமயமான உலகத்தில் தனக்கு தானே, தினம் தினம், மனசாட்சியை கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வியை, அன்பர் கண்ண நேசன் நம் முன் வைக்கிறார்.

நித்தம் நிம்மதி வாழ்க்கைக்கு, நமது உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்க்கு சிறிது நேரம் ஒதுக்குவோம். தேவை பொறுப்பு உணர்ச்சி மற்றும் மன மாற்றம்.........

இன்று 21 ஆம் நூற்றாண்டில் நம்முடைய வசதி, வாய்ப்புகள் நமது முன்னோர்கள் அனுபவித்ததைவிட பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், அதற்க்கு எற்றாற் போல் , நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நிம்மதி உயர்ந்துள்ளதா? என்றால் விடை..........இல்லை........இல்லவே இல்லை, என்பதுதான்.

"எங்கே நிம்மதி..........அங்கே எனக்கு இடம் வேண்டும்....", என்று கவியரசர் கண்ணதாசன் அன்றே இயற்கையை வேண்டினார். அந்த தேடல் இன்று 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகரித்துள்ளது.பிரபஞ்ச சக்தி..........

இயற்கை அன்னை நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிமிடமும் ஒரு உண்மையை ஒவ்வொரு நிமிடமும் ஒரு உண்மையை ஒவ்வொரு விதத்தில் வெட்ட வெள்ச்சமாக்கிக் கொண்டே இருக்கிறாள்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அறியாமை இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துக் கொண்டே இருக்கிறோம். இந்த பயணம் தொடர் பயணமாக வாழ்க்கை முழுவதும் நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் சரசரி மனிதன் அந்தப் பாடங்களை மனம் எல்லை கட்டிய நிலையில் கற்க மறுக்கிறான்.
உள்ளத்திலே களங்கம்..............

மனம் எல்லைக் கட்டிய நிலையின் விளைவு... "உள்ளத்திலேயே களங்கம், உடலிலே நோய்", தவறான எண்ணங்களால், தவறான செயல்களால், தவறான பழக்க வழக்கங்களால், தினம் தினம் மனித மனம் மாசு அடைகிறது.

தினம் தினம் உடலை, உடல் குப்பையை சுத்தம் செய்ய குளிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் மனதை, மன குப்பையை சுத்தம் செய்கிறோமா? இல்லை.. விளைவு .. உடலிலேயே நோய் தொற்றிக் கொண்டு விட்டது மற்றும் மனம் மாசு அடைந்து, கலங்கம் அடைந்து விட்டது.நோய் இல்லாதவன் வாலிபன்.........

இந்த உலகில் நம்மை சுற்றி எத்தனை 50 வயதுக்கும் மேல் ஆன நோய் இல்லாத உடல் மற்றும் உள்ள ஆரோக்கிய வாலிபர்கள் உள்ளனர்? அவ்வளவு ஏன், 40 வயதுக்கும் மேல் ஆன நோய் இல்லாத உடல் மற்றும் உள்ள ஆரோக்கிய வாலிபர்கள் உள்ளனர்?
பதில், விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உள்ளனர்.
மனிதனின் வாழ்க்கைக்குப் பொருந்தாத எண்ணத்தாலும், செயலாலும், அதை திரும்ப திரும்ப செய்து மனதில் கலங்கம் ஏற்பட்டு உடலில் நோயாக உருப்பெருகிறது.

மனித வாழ்ககைப் பயணம்.


நோய்.........நோய்.........


இந்த உலகில் விஞ்ஞான வள்ர்ச்சியால் பொருள் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நமது வுடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டுமே !

ஆனால், மருந்துகள் மற்றும் மருத்துவமனகள் வள்ர்ந்த அளவில், உடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வில்லையே. அது ஏன்?. நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் வியாதி மற்றும் மனச்சோர்வு கொண்ட மனிதர்களே அதிக அளவில் தென்படுகிறார்கள் காரண்ம் என்ன?.1 வயது....20 வயது வாழ்க்கை:


வாழ்க்கையில் முதல் 20 ஆண்டுகளுக்கு மனிதன், கல்வியைத் தேடி அலைகிறான், பல்கலைகழகப் பட்டமும் பெறுகிறான். அந்த காலக் கட்டத்தில் உடலைப் பற்றியோ, உடற் பயிற்சியைப் பற்றியோ, மனஈடுபாடு கொண்டு சிந்திக்க 5 முதல் 10 சதவீத இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு மட்டுமே நேரம் உள்ளது.

மற்றவர்கள் இளமை முறுக்கில், இனிமையான ஆரம்ப கால வாழ்க்கையைச் சரியாக நேரத்தைப் பயன்படுத்தாமல் தொலைக்கின்றனர்.

ஐந்தில் உடற்பயிற்சிக்கு வளையாதது.........
ஐம்பதில் உடற்பயிற்சிக்கு வளையாது.............
ஆரோக்கியப் பாப்பா:

முண்டாசு கவிஞன் பாரதி அன்று பாடினான் 'ஓடி விளையாடு பாப்பா........ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா.......'என்று ஆனால், இன்று, அத்தகைய காலம் மாறி போய், ஒட்டகத்தை மற்றும் விளையாட்டை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து பார்ப்பதுதான் இன்றைய நவீன கால பாப்பாகளின் வாழ்க்கை நடை முறை.

இன்றைய பாப்பாகளில் அதிகமான பேர் ஓட்டம் மற்றும் விளையாட்டு பற்றி தொலைக்காட்சி மூலமே தெரிந்து கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஊளச் சதை.........குண்டு பாப்பா............

இத்தகைய, ஆரோக்கியமற்ற சூழ்நிலைதான், விஞ்ஞான முன்னேற்றமா? அல்லது நமது அறியாமையா? விளைவு. நம்மைச் சுற்றி
பல கொழு கொழு குழந்தை மற்றும் குண்டு குண்டு பாப்பாக்கள் பெருத்துவிட்டனர்.

தொலைக் காட்சி மற்றும் இண்டர்நெட்டின் மோகத்தில் நேரத்தைத் தொலைத்த பாப்பாக்களுக்கு, விளையாட்டு மைதனத்துக்கு சென்று விளையாட நேரம் ஒதுக்க முடியவில்லை, என்ன மடமை !!

விளைவு, இளைமையிலேயே உடற் சோர்வு, மற்றும் மனச் சோர்வு கொண்ட பாப்பாக்கள் இந்த சமுதாயத்தில் அதிகமாகிவிட்டனர், மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளனர்.
உறுதிகொண்டநெஞ்சினாய்............

பாரதி கண்ட இந்திய இளைஞன் கனவு 'ஒளி படைத்த கண்ணினாய் வா...வா....உறுதி கொண்ட நெஞ்சினாய் வா....வா..' இன்று நம்மில் நூற்றில் எத்தனை பேருக்கு ஒளி படைத்த கண் உள்ளது? புறக்கண்ணில் தேஜஸ் உள்ளது? அகக்கண்ணில் தொலை நோக்குப் பார்வை உள்ளது?

நம்மைச் சுற்றி தொலைக்காட்சியை அதிகம் பார்த்து அதன் விளைவாக கலை இழந்த சோடா பாட்டில் கண்ணாடிக் கண்தான், இல்லை....இல்லை...காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்த கண்கள் தான் அதிகம் தென்படுகிறது. இன்றைய இளைஞர்களிடம் அரோக்கியமான நெஞ்சம் இருக்கிறதா? அதை மனநல மருத்துவரிடம்தான் கேட்கவேண்டும்.21 வயது........40 வயது வாழ்க்கை:

வாழ்க்கையில். 21 வயது முதல் 40 வயது வரையான காலகட்டத்தில் மனிதன் பணம், பதவி மற்றும் புகழை தேடி அலைகிறான். அதில் பல போராட்டங்கள் மன உளைச்சல் மற்றும் மன சலிப்பு.

இந்த காலக் கட்டத்தில், பலருக்கு உடலை பற்றியோ, மனதை பற்றியோ சிந்திக்கவே நேரம் கிடைப்பது இல்லை விளைவு, விலை மதிக்க முடியாத தன் உடம்பை மருத்துவர் கையில் நிரந்தரமாக தாரை வார்த்து கொடுக்க பலர் தன்னைத் தானே தயாராக்கிக் கொள்கின்றனர்.

என்ன அறியாமை? இதுதான் விஞ்ஞான முன்னேற்றமா?.41 வயது........60 வயது வாழ்க்கை:

41 வயது முதல் 60 வயது வரையான காலகட்டத்தில் பணத்தில், பதவியில் மற்றும் புகழில் மனிதனுக்கு நிறைவி ஏற்படுகிறது. ஆனால், அந்த நிறைவை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் மன (உள்ள) ஆரோக்கியம் மற்றும் ஆன்ம (உயிர்) ஆரோக்கியம் நம்மில் பலருக்கு இருப்பது இல்லை. அது ஏன் ?

மரபி வழியில் வந்த பல நோய்கள் உடலில் தொற்றிக் கொள்கிறது. அது தவிர, பிறந்தது முதல் தனி மனிதன் வாழ்ந்த முறையற்ற வாழ்க்கை முறையின் பலனாக வந்த பல நோய்களின் பாதிப்பு உடல் மற்றும் மனதில் நிரந்தரமாக குடிகொள்கிறது.ஆரோக்கியமே பணம்.........

'உடல் ஆரோக்கியத்தை வைத்து இந்த உலகில் பணம் பண்ண முடியும். ஆனால், பணத்தை வைத்து இந்த உலகில் உடல் ஆரோக்கியத்தை விலைக்கு வாங்க முடியாது', என்ற உண்மை மனிதனுக்க்கு உடல் கெட்ட பிறகு, அகக் கண்ணுக்குப் புலப்படுகிறது.மனித வாழ்க்கையில் ஏறுமுகப் பயணம்..............

ஒவ்வொருமனிதனின் வாழ்க்கைப் பயணமும் ஒரு பரமபத விளையாட்டுத்தான். வியாழ்க்கை விளையாட்டில் ஏணியில் ஏறும்போது மனமகிழ்ச்சி.....

மனித வாழ்க்கையில் இறங்குமுகப் பயணம்..............

மனித வாழ்க்கை விளையாட்டில், பாம்பு கடிக்கும் போது, நோய் தொற்றிக் கொள்ளும் பொது, மனஸ்சோர்வு...........

மனித வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் பயணம்.............

வாழ்கை என்ற பரமபத விளையாட்டில், முன்னேற்றம் என்ற ஏணியில் ஏறும் நாம் ஒவ்வொருவரும், பாம்பு கடிக்காமல் (வியாதிவராமல்) முன் எச்சரிக்கையாக இருப்போம்.

உடல் நலம் .... உள்ள நலம்.

பரிபூர்ண ஆரோக்கியம்........


இன்றைய நவீன யுகத்தில், நூறில் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே இந்த் பரிபூர்ண ஆரோக்கியம் மற்றும் இனிமையான வாழ்வு கிட்டுகிறது.

அதன் விளைவாக, அவர்கள் மட்டும் பூரணமான வாழ்க்கை நடத்துகிறார்கள். மற்றவர்கள், இனிமையான வழ்வு வாழ வேண்டும் இஎன்ற நினைவில், எண்ணப் போராட்டத்திலேயே வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி.........


உடல் நலம்.....உள்ள நலம்.........


இன்றைய, சமுதாய சூழ்நிலையில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டி, ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், பைக், கார், விமானம், செல் போன் என்ற வசதி வாய்ப்புகள் நாளுக்கு நாள் நம்மிடையே அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், தனி மனிதனின் உடல் நலம் மன (உள்ள) நலம் மற்றும் ஆன்ம (உயிர்) நலம் அதே வேகத்தில் அதிகரிது கொண்டே போகிறதா? என்றால், தெளிவான பதில், இல்லை என்பதுதான்.

நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி.............


அறிவு வறுமை:

இன்று பெருநகரங்கள் மற்றும் குறு நகரங்களிக் பெருகிவரும் பல்நோக்கு, பல அடுக்கு மாடி மருத்துவ மனைகள், 24 மணி நேர மருந்துக் கடைகள் மற்றும் சிடி ஸ்கேன் கலாஸ்சாரம் படித்ட மற்றும் பாமர மனிதனின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டுகிறது.

இத்தகைய ஆரோக்கியமற்ற வளர்ச்சி தனி மனிதனின் அறியாமையும், உடல் பற்றிய அலட்சியப் போக்கையும் ஆன்ம அறிவு வறுமையும் உலகறியச் செய்கிறது.

காயமே இது போய்யடா, வெறும் காற்று அடைத்த பையடா !


நோய்கள் காரணம்............


பிளாரன்ஸ் நைட்டிங் கேல், என்ற மிகப்பெரிய சமூக சேவகி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மருத்துவ மனையை ஆரம்பித்து வைக்கும் போது சொன்ன கருத்தை நினைவு கூறுவோம்.

'நோயைக் குணப்படுத்தும் மருத்துவ மனைகளைக் திறப்பதால் மட்டும் ஒரு சமூகம் சமுதாய வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தது ஆகாது. நோய் உண்டாவதற்கான காரணத்தை அறிந்து, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தக்க விழிப்புணர்ச்சி பெற்று, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே, சரியான விஞ்ஞான வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி', என்று கூறினார்.


விஞ்ஞான முன்னேற்றம்.....


விஞ்ஞான முன்னேற்றம் அடையாத காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்த உடல் ஆரோக்கியம், மன (உள்ள) ஆரோக்கியம், மற்றும் ஆன்ம (உயிர்) ஆரோக்கியம் இன்று நம்மிடம் இந்த 21-ஆம் நூற்றாண்டில் மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட, அதி நவீன சிகிச்சைகள் பெருகிவிட்ட இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ளதா? என்றால் யதார்த்தமான உண்மை இல்லை என்பது தான்.


மெய்பொருள் முன்னேற்றம்....


இன்றைய விஞ்ஞான உலகில்....

உடல் ஆரோக்கியத்தை எங்கே தொலைத்தோம்.
மன (உள்ள) ஆரோக்கியத்தை எப்படித் தொலைத்தோம் ?
ஆன்ம (உயிர்) ஆரோக்கியத்தை ஏன் தொலைத்தோம் ?

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே கேட்டு தற்சோதனை செய்து சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

இன்று விஞ்ஞானம் வெகுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால், மனிதன் மெய்ஞானம் பின்னேறிக் கொண்டு இருக்கிறது.

அதிசய மானிட இயந்திரம்1.ஞாபகம், சிந்தனை, நினைவு இவற்றின் கேந்திரங்கள்

2.விழிப் பார்வை

3.செவிப்புலன்

4.அமுக்கததைச் சரி செய்வது

5.நாடித் துடிப்பு காட்டுவது

6.மூச்சைக் காட்டுவது

7.உஷ்ணநிலையைச் சரி பண்ணுவது

8.இசைவுருத்தும் முகுளம்

9.செய்தி செல்லும் கேபிள்

10.பிராணவாயு உட் செல்லுதல

11.கரியமிலவாயு வெளியேறுதல்

12.இரத்தத்தில் கலக்கும் பிராணவாயு

13.இருதயத்தில் புகும் பிராணவாயு

14.நுரையீரலுக்குப் போகும் கரியமிலவாயு

15.இருதயத்தின் இடதுபக்கம்

16.இருதயத்தின் வலது பக்கம்

17.கழுத்துக்கும் தலைக்கும் இரத்தம் போகிறது

18.மார்புக்கும் இதர பகுதிகளுக்கும் இரத்தம் போகிறது

19.கணையத்துக்கு இரத்தம் போகிறது

20.மண்ணிரலுக்கு இரத்தம் போகிறது

21.தசைப் பாம்பு

22.எலும்புகளுக்குச் செல்லும் தமனிகள்

23.சிறு நீரகங்களுக்குச் செல்லும் தமனிகள்

24.மச்சை

25.பெருஞ்சிரைகளுக்கு இரத்தம் திரும்பி வருகிறது

26.இறங்கிச் செல்லும் வீன காவா

27.உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு இரத்தம் திரும்பி வருகிறது

28.நாக்கு

29.வெட்டு வேலைப்பற்கள்

30.கடைவாய்பற்கள்

31.இரைப்பைக் குழாய்

32.இரைப்பைக் குழாயும் இரைப்பையும் சேருமிடம்

33.வயிற்றுச் சுரப்பிகள்

34.ஹைட்ரோ குளோரிக் அமிலம்

35.ரென்னட்

36.வயிற்றின் வெளிவாசல்

37.கணையம்

38.பித்தம்

39.கணைய நீர் குடலில் நுழைகிறது

40.குடல் நீர்

41.மார்ப்புக் கூடு நாளத்தில் கொழுப்பு நுழைகிறது

42.புரோட்டீன்

43.கல்லீரலுக்குச் செல்லும் சிரையில் சர்க்கரைச் சத்து நுழைகிறது

44.உணவுச் சத்தைக் கல்லீரல் சிறை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லுகிறது

45. மார்புக்கூடு நாளம் குடலிலிருந்து கொழுப்பை எடுத்துச் சென்று. குருதிச் சுழல் மண்டலத்துக்குத் திருப்பி விடுகிறது

46.கல்லீரலில் சர்க்கரை கிளைக்கொஜெனாக மாறுக்கிறது

47.கல்லீரலில் புரோட்டீன் புகுகிறது

48.கழிவுப் பொருள்கள் கல்லீரலினின்றும் வெளியேறுகின்றன

49.பைலிப்புல்வின்

50.பைலிருபின்

51.பித்தப்பை

52.கல்லீரலிலிருந்து சிறு நீரகங்களுக்குக் கழிவுப் பொருள்கள் செல்லுகின்றன

53.இரத்தத்தில் கிளைக்கொஜென் திரும்பக் கலக்கிறது

54.மூத்திரப்பை

55.சிகரப்புளீர்களை நேரடியாக இரத்தில் கலக்கும் தைராய்டு சுரப்பியின் இயக்கம்

56.மண்ணீரல்

57.சிறுநீரகங்கள்

A.வலது நுரையீரல்

B.இறப்பைக் குழாய்

C.இடது நுரையீரல்

D.பல்மனரி தமனி

E.இருதயம்

F.பல்மனரி சிறை

E.இறப்பை

F.கல்லீரல் குடல் மச்சை தசை

வளரும் இந்தியா, வல்லரசு இந்தியாவாக...


இந்திய இளைஞனே உலகம் உன் காலடியில்

பலவீனத்தை பலம் என்ரும், பலத்தை பலவீனம் என்றும் நினைத்து, வாழ்நாள் முழுவதும் அதிகமான இந்திய இளைஞர்கள் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய இந்திய இளைஞனுக்குத் தேவை சிந்தனையோடு கூடிய கடின உழைப்பு.

இந்திய இளைஞனே சிந்திக்கப் பழகு ... தொலைநோக்கு சிந்தனையோடு சிந்திக்கப் பழகு.. அமெரிக்கா என்ன... உலகமே உன் காலடியில்.

உலகமான பந்தை உன் சிந்தனையால் உதைத்து உருட்டக் கற்றுக்கொள்.உலகப் பொருளாதார வளர்ச்சி...... சிறப்புப் பார்வை

இந்திய இளைஞனே பொறுத்தது போதும்...

இந்திய இளைஞனே, வல்லரசு இந்தியா பிந்தங்கிய இந்தியாவாக 2000 ஆண்டுகளில் மாறிய கதை, மற்றும் பின்தங்கிய அமெரிக்கா 100 ஆண்டுகளில் வல்லரசு அமெரிக்காவாக மாறிய கதையை தெளிவாக புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

இந்திய இளைஞனே பொறுத்தது போதும்... பொங்கி எழு!
இந்திய சிங்க இளைஞனே, தின்று, திரிந்து, உறங்கியது போதும்.
இன்று முதல்... வீறு கொண்டு எழு.
இன்றே சாதிக்கப் புறப்படு
உலகம் உன் காலடியில்.. உதைக்கக் கற்றுக்கொள்...
உன் சிந்தனைக் கூற்மையால்.இந்திய இளைஞனே உன் சக்தியை உணர்....

இந்திய இளைஞனே ! உன் கடமை என்ன ? இன்று முதல் வளரும் இந்தியாவை வல்லரசு இந்தியாவாக மாற்ற நீ என்ன செய்ய வேண்டும் ?

உன் பாரம்பரியத்தை முதலில் உணர்ந்து கொள் ! பிறகு உனது அபரிமித உடல் மற்றும் மன சக்தியைப் பற்றி விழிப்புணர்ச்சி கொள் !!
இந்தியா அடுத்த 41 ஆண்டுகளில் வல்லரசு இந்தியா என்ற உன்னத நிலையை அடைய அயராது தொலைநோக்கு சிந்தனை செய், சிந்தனை வழி செயல்களை அமைத்துக் கொள், உலகம் உன் காலடியில் .

கி.பி 2010-ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
இந்திய இளைஞனே, முதலில் தெளிவாக நாட்டுப் பற்றோடு கனவு காணத் தெரிந்து கொள். பிறகு கனவை நனவாக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்.

முண்டாசுக் கவிஞன் பாரதி சொல்கிறார். "எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ண வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்"

உலகப் பொருள் உற்பத்தியில் 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு வெறும் 6% மட்டுமே.இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பேச்சைக் குறைத்து சிந்தனையை உயர்த்தி இந்தியா உலகப் பொருள் உற்பத்தியில் 2010 ஆம் ஆண்டு 8% என்ற இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும்.

கி.பி 2020 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
உலகப் பொருள் உற்பத்தியில் 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு வெறும் 6% மட்டுமே.இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பேச்சைக் குறைத்து சிந்தனையை உயர்த்தி இந்தியா உலகப் பொருள் உற்பத்தியில் 2010 ஆம் ஆண்டு 8% என்ற இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும்.

மேலும் 2020-ஆம் ஆண்டில் " Made in India " என்ற அளவுக்கு உலக அளவில் மக்கள் தரம் வாய்ந்த இந்தியப் பொருட்களை நோக்கி ஈர்க்கப்படும் அளவிற்கு தரத்தை உயர்த்தி, விலையைக் குறைத்து உலகெங்கும் இந்தியப் பொருட்களை மக்கள் விரும்பி கேட்கும் அளவிற்கு உலக மக்களின் இதயத் துடிப்பை ஒவ்வொரு இந்திய இளைஞனும் புரிந்து கொண்டு 13% என்ற இலக்கை அடையப் பாடுபட வேண்டும்.

கி.பி 2030 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு

2030 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா அடைய, அதாவது 20% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக மேலும் அயராது பாடு பட வேண்டும்.

கி.பி 2040 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு

2030 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா அடைய, அதாவது 20% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக பாடு பட வேண்டும்.

2040 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 27% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக மேலும் அயராது பாடு பட வேண்டும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. பாதங்கள் நடக்கத் தயாராக இருக்கும் பொழுது பாதைகள் மறுப்பது இல்லை.

கி.பி 2050 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
2050 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 33% என்ற இலக்கை இந்தியா அடைய, அதாவது உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா அடைய கடினமாக , சிந்தனையோடு கூடிய உழைப்பாக , ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக பாடு பட வேண்டும்.

அத்தகைய சாதனை சாத்தியமே, இந்திய இளைஞனிடம் சிந்தனைத் தெளிவு மற்றும் தொலைநோக்கோடு கூடிய உழைப்பு இருந்தால் !!

உலகப் பொருளாதாரம் நேற்று... இன்று .......நாளை

நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
இன்றைய உலகம் சைனா கையில்......!
நாளைய உலகம் இந்தியா கையில்......!!

வல்லரசு இந்தியாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள்.

உலகப் பொருளாதார வளர்ச்சி நேற்று

1900 --> 1 டிரில்லியன் டாலர்
1990 --> 20 டிரில்லியன் டாலர்
2007 --> 52 டிரில்லியன் டாலர்.

1900 ம் ஆண்டு 1 டிரில்லியன் டாலராக இருந்த உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 2007-ல் 52 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.


உலகப் பொருளாதார வளர்ச்சி நாளை..
2020 --> டிரில்லியன் டாலர்
2050 --> டிரில்லியன் டாலர்

உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 2020-ல் 80 டிரில்லியன் டாலராக உயருமென்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதே போல் 2050-ம் ஆண்டு உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 220 டிரில்லியன் டாலராக மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இந்திய பொருளாதார வளர்ச்சி

1985 --> 200 பில்லியன் டாலர்

1995 --> 400 பில்லியன் டாலர்

2004 --> 700 பில்லியன் டாலர்

2007 --> 1000 பில்லியன் டாலர்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 23 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் 1000 பில்லியன் பொருளாதாரமாக 2007 ஆம் ஆண்டு உருவெடுத்தது.இந்தியா

இந்தியாவின் மொத்த உற்பத்திக் குறியீடு 2007- ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ஆம் தேதி 1 டிரில்லியன் டாலர் என்ற உயரிய நிலையை அடைந்தது.

இந்த 1 டிரில்லியன் டாலர் என்ற ஒரு உயர்ந்த பொருளாதார நிலையை அடைய இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 59 ஆண்டுகளும் 8 மாதங்களும் எடுத்துக் கொண்டது. உலகில் உள்ள 200 நாடுகளில், இந்தியா 12 வது நாடாக 1 டிரில்லியன் டாலர் என்ற உயரிய மொத்த உற்பத்திக் குறியீட்டை அடைந்து உள்ளது.

2050-ல் இந்தியாவின் மொத்த உற்பத்திக் குறியீடு குறைந்த பட்சம் 28 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் அதிகபட்சமாக 37 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அடுத்த 41 ஆண்டுகளில் 28 மடங்கு வளர்ச்சி அடைய இருக்கிறது என்று பல பண்ணாட்டு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அடுத்த 41 ஆண்டுகளில் , இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தற்பொழுது உள்ளது போல் குறைந்த பட்சம் 28 மடங்கு வசதி வாய்ப்பு பெருக சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்தியா அடுத்த 41 ஆண்டுகளில் 37 வளர்ச்சி அடையை இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பண்ணாட்டு ஆய்வு அறிக்கைகள் தெளிவாக தெரிவிக்கிறது. அதன்படி பார்த்தால், அடுத்த 41 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தற்பொழுது உள்ளது போல் அதிக பட்சமாக 37 மடங்கு வசதி வாய்ப்பு பெருக சாத்தியக் கூறுகள் உள்ளது.இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி

2007 --> 1 டிரில்லியன் டாலர்

2014 --> 2 டிரில்லியன் டாலர்

2019 --> 3 டிரில்லியன் டாலர்

2022 --> 4 டிரில்லியன் டாலர்

2025 --> 5 டிரில்லியன் டாலர்.

இந்தியப் பொருளாதாரம் 2014 -ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் பொருளாதாரம், 2019- ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் பொருளாதாரம், 2022- ஆம் ஆண்டில் 4 டிரில்லியன் பொருளாதாரம், 2025- ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்று மிக மிக வேகமாக உலக நாடுகள் அனைத்தும் வியக்கும் வண்ணம் வேகமாக முன்னேற உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு பின்னால், ஒவ்வொரு இந்திய இளைஞனின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும்.


பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்

கடந்த 100 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் நாம் கண்ட வியத்தகு முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சிக்குக் காரணம்...

1... ஒரு டாடா
2....ஒரு பிர்லா
3....ஒரு விஸ்வேஸ்வரய்யா
4.... ஒரு அம்பானி
5..... ஒரு நாராயணமூர்த்தி
6.... ஒரு அசிம் பிரேம்ஜி


2050-ஆம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க குறைந்த பட்சமாக

28... புதிய டாடாக்கள் தேவை
28... புதிய பிர்லாக்கள் தேவை
28... புதிய விஸ்வேஸ்வரய்யா க்கள் தேவை
28... புதிய அம்பானிகள் தேவை
28... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
28... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை


இந்தியா 2050 --37 மடங்கு வளர்ச்சி

2050 ஆம் ஆண்டு வல்லரசு இந்தியாவை உருவாக்க அதிக பட்சமாக

37... புதிய டாடாக்கள் தேவை
37... புதிய பிர்லாக்கள் தேவை
37... புதிய விஸ்வேஸ்வரய்யா க்கள் தேவை
37... புதிய அம்பானிகள் தேவை
37... புதிய நாராயணமூர்த்திகள் தேவை
37... புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை

அவர்கள் எங்கே இப்பொழுது இருக்கிறார்களா ? நீங்கள் தான். என்ன புரியவில்லையா ? இன்றைய பள்ளி மற்றும் கல்லூரியில் சிந்தனைத் தெளிவோடு உள்ள மாணவர்கள்தான் நாளைய டாடா .. நாளைய பிர்லா.. நாளைய அம்பானி .. நாளைய நாராயணமூர்த்தி .. நாளைய விஸ்வேஸ்வரய்யா...


சென்றிடுவீர் .......... வென்றிடுவீர்....
உலகத்தில் முதுமை தாண்டவமாடுகிறது
World is getting older and older

இந்தியாவில் இளமை ஊஞ்சல் ஆடுகிறது.
India is getting youger and younger.

இந்திய இளைஞனே சென்றிடுவீர் எட்டுத் திக்கும், உலக செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ப்பீர் நமது பாரத நாட்டில்.
It is up to the Indian youth to rule the whole world....வலிமையான பாரதம்

2014 -ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும்.
2025 -ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும்.
2050 -ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும்.


OPPORTUNITYNOWHERE
மேலே உள்ள வார்த்தையப் படியுங்கள்

OPPORTUNITYNOWHERE
மறுபடியும் படியுங்கள்

OPPORTUNITYNOWHERE
நன்றாகப் படியுங்கள்.
நன்றாகப் படித்து விட்டீர்களா?

OPPORTUNITY NO WHERE
என்று படித்தீர்களா? ஆம் என்றால் இந்த உலகில் முன்னேற வாய்ப்புகள் உங்களுக்கு இல்லை.


பிற்போக்கு வாதிகள்

Apply Common sense in a common way.

OPPORTUNITY NO WHERE
வாய்ப்புகள் இல்லை.
இந்த உலகில் முன்னேற வாய்ப்புகளே உங்களுக்கு இல்லையா?
இந்திய இளைஞனே , சற்றே உங்களை சுற்றி மாறுபட்ட கோணத்தில் உலகைப் பாருங்கள்.
இந்திய இளைஞனே , சற்று மாறுபட்டு வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை இந்த பூமியில்.!

OPPORTUNITYNOWHERE

OPPORTUNITY NOW HERE

என்று படித்தீர்களா? ஆம் என்றால் இந்த உலகில் முன்னேற வாய்ப்புகள் உங்களுக்கு இங்கேயே உள்ளது.
அதுவும் இப்போதே உள்ளது.


முற்போக்கு வாதிகள்

Apply Common sense in a Uncommon way.

OPPORTUNITYNOWHERE
வாய்ப்புகள் இருக்கிறது.

முற்போக்கு வாதி அல்லது முற்போக்கு சிந்தனை உள்ளவர், மேலே உள்ள வார்த்தையை வாய்ப்புகள் இங்கேயே உள்ளது என்று படிப்பர்.

Optimist used to read the word "Opportunitynowhere" as "Opportunity now here"வாய்ப்புகள் இல்லை

பிற்போக்கு வாதி அல்லது எதிர்மறை சிந்தனை உள்ளவர், மேலே உள்ள வார்த்தையை வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று படிப்பர்.

Optimist used to read the word "Opportunitynowhere" as "Opportunity no where"


பிற்போக்கு சிந்தனைவாதி

பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் வாய்ப்புகளில் கூட பிரச்சனையைத்தான் பார்ப்பார்கள்.
பிற்போக்கு சிந்தனைவாதி, ஒவ்வொரு முடிவுகளிலும் பிரச்சனையைத்தான் பார்ப்பார்கள்.
பிற்போக்கு சிந்தனைவாதி, சோலை வனத்தில் பாலை வனத்தை பார்ப்பார்கள்.
பிற்போக்கு சிந்தனைவாதி, ஒவ்வொரு விடையிலும் கேள்விகள் மற்றும் பிரச்சனையைத்தான் பார்ப்பார்கள்.
பிற்போக்கு சிந்தனைவாதி, ரோஜா செடியில், முள்ளை மட்டுமே பார்ப்பவர்.


முற்போக்கு சிந்தனைவாதி

முற்போக்கு சிந்தனைவாதி, பிரச்சனைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பவர்.
முற்போக்கு சிந்தனைவாதி, ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தெளிவான தீர்க்கமான முடிவுகளைப் பார்ப்பவர்.
முற்போக்கு சிந்தனைவாதி, பாலை வனத்தில் சோலை வனத்தை பார்ப்பார்கள்.
முற்போக்கு சிந்தனைவாதி, ஒவ்வொரு பிரச்சனையிலும் தெளிவான விடை காண்பவர்.

ஒவ்வொரு முள் உள்ள ரோஜா செடியிலும், ரோஜா மலரை மட்டும் பார்ப்பவர்.


உலகில் வாய்ப்புகள்

20 - ஆம் நூற்றாண்டில் கடின உழைப்பு வெற்றியை தேடித் தந்தது !
21 - ஆம் நூற்றாண்டில் சிந்தனையோடு கூடிய கடின உழைப்பே வெற்றியை தேடித் தரும் !!
கடின உழைப்பு .......... சிந்தனையோடு கூடிய உழைப்பு

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in