நினைத்ததை அடைவது எப்படி ?


ஐந்து குருடர்களின் பார்வையில் யானை

யானையும், 5 குருடர்களும் கதை நமக்கு நன்றாகத் தெரியும். அதே போல் இன்றைய இந்திய இளைஞர்களில் பலருக்கும் வல்லரசு இந்தியா அடைய இருக்கும் வளர்ச்சி பற்றிய தெளிவான பார்வை இல்லை.

ஒவ்வொரு இந்திய இளைஞனும் , ஒவ்வொரு வகையில் தங்களின் யூகம் போல் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.



வல்லரசு இந்தியா? எப்படி? எப்போது?

2020- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று சில இளைஞர்களும்,
2030- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று சிலச்சில இளைஞர்களும்,
2040- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று பல இளைஞர்களும், அவர்களின் மனக் கருத்துக்கு ஒப்ப, மன எழுச்சிக்கு ஒப்ப சொல்லி வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் இன்று உள்ள 57 கோடி இந்திய இளைஞனுக்கு எப்போது இந்தியா வல்லரசு ஆகும் என்ற ஒருமித்த கருத்து உள்ளதா? என்றால் உண்மை பதில், "இல்லை" என்பதுதான்.


வல்லரசு நாட்டின் தகுதிகள்
வல்லரசு நாடு என்று உலகில் உள்ள ஒரு நாட்டை எந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்த்து சொல்கிறோம்?

ஒரு நாடு பெறும் உலக உற்பத்திக் குறியீட்டின் பங்கைக் கொண்டா?
உலக ஏற்றுமதியில் ஒரு நாட்டின் பங்கைக் கொண்டா?
ஒரு நாட்டின் மக்கள் தொகையைக் கொண்டா?
ஒரு நாட்டின் தனி மனித வருமானத்தின் அளவைக் கொண்டா?
ஒலிம்பிக் போட்டியில் ஒரு நாடு பெறும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டா?

ஒரு நாட்டின் பங்கு சந்தை வர்த்தக குறியீட்டைக் கொண்டா?
ஒரு நாட்டில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் செய்த முதலீட்டை (FDI - Foreign Direct Investment ) கொண்டா?
ஒரு நாட்டின் பங்கு சந்தையில் வெளிநாட்டுத் நிறுவனங்கள் செய்த முதலீட்டை (FII - Foreign Institutional Investor ) கொண்டா?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் இந்தக் கண்ணோட்டத்தில் முதலில் தெளிவு வேண்டும்.




வல்லரசு இந்தியாவில் இளைஞனின் பங்கு

வல்லரசு இந்தியா 2050 (பாகம்-1 ) புத்தகத்தில் உலக உற்பத்திக் குறியீட்டு (WGDP) வளர்ச்சி மற்றும் இந்திய உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சியைப் பற்றி பார்த்தோம். BRIC நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சைனா அடைய இருக்கும் மற்றும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பற்றியும் தெளிவாகப் பார்த்தோம்.

வல்லரசு இந்தியா 2050 (பாகம்-2 ) புத்தகத்தில் வல்லரசு இந்தியாவாக 1500- ஆம் ஆண்டு இருந்த இந்தியா , 2008-ஆம் ஆண்டில் வளரும் இந்தியாவாக மாறியது எப்படி என்பதைப் பற்றியும் தெளிவாகப் பார்ப்போம்.

இனி இந்தியா வல்லரசு நாடாக உருமாற்றம் அடைய ,இன்று முதல் ஒவ்வொரு இந்திய இளைஞனும் செய்ய வேண்டிய ஆக்கஸ் செயல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.




37 நினைத்ததை அடைவது எப்படி..

இந்த உலகில் , மனித வாழ்வில் சாதனைகள் தானாக நிகழ்ந்து விடுவதில்லை, சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த உலகில் மூன்று வகைப்பட்ட மனிதர்கள் உள்ளனர்

முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்
இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்
மூன்றாவது வகை மனிதர்கள் - சாதைனையாளர்கள்


முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்

இந்த முதல் வகையை சேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள், உலகில் நடந்த மற்றும் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாதவர்கள்.

இன்றைய உலக மக்கள் தொகையில், மற்றும் இந்திய மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர் வாய்ச்சொல் வீரர்கள். இவர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள்.

இத்தகைய நிலையில் உள்ள 99 சதவீத மக்கள் சமுதாயத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.

இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் வேலை அல்லது தொழில் உண்டு என்று மனம் எல்லை கட்டிய நிலையில் மிகக் குறுகிய வட்டத்தில் வாழ்பவர்கள்.

இந்த வாய்ச்சொல் வீரர்கள் தனக்கென்று மிகச் சிறிய சுய நல உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள், கிணற்றுத் தவளையாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். (பேச்சை குறைப்பீர் ... சிந்தனையை பெருக்குவீர் ..)


இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்

இன்றைய சமுதாயத்தில் உள்ள 100 சதவீத மக்களில் வாய்ச்சொல் வீரர்களான 99 சதவீத மக்கள் போக, மீதம் உள்ள ஒரு சதவீத மக்களே செயல் மற்றும் சாதனைகள் செய்ய மிஞ்சுபவர்கள்.
அந்த 1 சதவீத மாறுபட்ட மக்களில்,0.999 சதவீத மக்கள்தான், சமுதாய அமைப்பில் வரும் வாய்ப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
இத்தகைய செயல் வீரர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.

We live only once, if we live in a right way that will do !!



மூன்றாவது வகை மனிதர்கள் -சாதனையாளர்கள்
இந்த உலகில் உள்ள வாய்ப்புகளைக் கூர்ந்து நோக்கும் 1 சதவீத மக்களில், 0.999 சதவீத விழிப்புணர்ச்சி உள்ள மக்கள் போக, மீதம் உள்ளவர்கள் 0.0001 சதவீத மக்கள் மட்டுமே. அவர்கள்தான் தங்களது உயரிய வாழ்க்கைக் கனவை தங்களுடைய வாழ்நாளில் நனவாக்குகின்றனர்.

இத்தகைய மூன்றாவது வகை மனிதர்களான சாதனையாளர்கள், இந்த உலகில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகப் பார்ப்பதுடன், வரும் காலங்களில் நிகழ இருக்கும் மாற்றத்தை தொலைநோக்குப் பார்வை கொண்டு அகக் கண்ணில் பார்ப்பவர்கள். இந்திய இளைஞனே, தொலைநோக்குப் பார்வை புறக்கண்ணில் இல்லை, அகக்கண்ணில்தான் உள்ளது.

இந்த மூன்றாவது வகையை சேர்ந்த சாதனையாளர்கள், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பவர்கள். இத்தகைய சாதனையாளர்கள், அடுத்தவர்கள் சிந்திக்கும் முன் வேகமாக சிந்தித்து சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சாதனைகள் பல நிகழ்த்துபவர்கள்.

இந்த மூன்றாவது வகை மனிதர்கள்தான் இந்த உலகில் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவோ மற்றும் செயல் வீரர்களாகவோ மட்டும் இருந்துவிடாமல், சாதனை வீரர்களா, உருமாற்றம் அடைந்து சாதனைகள் பல செய்கின்றனர்.

இத்தகைய மூன்றாவது வகை சாதனை மனிதர்கள், இன்று உலகிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அதிக அளவில் தேவைப்படுகின்றார்கள்.

இந்த உலகில் உள்ள மக்களில் 0.0001 சதவீத மக்கள்தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.

சுருங்க சொன்னால் பத்தாயிரத்தில் ஒருவர்தான் சாதனையாளராக இந்த உலகத்தில் உருப்பெறுகிறார்கள். கனவு கண்டவர்கள், பகல் கனவு கண்டவர்கள், தங்கள் கனவில் நினைத்ததை, உலகில் மாற்றி அமைத்ததின் மூலம் சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள்.



வாழ்க்கை

நாம் இந்த உலகில் ஒரே ஒரு முறைதான் வாழ்கிறோம் அல்லது வாழப்போகிறோம். அந்த அரிய கிடைத்ததற்கு அரிய வாழ்க்கையை எப்படி வாழ்வது?

வாய் சொல் வீரராகவா?

செயல் வீரராகவா?

சாதனையாளராகவா?

இந்திய சிங்க இளைஞனே சிந்தனை செய்.. கண நேரம் சிந்தனை செய்...

தெளிந்த முடிவின்படி தெளிவான முடிவெடு.. செயல்படுத்து... சாதனை படை. உலகம் உன் காலடியில்

தொலைநோக்கு சிந்தனை...
தொலைநோக்கு செயல்
தொலைநோக்கு சாதனை

வாழ்வில் எடுத்த தெளிவான முடிவில் உறுதியை சேர்த்து அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு இந்திய இளைஞனும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய இரண்டு கேள்வி .. என் வாழ்க்கை .. உயரிய வாழ்க்கையா? சாதாரண வாழ்க்கையா? தெளிவான முடிவு ஒவ்வொரு இந்திய இளைஞனின் கையில் தான் உள்ளது.

இளைஞனிடம் வாழ்க்கை சிந்தனையில் தெளிவு இருந்தால், அத்தகைய இளைஞனின் இன்றைய சிந்தனையே, நாளைய வளமான வாழ்வுக்கு வழிகோல்கிறது.

நாளை நமதே ! இளைஞனே .. நாளை உனதே !

இந்திய வெற்றி உங்கள் கையில் !!

மிகப்பெரிய பொருளாதார வெற்றி உங்கள் கையில் !!

இந்திய இளைஞர்களே ..

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் !!
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்

மனம் போல் மாங்கல்யம் .. எண்ணம் போல் வாழ்வு.. என்று நமது மூதாதையர்களின் வாக்கு.


அதன் பொருள் தான் என்ன?
ஒரு மனிதனின் எண்ணம் எப்படியோ, அப்படியே ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது.
வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி?

இந்த உலகில் எந்த ஒரு பொருளும், நிகழ்வுகளும் இரண்டு முறை உருவாக்கப்படுகிறது. முதலில் ஒரு தனி மனிதனின் மனதில், பிறகு நிஜ வாழ்வில்.
எதிர்காலம் .. என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் வர இருக்கும் உன்னதமான காலம்.


நேற்று .. இன்று .. நாளை
துன்பம் அமைதி இன்பம்
ஒவ்வொரு இந்திய இளைஞனும் தன் வாழ்நாளில் மூன்று பகுதிகளை சந்திக்கின்றனர். அவைகள்
நேற்று, இன்று, நாளை..

1. நேற்று .. என்பது இறந்த காலம் அல்லது கடந்த காலம்.
2. இன்று .. என்பது நடந்து கொண்டு இருக்கும் நிகழ் காலம்
3. நாளை.. என்பது நடக்க இருக்கும் எதிர் காலம்

ஒரு மனிதனின் கடந்த காலம் துன்பமானதாக இருந்து இருக்கலாம். ஆனால் இந்த நிகழ் காலத்தில் அமைதியாகத் திட்டம் இட்டு செயல்கள் செய்வதால், வருங்காலம் இன்பமயமாக இருக்கும். இளைஞனே .. நிகழ் காலத்தில் வாழக் கற்றுக்கொள்.



கடந்த காலம் ...............நிகழ் காலம்
கடந்த காலம்
ஒரு மனிதனுக்கு அவன் வாழ்நாளில் பெற்ற படிப்பினையை, அனுபவங்களாக வழங்குகிறது.
நிகழ் காலம்
ஒரு மனிதனின் இலட்சிய எண்ணத்தை நிர்ணயித்து உண்மையான உறுதிப்பாடான திட்டங்களைத் தீட்டுவதற்கு தேவை. மேலும் நிகழ்காலம் திட்டங்களை செயலாற்ற தேவை. நேரத்தை சரியாகக் கணித்து, கணக்கிட்டு
திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்துவதற்கான உயரிய இனிமையான காலம்.


எதிர் காலம்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் வர இருக்கும் உன்னதமான காலம். ஒரு தனி மனிதன் நிகழ் காலத்தில் காணும் கனவுகளே, கனவின் வழி செயல்படுத்தும் செயல்களே எதிர்கால சாதனைகளாக இந்த உலகில் வெளிப்படுகிறது.

வல்லரசு 2050 என்ற உன்னத கனவு ... இமாலய சாதனை, இன்றைய இந்திய இளைஞர்களின் கையில்ல் தான் உள்ளது.

இன்றைய இந்திய இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வையில் வருங்கால இந்தியாவின் எதிர் காலம் உள்ளது.

தான் மட்டும் முன்னேற வேண்டும் என்ற நிலையில் இருந்து மாறி தானும் முன்னேறி இந்த நாட்டையும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றுவேன் என்ற சிந்தனை வெறி மற்றும் செயல்பாட்டில் உறுதி இன்றைய இளைஞர்களுக்கு தேவை.




தின்று ............ திரிந்து

ஒவ்வொரு இந்திய இளைஞனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.

தின்று, திரிந்து உறங்கிடவா பிறந்தோம்?

வாய்ச்செயல் வீரர்கள் சொல்கிறார்கள் ... ஆம்.........ஆம்
நல்லா சாப்பிடணும், நல்ல வெட்டிப்பேச்சில் பொழுதை கழிக்க வேண்டும், நன்றாக தூங்க வேண்டும்.

செயல் வீரர்கள் சொல்கிறார்கள். தின்று, திரிந்து உறங்கிடவா பிறந்தோம்? என்ற கேள்விக்கு இல்லை......இல்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்த முடியவில்லை.

சாதனையாளர்கள் சொல்கிறார்கள். தின்று, திரிந்து உறங்க பிறக்கவில்லை. சாதிக்கப் பிறந்துள்ளோம், என்று சாதனையாளர்களிடம் தெளிவான எண்ணாம் மற்றும் உறுதியான எண்ணத்தில் வழி செயல்பாடு உள்ளது.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.