காந்தி காட்டிய வழி வாழ்வோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijR6WxF9EfTOsshdrJPGNOBjHBD5QKTZ9awQzpuzj9d_XpjHkJ9tUhOVbIu-q7z3ur0Wj-oGblEgPS5xGalt71QstXCphSHlhsrXmxV6c4e1KBabXhU1N5xc_PiBs88LSTcjEpMYpsC4k/s200/gandhiji's+simple+living.jpg)
காந்தியின் எளிமையான வாழ்க்கை....
"எளிமையான வாழ்க்கை உயரிய எண்ணம்"
காந்திஜியின் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் இருந்தும், தனது வாழ்நாளில் கடைசி நாள் வரை தன்னுடைஉஅக் கோட்பாட்டின் படி, மிக ..மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOZbu8_J-jF1GO4Fwwqdaw8dz6Q8VC3jccCW29aVvQFzi2xlaREnWEe23FfM34dq19Q7YW5fT6S5dY_kqiZtRh1AkMt695dhosotLNbJ4RFvzCx2KhLv7MQWlZl0l2qy0QjfgDEayA1vw/s200/aadam+para+vazkkai.jpg)
ஆடம்பர வாழ்க்கை
காந்தி அடிகள் ஒவ்வொரு இந்தியனையும் எளிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டினார். அதே நேரத்தில் எண்ணத்தை உயரியதாக அமைத்துக் கொள்ள வேண்டினார். அத்தகைய உயரிய எண்ண வழி வாழ தற்சோதனை செய்ய சொன்னார்.
ஆனால், இன்று நம்மில் அதிகமானவர், "ஆடம்பர வாழ்க்கை மற்றும் மலிவான, குறுகிய எண்ணம்" என்ற முரண்பாடான வாழ்க்கை முறைக்கு அடிமை ஆகிவிட்டோம்.
உயரிய எண்ண வறுமை....
அத்தகைய ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, தேவையற்றப் பொருட்களைத் தேவை என்று ஆக்கி, தேவையைப் பல மடங்கு பெருக்கி , துனபம் விளையக் கண்டோம் !!
சென்ற நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல உயரிய எண்ணம் மற்றும் சில சில மலிவான எண்ணங்கள் என்ற நிலை மாறி, இந்த நூற்றாண்டில் சமுதாயத்தில் பலப் பல மலிவான எண்ணங்கள் மற்றும் சில சில உயரிய எண்ணங்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதான் நமது விஞ்ஞான முன்னேற்றமா? சமுதாய வளர்ச்சியா?
உயரிய எண்ணமே ........ வாழ்க்கையின் வெற்றி......
நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
உயரிய எண்ணம் = உயரிய வாழ்க்கை
மலிவான எண்ணமே ........ வாழ்க்கையின் வீழ்ச்சி....
நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
மலிவான எண்ணம் = மலிவான வாழ்க்கை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn3RIt04iTk-yspUWVo3cGF2pLEKpa8ZZ8q7RY4B4ng9jEl0UOP9cDTooKvvcHAYYjmXarUyBG6GqY9BgS1r_sw7WrlQ2SCjik0e00i-rlLXB_27VUvOgVaKUW_x80-TBc4kNxtH6EC0Q/s200/newton's+third+law-1.jpg)
நியூட்டனின் மூன்றாவது விதி
நியூட்டனின் மூன்றாவது விதி ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற எதிர்மறையான விளைவு உண்டு
உயரிய எண்ணம் = உயரிய வாழ்க்கை
மலிவான எண்ணம் = மலிவான வாழ்க்கை
பட்டினியில் வாழும் மனிதனுக்கும், வறுமையில் முழுகிய நாட்டுக்கும் சுதந்திரம் என்பது பொருளற்ற சொல் -- நேரு.
நேற்றைய வாழ்க்கை ... இன்றைய வாழ்க்கை
அருள் நோக்கிய உன்னதப் பயணம்..
அறிவு நிறைவு.. பொருள் வறுமை....
பொருள் நோக்கிய பயணம்..
பொருள் நிறைவு... அறிவு வறுமை...
சென்ற 20ம் நூற்றாண்டு வாழ்க்கை
நம் முன்னோர்கள்...
மெதுவான உணவு உண்டனர்.
மெதுவான செல்வம் ஈட்டினர்.
மெதுவான வாழ்க்கை வாழ்ந்தனர்.
மெதுவான இறப்பு நிகழ்ந்தது.
நிதானமாக இளமை வேகம்.. முதுமையில் விடை பெறு. இளமையில் நிதான வேகம்.. நோயற்ற வாழ்க்கை ... முழுமையான வாழ்க்கை .. முதுமையில் மரணம்..
இந்த அருள் நோக்கிய பயணத்தில் அறிவு நிறைவு. ஆனால் பொருள் வறுமை என்ற நிலை நம் முன்னோர்களுக்கு இருந்தது.
இந்த 21 ம் நூற்றாண்டு வாழ்க்கை
இன்றைய விரைவான வாழ்க்கையில் மனிதர்கள்...
வேகமான / துரித உணவு உண்ணுகின்றனர்.
வேகமாக செல்வம் ஈட்டுகின்றனர்.
வேகமாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
வேகமான இறப்பு நிகழ்கிறது.
இந்த பொருள் நோக்கிய பயணத்தில் மனிதனுக்கு அறிவு வறுமை அதிகமாகிறது. ஆனால் பொருள் நிறைவு கிடைக்கிறது. உண்மை அறிவை விட்டு, பொருள் அறிவை அதிகரித்துக் கொண்டு நவீன கால மனிதன் அல்லல் படுகிறான்.
நிதானமற்ற இளமை வேகம்..இளமையில் விடைபெறு !!
இளமையில் திசை தெரியாத வேகம்.. இளமையிலேயே நோய்..முழுமையற்ற வாழ்க்கை ... இளமையில் மரணம்.
24 நிமிடம்...
நம் முன்னோர்கள்ம் சிறுகக் கட்டி, பெருக வாழ்ந்தார்கள். ஆனால் நாமோ, பெருகக் கட்டுவதாக நினைத்து, நம்மை அறியாமல் சிறுக வாழ்கிறோம்.
சிறு துளி பெரு வெள்ளம். ஆம், ஒரு நாளில் நமக்கு கிடைக்கும் அரிய 24 நிமிட நேரத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்வின் உண்மை நோக்கமான ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கிப் பயணம் செய்து அதில் வெற்றி அடைவோம். வேகமான வாழ்க்கையில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல்வோம்.
?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglO7UQlvvUkYq-Zhi8SZ5B1syH-0hE5YKIhClO5hrJxZabsQh13h9IFWSyZ_mB1Uqmoin0pf_my7jYvP4AjHptQ2VECMS6cqR0GOlOX7LCh5YuDH_jD7XmRXHDOSPji5SGks5WWFY6_dw/s200/oru+kanam+sinthippom.gif)
ஒரு கணம் சிந்திப்போம்
ஏசி அறை..ஏசி வீடு.. ஏசி கார்..ஏசி அலுவலகம்.. இன்று நம்மை சுற்றி எல்லாம் ஏசி மயம்.. அவ்வளவு கடைசி பயணம் கூட ஏசிதான்.
ஆம், மனிதன் உயிர் விட்ட பின் சடலத்தை ஆரோக்கியமாக சிறிதுக் காலத்திற்குப் பாதுகாத்து வைக்கும் அந்த சவப்பெட்டிகூட ஏசிதான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg5AeJO-Sv4q5Oc7_eEtkd_RuOJ66MDipmzj4DVLTqXYtFKpN2kRrC18o42-uq2k7FcImpYH2AQwt-M52GWCfkKVnofe_HdliIzKUr248gYxil1RPf9Sg7E8rQbP4mUEBMw9wYvrLsO2s/s200/yosi----konjam+yosi.jpg)
யோசி .. கொஞ்சம் யோசி....
பிறப்பு முதல் இறப்பு வரை ஏசி .. ஏசி ... கொஞ்சம் யோசி தேவையா இந்த ஆடம்பர வாழ்க்கை ? வியர்வையே காணாத ஏசியில் மனிதன் இருந்தால் இயற்கை கழிவான வியர்வை எப்படி வெளியேறும்? வியர்வைத் துளிதான் உடல் ஆரோக்கிய துளி. அதை உணர்ந்து செயல்படுவோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-wp0y3eMkgpRh5MIB6aBCHjJxFKD_XckM2XJG06emKi6gfbdc1dYjm9ZwyRbXwf7cdlu8TXXOIry4IRwKuXfOqwxfsegp-_Kc4M_Ac7dA0Uydg1OOp8rCmsmSzv3r_4FUrFgGex_2QLI/s200/meignam.jpg)
மெய்ஞானம்.
ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கை தேவை இல்லை !. விஞ்ஞான முன்னேற்றமே தேவை இல்லை !! என்று நான் சொல்லவில்லை.....
உடலைப் பாழ்படுத்திக் கொண்டு, உள்ளத்தை அழித்துக் கொண்டு, வியர்வை வெளியேராத சொகுசு வாழ்க்கை தேவையா? என்றுதான் கேட்கிறேன். மெய்ஞானம் கண்டு நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகளுக்கும் சற்று செவி சாய்த்து அதன் உட்பொருளை உணர்ந்து ஆரோக்கியமாக வாழப் பழகுவோம்.