சிந்தனை சிற்பியை பற்றி ஓர் அறிமுகம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimT_H2HU_Vm9n5Fyf7aW7VIHm2NprQIuoUbHC6Px82pC5d6LlSnLduD9-9fveZKUyt89jS3Fn6i-L7euMIZshS8Ws06xFoO6a8Os5-jX0hiEm6bLu0k-52cQkcttknpVY26DW8rG_ebls/s200/thalai.png)
கே .பாலசுப்பிரமணியன்
B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M.,
1. சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர்:
பகுதி நேரமாகவும் , தற்சமயம் முழு நேர தமிழ் எழுத்தாளராக 20 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்களை எழுதி கொண்டிருக்கிறார்.
அவருடைய எழுத்துகள் E-Book வடிவில் www.thannambikai.com, www.thannambikai.net என்ற இணையதளத்தில் உள்ளது.
புத்தக வடிவில் பெற www.pathampathipagam.com இதை தவிர www.chinthanaicirpi.blogspot.com என்ற புதிய இணைத்தளம், இணையதள உலகில் புதியதோர் விடியல் ஏற்படுத்த 02 .04 .2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள ஆன்றோர்கள், சான்றோர்கள் படித்து பயன் பெரும் வகையில் சிந்தனை சிற்பியின் சிந்தனை தொகுப்புகள் E-Book வடிவிலும் physical book வடிவிலும் கிடைக்கிறது. தமிழக இளைஞர்களை கேடான எண்ணங்களிலிருந்து மாற்றி ஆக்க பூர்வமான வழியில் அகிலம் வெல்ல இந்த இணையதளம் பாதை அமைத்து தருகிறது.
2. மேலாண்மை பேராசிரியர்:
10 பல்கலைகழகங்கள் , 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்(MBA மேலாண்மை) சிறப்பு பேராசிரியராக பணியாற்றி கடந்த 17 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்கள் திறம்பட உருவாக்கி உள்ளார்.
3. மேலாண்மை புத்தக எழுத்தாளர்:
26 மேலாண்மை புத்தகங்களை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார்.
நிர்வாக பயிற்சியாளர்: 6000 -க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்களுக்கும் ,நிர்வாகத்தினர்க்கும் சிறந்ததொரு பயிற்சியாளர் .
4. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)
6000 க்கும் மேற்பட்டோருக்கு சிந்தனையில் புதியதோர் மற்றம் ஏற்பட வித்திட்டவர்.( குறிப்பாக திருச்சி BHEL லில் மட்டும் சுமார் 3500 மேற்பட்டோருக்கு சிந்தனை புரட்சியை ஏற்படுத்தியவர்) பல நிறுவனங்களில் ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர்.
5. தன்னம்பிக்கை பேச்சாளர்:
பேராசிரியர் அவர்கள் இதுவரை 25,000 -க்கும் மேற்பட்டோர் வாழ்வில் தன்னம்பிக்கை தனிநல ,பொதுநல உணர்வுகளை வளர்த்துள்ளார் .
6. சமுக சேவகர்:
இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு 80 G சான்றிதழ் கொடுத்துள்ளது.
7. மேலாண்மை ஆலோசகர்:
கே.பாலசுப்பிரமணியன் அவர்கள் 75 க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் நிர்வாகம் ஆலோசகராக உள்ளார்.