ஏன் தொழில் முனைவோர்?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRWsF6wJQIHkveqIp24-rHmFnZtdqrVi68zEb0ElDxrkbprHMwFtjEwcNAecHgbTsKwBaP4EiF46J7r1PIu5yahhhi0K0pq49J6bZJJqK8sT3Mc_jT2jtqCE-Jl82Nrbdlv-RYXOT2HpI/s320/yar+thozhil+munaivore.jpg)
ஏன் தொழில் முனைவோர்?
தொழில் முனைவோர் - பிறப்பிலேயே உருவாகிறார்களா?
இந்த உலகில் இரண்டு அணியினர் உள்ளனர். தொழில் முனைவோர் இயற்கையிலே. பிறயிலேயே உருவாகிறார்கள். என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றொரு அணியனர், தொழில் முனைவோர் உருவாக்கப் படுகின்றனர் என்ற அணியை சேர்ந்தவர்கள். இவர்களில் யார் சரி, யார் தவறு ?
தொழில் முனைவோர் பிறப்பிலேயே உருவாகிறார்கள் என்ற முடிவுக்கு வருபவன் விதியை நினைத்து நொந்து கொள்பவன். அத்தகைய மனப்போக்கு கொண்டவர்களை எந்த ஒரு காலகட்டத்திலும், ஒரு தொழிலை ஆரம்பிக்க முடியாது. தப்பி தவறி ஆரம்பித்தாலும் திறம்பட செய்ய முடியாது.
தொழில் முனைபவர் உருவாக்கப்படுகிறார்கள் என்பவர்கள் விதியை விட, தனி மனித மதியை, தனி மனித உழைப்பை நம்புவர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1bdjJSl_HtO50dF_32yfeVU-ZsmQwhFfATPxIZfVyvT9MMFtNJL99DVBKsWnQEKPd9VIcCDfBdOR7x9uVT4_jT5AYCzLqd3uDQ2zWfPyoLvC5deGh3SPYaB-TmOjP0G2QHGqC_aM_w8U/s320/thannambikai+image.jpg)
3.2 தன்னம்பிக்கை:
இன்று நம்மை சுற்றி உள்ள பல வெற்றி அடைந்த வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களை அவர்களின் வெற்றி அடைந்த வியாபார கனவுகளை கூர்ந்து கவனியுங்கள்.
வெற்றி பெற்ற வியாபாரியின் வெற்றிக்கு பின்னால் உள்ளது என்ன?
முதலில், தன் மேல், தன் தொழில் மேல் அத்தகைய வெற்றி அடைந்த வியாபாரிக்கு உள்ள அசாத்திய நம்பிக்கை, தொழில் சிரத்தை, அல்லது தொழில் பக்தி, மற்றும் அயராத உழைப்பு. இவற்றைத் எல்லாம் தாண்டி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் அடையேன் என்ற மன உந்துதல் மற்றும் செயல்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuZF1N4VDeWPfbhmubMkKBa2aFWcBpuMpOsXtxe2aF4rPKjPZ0tEiyTJ_ViUQZSmuVHYkn4earkC8uvHrLMrRyv8oT6RTlI0O5HP8hkSFjuMDqVcKGFlAWjzKMjCoBx0-YCnMwX68oNYI/s320/velai+virumbi.jpg)
3.3 வேலை விரும்பி:
தொழில் முனைவோர் வேலை விரும்பியாக இருப்பார்கள். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும், அவர்களின் சிந்தனை தொழில், தொழில் முன்னேற்றம் பற்றிய சிந்தனையாகவே இருக்கும்.
சுருங்கச் சொன்னால், 'செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்', என்ற தொழிலுக்கு அடிமையாகி இருப்பார்கள். வெற்றி அடைந்த தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் மனம் முழுவதும் வியாபாரமே வியாபித்து இருக்கும் மற்றும், மனத்தை முழுமையாக வியாபாரத்தில் ஈடுபடுத்தி இருப்பார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlVD2WW74mOBP4gsjMotZoSjy-fbOURwEUlom3Enzd2F3a5Y5Pob3T1a46z7bNRH1_yDIm_v2CXGXB2Av4IkJDr1Ai9RX-umhiQS9L1rIKRz3bgwuHpHyW_xOqKd9XcI-HAUuGCis8w38/s320/india+porulathaarum+vuyariya+nilayil.jpg)
3.4 இந்திய பொருளாதாரம் உயரிய நிலையில்:
கடந்த வருடம் 2007, ஏப்ரல் மாதம் இனந்திய உற்பத்திக் குறியீடு மற்றும் பங்கு சந்தை பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர், சுமார் ரூபாய் 50 இலட்சம் கோடி என்ற உயரிய நிலையை அடைந்து உள்ளது.
இந்தியா உலக அளவில் 12வது நாடாக இந்த உயரிய ஒரு டிரில்லியன் டாலர் என்ற தேசிய உற்பத்தி குறியீட்டை (GDP - Gross Domestic Product) அடைந்துள்ளது.
3.5 இந்திய பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி:
சுதந்திர இந்தியா 60 ஆண்டுகளில் கண்டுள்ள இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சிக்கு பின்னால் ஆயிரக்கணக்கான் தொழில் முனைவோரின் எண்ணத்தை செயலாக மாற்றிய கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர், என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்து பார்க்க வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5AuHPCFRcNycjBBDJ5f-pMoxvYYrMiImrQ41UqrWI-n1JzNJBsYVIeKHG2VzVlYTQOwIySYveQMagk3MkTv7ckZ_Lvhv0iGuASHrh5swBg8ApJWzhs4Rgt4YsO3Ui3t344Rgi8RO3IJo/s320/luciddream01.jpg)
3.6 மன பிரம்மை:
தி கிரேட் அலெக்ஸாண்டர் உயரிய தத்துவம் நான் பாலத்தை பற்றி நதி கரையை அடையும் போது தான் யோசிப்பேன் என்பதே. அலெக்ஸாண்டர் நதிக்கு 50 கிலோ மீட்டர் முன்பே. இன்னும் ஒரு 50 கிலோ மீட்டரில் ஒரு நதி வரப்போகிறது, அதை எப்படி கடப்பேன் என்று கற்பனையில் பிரச்சனையை பூதாகரமாக மாற்றி மனதை குழப்பிக் கொள்ள மாட்டாராம்.
3.7 முற்போக்கு சிந்தனை......குழம்பிய சிந்தனை அல்ல........
அதே போல், தொழில் முனைவோருக்கு தேவை முற்ப்போக்கு சிந்தனை, தொழில் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தீராத வேட்கை. அதற்கும் அப்பால்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் தொழிலில் தோல்வி கண்டால், தொழில் முனைவோர் துவண்டு விடமாட்டார்கள்.
மற்றொரு தொழில் முயற்சியில் மிக உற்சாகத்தோடு இறங்கி விடுவர். தொழில் முனைவருக்கு தோல்வி வெளியில்தான் சிறிது பாதிப்பு ஏற்படுத்தும். அந்த பாதிப்பு தொழில் முனைபவன் மனதில் இருக்காது. ஆம் மனம் வெற்றி.....வெற்றி....வெற்றியை நோக்கியதாக மட்டுமே இருக்கும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPX_OIkq-9oj8C__mRS7M5Q9EXP1N6L_OzoNqjeYmPn6tH2Xx_dNfhudJDlTNb1xEpex0feHqvxcIVwv5h-y-FWUF1KpBaKyMV7wDxLVDJ5dm8BJ83Db9Q9bcUzT7r_3FZBvrsh-ANUl0/s320/siriya+seyal-periya+vetri.jpg)
3.8 தனித மனித மாற்றமே உலக மாற்றம்:
ஒரு தனி மனிதனின் மாற்றம் தான் இந்த உலக மாற்றம் !
ஒரு தனி மனிதனின் மாறுபட்ட ஒரு எண்ணத்தின் வெளிப்பாடுதான் வியாபார வெற்றி.
நாம் இன்று உலகம் முழுவதும் பார்க்கும் சிறியது முதல் பெரிய அளவில் வெற்றி அடைந்த வியாபாரக் கனவுகள், இவ்வாறு ஒரு சிறிய தனி மனிதனின் சிந்தனை பொறியால் நிகழ்ந்ததுதான்.