திருபாய் அம்பானியின் இந்தியப் பொருளாதாரம் பற்றிய தீர்க்க தரிசன பார்வை.

இந்திய வளர்ச்சி முன்னோடிகள்....
200 ம் ஆண்டில், இண்டர் நெட்டில் ஒரு சர்வே செய்தார்கள். அது யார் இந்தியாவின் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கான முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் ?

அந்த சர்வேயின் முடிவில் 4 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.
1. சுவாமி விவேகானந்தர்
2. காந்தி அடிகள்
3. அன்னை தெரசா
4. திருபாய் அம்பானி
இதில் வியாபார ஜாம்பவானகளான ஜாம் செட்ஜி டாட்டா, ஜெ.ஆர்.டி.டாட்டா, ரத்தன் டாட்டா போன்றோரின் பெயர்கள் இடம்
பெறவில்லை


பாலியஸ்டர் புரட்சி ...... அம்பானி

ஆனால், திருபாய் அம்பானி பெயர் இடம்பெற்று இருந்தது. எப்படி ? யார் இந்த அம்பானி ? இவர் இந்தியாவிற்கு என்ன செய்தார்?

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனாக குஜராத் மானிலத்தில் பிறந்த திருபாய் அம்பானி, ரூபாய் 15,000 முதலில் தொழில் தொடங்கி 42 ஆண்டுகளில் ரூபாய் 90,000 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இந்தியாவில் உள்ள சாமானியனும் தரமான துணி உடுத்த பாலியெஸ்டர் புரட்சி செய்தார் அம்பானி.

இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் பாலியஸ்டர் துணி வியாபாரம் செய்தார். அவருடைய மகத்தான சாதனைக்கு கிடைத்த சன்மானம்தான், இந்தியாவின் வளர்ச்சிக்கான 4 முன்னோடி நபரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திருபாய் அம்பானியின் வெற்றி சிந்தனை

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான காரணம் 4 .
1. பிரம்மாண்டமாக சிந்தியுங்கள்
2. வேகமாக சிந்தியுங்கள்
3. வேகமாக செயலாற்றுங்கள்
4. வேகமாக இலக்கை அடையுங்கள். மற்றவர்கள் சிந்திக்கத் துவங்கும் முன், இலக்கை அடைந்து விடுங்கள்.


சாதாரண இந்தியனின் எதிர்மறை சிந்தனை
நம்மில் அதிகமான இளைஞர்களின் எண்ணம் அம்பானியின் எண்ணத்திற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது...

1. சிறியதாக சிந்திப்பது. (Think Small)
2. மெதுவாக சிந்திப்பது.(Think Slow)
3. மெதுவாக செயலாற்றுவது.(Act Slow)
4. மெதுவாக இலக்கை அடைவது.(Acheive Slow)

இதனால்தான், அதிகமான இந்திய இளைஞர்களில் பலருக்கு திறமைகள் அபரிதமாக இருந்தும், பெரிய அளவில் சாதனை எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு சிலரே சாதிக்கிறார்கள்.தேவை இந்திய இளைஞனுக்கு மாறுபட்ட சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை

வளரும் இந்தியாவை, வல்லரசு இந்தியாவாக 2050-ம் ஆண்டுகளில் மாற்ற இலட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு உழைக்க வேண்டும்.100 ஆண்டு கால யாங்கி பாண்ட்
இந்தியாவில் ஒரு 60 வயது இளைஞன் மனதில் 1997 ம் ஆண்டிலேயே, 2097 ம் ஆண்டில் இந்தியா எந்த அளவிற்கு பொருளாதார வளர்ச்சி பெறும் என்ற 100 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை மற்றும் கனவுத் திட்டம் தெளிவாக இருந்தது. அவர்தான் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி.
1977- ஆம் ஆண்டில், திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், நிறுவனம் தங்களுடைய ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்தீகரிப்பு நிலையம் அமைக்க உலக அளவில் பொது மக்களிடம் பணம் திரட்ட முடிவு செய்தனர்.
100 ஆண்டு கால யாங்கி பாண்ட் திட்டத்தின் மூலம் உலக அளவில் பணம் திரட்ட முடிவு செய்து, அதன்படி திருபாய் அம்பானி, அந்தப் பணத்தை உலகப் பங்கு சந்தையில் திரட்டினார்...


ரிலையன்ஸின் உலக சாதனை:

இந்தியாவில் , இந்த நாள் வரை, 100 ஆண்டு கால அளவில் யாங்கீ பாண்ட் என்ற திட்டத்தின் மூலம் பணம் திரட்டிய முதல் நிறுவனம் ரிலையன்ஸ் தான்.
ஆசிய அளவில் 100 ஆண்டு கால கட்ட அளவில் யாங்கீ பாண்ட் என்ற திட்டத்தின் மூலம் பணம் திரட்டிய முதல் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே.

உலக 100 ஆண்டு கால கட்ட அளவில் யாங்கீ பாண்ட் என்ற திட்டத்தின் மூலம் பணம் திரட்டிய ஏழாவது நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே.


உலக முதலீட்டாளர்கள் கண்ணோட்டத்தில் இந்திய ரிலையன்ஸ்:

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளில் நடைபெற இருக்கும் தொழில் வளர்ச்சியையும், அதே காலக்கட்டத்தில் இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் அடைய இருக்கும் வேகமான தொழில் வளர்ச்சியையும் தொலைநோக்குப் பார்வை கொண்டு தெளிவாகக் கணித்தார்கள்.


உலக முதலீட்டார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை:

உலக முதலீட்டார்கள், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார சாதனைகளை உலகில் உள்ள மற்ற வியாபார நிறுவனங்களை விட செய்த்து, அடுத்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் முதல் பத்து நிறுவனங்களிக் ஒன்றாக திகழும் என்று உறுதியாக நம்பினர்.

அதே நேரத்தில் இந்தியாவில், விரல் விட்டு எண்ணக கூடியவர்கள் கூட அம்பானியின் யாங்கீ பாண்ட் சாதனையைப் போற்றவில்லை. இந்திய பொருளாதர வல்லுனர்கள், திருபாய் அம்பானியை போற்றாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் புழுதி வாரி தூற்றினார்கள்.


இந்திய பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாற்று:

திருபாய் அம்பானி அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்திய நாட்டையே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடகு வைத்து விட்டார் என்று இந்தியப் பொருளாதார மேதைகள் பலர் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்.

மேலும் இந்தியப் பொருளாதார நிபுணர்கள், 100 ஆண்டு காலத்திற்க்கு அம்பானியின் தெளிவற்றப் பார்வையோடு தொழில் முனைய தேவையான பணம் திரட்டும் முயற்ச்சிக்கு, இந்திய நிதியமைச்சரகமும் உடைந்தை ஆகிவிட்டது என்று அம்பானியையும், இந்திய அரசையும் குறிப்பாக நிதியஅமைச்சரகத்தின் செயல்பாட்டையும் பல வகையில் குறை கூறினர்.அமெரிக்க டாலர்............இந்திய ரூபாய் மதிப்பு:

அத்தகைய மெத்த படித்த இந்திய பிற்போக்கு வாதிகளின் வாதம் என்னவென்றால், 1950-ல் ஒரு அமெரிக்க டாலரின் எக்சேன்ஜ் மதிப்பு, இந்திய ரூபாய்க்கு நான்கு (1 USD = Rs. 4/-)

1950 - 1 டாலர் = ரூபாய் 4 /-

1997-ல் ஒரு அமெரிக்க டாலரின் எக்சேன்ஜ் மதிப்பு, இந்திய ரூபாய்க்கு நாற்பத்து ஒன்பது (1 USD = Rs. 49/-) அதாவது, 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு சுமார் 10 மடங்குகளுக்கு மேல் தேய்மானம் அல்லது சரிவு, என்ற நிளையில் இருந்தது.

1997 - 1 டாலர் = ரூபாய் 49 /-


அமெரிக்க டாலர்............இந்திய ரூபாய் மதிப்பு 2047:

இதே பொருளாதார நிலை நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் அதாவது 2047-ல் ஒரு டாலருக்கு எக்சேன்ஜ் மதிப்பு, இந்திய ரூபாயில் சுமார் நானூறு (1 USD = Rs 400/-) என்று ஆகிவிடும்.

2047 - 1 டாலர் = ரூபாய் 400 /=

அதற்க்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கும், இதே இந்தியப் பொருளாதார நிலை நீடித்தால், அமெரிக்க டாலரின் எக்சேன்ஜ் மதிப்பு, 2097 - ஆம் ஆண்டு அதாவது ஒரு டாலருக்கு எக்சேன்ஜ் மதிப்பு, 2047 மதிப்பில் மேலும் பத்து மடங்கு தேய்மானம் அல்லது சரிவு அடைந்து சுமார் ரூபாய் நாலாயிரம் என்று ஆகிவிடும்.

2097 - 1 டாலர் = ரூபாய் 4000 /=


அமெரிக்க டாலர்..........இந்திய ரூபாய் மதிப்பு 2097..................


இந்தியப் பொருளாதார மேதைகளின் வாதம் என்னவென்றால், 1950-ஆம் ஆண்டு ஒரு டாலருக்கு, இந்திய நாணய மதிப்பு
ரூபாய் - 4 / =

1997 ஆம் ஆண்டு ஒரு டாலருக்கு இந்திய நாணய மதிப்பு ரூபாய் 40/=

பிறகு 2047 ஆம் ஆண்டு ரூபாய் 400 / = என்று மதிப்பு சரிந்துவிடும்.

அதற்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கும், அதே சரிவு நிலை நீடித்தால், 2097-ம் ஆண்டில், ஒரு டாலரின் எக்சேன்ஜ் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூபாய் 4,000 / = (1 USD = Rs 4000 / -), என்ற நிலையை அடையும்.அம்பானியின் தொலைநோக்குப் பார்வை

மேலும், இந்திய பொருளாதார நிபுணர்களின் கணக்குப்படி, 2097- ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தையே உலக அளவில் டிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பெற்ற கடனுக்கு ஈடாக செலுத்த வேண்டி இருக்கும்.

மிகப்பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தில் தவறு நிகழ்ந்து விட்டது. திருபாய் அம்பானி மிகப்பெரிய பொருளாதாரத் தவறை செய்து விட்டார். அதற்கு துணை போய், இந்திய நிதி அமைச்சரகமும் மிகப் பெரிய பொருளாதாரத் தவறை செய்து விட்டது என்று மெத்த படித்த பலர் பலவகையில் கூச்சலிட்டனர்.


இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை தவறு

அதாவது , அடுத்த 100 ஆண்டுகளில் , உலக சந்தையில் இந்திய ரூபாயின் தேய்மானம் அல்லது சரிவு மிகவும் மோசமாகி, திருபாய் அம்பானி 1997-ல் பெற்ற கடன் தொலையை டாலருக்கு ரூபாய் 4,000 எக்சேன்ஜ் என்ற மதிப்பில் திரும்ப செலுத்த வேண்டும்.

அதாவது, 1 டாலருக்கு ரூபாய் 49 /= என்ற மதிப்பில் வாங்கிய வெளிநாட்டு டாலர் கடனுக்கு, ரூபாய் 4,000 /= என்ற மதிப்பில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 2097-ம் ஆண்டு திருப்பி செலுத்த வேண்டும்.
அந்த அளவுக்கு பணத்தை திருப்பி செலுத்த ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பணம் இருக்காது. அவ்வளவு ஏன், இந்திய அரசாங்கத்திடம் கூட அந்த அளவுக்கு பணம் இருக்காது, என்பதுதான் பொருளாதார மேதைகளின் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையோடு கூடிய வாதம்.


ஒவ்வொரு இந்தியனும் கடனாளி

ஒரு வேளை, 2097 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் அம்பானியிடம் அவ்வளவு பணம் இல்லை என்றால், அதற்கு பஹில் 2097 ஆம் ஆம்டில் இந்திய அரசாங்கம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக , அத்தகைய பெரிய கடன் தொகையை அடைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும்.
அதன் முலம் ஒவ்வொரு சாதாரண இந்தியனும் 2097- ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அம்பானியின் கடனுக்கு கடன்படுகிறான் என்று தெள்ளத் தெளிவாக இந்திய பொருளாதார மேதைகள் தொலைநோக்குப் சிந்தனையோடு விஞ்ஞன பூர்வமாக சிந்தித்து அம்பானி மேல் குற்றம் சாட்டினர்.


அம்பானியின் தீர்க்க தரிசன இந்தியப் பார்வை

அம்பானி தெளிவாக சொன்னார். "இன்று 1997 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளரும் நாடு. ஆனால் 2020-2030 ஆம் ஆண்டு இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற்றம் அடையும்.

2050-2060 ஆம் ஆண்டு இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற்றம் அடையும்.

2090-ஆம் ஆண்டு இந்தியா ஒரு தன்னிகரற்ற் மிகப்பெரிய வல்லரசு நாடாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து , உலக அளவில் பரிணமிக்கும்.


அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் .. இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும் .....

அம்பானி தெளிவான தொலைநோக்கு சிந்தனையோடு துல்லியமாக கணித்து குறிப்பிட்டார்.

"வளரும் நாட்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும்.
வளர்ந்த நிலையில் உள்ள பொருளாதார நாட்டில் தான், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடும்.
வல்லரசு நிலையில் உள்ள பொருளாதார நாட்டில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடும்.
மிகப் பெரிய வல்லரசு நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடும்.


அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் .. இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும் .....
அத்தகைய, அம்பானியின் தொலைநோக்கு நோக்குப் பார்வையின்படி கணக்குப் பார்த்தால் 1997-ல் இந்தியாவில் 1 டாலருக்கு ரூபாய் 49 எக்சேன்ஜ் மதிப்பு.

1997 --> 1 டாலர் =ரூபாய் 49/
ஆனால் 2047 ம் ஆண்டுகளில் , 1 டாலருக்கு ரூ 10 க்கும் குறைவான எக்சேன்ஜ் மதிப்பு.

2047 --> 1 டாலர் = ரூபாய் 10/
2097- ல் இந்தியாவில் 1 டாலருக்கு, ரூ 5 க்கும் குறைவான எக்சேன்ஜ் மதிப்புதான் இருக்கும்.

2097 --> 1 டாலர் = ரூபாய் 5/


ரிலையன்ஸ் முன்னேற்றம் தனிநபர் முன்னேற்றமா ?.. இல்லை இநியாவின் முன்னேற்றம்.

அம்பானி சொன்னார், நான் ரிலையன்ஸ் கம்பெனிக்குப் பெற்ற கடனுக்குத் தொகையான 100 மில்லியன் டாலரில் தற்போதைய (1997) எக்சேன்ஜ் மதிப்பு ரூ 49/.

அதே நேரம், 2097- ம் ஆண்டு என் கம்பெனியான ரிலையன்ஸ் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தம் போது, ஒரு டாலருக்கு எக்சேன்ஜ் மதிப்பு ரூ 5 க்கும் குறைவாக இருக்கும்.

உலகளாவிய முதலீட்டாரின் முதலீடான, பண்ணாட்டுப் பணத்தைக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக, என் ரிலையன்ஸ் கம்பெனியின் மூலம் பெற்றுள்ளேன்.
அந்த முதலீட்டைக் கொண்டு, இந்தியாவை மிக உன்னத நிலைக்கு கொண்டு வந்து, 100 ஆண்டுகள் முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கடனில் 8-ல் ஒரு பங்குதான் என்னுடைய உலக முதலீட்டாருக்குத் திரும்பக் கொடுக்கப் போகிறேன்.
இந்த 100 ஆண்டுகால தொலை நோக்குப் பார்வையுடன் செய்த என்னுடைய முன்னேற்றம் எண்ணம் தவறா? என்று வினவுகிறார்?


அமெரிக்க டாலர் ...........
இந்திய ரூபாய் மதிப்பு 1950 ---2097

இந்திய மேதைகளின் பார்வை

1950--> 1 டாலர் =ரூபாய் 4

1997--> 1 டாலர் = ரூபாய் 49

2047--> 1 டாலர்= ரூபாய் 400

2097 --> 1 டாலர் = ரூபாய் 4000

2097 -ல் இந்தியா வளரும் நாடு.


அம்பானியின் தொலை நோக்குப் பார்வை

1950--> 1 டாலர் =ரூபாய் 4

1997--> 1 டாலர் = ரூபாய் 49

2047--> 1 டாலர்= ரூபாய் 10

2097 --> 1 டாலர் = ரூபாய் 5

2097 -ல் இந்தியா மிகப் பெரிய வல்லரசு நாடு.


அம்பானியின் தெளிவான முற்போக்கு சிந்தனை...

இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் அம்பானியின் 100 ஆண்டு கால முதிர்ச்சி திட்ட யாங்கி பாண்டை எதிர்த்த அனைத்து பொருளாதார நிபுணர்களும் ஒரே நாளில் வாயடைத்து போனார்கள்.

அதே நேரத்தில், அம்பானியின் அடுத்த 100 ஆண்டுகால இந்தியாவைப் பற்றிய தெளிவான தொலை நோக்குப் பார்வைக் கண்டு பலரும் வியந்தனர்.
அதைவிட முக்கியமான விசயம் என்னவென்றால், 1997 ஆம் ஆண்டிலேயே மிகப் பெரிய வல்லரசு இந்தியாவை அகக்கண்ணில் முதல் முதலில் பார்த்த ஒவ்வொரு இந்தியனுக்கும் தேவை இக்கணம் அத்தகைய தெளிவான 100 ஆண்டுகால தொலை நோக்குப் பார்வை.

குறைந்தது 5 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு அத்தகைய தெளிவான 100 ஆண்டுகால தொலை நோக்குப் பார்வை வேண்டும்

இல்லை .. 50 லட்சம் ..இல்லை , இல்லை 500 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு அத்தகைய தொலை நோக்குப் பார்வை வேண்டும்.
அப்போதுதான நம் நாடு வல்லரசு இந்தியா என்ற நிலையை 2050 ஆம் ஆண்டு அடைய முடியும்.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great