வளரிளம் பருவம்

முன்னுரை:

மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா?


உலகமே வியக்கும் பாரத பெண்ணுக்கு, குறிப்பாக் தமிழ் பெண்ணுக்கு பண்பாட்டைப் பற்றி, வாழும் முறையைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமா?.

உண்மையில் தேவையில்லை !

நலமான வாழ்க்கை முறை, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறை, நிறைவான வாழ்க்கை முறை என்பது ஒவ்வொரு இந்தியப் பெண்மணியின் பாரம்பரிய சொத்து, சொல்லப் போனால் அவைகள் ஒவ்வொரு இந்தி பெண்ணின் இரத்தத்தில் ஊரியது. ஆனால் பாரதப் பெண் குறிப்பாக இன்றைய வளரிளம் பருவப்பெண், மேலை நாட்டு நாகரீக கலாச்சார வாழ்க்கைமுறை தாக்கத்தால் மனதளவில் தடுமாற்றத்தில் இருக்கிறாள்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த இந்திய முறைப்படி வாழ்வதா? அல்லது மேலை நாட்டு நாகரீக முறைப்படி வாழ்க்கை வாழ்வதா?

வளரிளம் பருவப் பெண்ணின் தடுமாற்றம் எல்லாம், வாழ்க்கை முறையறிந்து, முறையான வாழ்க்கை இந்திய பண்பாட்டின் வழி வாழ்வதா? அல்லது

கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம் என்று மேலை நாட்டு பண்பாட்டின் வழி வாழ்வதா?.

தேவை இக்கணம், வளரிளம் பெண் இந்தியப் பண்பாடு மற்றும் மேலை நாடுகளின் பண்பாடு என்ற இரண்டிலும் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு ஆராய்ந்து எதிர் விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து, உணர்ந்து. தீர்க்கதரிசனமான முடிவு எடுக்க வேண்டும், பிறகு அந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் தவறான ஊடகச் செய்திகளால் தடுமாற்றம் அடைகின்றனர். ஏற்பட்டு வளரிளம் பருவத்தில் கேடு விளைவிக்கும் சில மற்றும் பல நடத்தைகளில் ஈடுபட்டு, உடல் நலப் பிரச்சனைகளில், மற்றும் மனநலப் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகின்றனர்.

மேலும் ஹார்மோன்களால் வளரிளம் பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்; உடனிருக்கும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் ஒருபுறம், இவை எல்லாவற்றையும் இளையவர் கோணத்தில் பார்க்கத் தவறி, வளரிளம் பருவத்தினர் நடத்தை பற்றிய பயத்தினை அவர்களிடம் அக்கறையாக வெளிப்படுத்தாமல் கட்டளையாக, கட்டாயத் திணிப்பாக வெளிப்படுத்தும் பெரியவர்களின் சொற்கள் முதலியனவும் காரணங்களாக விளங்குகின்றன.

இவ்வாறு நாலாப் பக்கங்களிலிருந்தும் வெவ்வேறு செய்திகளை வெவ்வேறு நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைப் பெறும் வளரிளம் பருத்தினருக்கு வாழ்க்கையை, அதன் இனிமையை, அபாங்களை உணர்த்தி அதனதன் கோணத்தில் பார்த்து நலத்துடன் வாழ உதவியாக இருக்கும்.

இந்த புத்தகத்தில் வளரிளம் பெண்களுக்காக கூறப்பட்டுள்ள கருத்துக்களை எல்லாம் காலம் காலமாக நமது தமிழ் மண்ணில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த தமிழ்க் கலாச்சாரம் ம்ற்றும் ஆரோக்கியத் தமிழ்ப் பண்பாடு, பல நூல்களில் இருந்தும், பல உடல் ஆரோக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முடிவுகளை வளரிளம் பெண்களுக்காக எளிமையான முறையில் கோர்வையாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்த உலக மக்கள் அறிவு வளம் அடைந்து, உலகம் அமைதியோடு வீறு நடை போட முயற்சி எடுத்த அனைத்து நூல் ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

வளரிளம் பெண்ணே...இந்த நூலை ஒரு முறை படித்தால் மட்டும் போதாது, சிந்தனைத் தெளிவு பெறும் வரை திரும்ப திரும்ப படிக்கவும். உன் வாழ்க்கையத் தெளிவாகத் திட்டமிட்டு, ஆரோக்கியமான முறையில் அமைத்துக் கொள்ள உதவும் மிக முக்கியமான நூல். இந்த நூலை வாழ்க்கை முழுவதும் படிக்க பாதுகாத்து, நல்ல முறையில் உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, உன்னுடைய அடுத்த தலைமுறைக்கு அவர்கள் நல்ல வழியில் வாழ சீதனமாக கொடுக்க முயற்சி செய்....

வாழ்க பாரதம் ! வளர்க இந்தியப் பண்பாடு ! !."வளரிளம் பருவம் வளமான வாழ்க்கை அமைத்திட வழி வகுக்கும் அடித்தளப் பருவம்"

1.1 பருவ மாற்றம்.....மாற்றம்.

வளரிளம் பருவம் குழ்ந்தைப் பருவத்திற்க்கும், வயது வந்த பருவத்திற்க்கும் இடைப்பட்ட பருவமாகும். வளரிளம் பருவம் என்பது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான பருவம். இந்த பருவத்தில் தான் ஒரு பெண்ணிடம் உடலளவிலும், மனதளவிலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

வளரிளம் பெண்ணே !
எந்த முகம் வேண்டும் ?
மகிழ்ச்சியா ! சோகமா ?.

ஒரு மனிதனில் வாழ்க்கையில், குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்படும் பருவம் தான் வளரிளம் பருவம்.1.2 விரைவான மாற்றம்:


உடல் வளர்ச்சி, உணர்ச்சிகள், அறிவு, உறவுமுறை, நன்மதிப்பு, போன்றவற்றுக்கான் விரைவான மாற்றம் வளரிளம் பருவத்தில்தான் நிகழ்கின்றது.

இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்க்கையை வளமாக அமைத்திட வழிவகுக்கும் அடித்தள பருவம். இந்த பருவத்தில் ஒரு பெண் ஒரு பெண் தற்சோதனை செய்ய வேண்டும். பிறகு 5 ' A' - ஐ நிர்ணயிக்க வேண்டும்.1.3 'A' - அது என்ன?


A - Aim - என் வாழ்க்கை குறிக்கோள் என்ன? என்று நிர்ணயிப்பது.

A - Awarness - நான் யார்?. என்னிடம் உள்ள திற்மைகள் என்ன? என்று சிந்தித்து, தன்னை உணர்தல்.

A - Alertness - இந்த மாறுகின்ற உலகத்தில், மாறாத இந்தியப் பண்பாட்டை கடைபிடித்து, வாழ்வில் வெற்றி பெற விழிப்புணர்வு.

A - Action - செயல்A - Achievement - சாதனை.1.4 பிட்யூட்டர் சுரப்பி:

வளரிளம் பருவத்தின் மாற்றங்கள், ஒரு பெண்ணின் உடலில், நாளமில்லா சுரப்பியான், பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் திரவங்களின் மூலமாகத் தூண்டப்படுகின்றன.1.5 இரண்டும் கெட்டான் வயது:

கிராமங்களில், இந்த வளரிளம் வயதினரை நமது முன்னோர்கள் இரண்டுங் கெட்டான் வயதினர் என்று அழைப்பார்கள். ஏன்? இந்த வளரிளம் பருவத்தினர் மிக்க உண்ர்ச்சிப்படும் தன்மை உடையவர்கள். மேலும் வளரிளம் பருவத்தினர் திடீர் உணர்ச்சிகட்கு ஆட்படக்கூடியவர்கள்.1.6 செயலில் இரு துருவங்கள்:

இந்த வளரிளம் பருவத்தினர் குழுவில் சேர்ந்திருப்பது அல்லது தனியாக இருப்பது, பொதுநலம் அல்லதி தன்னலம், பலவற்றைப் ப்ற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அல்லது எதிலும் ஈடுபாடு கொள்ளாத தன்மை, தன்னம்பிக்கை மற்றும் தன்னைத்தானே சந்தேகித்தல் என்று இரண்டு துருவத்தில், ஏதாவது ஒன்றில், அதாவது வடதுருவம் அல்லது தெந்துருவம் என்ற நிலையில் இருப்பார்கள்.


1.7 உணர்வுகளை அறிதல்:

மனித வாழ்வின் வளர்ச்சியின் பெரும் மாற்றங்கள் அனைத்தும் இந்த வளரிளம் பருவத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.

உணர்வுகளை நம் கட்டுக்குள் வைத்திருத்தலின் முதல் படி "நம் உணர்வுகளை தெளிவாக அறிதல்".1.8 மூன்று ஆயுதம்:

வளரிளம் பெண்களிடம் வாழ்க்கையில் வெற்றிக்குத் தேவையான முயற்சி, தன்னம்பிகை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று வலிமையான ஆயுதங்கள் இயற்க்கையாகவே உள்ளன. இந்த விலை உயர்ந்த மூன்று ஆயுதங்களை நீங்கள் எவ்வாறு, உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளீர்களா? இல்லை என்றால், இன்று முதல் முயற்சி செய்யுங்கள். அதுதான் வாழ்க்கை வெற்றிக்கு முதற்படி.1.9 வெற்றிக்கனி:

முயற்சி, தன்னம்பிகை மற்றும் ஈடுபாடு இந்த மூன்று ஆயுதங்களை சரியான வகையில், தரமான் முறையில் தொடர்ந்து பயன்படித்திய பல பெண்கள், வாழ்வில் வெற்றிக்கனிகளை தொடர்ந்து பறித்த வண்ணம் உள்ளனர்.1.10 சாதனைப் பெண்மணிகள:

அத்தகைய சாதனைப் பெண்கள் மன அமைதியுடனும் மன நிறைவுடனும் இந்த உலகில் வாழ்கின்றனர். இத்தகைய பெண்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளனர்.

இக்கருத்தினை தெளிவாகப் புரிந்து கொள்ள, உங்களுக்கு தெரிந்த, ஒரு விஷயத்தினை பார்க்கலாமா?
1.11 பொதுத்தேர்வில் வெற்றி:

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் மாநில அளவில் முதலிடங்களை பிடித்த மாணவ / மாணவியர்களின் இத்தகைய அரிய சாதனை எப்படி சாத்தியமாயிற்று?1.11.1 கவனம் சிதறாமை....வெற்றி

சிறிது கூர்ந்து கவனித்தால், ஒரு உண்மை புலப்படும். முயற்சி, தன்னம்பிகை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று வலிமையான ஆயுதங்களை மாணவ பருவத்திற்க்குத் தேவையான சரியான வகையில், தரமான முறையில், பொறுப்புணர்ச்சியினை உடன் சேர்த்து பெற்றோர்களை முன்னிறுத்தி கவனம் சிதறாமல், திசை மாறாமல் மேற்கொண்ட செயலாற்றலுக்குக் கிடைத்த பரிசு எனலாம்.1.11.2 தனி மனித மகிழ்ச்சி.....சமுதாய மகிழ்ச்சி

இத்தகைய சாதனை படைத்த மாணவ மாணவியர்களால், அவர்கள் மட்டுமின்றி அவரவர் பெற்றோர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி என மகிழ்ச்சியடைந்தவர்களின் பட்டியலினை அடுக்கி கொண்டே விரிவடைந்து செல்லலாம் !1.11.3 புகழ்:

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என எங்கு பார்த்தாலும் சாதனை படைத்ட்த மாணவ / மாணவியுர்களின் புகைப்படம் - சந்திப்பு, கலந்துரையாடல் இன்னும் பலப் பல. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருந்த மாணவ, மாணவிகள் இனம் கண்டு கொள்ளப் ப்டுகிறார்கள், புகழ் அவ ர்களை தேடிச் செல்கிறது.1.11.4 வெற்றி சூட்சமம்:

பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் பெற்ற வெற்றி ஒன்றும் சாதாரணமாக நடந்தேறிட வாய்ப்பு இல்லை. எட்ட வேண்டிய உயரத்தினை அவர்கள் தெளிவாக எண்ணிப் பார்த்து, உந்துதல் பெற்று, திட்டமிட்டு, செயலாக்கி, அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள்.1.11.5. சாதனை:

இதைதான் 5 'A' என்று பார்த்தோம். அடைய வேண்டிய இலக்கு நிர்ணயித்தல் முதல் 'A' Aim, திற்மையை 'இனம் கண்டுகொண்டு த்ன்னை உணர்தல், இரண்டாவது" Awarness, விழிப்புணர்வு உணர்வை பயன் படுத்துதல், மூன்றாம் 'A' Alertness, திட்டத்தை செயல் படுத்துவது, நாங்கு 'A" Action, சிந்தனையோடு கூடிய கடின உழைப்பில் ஈடுபடு ஒன்றையே நினைத்து, ஒன்றியே நினைத்து, ஒன்றியே நினைத்து, ஒன்றியே வாழ்ந்தல் கிடைப்பது, ஐந்தாவது 'A' Achievement.


1.12 வாழ்க்கையில் சாதனை:

மாணவப் பருவத்தில் சாதனை படைக்க உபயோகப்ப்டுத்திய முயற்சி, தன்னம்பிகை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று வலிமையான் ஆயுதங்களை, அதே பாணியில் ஒரு பெண் தொடர்ந்து உபயோகித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள்.


1.13 சுட்டு விட்டு வட்டம் போடும் பெண்:

இந்த வளரிளம் பெண்களில் பலர் "சுட்டு விட்டு வட்டம் போடுகிறார்கள்". நோக்கம் இல்லாமல் வாழ்க்கை வாழ்கிறார்கள். விளைவு, வாழ்க்கையில் விரக்தி. இதைத்தான், பெரியவர்கள் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?. கால் போன போக்கிலே நடை போகலாம? என்று வினவுகிறார்கள்.


1.14 வட்டம் போட்டு சுடும் பெண்:

வளரிளம் பெண்கள் வாழ்வில் வெற்றி அடைய செய்ய வேண்டியது எல்லாம், "வட்டம் போட்டு விட்டு சுட பழக வேண்டும். விளைவு, வாழ்க்கையில் மகத்தான் வெற்றி மற்றும் சாதனை.

இதுதான் வெற்றியாளர்களின் "வெற்றி சூட்சமம் !" இதனை நீங்களும் இன்று முதல் பயன்படுத்தி வாழ்க்கையில் பலப் பல வெற்றிகள் அடைய முயலலாமே !.


1.15 வாழ்க்கையில் முக்கியப் பருவம்:

வளரிள பருவம், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியப் பருவம். இந்தப் பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையான விஷயங்கள் இருப்பதி போல, தேவையற்ற விஷயங்களும் கண்டறியப்பட்டு அவைகள் ஒரு பெண்ணை நெருங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, பருவத்தின் கட்டாயமும் கூட.


1.16 வளரிளம் பருவத்தில் தேவையானவை:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவையானவை;

1. கல்வியில் கவனம் அல்லது செய்யும் வேலை மற்றும் தொழிலில் கவனம்.
2. பெற்றோரை மதித்தல்.
3. நேரத்தை முறையாகக் கையாளுதல்.
4. தனித்துவம் வளர்த்துக் கொள்ளுதல்.
5. இலக்கு நிர்ணயித்தல்.
6. தன்னையும் மற்றவர்களையும் மதித்தல்.
7. நல்ல புத்தகங்களைப் படித்து சிந்தனையை வள்ர்த்துக் கொள்ளுதல்.


1.17 வளரிளம் பருவத்தில் தேவையற்றவை:

இந்த வளரிளம் பருவத்தில் ஒரு பெண்ணுக்கு தேவையற்றவை:

1. தொலைக்காட்சி முன் பெரும்பான்மை நேரத்தை செலவிடுதல்.
2. எதிர்பாலினரை ஈர்ப்பதற்க்காக பொருத்தமில்லாத நடை மற்றும் உடைகளை விரும்புதல்.
3. காதல் வயப்படுதல்.
4. எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை கூறுதல்.
5. சுய பச்சாதாபம்.
6. சோம்பேறித்தனம்.


1.18 உன் வாழ்க்கை:

வள்ரிளம் பெண்ணே ! உன் வாழ்க்கை.... உன் கையில். வாழ்க்கையில் தேவையற்றவைகளை அகற்றி, தேவையானவற்றை முறைப்படுத்தி உனது எண்ணத் தரத்தினை உயர்த்திக் கொண்டே வந்தால், உனது வாழ்க்கை வளம் பெறுவது நிச்சயம். கட்டுப்பாடற்ற சுதந்திரமும், சுதந்திரமே இல்லாத கட்டுபாடும் ஆரோக்கியமானது அல்ல.1.19 வயது மனித மன வளர்ச்சி:

வாழ்க்கையில் பின்னாலில், ஒரு பெண் அடைய இருக்கும் பல வெற்றிக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டிய பருவம் 11-18 வயது வரையாகும். இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்வில் மிக மிக முக்கியம் வாய்ந்த பருவமாகும்.

தவிர்க்க வேண்டிய குணங்கள் மற்றும் பண்புகள்:

* கோபம் / ஆத்திரம்
* பொய் சொல்லுதல்
* சோம்பல்
* முயற்ச்சியின்மை.
* ஆர்வமின்மை.
* மதிப்பின்மை
* கவனம் சிதறுதல்
* மற்றவர்களின் கவனம் ஈர்த்தல்.
* இனக்கவர்ச்சி
* பாட்டு / கேளிகைகளில் ஆர்வம்.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great