அமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 7 தூண்கள் - (20 ஆம் நூற்றண்டுக்கு பின்)

உலகை ஆளும் ஏழு அமெரிக்க நிறுவனங்கள்

இன்று அமெரிக்க நாடு உலக அளவில் மிகப் பெரிய வல்லரசு நாடு. இந்த நிகழ்வு ஒரு நாளில் நடைபெறவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாக அமெரிக்க இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வையால்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறுபட்டு சிந்தித்து மிகப் பெரிய அளவில் உலக சாதனை நிகழ்த்தி அமெரிக்காவின் பொருளாதாரத் தூண்களாக உள்ள ஏழு நிறுவனங்களின் வளர்ச்ஸ்ரீயைப் பற்றி இரத்தின சுருக்கமாக அடுத்த 31 பக்கங்களில் பார்ப்போம்.

இந்த 7 உண்மைக் கதகளில் இருந்து இந்திய இளைஞன் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளது.

அந்த ஏழு உலகளாவிய நிறுவனங்கள்

1. ஆப்பிள்
2. இண்டல்
3.ஜெராக்ஸ்
4. சிஸ்கோ
5. அமெஸான் டாட்காம்
6. ஈ பே
7. டெல்



ஆப்பிள் கம்ப்யூட்டர்:

ஆப்பிள் என்றால், சிலருக்கு நியூட்டன் நினைவுக்கு வருவார். ஆப்பிள் என்றால் சிலருக்கு ஆப்பிள் ஜுஸ் தான் நினைவுக்கு வரும்
ஆப்பிள், தகவல் தொழில் நுட்ப மனிதனுக்கு, ஆப்பிள் என்றால் ஆப்பிள் கம்ப்யூட்டர், குறிப்பாக 'மேக் இண்டாஸ், மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்பான i-POD தான் நினைவுக்கு வரும்.

1975 ஆம் ஆண்டுகளில், ஒரு இளைஞ்னின் கனவு, 1977 ஆம் ஆண்டு நனவு, விளைவு, Apple Computer இன்றும் கம்ப்யூட்டர் தவிர i-POD என்று புதிய புதிய கனவுகளை, புதிய புதிய நனவுகளாக மாற்றி, மாறி வரும் சூழ்னிலைக்கு ஏற்ப மாற்றங்கள் பல செய்து உலக அளவில் பீடுநடை போடுகிறது.


ஆப்பிள் கம்ப்யூட்டரின் புரட்சி

ஸ்டீவ் ஜாப் என்ற இளைஞரால் 1977 ல் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம், 2007- ம் ஆண்டில் 24 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விற்பனை செய்து சாதனை படைத்து உள்ளது (ரூபாய் 1,20,000 கோடி)

இன்றைய மாறிவரும் உலகத்தில் உள்ள வியாபார வாய்ப்புகளை சரியான நேரத்தில் சரியான வகையில் பயன்படுத்தி முன்னேறுவது மிக மிக முக்கியம். அவ்வாறு காலத்தை சரியாகக் கணித்து, தனது மாறுபட்ட படைப்புகளில், உலகத்தை மாற்றுவதில் வல்லவர் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர் "ஸ்டீவ் ஜாப்".

1975 ம் ஆண்டில் , ஸ்டீவ் ஜாப் என்ற இளைஞனின் சிந்தனைப் பொறி மற்றும் செயல் வேகத்தில் உருவானதுதான் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற உலகளாவிய நிறுவனம். மூளைதனமே மூலதனம்....


இண்டல் - இரண்டு இளைஞர்களின் புரட்சி ........

1968- ம் ஆண்டு, 2 இளைஞர்கள் ராபாட் நோயிஸ், கார்டன் மோர் சேர்ந்து " இண்டல்" என்ற இண்டல் கார்ப்பரேஷன் கம்பெனியை சிலிகான் வோலி என்ற சொல்லக்கூடிய சில்லு நகரத்திலேயே ஆரம்பித்தனர்.

1971- ம் ஆண்டு " Intel" 4004 என்ற மெக்ரோ பிராஸசரை உலகத்திற்கு அளித்து, உலக சிந்தனை வேகத்தையே கம்ப்யூட்டர் வேகத்தின் மூலம் மாற்றி விட்டனர் இந்த் இரண்டு இளைஞர்கள்.



இண்டல்

இன்று உலகத்தில் உள்ள நூறு கம்ப்யூட்டரில் 80 -க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டரில் உள்ள மைக்ரோ பிராசஸர் இந்த இண்டல் என்ற " Intel Inside" நிறுவனம்தான்.ஆம் கடந்த 37 ஆண்டுகளாக உலகத்தின் முடிசூடா மன்னனாக மைக்ரோ பிராசஸர் உலகத்தில் பீடு நடை போடும் நிறுவனம் தான் அமெரிக்காவை சேர்ந்த இந்த இண்டல் என்ற நிறுவனம் .

கடந்த 2007-ம் ஆண்டு 38.3 பில்லியன் டாலர் (ரூபாய் 1,91,500 கோடி) விற்பனை செய்து 86,300 ஊழியர்களின் கூட்டு முயற்சியோடு பீடு நடை போடுகிறது.


இண்டல் கனவு .......... நனவு .......

கனவு -->1968 சிறிய முதலீடு -- 5 ஊழியர்கள்
நனவு--> 2007 $ 38.3 பில்லியன் டாலர்

1968-ம் ஆண்டில், ராபர்ட் நோயிஸ், கார்டன் மோர் என்ற இரண்டு இளைஞர்களின் சிந்தனைப் பொறியின் விளைவுதான் இந்த பண்ணாட்டு நிறுவனமான இண்டல். தனிமரம் தோப்பாகாது .. கூட்டுறவே உலக உயர்வு.




ஜெராக்சின் நகல் புரட்சி

நம்ம ஊரில், கடை வீதியில், பல இடங்களில் நீங்கள் ஒரு போர்டை பார்க்கலாம் அந்த போர்டில், இங்கு " Xerox" எடுக்கப்படும். அப்ப்டி என்றால் என்ன ? "Photocopy" அல்லது நகல் பிரதி எடுக்கப்படும் என்று அர்த்தம்.
சமீபத்தில் ஒரு கடையில், இங்கு "Canon Xerox " எடுக்கப்படும் என்ற போர்டை பார்த்தேன். அமெரிக்க நிறுவனமான "Xerox" -ம் ஜப்பானிய நிறுவனமான "Canon" ம் நகல் பிரதி வியாபாரத்தில் உலகம் முழுவதும் பரம எதிரிகள். ஆனால், நமது ஊரில் உள்ள கடை விளம்பரத்தில் பரம நண்பர்கள். என்ன ஆச்சரியம் !!


ஜெராக்ஸ்

அந்த அளவுக்கு உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் "Xerox" நிறுவனத்தின் " Photocopier" பிரபலம்.

" Photocopier" என்ற சொல் வழக்கில் மறைந்து "Xerox" என்ற பெயர் நிலைத்து விட்டது.
இந்நிறுவனம் 1936 ம் ஆண்டு தனி ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தில் உருவாகியது.

பின்பு 1948-ம் ஆண்டு முதல் நகல் எடுக்கும் இயந்திரம் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2007-ஆம் ஆண்டு இந்நிறுவனம் 87,400 ஊழியர்களை கொண்டு 17.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூபாய் 86,000 கோடி) விற்பனை செய்து, சாதனை படைத்து உள்ளது.


ஜெராக்ஸ் கனவு ...... நனவு......

கனவு --> 1948 சிறிய முதலீடு
நனவு --> 2007 $17.2 பில்லியன் டாலர் ,87,400 ஊழியர்கள்.

1948- ம் ஆண்டு, ஒரு தனிமனிதனின் சிந்தனை பொறியின் விளைவுதான் இன்றைய பண்ணாட்டு நிறுவனமான ஜெராக்ஸ் பெருகக் கட்டிப் பெருக வாழ்.

சமையல் அறையில் தோன்றிய புரட்சி
1984 ஆம் ஆண்டு, ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் வேலை செய்த இரண்டு தம்பதி பேராசிரியர்கள், ஒடு துறையின் கட்டிடத்தில் இருந்து கணவன் மற்றொரு துறை கட்டிடத்தில் உள்ள, மனைவிக்கு கம்ப்யூட்டர் மூலம் ஒரு பைலை ஐ அனுப்ப முடியவில்லை.

இரண்டு கட்டிடங்களிலும் LAN ( லோக்கல் ஏரியா நெட்வொர்க்) இருந்தும், ஏன் பைலை அனுப்ப முடியவில்லை ?

தேவைதான், தேவையின் இடர்பாடுகள்தான் வெற்றி அடைந்த பல வியாபாரக் கனவுகளுக்கு மூலக்காரணம் ஆங்கிலத்தில் "Necessity is the mother of invention" என்று சொல்வார்கள்.


நம்பர் ஒன் ரூட்டர் நிறுவனம்
அந்த ஸ்டான் போர்டு பல்கலைக்கழகப் பேராசிரிய தம்பதிகள் தங்கள் வீட்டின் சமையல் அறையில் உருவாக்கிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருள்தான் ரூட்டர். அந்த ரூட்டர்தான் இன்றைய இண்டர்னெட் உலகத்ஹ்டின் ஆணிவேர்.

சிறிய அளவில் ஆரம்பித்த நிறுவனம் இன்று மிக வேகமாக வளர்ச்சி அடையும் நிறுவனங்களில் ஒன்று. கடந்த ஆண்டு, 66,129 ஊழியர்களைக் கொண்டு, வருடத்திற்கு 34,922 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூபாய் 1,74,610 கோடி) அளவுக்கு ஆண்டு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

1993 முதல் 1999 ஆண்டுகால காலக்கட்டத்தில் சிஸ்கோ நிறுவனம் 72 நிறுவனங்களை விலைக்கு வாங்கி உலகத்தின் முதல் நிறுவனமாக ரூட்டர் துறையில் பீடு நடை போடுகிறது.

உலகில் முதன் முதலாக வேகமான 100 பில்லியன் அமெரிக்க டாலர் பங்கு மதிப்பு என்ற அளவுக்கு பங்கு சந்தை மதிப்பில் உலக அளவில் வளர்ந்த ஒரே நிறுவனம் "சிஸ்கோ".

பிறகு உலகிலேயே வேகமாக 200 பில்லியன் அமெரிக்க டாலர் பங்கு மதிப்பு என்ற அளவுக்கு பங்கு சந்தை மதிப்பில் உலக அளவில் அடைந்து சாதனை படைத்த ஒரே நிறுவனம் சிஸ்கோ.

அதே போல், உலகிலேயே வேகமாக

300 பில்லியன் அமெரிக்க டாலர்..............
400 பில்லியன் அமெரிக்க டாலர்..............
500 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கிடு,கிடு என்று சிஸ்கோவின் பங்கு மதிப்பு உயர்ந்து , உலகின் நிகரற்ற சாதனை நிறுவனமாக பீடு நடை போடுகிறது.


சிஸ்கோ கனவு ........ நனவு...........
இரு பேராசிரிய தம்பதிகளின் 1985-ம் ஆண்டு கனவு நனவாகி இன்று உலகமே இந்த சிஸ்கோ நிறுவனத்தின் ரூட்டரைக் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறது. சிந்தனையோடு கூடிய உழைப்புக்கு ஈடு இணை இல்லை.




புத்தகப் புரட்சி

உலகத்திலேயே மிகப் பெரிய புத்தகக் கடை எது?

அந்தக் கடை எந்த நாட்டில் உள்ளது?

ஆஸ்போர்ட்.. மேக் மில்லன் .. என்பது தானே

உங்களுடைய விடை. உங்கள் விடை தவறு! மெக்ராஹில் என்பது உங்களது அடுத்த விடையா ? அதுவும் தவறு !!

உலகத்தின் நம்பர் ஒன் புத்தகக் கடை அமெரிக்க நாட்டில் உள்ளது. இந்த புத்தகக் கடையை, 12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி பி.பெசோஸ் என்ற இளைஞரின் சிந்தனை மாற்றத்தின் விளைவாக உதித்த அந்த புத்தக கடையின் பெயர் .. அமேஸான் டாட்காம் !!
டாட்காம்க்கும், புத்தகக் கடைக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறீர்களா?
சம்மந்தம் இருக்கிறது. அங்கேதான் அமேஸானின் மாறுபட்ட எண்ணத்திற்கு வெற்றி கிடைக்கிறது.




அமேஸான் டாட்காம்

இந்த அமேஸான் டாட்காம் கடைக்குள், யாரும் நடந்து செண்ரு நுழைய முடியாது. கம்யூட்டர் மூலமாக குறிப்பாக இண்டர் நெட்டின் மூலம்தான நுழைய முடியும் என்ன நூதனமான சிந்தனை.

அதிசயம், ஆனால் உண்மை !

ஆரம்பித்து 12 ஆண்டுகளே ஆன அமேஸான் டாட்காம் நிறுவனம் இன்று உலகளவில் ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.

இண்டர் நெட்டில் சென்று, அமேஸான் டாட்காம் சைட்டுக்கு சென்று அவர்களின் புத்தக அலமாரியில் இருந்து, புத்தகத்தைத்தேர்வு செய்து பணத்தை உங்கள் கணக்கில் இருந்து அமேஸான் டாட்காம் கணக்குக்குப் பணம் செலுத்தினால் போதும், நீங்கள் தேர்வு செய்த புத்தகம் உங்கள் வீடு தேடி வரும்.

ஆனால், புஹ்த்தக விலையோ நீங்கள் கடைக்கு சென்று வாங்குவதை விட 10% முதல் 20% குறைவு.

மிக சிறந்த புத்தக விற்பனை சேவை, மிக குறைந்த புத்தக விலையில் !
என்ன நம்ப முடியவைல்லையா ? அதுதான் அமேஸான் டாட்காம் நிறுவனத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை.


அமேஸான் டாட்காம் கனவு ... நனவு ...

1997 ம் ஆண்டு ஒரு தனிமனிதனின் சிந்தனைப் பொறியின் விளைவு தான் இன்றைய வல்லரசு நிறுவனம் அமேஸான் டாட்காம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்நாள் முழுவதும் வாய்ப்பை நழுவவிட்ட மனப் புண்.


பழமையில் புதுமைப் புரட்சி

ஏலம் தினந்தோறும் கடைவீதியில் மற்றும் பஸ்டாண்டில் குறிபாக பஸ்ஸின் உள்ளே, பஸ் கிளம்புவதற்கு முன் உள்ள கால் மணி நேர இடைவெளியில் பார்க்கலாம். நம்ம ஊர் இந்திய இளைஞர்களிடம் கால் மணியில் மக்களைக் கவரக்கூடிய மிகப்பெரிய வியாபார தந்திரம் உள்ளது.

ஆனால், அடஹிஎப்படி விரிவுபடுத்தி உலகப் பணக்காரராக ஆக வேண்டும் என்ற சிந்தனை தெளிவு இல்லை. இதை அமெரிக்கரிடம் இருந்து இந்திய இளைஞன் தெரிந்து கொள்ள வேண்டும் !


ஈ.பே
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியர்ரி ஒமிடியார் என்ற இளைஞர், இந்த கற்கால இந்திய ஏல முறையை, இந்த நவீன கால் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி மாற்றம் செய்வது என்று சிந்தித்தார். அதன் விளைவுதான் ஈ.பே என்ற அமெரிக்க ஏல நிறுவனம்.
கலிபோர்னியாவில் உள்ள எசாஞ்சோஸ் என்ற இடத்தில், ஈ.பே இன்று இலகமே வியக்கும் ஏலக் கம்பெனியாக உருவானது. 13 ஆண்டுகளுக்கு முன் மிக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈ.பே என்ற நிறுவனம் , இன்று உலகத்தில் ஏல சந்தையில் நம்பர் ஒன் நிறுவனம்.

13 ஆண்டுகளுக்கு முன்னால், பியர்ரி ஓமிடியர் தன்னுடைய பெண் நண்பர் (தற்போது மனைவி) பமெலா வெஸ்லியுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது வெஸ்லி தன்னுடைய கேண்டி டிஸ்பென்ஸரை விற்க ஆட்களைத் தேடி கொண்டு இருக்கிறேன், யாரும் கிடைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார்.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு, பியர்ரி இந்த தகவலை ஏன் இண்டெர்னெட்டில் வெளியிடக்கூடாது என்று கேட்டார். விளைவு ஆன்லைன் ஆக்ஸன் அல்லது ஆன்லைன் ஏலம் என்ற வியாபாரக் கனவு . விளைவு ஈ.பே இது இன்று பரந்து விரிந்து சுமார் ரூபாய் 38,000 கோடி வர்த்தகம் செய்கிறது.



ஈ.பே கனவு . நனவு

1997 ம் ஆண்டு ஒரு தனிமனிதனின் சிந்தனையில் உதித்த ஒரு சிந்தனைப் பொறியின் விளைவுதான் ஈ.பே என்ற பன்னாட்டு நிறுவனம். சமுதாய நிகழ்வு பொறுக்காதார்..பூமி ஆழ்வார்.



நம்பர் ஒன் கம்ப்யூட்டர் நிறுவனம்

இன்று உலகிலேயே நம்பர் ஒன் கம்ப்யூட்டர் நிறுவனம் எது?

" IBM " என்பது உங்கள் பதில் ! உங்கள் விடை தவறு

உலகின் முன்னனி கம்ப்யூட்டர் நிறுவனமான " IBM " தன்னுடைய பர்சனல் கம்ப்யூட்டர் (PC) நிறுவனத்தை சைனாவை சேர்ந்த " Lenova " என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் 4 ஆண்டுகளுக்கு முன் விற்று விட்டது.

இன்று உலகிலேயே நம்பர் ஒன் கம்ப்யூட்டர் நிறுவனம் எது?
" Digital " என்பது உங்கள் பதில் ! உங்கள் இந்த விடையும் தவறு
" Digital " என்ற ஒரு நிறுவனம் சரித்திர புத்தகத்தில் தான் உள்ளது.

இந்த " Digital " கம்ப்யூட்டர் நிறுவனத்தை Compaq என்ற நிறுவனம் 1999-ம் ஆண்டு வாங்கி விட்டது.

தற்போது உங்கள் பதில், உ லக நம்பர் ஒன் கம்ப்யூட்டர் நிறுவனம் " HP " எனபது தானே ?
இந்த விடையும் தவறு . இந்த Compaq கம்ப்யூட்டர் நிறுவனத்தை " HP " கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் விலை கொடுத்து 2002-ல் வாங்கி விட்டது.
பிறகு எந்த நிறுவனம் ?.
டெல் என்ற அமெரிக்க நிறுவனம்தான் இன்று உலகின் நம்பர் ஒன் கம்ப்யூட்டர் நிறுவனம்




டெல் கம்ப்யூட்டர்
கடந்த ஆண்டு அதாவடு 2007-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 85,450 ஊழியர்களைக் கொண்டு 61.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்து உள்ளது.

1980 ஆம் ஆண்டுகளில் மைக்கல் டெல் என்ற இளைஞனின் மாறுபட்ட எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த டெல் நிறுவனம் , இன்று உலகெங்கும் கம்ப்யூட்டர் விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.

மற்ற கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கம்ப்யூட்டரை உற்பத்தி செய்து விட்டு வாடிக்கையாளரை தேடுகிறார்கள். ஆனால், மைக்கல் டெல் வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக் கொண்டு கம்ப்யூட்டரை உற்பத்தி செய்கிரார் ! மாற்றி யோசி, மிகப்பெரிய வெற்றி உன்னைத் தேடிவரும்.


மைக்கல் டெல் கனவு ...நனவு

1983 ஆம் ஆண்டு ஒரு தனிமனிதனின் சிந்தனைப் பொறியின் விளைவுதான் இன்றைய என்ற பன்னாட்டு நிறுவனமான டெல். சிந்தனையோடு கூடிய உழைப்புக்கு ஈடு இணை இல்லை.

நேற்றைய கனவு....
நேற்றைய வியாபாரக் கனவுகள் ...
இன்றைய சாதனைகள்....
இன்றைய வியாபாரக் கனவுகள் ...
நாளைய சாதனைகள்...
நேற்றைய அமெரிக்கர்கள் கண்ட வியாபாரக் கனவுகள் ...
இன்றைய உலக சாதனைகளாக இடம் பெற்று உள்ளன.
இது போல், மேலும் நூற்றுக்கணக்கான வெற்றி அடைந்த அமெரிக்க வியாபாரக் கனவுகளைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டே போகலாம்.


தேவை இந்திய இளைஞனுக்குத் தொலைநோக்குப் பார்வை

அமெரிக்காவில் கடந்த நூறு ஆண்டுகளாக சிந்தித்து செயல்படுத்தி, சாதித்த இளைஞர்கள் போல் இலட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் தொலைநோக்குப் பார்வையோடு கனவு கண்டால்தான், இன்றைய வளரும் இந்தியா, நாளை வளர்ந்த நாடாக மாற்ற்ம் பெறும்.

பின்னர், அத்தகைய இந்திய இளைஞர்கர்களின் உலகளாவிய வளர்ச்சியால், இந்தியா வளர்ந்த நாட்டில் இருந்து வல்லரசு நாடாக உலக சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும்.



வலிமையான பாரதம்

2014 - ல் இந்தியப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலரை எட்டும்.
2025 - ல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும்.
2050 - ல் இந்தியப் பொருளாதாரம் 28 டிரில்லியன் டாலரை எட்டும்.

இந்திய இளைஞனே .. சரித்திரம் படை......
வளரும் இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக 2020--2030 ம் ஆண்டுகளில் மாற்ற இன்று இலட்சக் கணக்கான இந்திய இளைஞர்கள் நினைக்கிறார்கள்.அவர்களில் பலர் அந்த லட்சியத்துடன் உழைக்கின்றார்கள்.

ஆனால் இக்கணத் தேவை, அந்த இந்திய இளைஞர்களுக்கு தொலைநோக்குப் பார்வையோடு கூடிய சிந்தனை உழைப்பு.
இந்திய இளைஞர்கள் வெறும் சரித்திரத்தைப் பாடமாக மட்டும் படிக்காமல், அச்சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்ற வேட்கையில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.