ஆரோக்கிய வாழ்க்கை

உடல் ஆரோக்கியத்திக் கொண்டு பணம் சம்பாதிக்கலாம்,
பணத்தைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தி சம்பாதிக்க முடியாது.
6.1 நோயற்ற வாழ்வு:

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", "நோயில்லாதவன் வாலிபன்" - என்று பல முன்னோர்களின் சிந்தனை முத்துக்கள் தமிழ் சமுதாயத்தில் காலம் காலமாக உலாவிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் உடல் ஆரோக்கியமாக, மன ஆரோக்கியமாக உள்ளோம் ?, பல கோடி மக்களில் சில லட்சம் மக்கள் இருக்கலாம். !6.2 ஆரோக்கிய விழிப்புணர்ச்சி:

உடல் என்பது ஒரு அற்புதமான இயந்திரம். மற்ற் இயந்திரங்களைப் போல் இல்லாமல் மனித உடலுக்கு ஓர் அற்புதமான ஆற்றல் இருக்கிறது. நம்மில் பலருக்கு ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்ச்சி இல்லை. அவ்வாறு விழிப்புணர்ச்சி உள்ள சிலருக்கு, அத்தகைய விழிப்புணர்ச்சி வழி வாழ முயர்ச்சி இல்லை.


6.3 வைட்டமின் "ஏ"

பல வளரும் நாடுகளில் வைட்டமின் 'ஏ' குறைவு குழ்ந்தைகளின் கண்பார்வையைத் தாக்குகிறது. வைட்டமின் 'ஏ' குறைவு - கலோர் புரதச் சத்தின்மையால் ஏற்படும் தொற்று நோய்கள் (தட்டம்மை, பேதி) இதற்க்குக் காரணம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தட்டம்மை நோயினால் கண் பார்வை இழக்க நேரலாம் என்பதால், இந்த நோய் முண்மாகும் தருவாயில் அதிகமான வைட்டமின் 'ஏ' திரவம்(20,000 IU in 2ml) கொடுக்கப்பட வேண்டும். உண்வில் எண்ணெய். நெய் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது.

வைட்டமின் 'ஏ' சத்து கொடத்து வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச மண்டல நோயையும் வராமல் தடுககலாம். வைட்டமின் 'ஏ' சத்து சீம்பால், தாய்பாலின் தேவையான அளவு இருக்கிறது. இவைகள் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தது.


6.4 இயற்க்கை வைட்டமின் "ஏ"

வருங்காலத்தில் மிகையான வைட்டமின் 'ஏ' மருந்து கொடுப்பதற்க்கு பதிலாக வைட்டமின் 'ஏ' சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. பிறகு, அத்தகைய காய்கறிகளை பயிர்செய்து வீட்டுத் தோட்டம் மற்றும் சமுதாய தோட்டம் அமைத்து உற்பத்தி செய்து ஆரோக்கிய வாழ்க்கை வாழ முற்படலாம்.

இதன் மூலம் இயற்க்கையாகவே வைட்டமின் 'ஏ' உடலில் சேர ஒவ்வொரு பெண்ணும் வழி வகிக்க வேண்டும். வைட்டமின் 'ஏ' உடலில் சரியாக இருக்கும்வரை பல தொற்று நோய்களும், கேன்சர் நோகளும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


6.5 அயோடின்:

அயோடின் என்றால் என்ன?

அயோடின் மனிதர்களுக்கு ஏன் மிக அவசியமாகிறது ?.

அயோடின், மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒரு இயற்க்கைச் சத்து. இது தைராக்ஸின் (டி4) மற்றும் ட்ரை-அயடோதைரோனின் (டி3) என்ற தைராயடு ஹார்மோங்களின் முக்கிய பகுதிப் பொருனாகும். அயோடின் மனித உடல், மூளை ஆகியவற்றின் இயல்பான வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்க்கும் மற்றும் செயல்பாடுகளுக்கும் அவசியமாகிறது.

அயோடின் பற்றாக்குறையால் சில குறையால் சில குறைபாடுகள் தொன்றலாம். அயோடின் குறிப்பாக் சிறு குழந்தைப் பருவம், பெண்கள் பூப்படையும் பருவம், கர்ப்பகாலம் மற்றும் தாய்பாலூட்டும் காலங்களில் மிகவும் தேவைப்படுகிறது..

அயோடின் பற்றாக்குறையால் ஒரு தாய், மூளை மற்றும் உடல்திறனில் பாதிப்புள்ள ஒரு குழந்தையைப் பெறும் வாய்ப்புகள் அதிகம், இந்நிலை அக்குழந்தை வள்ரும் போது மேலும் மோசமாகும்.


6.6 புத்திசாலி பெண்....

புத்திசாலி பெண், அடுத்தவர்கள் வாழ்க்கையில் செய்த தவற்றிலிருந்தும், அவர்கள் படும் பல இன்னல்களில் இருந்து தன் வழ்க்கைக்குத் தேவையான் பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். அதே வேளையில், புத்தியில்லாத பெண் தவறு என்று தெரிந்தும், அந்தச் செயலை தன் வாழ்க்கையில் செய்து, பண விரயம் செய்து சிக்கலில் இருந்து வெளியேறி அதன் மூலம் பாடம் கற்றுக் கொள்கிறாள்.


6.7 வருமுன் காப்போம்:

நோய் வந்தபின் நோய் குணமடைய முயற்சி எடுப்பவள் புத்தி இல்லாதவள். அதே நேரத்தில் நோய் வருமுன் காப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் தினம் தினம் உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் ஆன்மப் பயிற்சி செய்து உடலை, மனதைப் பேணி காப்பவள் புத்திசாலிப் பெண். நீங்கள் புத்திசாலியா ? இல்லையா ஒரு நிமிடம் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


6.8 விளையும் பயிர்:

"விளையும்பயிர், முளையிலேயே தெரியும்" என்பது பழமொழி. அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொள்ளும் பருவம் தான் வளரிளம் பருவம். இந்த கால கட்டத்தில், உடலை ஆரோக்கியமாக வைத்து, நல்ல சின்ந்தனைகளை மனதில் வளர்ந்து. உலகம் போற்றும் இந்திய ஆன்மீக வழியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.


6.9 செயல்....விளைவு

நியூட்டனின் மூன்றாம் விதி, ஒவ்வொரு செயலுக்கும், ஒரு விளைவு உண்டு என்பதுதான். பெண்ணே ! பள்ளிக்கூடப் புத்தகத்தில் படித்தது ஞாபகத்திற்க்கு வருகிறதா அதை வாழ்க்கைப் புத்தகத்திற்க்கு கொண்டுவா.ஆரோக்கிய வாழ்க்கை உன் கையில். தேவை இக்கணம் ஆரோக்கிய வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு.


6.10 நோயற்ற வாழ்க்கை வழிகாட்டி

அட்டவணை 6.1 -ல் பல வகை நோய்களையும், நோய்க்கான காரணிகளையும், அத்தகைய நோய்களைத் தடுக்கும் முறைகள் பற்றியும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.6.11 நோய் நாடி...

நோய் நாடி... நோய் முதல் நாடி உதாரணமாக, உங்களுக்கு வயிற்றுபோக்கு வந்துவிட்டது என்பது விளைவு, அதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நோய்க்கான காரணிகளான ஆரோக்கியமற்ற சூழ்நிலையான நடைபாதையில் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், காலனி அணியாதிருத்தல் போன்றவைகள் வெளிப்படும். இதை தன வள்ளுவர் பெருந்தகை,

"நோய் நாடி நோய் முதல் நாடி- அதுதுணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

என்று குறிப்பிடுகிறார்.
6.13 ஒளி படித்த கண்... கலை இழந்த கண்...

முண்டாசுக் கவிஞன் பாரதி கண்ட கனவு,

ஒளி படைத்த கண்ணினாய் வா...வா...வா...

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா...வா...வா...

வளரிளம் பெண்ணே உன்னைச் சுற்றிப் பார், உன்னைச் சுற்றி உள்ளவர்களில் எத்தனை பேரிடம் ஒளி படைத்த கண் உள்ளது? தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்த கலையிழந்த கண்தான் தென்படுகிறதா? அந்தப் பெண்ணை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை... காலத்தின் கோலம்.


6.14 ஆரோக்கிய தேசம்

ஆரோக்கிய மனமே, ஆரோக்கிய உடலுக்கு அடிப்படை!
ஆரோக்கிய உடலே, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை!!
ஆரோக்கிய வாழ்க்கையே, ஆரோக்கிய சமுதாய சூழ்நிலைக்கு அடிப்படை!
ஆரோக்கிய சூழ்நிலையே, ஆரோக்கிய தேசத்திற்கு அடிப்படை!!6.15 ஆரோக்கிய வாழ்க்கை

ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக மிக அவசியம், ஆரோக்கிய உணவு. நமது முன்னோர்கள் "உணவே மருந்து" என்ற விழிப்புணர்வோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வளமான வாழ்வு வாழ்ந்தனர். இன்றைய சமுதாயத்தில் பலர் விரைவாக வாழ்க்கை என்று "மருந்தே உணவு" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் விஞ்ஞான முன்னேற்றமா, அல்லது மெஞ்ஞான முன்னேற்றமா, வளரிளம் பெண்ணே! சற்றே சிந்திப்போம்!!


6.16 யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

ஒவ்வொரு வளரிளம் பெண்ணும் அடுத்த பத்து நாளில், தன்னைச் சுற்றியுள்ள பத்து பேருக்காவது மேற்கூறிய அரோக்கிய வழியை கற்றுக் கொடுக்க முயலுவோம், அதன் மூலம் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவோம்.6.17 நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறை

நுண் ஊட்டச்சதுக்களான வைட்டமின் 'ஏ' இரும்புச்சத்து, அயோடின் மற்றும் துத்தநாகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக, மிக அவசியம்.

Popular Posts


தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

Inspirational quotes by K.Balasubramaniyan

Indians are Born Genius

Western peoples are made Genius

We Indians do not know that we are Genius


Indians are Born extradionery

Western people are made extradionery

We Indians do not know that we are extradionery.

Indians are Born Great

Western peoples are made Great

We Indians do not know that we are Great