தொழில் முனைவோர்?


தொழில் முனைவோர் ?

2.1 யார் தொழில் முனைவோர்?

தன்னுடைய படிப்பு, மற்றும் அனுபவ அறிவுக்கு ஏற்ப ஒரு தொழிலை தேர்ந்து எடுத்து, அந்த தொழிலின் தொழில் நுட்பங்களை செம்மையாக தெரிந்து கொண்டு, தானும் பலன் பெற்று. பலரை வேலைக்கு அமர்த்தி அவர்களையும் பலன் பெற வைப்பவர்தான் தொழில் முனைவோர்.


2.2 தொழில் முனைவோர் - விதியா ? மதியா?

தொழில் முனைபவன் பிறவியிலேயே உருவாகிறார்களா? அல்லது தொழில் முனைவோர், உருவாக்கப்ப்டுகிறார்களா? என்ற கேள்வி சாதாரனமாக நமக்கு வரும் ஒரு சந்தேகம்.

என்னுடைய உறுதியான பதில், தொழில் முனைவோர் உருவாக்கப் படுகிறார்கள்.

நம்மை சுற்றி உள்ள தொழில் வெற்றி அடந்த பல வியாபாரிகளை கூர்ந்து பார்த்தால் அவர்கள் தங்களைத்தானே உருவாக்கிக் கொண்டார்கள், என்ற உண்மை புரியும்.

உதாரணமாக இன்றைக்கு தமிழக மக்களுக்கு நல்லெண்ணெய் என்றால் 'இதயம்' அல்லது "இதயம்"என்றால் நல்லெண்ணெய் என்று தெரியும்.


2.3 இதயம் முத்து:

இந்த வெற்றிக்கு பின்னால், விருதுநகரை சேர்ந்த தொழில் அதிபர் முத்து இருக்கிறார். ஆம், இதயம் நல்லெண்ணெய்க்கு பின்னால் அவருடைய மாறுபட்ட எண்ணம் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பரிபூரண இதய நாட்டம் உள்ளது. முத்து அவர்கள் தன்னைத்தானே தொழில் மூலம் உயர்த்திக் கொண்டார். அவரது தொழில் தாரக மந்திரம்....


"நான் ஒரு வியாபாரி, வியாபாரம் எனது மதம்;
நான் பணிபுரியும் இடம் என் கோயில்;
வாடிக்கையாளர்களே என் கடவுள்;
கடவுளுக்கு நான் செய்யும் பூஜைதான் சேவை;
கடவுளின் மன மகிழ்ச்சியே எனக்கு பிரசாதம்".

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.