வாய்ப்புகள்

7 .1 இரு வகை மனிதர்கள்
இந்த உலகில் இரண்டு வகை பட்ட மனிதர்கள் உள்ளனர்.
1 ) வாய்ப்புகள் இல்லவே இல்லை, என்று திடமாக வாதிடுபவர்கள்.( Oppurtunity no Where),
2) வாய்ப்புகள் நிறைய குவிந்து கிடக்கின்றன,(Opportunity Now Here)


7 .2 வாய்ப்புகள் இல்லவே இல்லை
வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்யும் இவர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள், இந்த உலகத்தில் உள்ள மக்கள் தொகையில், 95 சதவீதம் பேர். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று தங்களுக்கு தானே திரும்ப சொல்லிக்கொண்டு ஒரு பெரிய மன திரையை தங்களுக்கு தாங்களே போட்டுக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.




7 .3 வாய்ப்புகள் நிறைய உண்டு
இவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள், இந்த உலகத்தில் உள்ள மக்கள் தொகையில், 100 சதவீதம் பேரில்,

5 சதவீதம் பேர்தான் வாய்ப்புகள் அருகாமையிலே உள்ளது என்று எண்ணி உணர்ந்து அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தங்கள் முயற்சியில் இறங்குகிறார்கள்.

இத்தகைய இரண்டாம் வகை மனிதர்கள், காலத்தை சரியான வகையில் கணிக்கிறார்கள். துக்கத்தில் கூட, தொழிலை பற்றியே நினைக்கிறார்கள்.

ஆம், துங்கும் போது கூட , புற மனம் துங்கலாம், அடி மனம் மற்றும் ஆழ்மனம் தொழிலை பற்றிய சிந்தனையில் மிக கவனமாக இருக்கும்.

7 .4 புறமனம் ஆழ்மனம்
முதல் 3 ஆண்டுகள் ஒரு புதிய தொழிலுக்கு மிக முக்கியமான காலக் கட்டம். எப்படி குழந்தை வளர்ப்பில் முதல் மூன்று ஆண்டுகள் மிக முக்கியமான காலக் கட்டமோ, அதே போல் முதல் மூன்று ஆண்டுகள் ஒரு புதிய வியாபாரத்தில் மிக முக்கியமான காலக்கட்டம்.

குறிப்பாக சொல்லப்போனால், முதல் 1000 நாட்கள் ஒரு புதிய தொழிலில் வெற்றிகரமாக கடந்து விட்டால் அந்த தொழிலில் உள்ள தெளிந்த அறிவு வந்து விடும். அதைக் கொண்டு, பல ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக தொழிலை நடத்திச் செல்ல முடியும்!

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.