திட்ட மிட்ட வாழ்க்கை, திட்ட மிடாத வாழ்க்கை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijyzOGfYrcmz6YpyvioC7pbmuyR45NpzEDHQaNzFVrviDnk5luGol0-6ojgR0NzAwahIqgGt1xohJeKHYxkN4tYUOHTJOaDWQPIMLCA-tPONOXCcGvwuaVyqt-B3W-nEqHG71EyQezlmE/s200/pazkkam....vilakka....porattam.gif)
பழக்கம் .... விளக்கம் ...போராட்டம்.......
பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு இருப்பவன் தான் இன்றைய நவநாகரீக மனிதன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை முறையை மனிதன் தெளிவாகத் தெரிந்து கொள்கிறான்.ஆனால் அதை அமைத்துக் கொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.
விதி வழி வாழ்க்கையா ? மதி வழி வாழ்க்கையா ?
சரியான நேர நிர்வாகம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இருந்தால், விதியை மதியால் வெல்லலாம்.
இன்றைய மனிதன்....
நவநாகரீக மனிதன்.. நவநாகரீகம் என்ற போர்வையில் தேவையற்ற மேலைநாட்டு பழக்கத்தை (பீடி, சிகரெட்) தேவையாக்கி, மிக மிக தேவையான யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற வழிகளைக் பழக நேரம் இல்லாமல் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறான்.
உண்மை வாழ்க்கை.......
உடலைக் கவனிக்க நேரம் இல்லை....
மனதக் கவனிக்க நேரம் இல்லை...
ஆன்மா கவனிக்க நேரம் இல்லை...
இதுதான் இன்றைய இந்திய நவநாகரீக மனிதனின் உண்மையான, யதார்த்த, போலி வாழ்க்கை. மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். பணத்தை மட்டுமே. ஆனால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை வாழும் முறை பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.
வாழ்க்கை:
நம்மில் எத்தனை பேர், இந்த வருடம், இந்த நாள் வரை ஒரு நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி உள்ளோம்?. நூற்றுக்கு ஒருவர் கூட இருக்க முடியாது. நம்மில் 99 சதவீத மக்களுக்கு திட்டமிட்ட வாழ்க்கை கிடையாது என்பதின் வெளிப்பாடுதான் இந்த நாட்குறிப்பு எழுதாத செயல் மூலம் வெளிப்படுகிறது.
"திட்டமிடாத வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனைத் தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்"
When we fail to plan, We plan to fail
உடல் ஆரோக்கியத்திப், பொறுமையோடும், நிதானத்தோடும் வளர்ப்போம், அல்லது குறைந்த பட்சம் பராமரிப்போம் !
நோய் வருமுன் காப்போம்....
வருமுன் காப்போம்... இது ஒரு அரசு திட்டம் மட்டும் இல்லை, நோய் வரும் முன் ஆரோக்கியத்தைக் காப்போம், என்பது எல்லோருக்கும் பொருந்தும். ஒவ்வொரு இந்தியனுக்கும் உடல், மனம் மற்றும் ஆன்மா விழிப்புணர்வு தேவை.
இன்றே....இப்போதே.....தேவை.............
திட்டமிட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ,
நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை
பழகிக் கொள்வோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTh2zySpvPkoc7NlLiL_yOez7Fk1e9jPOHeRddBWl3LZdf0Z6WWVXqzTVvpfFkfbngaQf4OwmYXlOW8KMUk9ejpNqcu1YOX1e5bpa_O_dUkekT4run3D_ZBjc5OsvfA-9lEE-DEy1yoBo/s200/aarokiya+valvu.jpg)
ஆரோக்கிய வாழ்வே.....ஆனந்த வாழ்வு...............
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இன்று நம்மில் எத்தனை பேருக்கு அள்ள அள்ள குறையாத ஆரோக்கியமான உடம்புச் செல்வம் இருக்கிறது. மற்றும் அள்ளக் குறையாத ஆரோக்கிய மனச் செல்வம் இருக்கிறது.
ஆரோக்கிய உடம்பை விட, ஆரோக்கிய மனத்தை விட உயர்ந்த செல்வம் இந்த உலகில் உள்ளதா? சிறிது சிந்திப்போம் !
தினமும் என்னை கவனி....என்று நம் உடலும், உள்ளமும் நம்மிடம் கெஞ்சுகிறது !.
தினமும் என்னை கவனி
பழைய காலத்து லாரியில் உள்ள பேட்டரியின் மீது "தினமும் என்னை கவனி" என்று எழுதி இருப்பார்கள். அதன் அர்த்தம், தினமும் பேட்டரியில் தண்ணீரை நிரப்பு என்று லாரி ஓட்டுனருக்கு நினைவூட்ட எழுதப்பட்ட் வாசகம்.
அதே போல், தினமும் உங்களை முதலில் கவனியுங்கள்...............உலகை பிறகு கவனியுங்கள்.
ஆயிரத்தில் ஒருவராகத் திகழ வேண்டுமா? தினமும் சிறிது நேரம் உடலை கவனியுங்கள்.
இந்த் உலகில் இலட்சத்தில் ஒருவராக திகழ வேண்டுமா? தினமும் சிறிது நேரமாவது உடம்பை மற்றும் மனதைக் கவனியுங்கள்....
திட்டமிட்ட வாழ்க்கை
வாழ்க்கையில் நேரத்தை, திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும். வாழ்க்கையில் பலருக்கு இந்த வழிப்புணர்வு இல்லை.
அத்தகைய நேர விழிப்புணர்வு உள்ள சிலருக்கு, திட்டமிட சோம்பேறித்தனம், நாட்குறிப்பு எழுத சோம்பேறித்தனம்.
அத்தகைய சோம்பலுக்கு காரணம், நமது உடலும் நமது மனமும் சொல்லியபடி ஒத்துழைப்பு நல்கவில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHpdI97FyVpmYdiGT-HH3Ic9Wm9qhu2qJvEHwxuAK2BiQhIuztCcMGhO9NSLGk-otaPH7KkHE8gd91sSApOIkxFAIoK_8nQ9faV5KpNZ3LDGIFgbsf9_31l9SXajX_MQ-pnocn-Cc01ec/s200/time+management.jpg)
நேரம் இல்லை................நேரம் இல்லை................
உடல், மற்றும் மன முரண்பாடுகளுக்குக் காரணம் உடற்பயிற்சி இன்மையே !
உடற்பயிற்சி செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?
மனப்பயிற்சி செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?
தற்சோதனை செய்யாததற்க்கு காரணம் - நேரம் இல்லையா ?
சுருங்கச் சொன்னால் நமது வாழ்க்கையில்
பிரச்சனை அனைத்துக்கும் மூல காரணம் நாம் சரியாக நேரத்தை திட்டமிட்டு, சிந்தித்து செலவு செய்யாதது தான் நேரத்தை திட்டமிட்டு, வரவு செலவு கண்க்குப் பார்க்காததுதான் காரணம்.
Where there is no will, there are excuses.