Posts

வல்லரசு இந்தியாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள்.

Image
உலகப் பொருளாதார வளர்ச்சி நேற்று 1900 --> 1 டிரில்லியன் டாலர் 1990 --> 20 டிரில்லியன் டாலர் 2007 --> 52 டிரில்லியன் டாலர். 1900 ம் ஆண்டு 1 டிரில்லியன் டாலராக இருந்த உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 2007-ல் 52 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. உலகப் பொருளாதார வளர்ச்சி நாளை.. 2020 --> டிரில்லியன் டாலர் 2050 --> டிரில்லியன் டாலர் உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 2020-ல் 80 டிரில்லியன் டாலராக உயருமென்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதே போல் 2050-ம் ஆண்டு உலகப் பொருள் உற்பத்தி மதிப்பு 220 டிரில்லியன் டாலராக மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்திய பொருளாதார வளர்ச்சி 1985 --> 200 பில்லியன் டாலர் 1995 --> 400 பில்லியன் டாலர் 2004 --> 700 பில்லியன் டாலர் 2007 --> 1000 பில்லியன் டாலர் இந்தியப் பொருளாதாரம் கடந்த 23 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் 1000 பில்லியன் பொருளாதாரமாக 2007 ஆம் ஆண்டு உருவெடுத்தது. இந்தியா இந்தியாவின் மொத்த உற்பத்திக் குறியீடு 2007- ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ஆம் தேதி 1 டிரில்லியன் டாலர் என்ற உயரிய ...

இந்திய இளைஞன் அறிவு ஜீவி.

Image
பொதுவாக என்னுடைய தனிமனித மேம்பாட்டு வகுப்புகளில் கலந்து கொள்ளும் அன்பர்களைப் பார்த்து நான் கேட்கும் ஒரு கேள்வி, உங்களில் எத்தனை பேர் அறிவு ஜீவி, கையை உயர்த்துங்கள் என்பேன். என்னுடைய நூற்றுக்கணக்கான தனிமனித மேம்பாட்டு வகுப்புகளில் அதிகமான சமயம் ஒருவரோ அல்லது இருவரோ நான் அறிவு ஜீவி என்று முழுமையாக நம்பி, கையை உயர்த்துவார்கள். மற்றவர்கள் எல்லாம் அமைதியாக உட்கார்ந்து இருப்பார்கள். சிலர் அமைதியாக தலையைக் குனிந்து கொள்வார்கள். அறிவு ஜீவி: அமைதியாகக் கையை உயர்த்தாமல் 'நான் அறிவு ஜீவி இல்லை' என்ற தோரணையில் உட்கார்ந்து இருப்பவர்களைப் பார்த்துக் கேட்பேன். உங்களில் யாராவது அமெரிக்க நாட்டில் இருந்து வந்துள்ளீர்களா? அல்லது இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்துள்ளீர்களா? அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து வந்துள்ளீர்களா? பதில் இல்லை....நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று ஒரே குரலில் பயிற்சி வகுப்பில் அமர்ந்துள்ள அனைவரும் சொல்லுவார்கள். கடைசியாக நான் சொல்லுவேன், அப்படி என்றால் நீங்கள் எல்லோரும் அறிவு ஜீவிகள் "ஒவ்வொரு இந்தியனும் ஒரு அறிவு ஜீவி". அதுதான் உண்மை. ஆனால் அந்த உண்மை நமக்க...

திருபாய் அம்பானியின் இந்தியப் பொருளாதாரம் பற்றிய தீர்க்க தரிசன பார்வை.

Image
இந்திய வளர்ச்சி முன்னோடிகள்.... 200 ம் ஆண்டில், இண்டர் நெட்டில் ஒரு சர்வே செய்தார்கள். அது யார் இந்தியாவின் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கான முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் ? அந்த சர்வேயின் முடிவில் 4 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். 1. சுவாமி விவேகானந்தர் 2. காந்தி அடிகள் 3. அன்னை தெரசா 4. திருபாய் அம்பானி இதில் வியாபார ஜாம்பவானகளான ஜாம் செட்ஜி டாட்டா, ஜெ.ஆர்.டி.டாட்டா, ரத்தன் டாட்டா போன்றோரின் பெயர்கள் இடம் பெறவில்லை பாலியஸ்டர் புரட்சி ...... அம்பானி ஆனால், திருபாய் அம்பானி பெயர் இடம்பெற்று இருந்தது. எப்படி ? யார் இந்த அம்பானி ? இவர் இந்தியாவிற்கு என்ன செய்தார்? ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனாக குஜராத் மானிலத்தில் பிறந்த திருபாய் அம்பானி, ரூபாய் 15,000 முதலில் தொழில் தொடங்கி 42 ஆண்டுகளில் ரூபாய் 90,000 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இந்தியாவில் உள்ள சாமானியனும் தரமான துணி உடுத்த பாலியெஸ்டர் புரட்சி செய்தார் அம்பானி. இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் பாலியஸ்டர் துணி வியாபாரம் செய்தார். அவருடைய மகத்தான சாதனைக்கு கிடைத்த சன்மானம்தான், இந்தியா...

அமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 7 தூண்கள் - (20 ஆம் நூற்றண்டுக்கு பின்)

Image
உலகை ஆளும் ஏழு அமெரிக்க நிறுவனங்கள் இன்று அமெரிக்க நாடு உலக அளவில் மிகப் பெரிய வல்லரசு நாடு. இந்த நிகழ்வு ஒரு நாளில் நடைபெறவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாக அமெரிக்க இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வையால்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறுபட்டு சிந்தித்து மிகப் பெரிய அளவில் உலக சாதனை நிகழ்த்தி அமெரிக்காவின் பொருளாதாரத் தூண்களாக உள்ள ஏழு நிறுவனங்களின் வளர்ச்ஸ்ரீயைப் பற்றி இரத்தின சுருக்கமாக அடுத்த 31 பக்கங்களில் பார்ப்போம். இந்த 7 உண்மைக் கதகளில் இருந்து இந்திய இளைஞன் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளது. அந்த ஏழு உலகளாவிய நிறுவனங்கள் 1. ஆப்பிள் 2. இண்டல் 3.ஜெராக்ஸ் 4. சிஸ்கோ 5. அமெஸான் டாட்காம் 6. ஈ பே 7. டெல் ஆப்பிள் கம்ப்யூட்டர்: ஆப்பிள் என்றால், சிலருக்கு நியூட்டன் நினைவுக்கு வருவார். ஆப்பிள் என்றால் சிலருக்கு ஆப்பிள் ஜுஸ் தான் நினைவுக்கு வரும் ஆப்பிள், தகவல் தொழில் நுட்ப மனிதனுக்கு, ஆப்பிள் என்றால் ஆப்பிள் கம்ப்யூட்டர், குறிப்பாக 'மேக் இண்டாஸ், மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்பான i-POD தான் நினைவுக்கு வரும். 1975 ஆம் ஆண்டுகளில், ஒரு இளைஞ்னின் ...

அமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 5 தூண்கள் - (20 ஆம் நூற்றண்டுக்கு முன்)

Image
அமெரிக்க இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை.............. அமெரிக்கப் பொருளாதார வேகம் ......... இன்று அமெரிக்கா தனிப்பேரும் வல்லரசு நாடாக 14 டிரில்லியன் டாலர் பொருள் உற்பத்திக் குறியீட்டை அடைந்து உலக அரங்கத்தில் தனித்தன்மையுடன் திகழ்கிறது. அமெரிக்காவின் இந்த உன்னத நிலைக்குக் காரணம் பலப் பல தனி மனிதர்கள். கடந்த நூறு ஆண்டுகளில் அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு,அமெரிக்க நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற செயல் வெறியுடன் மாறுபட்டு சிந்தித்து அவர்கள் செய்த பல செயற்கரிய செயல்களும் மற்றும் அதன் விளைவாக அவர்கள் உருவாக்கிய நிறுவனம் அடைந்த அமோக வெற்றியும்தான். Be proud to be an Indian. செயற்கரிய செயல்கள் செய்த மாமனிதர்கள் சிந்தனையின் வெளிப்பாடு மற்றும் வெற்றியே இன்றைய அமெரிக்காவின் உன்னதமான வளர்ச்சி. அத்தகைய சாதாரண மனிதர்கள் அடைந்த அசாதாரண வெற்றியின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரம் உலக அளவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக விரைவாக முன்னேற்றம் அடைந்தது என்றால் அது மிகையாகாது. 19-ஆம் நூற்றாண்டில் வல்லரசாக விளங்கிய இங்கிலாந்தை பொருளாதார வளர்ச்சியில், அமெரிகா 20-ஆம் நூற்றாண்டில் பின்னுக்கு தள்ளியது. விளைவு, இன்று 21-...

இந்திய இளைஞர்களின் தொலைநோக்கு பார்வை.

Image
வெற்றிக் கோட்பாடு உலகில் லட்சம் மனிதர்கள் தினம், தினம் பெரும் செல்வந்தராக வேண்டும், மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களில், ஆயிரம் மனிதர்கள் செவந்தர் ஆவது எப்படி என்ற சிந்தனையோடு நின்றுவிடாமல், அத்தகைய சிந்தனையில் தெளிவு பெற்று மற்றவர்களிடம் அந்த சிந்தனையைப் பற்றி பேசுகிறார்கள். அத்தகைய ஆயிரம் பேரில், நூறு மனிதர்கள் செல்வந்தராகும் முயற்சியில் சப்தம் இல்லாமல் சிந்தனை தெளிவுப்படி புதிய தொழில் திட்டத்தை வடிவு அமைக்கின்றனர். பிறகு தொழிலில் இறங்கி செயல்படுகிறார்கள். அத்தகைய 100 மனிதர்களில், பத்து மனிதர்கள், ஐந்து அல்லது ஆறு மனிதர்கள் தொழில் ஆரம்பித்த மூன்று வருடங்களில் அல்லது 1000 நாட்களில், ஆரம்பித்த தொழிலில் தோல்வி அடைந்து, அந்த தொழிலில் காணாமல் போய்விடுகிறார்கள். மீதம் உள்ள ஐந்து அல்லது நான்கு மனிதர்களில், ஒருவர் அல்லத் இருவர் மட்டுமே தொழிலில் ஐந்து மற்றும் பத்து வருடங்களுக்கு மேல் நிலைத்து நின்று உலக அளவில் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். சுருக்கமாகஸ் சொன்னால் .. தெளிவாக சொன்னால்.. இந்த உலகில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும்தான் மகத்தான வெற்றி ...

நினைத்ததை அடைவது எப்படி ?

Image
ஐந்து குருடர்களின் பார்வையில் யானை யானையும், 5 குருடர்களும் கதை நமக்கு நன்றாகத் தெரியும். அதே போல் இன்றைய இந்திய இளைஞர்களில் பலருக்கும் வல்லரசு இந்தியா அடைய இருக்கும் வளர்ச்சி பற்றிய தெளிவான பார்வை இல்லை. ஒவ்வொரு இந்திய இளைஞனும் , ஒவ்வொரு வகையில் தங்களின் யூகம் போல் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். வல்லரசு இந்தியா? எப்படி? எப்போது? 2020- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று சில இளைஞர்களும், 2030- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று சிலச்சில இளைஞர்களும், 2040- ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று பல இளைஞர்களும், அவர்களின் மனக் கருத்துக்கு ஒப்ப, மன எழுச்சிக்கு ஒப்ப சொல்லி வருகிறார்கள். இந்தியா முழுவதும் இன்று உள்ள 57 கோடி இந்திய இளைஞனுக்கு எப்போது இந்தியா வல்லரசு ஆகும் என்ற ஒருமித்த கருத்து உள்ளதா? என்றால் உண்மை பதில், "இல்லை" என்பதுதான். வல்லரசு நாட்டின் தகுதிகள் வல்லரசு நாடு என்று உலகில் உள்ள ஒரு நாட்டை எந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்த்து சொல்கிறோம்? ஒரு நாடு பெறும் உலக உற்பத்திக் குறியீட்டின் பங்கைக் கொண்டா? உலக ஏற்றுமதியில் ஒரு நாட்டின் பங்கைக் க...