தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

24 மணித்துளி நிர்வாகம்

24 மணித்துளி நிர்வாகம்.
நேர நிரவாகம் என்பது
24 மணி நேர நிர்வாகம் இல்லை.
24 மணித்துளிகள் நிர்வாகம்.


தூக்கம்

சாராசரி இந்தியன் ஒரு நாளில், தூக்கத்திற்கு ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை செலவு செய்கிறான்.

சாராசரி இந்தியன் 65 வருட கால வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திற்காக மட்டும் செலவு செய்கிறான். அதாவது 22 வருடம்.

வாழ்க்கைத் தூக்கம் போக

சராசரி இந்தியனின் வாழ்நாள் - 65 வருடம்
தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை - 43 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

வேலை

சாராசரி மனிதன் தன் வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அதாவது 22 வருடம், மற்றும் ஒரு நாளில் 8 மணி நேரத்தைப் படிப்பு மற்றும் அலுவலக வேலைக்கு மட்டும் செலவு செய்கிறான். இல்லத்தரசிகள் அதே அளவு நேரத்தை, சமைத்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்புக்கு செலவு செய்கிறான்.

வாழ்க்கைத் தூக்கம், வேலை போக

சராசரி மனிதன் வாழ்நாள் - 65 வருடம்
தூக்கத்திற்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
படிப்பு, வேலைக்கு செலவு செய்த நேரம் -- 22 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை - 21 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

காலைக்கடன்

தனி மனிதன் ஒரு நாளில், காலைக்கடன் மற்றும் குளிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் சுமார் ஒரு மணி நேரம் . சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடத்தைக் காலைக்கடன் மற்றும் குளிக்க, உடை உடுத்த, மேனியை அலங்கரித்துக் கொள்ள எடுத்துக் கொள்கிறான்.

உணவு

மனிதன் ஒரு நாளில் காலை உணவு, காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று 3 வேளை உணவு அருந்த எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் சுமார் 1 மணி நேரம். ஆக சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம், உணவு அருந்த மட்டும் செலவு செய்கிறான்.


"1 வேளை உணவு உண்பவன் யோகி
2 வேளை உணவு உண்பவன் போகி
3 வேளை உணவு உண்பவன் ரோகி
4 வேளை உணவு உண்பவன் நடைப்பிணம். "


பயணம்.

சராசரி மனிதன் தன்னுடை வாழ்க்கைப் பயணத்தில் பைக், கார், பஸ், ரயில் விமானப் பயணத்திற்காக மட்டும் செலவு செய்யும் கால அவகாசம் ஒரு நாளில் ஒரு மணி நேரம் . ஆக, சராசரி இந்தியன், தன்னுடைய 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் பயணத்திற்காக மட்டும் செலவு செய்கின்றான்.

ஓடி, ஓடி உழைக்கணும்...
தேடி தேடி செல்வம் சேர்க்கணும்...
சேர்த்த பணத்தை ஊருக்கெல்லாம் கொடுக்கனும்....

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு

சராசரி இந்தியன் வாழ்நாள், தூக்கம் மற்றும் வேலை போக -- 21 வருடம்
காலைக்கடன் மற்றும் குளியல் -- 2.75 வருடம்
3 வேளை உணவு அருந்த -- 2.75 வருடம்
பைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு -- 2.75 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை -- 12.75 வருடம்

குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

குடும்பம்

சராசரி மனிதன் தன்னுடை வாழ்நாளில், குடும்பத்திற்காக செலவு செய்யும் நேரம் ஒரு நாளிலொரு மணி நேரம். ஆக, சராசரி மனிதன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் மட்டும் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறான்.
தனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி.

நண்பர் மற்றும் சொந்தம்

சராசரி மனிதன், நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களின் பிறந்த நாள், திருமணம் மற்றும் துக்கக் காரியங்களில் பங்கு கொள்வது போன்றவற்றிர்க்காக மட்டும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்காக மட்டும் செலவு செய்கின்றான்.

வெற்றிக்கான 9 விஷயங்கள்

1.உண்மையே பேசு
2.நன்மையே பேசு
3.அன்பாக பேசு
4.மெதுவாக பேசு
5.இனிமையாக பேசு
6.சிந்தித்து பேசு
7.சமயமறிந்து பேசு
8.சபையறிந்து பேசு
9.பேசாதிருந்தும் பழகு

செல்போன் மற்றும் கடை

செல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவது, இ-மெயில் அனுப்புவது, எஸ் எம் எஸ் அனுப்புவது மற்றும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம் ஆக, சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 2.75 வருடம் செல்போனில் பேசுவது இண்டர் நெட்டில் உரையாடுவதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு
சராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 12.75 வருடம்
குடும்பம் ---- 2.75 வருடம்
நண்பர் மற்றும் சொந்தம் ---- 2.75 வருடம்
செல்போன் மற்றும் கடை ---- 2.75 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை -- 4.5 வருடம்
குறிப்பு : 65 வருடம் இந்திய மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற கணிப்பு மற்றும் நம்பிக்கை.

தொலைக்காட்சி மற்றும் வானொலி

தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது ஆக, சராசரியாக 1 மணி மற்றும் 36 நிமிடம் செலவு செய்கிறான். சராசரி இந்தியன் தன் 65 வருட வாழ்நாளில் 3.13 வருடம் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பதற்கு மட்டும் செலவு செய்கின்றான்.
சிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !!

வாழ்க்கை வரவு, செலவு கணக்கு
சராசரி இந்தியனின் எஞ்சிய மீத வாழ்க்கை ----- 4.5 வருடம்
தொலைக்காட்சி மற்றும் வானொலி கேட்பது ---- 3.13 வருடம்
மீதம் உள்ள வாழ்க்கை --1.34 வருடம்

சுயம் அறியும் நேரம்

ஒரு இந்திய மனிதன் 65 வருடம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால், அவனுக்கு சுயம் அறியும் நேரம் கிடைப்பது 1.34 வருடம் மட்டுமே.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 65 வருட காலக்கட்டத்தில், தனியாக, தன்னைப் பற்றி, தன் வாழ்க்கையின் நோக்கம் பற்றி சிந்திக்கக் கிடைக்கும் நேரம் வாழ்நாளில் 1.34 வருடம் மட்டுமே. சரியாக சொன்னால் ஒரு நாளில் 24 நிமிடம் மட்டுமே!.

இந்தியனின் 65 வருட வாழ்க்கை செலவு கணக்கு

22 வருடம் - தூக்கம்
2.75 வருடம் - காலைக் கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் - 3 வேளை உணவு
2.75 வருடம் - பைக் , கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு
22 வருடம் - படிப்பு, வேலை
8.75 வருடம் - குடும்ப நேரம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் நேரம்
3.13 வருடம் - தொலைக்காட்சி நேரம்

1.34 வருடம் - தனி மனித தற்சோதனை நேரம்

சிந்தனை செய் மனமே !

நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க, பயணம் செய்ய இருக்கும் வாழ்க்கைப் பாதையைத் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படக் கிடைக்கும் மிக மிக அரிய நேரம் 1.34 வருடம் அல்லது ஒரு நாளில் 24 நிமிடமாகும்..
ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொண்டு சிந்தனை செய் ! செய்தால், நேரத்தின் அருமை புரியும் !!. சீரிய சிந்தனைப்படி, செயல் செய்தால் வாழ்க்கை செம்மையான வழியில் இருக்கும் !!.

நம் வாழ்க்கை ... 24 நிமிடத்தில்
நம் வாழ்க்கையில் நமக்காக நம் சிந்தனைக்காக கிடைக்கும் நேரம் மிக மிகக் குறுகிய காலம் என்பதை உணர்வோம். சுருங்க சொனால் தனி மனிதன் 65 வருட கால உயிர் வாழ்ந்தால், நம்மை பற்றி நாம் சிந்திக்க கிடைக்கும் கால அவகாசம், 1.34 வருடம் மட்டுமே.
ஆனால், மனதில் ஆயிரம் கனவுகள், அந்த கனவுகள் எல்லாம் எப்போது நனவு ஆவது ? எல்லாம் எப்படி ஒரு மனிதன் , ஒருநாளில் தன்னிடம் உள்ள அந்த பொன்னான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் பயன்படுத்துகிறான் என்பதிலேயே உள்ளது.

நீர்க்குமிழியாம் வாழ்க்கை

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்.
நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம் . சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள். இந்த 65 ஆண்டு கால வாழ்க்கையை இளைஞர்களுக்குக் கண்மூடி கண்திறப்பதற்குள் முடிகின்ற மிகக் குறுகிய கால வாழ்க்கை, குறிக்கோளை நிர்ணயிப்போம். வாழ்க்கைக் குறிக்கோளின் படி வாழ திட்டமிடுவோம். திட்டமிட்ட படி வாழ்ந்து சாதனை படைப்போம்.

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம் ------------ 8 மணி
வேலை ----------- 8 மணி
காலைக்கடன், குளியல் ------------1 மணி
உணவு (3 வேளை) ------------1 மணி

18 மணி

Hero to Zero or Zero to hero purely depends on 24 minutes time management of a day

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 8 மணி
பயண நேரம் ------------1 மணி
குடும்ப நேரம் ------------1 மணி
நண்பர் மற்றும் உறவினர் நேரம் ------------1 மணி
செல்போன் மற்றும் கடையில் பொருள் வாங்குக் நேரம் ---------1 மணி

22 மணி

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

தூக்கம், வேலை, காலைக்கடன், குளியல், உணவு ----------- 22 மணி
தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் வானொலி கேட்பது------------1 மணி 36 நிமிடம்

23 மணி 36 நிமிடம்

ஒரு நாளில் மீதம் உள்ள நேரம் ..24 நிமிடம் வாழ்வின் நோக்கம் அறிய கிடைக்கும் அரிய நேரம்தான் அந்த 24 நிமிடம்.

சாதாரண மனிதனின் தினசரி நேர, செலவுக் கணக்கு

8 மணி நேரம் தூக்கம்
1 மணி நேரம் காலைக் கடன் மற்றும் குளியல்
1மணி நேரம் 3 வேளை உணவு
1மணி நேரம் பைக், கார், பஸ், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கு
8மணி நேரம் வேலை
3மணி நேரம் குடும்ப நேரம், நண்பர் மற்றும் சுற்றத்தார் நேரம்
1மணி நேரம் 36 நிமிடம் தொலைக்காட்சி நேரம்

24 நிமிடம் தனி மனித தற்சோதனை நேரம்

ஒரு நாள் - 24 மணியா ? 24 நிமிடமா ?

சராசரியாக இந்தியனின் ஒரு நாள் வாழ்க்கையைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 24 மணி நேரத்தில் நமக்கு நம்மை பற்றி சிந்திக்க மிஞ்சுவது ஒரு நாளில் அந்த 24 நிமிடம் தான் !

அந்த 24 நிமிடத்தில் ... அறிவை ஆக்கத்துறையில் மற்றும் நல்ல வகையில் செலவு செய்து, ஊக்கமுடன் உழைத்தால், உயர்வு நிச்சயம்.

ஒரு நாள்..........24 நிமிடமே

மனிதா ! இரை தேடுவதோடு ... மன அமைதியையும் தேடு....

மனிதா ! இரை தேடுவதோடு ... இனிய உடல் ஆரோக்கியத்தையும் தேடு....
Vision without action is merely a dream;
Action without vision just passes time.
While vision with action can change the world -- J.J IRANI
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in