தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

வல்லரசு இந்தியா வளரும் இந்தியாவாக மாறிய விதம்.


துருப்பிடித்துச் சாவதைவிட களைப்படைந்து சாவது மேல்,
குறிப்பாகப் பிறருக்கு நன்மை செய்வதற்காக

- சுவாமி விவேகானந்தர்உலகப் பொருளாதார வளர்ச்சி ... சிறப்புப் பார்வை

உலக உற்பத்திக் குறியீட்டில் பல்வேறு நாடுகளின் பங்கு சதவீதத்தில் (%) கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வல்லரசு இந்தியா, பின்தங்கிய இந்தியாவாக 2000 ஆண்டுகளில் மாறிய கதையை ஒவ்வொரு இந்திய இளைஞனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.கி.பி.1 வல்லரசு இந்தியா

கி.பி. 1-ம் ஆண்டில் இந்தியாதான் உலகத்திலேயே மிகப் பெரிய வல்லரசாக விளங்கியது. நம்ப முடியவில்லையா ?ஆனால் , அதுதான் உண்மை .உலக உற்பத்தியில் 33 சதவீதம், இந்தியாவில்தான் நிகழ்ந்து உள்ளது. அதே காலகட்டத்தில் சைனா, தன் பங்காக இந்தியாவிற்கு அடுத்தபடியாக 27 சதவீத உலக உற்பத்தியைஸ் செய்துள்ளது.அந்த காலக்கட்டத்தில், ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக 14 சதவீத உற்பத்தியே நிகழ்ந்து உள்ளது.


கி.பி 1500 வல்லரசு இந்தியா...

கி.பி.1500 -ம் ஆண்டு காலக்கட்டத்திலும், இந்தியா உலக வல்லரசாகத் திகழ்ந்து உள்ளது.அந்த 1500 ஆண்டு காலக்கட்டத்தில் உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. அதே நேரத்தில், சைனாவும் இந்தியா அடைந்த 25 சதவீத உலக உற்பத்தியை எட்டிப் பிடித்தது. அதே வேளையில், ஐரோப்பிய நாடுகளும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து, உலகப் பொருள் உற்பத்தியில் 14 சதவீதத்தில் இருந்து முன்னேறி 21 சதவீதம் என்ற உயரிய நிலையை அடைந்தது.


கி.பி 1820 வல்லரசு சைனா .......... பின்தங்கிய இந்தியா

கி.பி 1820-ல் சைனா மற்றும் ஐரோப்பா நாடுகள் உலக வல்லரசாக உருப் பெற்றது. சைனா உலக உற்பத்தியில் 33 சதவீதத்தைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பா நாடுகள் உலக உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் வயப்படுத்திக் கொண்டது. அந்த காலக்கட்டத்தில், அதாவது கி.பி 1820 -ஆம் ஆண்டு, இந்தியாவில் உலக உற்பத்திப் பங்கு கி.பி. 15 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.


கி.பி 1870 வல்லரசு ஐரோப்பா பின்தங்கிய இந்தியா ....

கி.பி. 1870-ல் ஐரோப்பா நாடுகள் தொழில் நுட்பத்தில் மேலும் வளர்ச்சி பெற்று உலக உற்பத்தியில் 38 சதவீத பங்கை கைப்பற்றியது. அதே நேரத்தில், அதாவது கி.பி 1870- ஆம் ஆண்டு, இந்தியாவின் பங்கு உலக உற்பத்தியில் 12 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதே வேளையில், சைனாவின் உலக உற்பத்திக் குறியீடும் 17 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.


கி.பி 1973 வல்லரசு ஐரோப்பா ....

வளரும் அமெரிக்கா .... பின்தங்கிய இந்தியா ....
கி.பி 1950-ம் ஆண்டில் ஐரோப்பா நாடுகள் 31 சதவீத உலக உற்பத்தியை தன் பங்காக அளித்து , முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அமெரிக்கா தன் பங்கை 28 சதவீத அளவிற்கு மேலும் உயர்த்திக் கொண்டு உலக அளவில் இரண்டாம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. கி.பி 1950-ஆம் ஆண்டு, இந்தியாவின் பங்கு , உலக உற்பத்தியில் 4 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.


கி.பி 1973 வல்லரசு அமெரிக்கா...மிகவும் பின்தங்கிய இந்தியா

கி.பி 1973 -ம் ஆண்டில் ஐரோப்பா நாடுகள் 29 சதவீத உலக உற்பத்தியை உலகிற்கு அளித்து, உலக அளவில், முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.அமெரிக்கா தன் பங்கை 23 சதவீத அளவில் அடைந்து, உலக அளவில் இரண்டாம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. கி.பி 1973-ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு உலக உற்பத்தியில் வெறும் 3 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.


கி.பி 2001 வல்லரசு அமெரிக்கா .. வளரும் இந்தியா....

கி.பி 2001 - ம் ஆண்டில் அமெரிக்கா உலக உற்பத்தியில் 23 சதவீதத்தைத் தன் பங்காக அளித்து, உலகப் பொருளாதாரத்தில் முதல் நிலையை அடைந்தது. ஐரோப்பா நாடுகள், தங்களின் பங்களிப்பாக 21 சதவீத உற்பத்தியை அடைந்து உலகப் பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கி.பி 2001- ஆம் ஆண்டு, இந்தியாவின் பங்கு உலக உற்பத்தியில் 4 சதவீதமாக முன்னேறியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகளில், அடைந்த தொழில் முன்னேற்றத்தால் உலக வர்த்தகத்தில் சிறிது முன்னேற்றம்.


கி.பி 2008 வல்லரசு அமெரிக்கா .. வளரும் இந்தியா....

கி.பி 2008 - ம் ஆண்டில் அமெரிக்கா மொத்த உலக உற்பத்தியில் 21 சதவீதத்தைத் தன் பங்காக அளித்து, உலகப் பொருளாதாரத்தில் முதல் நிலையை தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பா 19 சதவீத உலக உற்பத்தியை அளித்து இரண்டாம் இடத்தை மீண்டும் அடைந்தது .கி.பி 2008 - ம் ஆண்டு, இந்தியாவின் பங்கு உலக உற்பத்தியில் 6 சதவீதமாக மேலும் முன்னேறியது. இரண்டு சதவீத முன்னேற்றம் ஏழு ஆண்டுகளில்.


உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு

கி.பி 1- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 33 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, கி.பி - 1950 ம் ஆண்டில் 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.


உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு

கி.பி 1950- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 4 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, சிறிது அளவு முன்னேறி,
கி.பி 2008- ம் ஆண்டில் 6 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது.


உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு

கி.பி 1- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 33 சதவீதத்தைத் தன் பங்காக கொண்டு இருந்த இந்தியா, கி.பி 1950- ம் ஆண்டில், 4 சதவீதத்தை மட்டுமே உலக உற்பத்தியில் தன் பங்காக அடைய முடிந்தது.
சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகளின் முடிவில், அதாவது 2008- ஆம் ஆண்டு , நமது இந்திய நாடு பல துறைகளில் வளர்ந்து உலக அளவில் 5 சதவீத அளவு மட்டுமே வளர்ச்சி அடைய முடிந்தது. ஏன் இந்த இமாலய வீழ்ச்சி, 2000 ஆண்டுகளில் ?


உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு

கி.பி 1820- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 2 சதவீதத்தைத் தன் பங்காக கொண்டு இருந்த அமெரிக்கா , கி.பி 1950- ம் ஆண்டில், உலக உற்பத்தியில் 28 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்தது.இத்தகைய அபரிமித வளர்ச்சி அமெரிக்காவில் 250
ஆண்டுகளில் , குறிப்பாகக் கடந்த நூறு ஆண்டுகளில் எப்படி நிகழ்ந்தது ?


உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு

கி.பி 1950- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 28 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு, சிறிது அளவு பின்னடைந்தது, கி.பி 2008- ம் ஆண்டில் 21 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.


உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு
கி.பி 1820- ம் ஆண்டில் உலக உற்பத்தியில் 2 சதவீத பங்கு மட்டுமே இருந்த அமெரிக்கா,1913 ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 21 சதவீத பங்கை அமெரிக்கா கைப்பற்றியது.

இத்தகைய மாற்றம் எப்பட் நிகழ்ந்தது ? அத்தகைய வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் யார்? அப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டும் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள நிறுவனங்கள் யாவை?
அமெரிக்காவில் 1900- ஆம் ஆண்டில் 5000 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அமெரிக்காவில் ,2000-ஆம் ஆண்டில் 50 லட்சம் கோடீஸ்வரர்கள் இருந்தனர்.அதாவது 100 வருடத்தில் 49 லட்சத்து 95 ஆயிரம் புதிய கோடீஸ்வரர்கள் அமெரிக்காவில் உருவானார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் , குறிப்பாக 20-ம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து உள்ளது.
1900-ஆம் ஆண்டில், ஒரு டிரில்லியனாக இருந்த உலக உற்பத்திக் குறியீடு, 2000 ஆம் ஆண்டில் 32 டிரில்லியனாக வளர்ச்சி அடைந்தது. அதன் பொருள் என்ன ?
20-ஆம் நூற்றாண்டின் கடைசியில் உலகப் பொருளாதாரம் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த நிலையைப் போல் 32 மடங்கு பொருள் உற்பத்தி செய்து உள்ளது.
இந்த வேகமான வளர்ச்சி நிலையிலும், அமெரிக்கா தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி கி.பி 2001-ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 21 சதவீதத்தைக் கைப்பற்றியது.
அமெரிக்கா தனது தனித்தன்மையை, பலப்பல தனி மனிதனின் தனித்தன்மையின் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தியது.

இன்று உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ஏஸி, மோட்டார் சைக்கிள், கால்குலேட்டர், கம்ப்யூட்டர், புகைப்படக் கருவிகள், நகல் எடுக்கும் கருவிகள், மருத்துவ சாதனங்கள் என்று இலட்சக்கணக்கான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அமெரிக்கர்கள்.

கடந்த இரண்டு நூற்றாண்டில், குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விஞ்ஞானப் புரட்சி அமெரிக்க நாட்டில் நிகழ்ந்து உள்ளது. இதற்குப் பின்னால், ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மாறுபட்ட சிந்தனை உள்ளது. அதன் விளைவு வளரும் அமெரிக்கா, வல்லரசு அமெரிக்காவாகப் பரிணமித்துள்ளது.இந்திய இளைஞனே .. சிந்தி

இந்திய இளைஞனே .. சிறிது சிந்தியுங்கள். கடந்த 2008 ஆண்டில் வல்லரசு இந்தியா எப்படி வளரும் இந்தியாவாகியது? அதே நேரத்தில் வெற்று அமெரிக்கா எப்படி வல்லரசு அமெரிக்காவாக மாறியது?இந்திய இளைஞனே .. விழித்தெழு

கி.பி 1-ஆம் நூற்றாண்டில் உலகத்தையே தன் கண்டுபிடிப்பால் ஆக்க வழியில் நடத்திஸ் சென்று இந்திய இளைஞனே ...
இன்று கி.பி 2009- ஆம் ஆண்டில் அமெரிக்கக் கண்டுபிடிப்பு வழியில் நடக்கத் தயாராகிவிட்டாயே?
இந்திய இளைஞனே தேவையா இந்த பின்னேற்றம் ?

ஒரு நிமிடம் சிந்தி ! இந்திய நாட்டுக்காக சிந்தி ! ஒரு நிமிடம் மாறுபட்டு சிந்தி !
இந்தியாவின் வேகமான முன்னேற்றத்திற்காக சிந்தி ! !அவசியமான சிந்தனை

இந்திய இளைஞனே .. ஆபாச மோகத்தை விரட்டி உலக சாதனைகள் பல இந்தியா உன் மூலம் செய்யத் தயாராகு !!

தேவை இல்லாத பல சிந்தனைகளை பல இந்திய இளைஞர்கள் தேவை ஆக்கி, தேவையான, மிக அவசியமான பல சிந்தனைகளைஸ் சிந்திக்க நேரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
உலகம் மறுபடியும் எப்போது இந்திய இளைஞனின் ஆக்கப் பூர்வமான கண்டுபிடுப்புப் பாதையில் செல்லும்?

2020 -ஆம் ஆண்டிலா ? ... அல்லது 2030- ஆம் ஆண்டிலா?
2040 -ஆம் ஆண்டிலா ? ... அல்லது 2050- ஆம் ஆண்டிலா?
விடை ஒவ்வொரு இந்திய இளைஞனின் சிந்தனை வேகம், சிந்தனைத் தெளிவில் மற்றும் சிந்தனை வழி செயல்பாட்டில் தான் உள்ளது.


இங்கிலாந்து ... அமெரிக்கா ... ஜப்பான்....

18 ஆம் நூற்றாண்டு மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் , இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள், உலகத்தை, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாட்டவரின் வசம் பொருளாதாரத்தில் ஆள வைத்தது.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க நாட்டவரின் மூலம் நிகழ்ந்த புதிய தொழில் கண்டுபிடிப்புகள், உலகத்தையே அமெரிக்கா வசம் பொருளாதாரத்தில் ஆள வைத்தது.


ஜப்பான் ............. தெற்கு கொரியா ......தைவான்

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1955 முதல் 1980 ஆம் ஆண்டு வரை ஜப்பானிய நாட்டவர்களின் மூலம் நிகழ்ந்து தொழில் கண்டுபிடுப்புகள், உலகத்தை ஜப்பானிய நாட்டவரின் வசம் பொருளாதாரத்தில் ஆள வைத்தது.

1981-ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை, தென் கொரியா மற்றும் தைவான் நாட்டவர்களின் தொழில் கண்டுபிடுப்புகள், உலகத்தையே தென் கொரியா மற்றும் தைவான் நாட்டவர்களின் வசம் பொருளாதாரத்தில் இழுத்து சென்றது.சைனா ......... இந்தியா

1991-ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சைனா நாட்டில் நிகழ்ந்த தொழில் நுட்ப கண்டுபிடுப்புகள், உலகத்தையே சைனா நாட்டவர்களின் வசம் பொருளாதாரத்தில் இழுத்து சென்றது.

2008- ஆம் ஆண்டு முதல் மெதுவாக இந்த மாற்றம் இந்தியாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.பலப்பல இந்திய பொருட்கள் உலகத்தையே இந்தியாவை நோக்கி இழுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !..

அந்த நிகழ்வு, இன்றைய இளைஞனின் சிந்தனைத் தெளிவில் தான் உள்ளது.குறிப்பாக


இந்திய இளைஞனே .......... விழித்துக் கொள்....

சிங்க இந்திய இளைஞனே ..........சிந்தனை செய்.........
21-ஆம் நூற்றாண்டில் உன்னுடைய சிந்தனையில் உதிக்க இருக்கும் இந்திய கண்டுபிடிப்புகள், உலகத்தையே ஆள இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


21-ஆம் நூற்றாண்டில் இந்திய இளைஞனே, "நான் உலகத்தை வழிநடத்தப் போகிறேன் என்று நினை ... உலகத்தை என் பாத சுவட்டின் வழி நடக்க வைப்பேன்."

என்று ஒவ்வொரு இந்திய இளைஞனும் .... திரும்பத்திரும்ப இந்த வார்த்தைகளை தங்களுக்குள் நினைக்க வேண்டும், சொல்லிக் கொள்ள வேண்டும். அதன்படி, செயல்களை அமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும், சாதிக்க வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.


"As a Indian I Should lead the world ...
world should follow me"உற்பத்தி வீழ்ச்சியில் இந்தியா ...

இந்திய இளைஞனே, உன் சக்தியை உன் பாரம்பரியத்தை நீ உணர்ந்தால் .... அமெரிக்கா என்ன உலகமே உன் காலடியில் .. உன் சிந்தனையால் உதைக்க கற்றுக்கொள்.

கடந்த 2000 வருட கால, உலக பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது தெள்ளத்தெளிவாக ஒரு விஷயம் தெளிவாகும். இந்தியர்களாகிய நாம் கடந்த 500 ஆண்டுகளில் ஒன்றாக சேர்ந்து குறட்டை விட்டு தூங்கிவிட்டோம்.

குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டவர்கள் மற்றும் இதர கிழக்கு ஆசிய நாட்டவர்கள் எல்லாம் கடந்த நூறு ஆண்டுகளில் வேகமாக விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொண்டு, அறிவு விழிப்பு அடைந்து பொருளாதாரத்தில் முன்னேறி விட்டனர்.


உற்பத்தி வீழ்ச்சியில் இந்தியா ...

இந்தியாவில் எந்த காலக் கட்டத்தில் பொருள் உற்பத்தியில் தவறு நிகழ்ந்தது ?

தற்போது இந்தியாவில் பொருள் உற்பத்தியில் என்ன தவறுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது?

உலக அளவில் மறுபடியும் இந்தியா பொருள் உற்பத்தியில் முன்னேறத் தேவைப்படும் மாற்றங்கள் என்ன?

இந்தியா மறுபடியும் வல்லரசு ஆக இன்றைய இந்திய இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன என்று பல்வேறு கோணங்களில் இந்த வல்லரசு இந்தியா 2050 (பாகம்-2) என்ற நூலில், வரும் பக்கங்களில் தெளிவாகப் பார்ப்போம்.
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in