தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

திட்டமிட்ட நாள்....திட்டமிட்ட வாழ்க்கை....

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

நாட்குறிப்பு

நம்மில் பலரிடம், நாட்குறிப்பு இருக்கும். வருலம் தோறும், டிசம்பர் மாதக் கடைசியில் நாட்குறிப்பு வாங்குவோம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு தவறாமல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளது ?

இந்தியாவில் உள்ள இளைஞர்களில் நூறு பேரை எடுத்துக் கொண்டால், ஒருவருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ நாட்குறிப்பு அழுதும் பழக்கம் இருக்கலாம்.

மீதம் உள்ள 98 சதவீதம் அல்லது 99 சதவீத இளைஞர்களுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமே கிடையாது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் நான் கேட்டு கிடைத்த விடையைக் கொண்டுதான் தொளிவாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

ஏன் இந்த அவல நிலை ?

நாட்குறிப்பு - பணம் இல்லை ? சோம்பேறித்தனம் ?

இந்த 98 முதல் 99 சதவீத இந்திய இளைஞர்களிடம் நாட்குறிப்பு வாங்க பணம் இல்லையா என்று வினவினால், பணம் ஒரு பிரச்சனை இல்லை.

இவர்களில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று அடுத்த ஆண்டிற்க்கான நாட்குறிப்பை வாங்கி, ஜனவரி மாதம் முதல் நாள் மட்டும் எழுதி விட்டு மற்ற நாட்கள் எல்லாம் எழுதாமல் விட்டவர்களாக இருப்பார்கள்.

டைரி அல்லது நாட்குறிப்பு எழுதாதவர்களிடம் காரணம் கேட்டால், பலரிடம் இருந்து பலக் காரணங்கள் பளிச்சென்று வெளிவரும்.

நாட்குறிப்பு ஏன் எழுத வேண்டும் ?

பல இந்திய இளைஞர்களிடம் நாட்குறிப்பு இருக்கிறது. ஆனால், எழுத சோம்பேறித்தனம், எழுத மனம் இல்லை. அத்தகைய இளைஞர்களின் மனதில் பல வகைக் கேள்விகள்...

* ஏன் நாட்குறிப்பு எழுத வேண்டும் ?
* எதற்க்காக நாட்குறிப்பு எழுத வேண்டும் ?
* நாட்குறிப்பில் என்ன எழுத வேண்டும் ?
* நாட்குறிப்பு எழுதாமல் வாழ்க்கை நடத்த முடியாதா?
* நாட்குறிப்பு எழுதாமல் வாழ்க்கையில் சாதிக்க முடியாதா?

நாட்குறிப்பு எதற்க்காக எழுத வேண்டும் ?

இன்னும் தொளிவாகச் சொல்லப் போனால், நம்மில் பல இளைஞர்கள், நாட்குறிப்பு எழுதும் நேரம் ஒரு நாளில், ஐந்து அல்லது பத்து நிமிட நேரம், ஒரு நாளில் மற்றும் வாழ்க்கையில் வீண் செய்யும் நேரம் என்று கருதுகிறார்கள்.

மேலும் சில இளைஞர்கள், நான் செய்ய வேண்டிய வேலைகளை நாட்குறிப்பு எழுதாமலேயே மனதில் திட்டமிடுவேன். ஆகவே, எனக்கு இந்த நாட்குறிப்பு எழுதும் பழக்கம் தேவை இல்லை என்று ஜம்பமாக சொல்லிக் கொள்வார்கள்.

இதையும் தாண்டி சில இளைஞர்கள் மேலும் விளக்கமாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை பற்றி கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.

* நாட்குறிப்பு கட்டாயம் ஒருவர் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பு தினம் தினம் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பை அந்த நாள் முடிந்த பிறகு இரவு நேரத்தில் எழுத வேண்டுமா ?

நாட்குறிப்பை எப்படி எழுத வேண்டும் ?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* நாட்குறிப்பை ஒரு நாள் முன்னால் எழுத வேண்டுமா ?
* நாட்குறிப்பில் என்ன, என்ன விசயங்கள் எழுத வேண்டும் ?
* ஒரு நாளில், ஒவ்வொரு மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா ?
* ஒரு நாளில், ஒவ்வொரு அரை மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா ?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* ஒரு நாளில் ஒவ்வொரு 1/4 மணி நேரமும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நாட்குறிப்பை எழுத வேண்டுமா?
* ஒரு நாளில் 8 மணி நேரம் வெளியில் தொழில் மற்றும் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தைப் பற்றி நாட்குறிப்பு எழுத வேண்டுமா?
* ஒரு நாளில் 18 மணி நேரம் வீட்டில் செலவு செய்யும் நேரத்தில் 8 மணி நேரம் செலவு செய்யும் குடும்ப நேரத்தைப் பற்றி நாட்குறிப்பை எழுத வேண்டுமா?

இளைஞனின் கேள்விக் கணைகள்..........

* ஒரு நாளில், 16 மணி நேரம் வீட்டில் செலவி செய்யும் தனி மனித நேரத்தைப் பற்றி எழுத வேண்டுமா ?
* ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சாதரண சம்பவங்கள் பற்றி எழுத வேண்டுமா?
* ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சாதனைகளை அல்லது அசாதாரண சம்பவங்களைப் பற்றி எழுத வேண்டுமா?

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

இன்றைய இளைஞன். குறிப்பாக நவநாகரீக இளைஞன் கட்டாயம் நாட்குறிப்பு எழுத வேண்டும்.

ஏன் ? எதற்கு ?

இன்றைய விரைவான உலகத்தில், பலப்பல வேலைகளை திறம்பட, குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய நிலையில் இந்திய இளைஞன் இருக்கிறான்.

திட்டமிட்ட வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

அதே வேளையில், திட்டமிடாத வாழ்க்கை, திட்டமிட்டு ஒருவனை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்.

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

இந்த உலகில் நம்மைச் சுற்றி பலர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால், தோல்வி.....தோல்வி...என்பதையே சந்தித்துக் கொண்டு வெற்றியையே மருந்துக்கூட பார்ப்பது இல்லை.

காரணம், பலர் ஒரு செயலை திட்டமிடாமல் செய்துவிட்டு, தோல்வியடைந்துவிட்டு, பிறகு தோல்விக்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். மேலும், பலர் பல சமயம் தோல்வியடைந்தும் கூட அதில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது கிடையாது.

நம்மைச் சுற்றி பல தோல்வியடைந்த மனிதர்கள் உள்ளனர். அதே வேளையில், நம்மைச் சுற்றி சில வெற்றி அடைந்த மனிதர்களே உள்ளனர்.

தோல்வியடைந்த மனிதர்களிடம் திட்டமிடாத வாழ்க்கை முறையைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வெற்றி அடைந்த மனிதர்களிடம் திட்டமிட்ட வாழ்க்கை முறையைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

வெற்றியடைந்த மனிதர்களிடம் நேரம் தவறாமை, நேரத்தில் ஒரு செயலைச் செய்யும் பாங்கு என்று பல நல்ல குணங்கள் கண்கூடாகத் தென்படும். மேலும் வெற்றியாளர்கள் சிந்தனையோடு உழைக்கின்றார்கள். அதற்கு உண்டான பலனை அவர்கள் அடைகிறார்கள்.

திட்டமிட்ட வாழ்க்கை.......வெற்றிக்கு வழி.........

"கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்ற நேற்றைய கோட்பாடு தவறானது.

"சிந்தனையோடு கூடிய உழைப்புக்கு ஈடு இணை கிடையாது" என்பதுதான் இன்றைய காலகட்டத்துக்கு உகந்த கோட்பாடு.

கடினமாக உழைப்பவர்கள் அதுவும் திட்டமிடாமல் கடினாமாக உழைப்பவர்கள் வெற்றியடைய முடியாது. திட்டமிடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியான வேலையை சரியாகத் திட்டமிட்டால் வெற்றியில் பாதி அடைந்ததாக அர்த்தம்...

"செயல்களை திட்டமிட்டு திட்டமிட்டபடி செயலாற்று"


என்று சொல்வது மிக மிக எளிது.

ஆனால், இந்த உலகில் நூறு பேரில், ஒருவர்தான் இதை வாழ்வில் குறிப்பாக தினசரி வாழ்வில் செயல்படுத்துகிறார். மற்றவர்கள் செயல்படுத்துவது இல்லை ஏன் ?

"செயல்களை திட்டமிடுவதே இல்லை !
பிறகு எப்படி திட்டமிட்டபடி செயலாற்றுவது ?

அதன் பிறகு, திட்டமிட்ட செயலை, திட்டமிட்ட படி, சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு செய்தால் வெற்றி.

திட்டமிட்ட வாழ்க்கை

இப்பொழுது தெளிவாகப் பார்போம். ஏன் நாட்குறிப்பு எழுத வேண்டும் என்று.....தினம், தினம் இந்திய இளைஞன் தன்னிடம் உள்ள நிறை என்ன ? குறை என்ன ? என்று தற்சோதனை செய்ய வேண்டும் ?.

பிறகு, நிறைய தினம் தினம் அதிகரிதுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே வேளையில், குறைகளை தினம் தினம் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த நிறை, குறை சமன்பாட்டை ஒரு இளைஞன் முறையாகச் செய்யும் பொழுது கட்டாயம் அந்த இளைஞன் பிற்காலத்தில் செயற்கரிய செயல்களைச் செய்ய முடியும்.

நாட்குறிப்பை இரவில் எழுதுவதை விட, முதல் நாள் இரவே. அடுத்த நாள் செய்ய இருக்கும் செயல்களைத் தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு அதன்படி, செயல்களை அமைத்துக் கொள்ளும் பொழுது அந்த ஒரு நாள் இனிய நாளாக மாறுகிறது.

அதாவது, ஒரு இளைஞனின் வாழ்வில் பலப்ல சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில சாதனை நிகழ்வுகள் தான் நடைபெறுகின்றன. சுருங்கச் சொன்னால், ஒரு இளைஞன் நாட்குறிப்பு எழுதுவதன் மூலம், நேரத்தை சரியாக நிர்வகித்து, சாதனை நிகழ்வுகளுக்கான அடித்தளம் அமைத்துக் கொள்கிறான்.

தனி ஒரு மனிதன், சாதாரண நாளாக ஒரு நாளை அமைத்துக் கொள்ள நேர மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் தேவை இல்லை !

ஆனால், தனி ஒரு மனிதன் அசாதாரண நாளாக ஒரு நாளை மாற்றத் தெளிவான மிகத்துல்லியமான நேர மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் தேவை !

இளைஞனே 24 மணி நேரம் கொண்ட ஒரு உன்னதமான நாளை, விழிப்புணர்வோடு நெருப்பு ஆற்றைக் கடப்பது போல் 24 நிமிட நேர நிர்வாக விழிப்புணர்வு என்ற கவச உடை கொண்டு கடந்து சமச்சீர் வாழ்க்கை நடத்து, உலகம் உன் காலடியில்.
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in