எப்பொது தொழில்?


4.1 கல்வியின் நோக்கம்
கல்வியின் நோக்கம் பொருள் ஈட்டுவது , குடும்ப மற்றும் சமுதாய வாழ்கையை சீரிய முறையில் அமைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ்வது.
தனிமனிதன் 3 வழிகளில் பொருள் ஈட்டலாம். முதலாவது வேலைக்கு சென்று, அங்கு மாதமாதம் சம்பளம் வாங்குவது.
இரண்டாவது, சுயவேலை , வியாபாரத்தின் ஒரு பங்கை திறமையாக செய்து சொந்த காலில் நிற்பது. மூன்றாவது, சுயதொழிலில், தொலைநோக்கு முறையில் திட்டமிட்டு, ஒரு தொழிலை ஆரம்பித்து, அந்த தொழிலை திறம்பட நடத்தி வெற்றி பெறுவது.

4.2 வேலை
இந்தியாவில் வருடா வருடம் 1 கோடி பேர் பள்ளி , மற்றும் கல்லூரியில் படித்து முடிக்கின்றனர். அவர்களில் 95 % வேலை தேடி அலைந்து, எதோ ஒரு வேலையில் சேர்ந்து , அந்த வேலையை திறம்பட செய்தல், பதவி உயர்வு, நிறைய சம்பளம், சேமிப்பு, வீடு, கார், மகன் மற்றும் மகள் படிப்பு பிறகு திருமணம் என்று தங்கள் வாழ்நாட்களை சாதாரண வகையில் முடித்து விடுகின்றனர்.


4.3 சொந்தக் கால்
மீதம் உள்ள 5 சதவீதம் மக்கள் , சொந்தக் காலில் நிற்க நினைக்கிறார்கள் அவர்களில், 4,999 சதவீத மக்கள் சுயவேலையாளராக மாறுகின்றன. மீதம் உள்ள 0.001 சதவீதம் மக்கள் சுய தொழில் செய்பவர்களாக மாறுகிறார்கள்.


4.4 சுய தொழில் vs சுய வேலை
சுய தொழில் என்பது தொழில் கனவு முதல் வியாபார வெற்றி வளர, புதிதாக ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையே சந்தை வாய்ப்பை கண்டுபிடித்து அதில் இறங்கி முழு முனைப்போடு செயல்பட்டு, எடுத்து கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவது.

சுய வேலை என்பது வியாபாரத்தில் உள்ள பல வேளைகளில் ஒரு அங்கம் குறிப்பாக, தொழில் முனைவோர், ஒரு பொருளை உற்பத்தி செய்யலாம். ஆனால் அவரே அந்த பொருளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்ய முடியாது.

அத்தகைய தொழில் முனைவோருக்கு, பல ஊர்களில் ஏஜென்ட், மற்றும் சில்லறைக் கடை தேவை. அத்தகைய ஏஜென்ட் மற்றும் சில்லறை வியாபாரிகள், சுயவேலை ரகத்தை சேர்ந்தவர்கள்.


4.5 கல்வியின் பயன்
நம்மில் பெரும்பாலானோர், வாழ்நாளில் 3 வயது முதல் 20 வயது அல்லது 22 வயது வரையிலான காலகட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்காக செலவு செய்க்றோம்.
அதாவது, சாதாரண இந்திய மனிதனின் வாழ்நாளில் (65 வருடம்), மூன்றில் ஒரு பங்கு நேரத்தை (21 வருடம்) படிப்பதற்கு என்றே செலவு செய்கிறோம். அத்தகைய உயரிய படிப்பின் நோக்கம் தான் என்ன?

படிப்பின் நோக்கம் வேலைக்கு செல்வதா?
மாதா மாதம் சரியாக முதல் தேதி சம்பளம் வாங்குவதா?
எளிமையாக மாதா மாதம் கை நிறைய சம்பாதிப்பதா? அல்லது
படிப்பின் நோக்கம் தொழில் முனைவோராக உருவாவதற்காகவா?
வாழ்வின் நோக்கம், கடினமாக சிந்தனையோடு கூடிய உழைப்புக்கா?

ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்நாளில் ஒரு காலக் கட்டத்தில் சிந்தித்து கேட்க வேண்டிய கேள்விகள்.

படிப்பு என்பது எழுத்தறிவு மட்டும் அல்லாமல், தொழில் அறிவை குறிப்பாக சொந்தத் தொழில் செய்யும் அறிவை தர வேண்டும், படிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், தான் தன் குடும்பத்திற்கு மட்டும் பயனுள்ளதாக அமையாமல் சமுதாயத்திற்கு மற்றும் இந்த உலக மக்களுக்கு பயன் உள்ள வகையில் அமைய வேண்டும்.



4.6 எப்போது தொழில்
எந்த வயதில் தொழில் ஆரம்பிப்பது சிறந்தது?
ஒருவரது 20 வது வயதில் தொழிலா? அல்லது
ஒருவரது 30 வது வயதில் தொழிலா? அல்லது
ஒருவரது 40 வது வயதில் தொழிலா? அல்லது
ஒருவரது 50 வது வயதில் தொழிலா? அல்லது
ஒருவரது 60 வது வயதில் தொழிலா?


4.7 எந்த வயது சரியான வயது?

நான் கௌரவ மேலாண்மை விரிவுரையாளராக, சென்ற ஒரு கல்லூரியில், 22 வயது, நிரம்பிய mba (முதுகலை வியாபார மேலாண்மை ) பயின்ற மாணவர்களை பார்த்து வகுப்பறையில் கடைசி நாள் அன்று கேட்டேன், 2 ஆண்டு படிப்பு முடித்து விட்டு வேலைக்கு போகிறீர்கள் அல்லது தொழில் ஆரம்பிக்கப் போகிறீர்கள்? என்று.

என் வகுப்பறையில், இருந்த அனைவரும் ஒரு சப்தமாக சொன்னார்கள் "வேலைக்குதான் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்".

ஏன் தொழில் தொடங்க ஆர்வம் இல்லையா?
என்று நான் கேட்டேன்
அதற்கு பெருவாரியான மாணவர்களிடம் இருந்து கீழ் கண்ட இரண்டு பதில்கள் கிடைத்தது.

1 ) சார், அனுபவம் இல்லை....
2 ) சார், பணம் இல்லை.....

நான் கேட்டேன் பணம் மற்றும் அனுபவம் தான் தொழில் தொடங்க பிரச்சனையா? என்னுடைய MBA மாணவர்கள் "ஆமாம் சார்" என்று பலத்த குரலில் சொன்னார்கள்.

4.8 22 வயது பிரச்சனை
நான் அத்தகைய MBA மாணவர்களை பார்த்து கேட்டேன், 22 வயதில் அனுபவம் இல்லை, பணம் இல்லை சரி, ஒத்துக் கொள்ளலாம். வாழ்கை பயணத்தை ஒரு முன்னோட்டம் பார்ப்போர், ஆம், Fast Forward செய்வோம் என்றேன். மாணவர்களும் சரி என்றனர்..

4.9 30 வயது பிரச்சனை

உங்களுடைய 30 வயதில், இங்கு உள்ள அனைவருக்கும், 8 வருட தொழில் அனுபவம் வந்து விடும், மேலும் பணம் 3 லட்சம் முதல் 5 லட்சம் வந்து விடும். அப்போது தொழில் ஆரம்பிக்கலாமா என்றேன்?

இல்லை, இல்லை என்று என் மாணவர்கள் உரத்த குரலில் தெரிவித்தனர். ஏன்? என்று வினவினேன். 30 வயதில், முதலிலே, வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புகிறேன் என்ற விடைதான் பலரிடம் இருந்து வந்தது.
அது என்ன வாழ்க்கையில் செட்டில் என்றேன்?

சார், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புகிறோம் என்றனர்.

தொழில்?

வாழ்கையில் பிறகு பார்த்துப் கொள்ளலாம் என்றனர்.

4.10 40 வயது பிரச்சனை
பிறகு அடுத்து பத்து ஆண்டுகள் உருண்டு ஓடுகிறது என்ற வைத்துக் கொள்வோம்.
40 வது வயதில் 18 வருட தொழில் அனுபவம், மற்றும் 15 முதல் 20 லட்சம் வரை பணம் வந்து விடும்.
40 ஆவது வயதில் தொழில் ஆரம்பிக்கலாமா என்றேன்?
அப்போது இல்லை சார், பிறகு,
ஒரு மாணவன் தெளிவாக சொன்னான் எனக்கு அப்போது 4 வது வகுப்பு படிக்கும் மகனும் 2 வது வகுப்பு படிக்கும் மகளும் இருப்பார்கள், அவர்களுக்கு எதும் அறியாத வயது. ஆகையால், அந்த சரியான தருணத்தில் நான் அவர்களுக்கு உதவியாக இருக்க விளைகிறேன்.
சரி, அந்த சமயத்தில் ரூபாய் 15 முதல் 20 லட்சம் வரை சம்பாதித்த பணத்தை பார்த்ததை என்ன செய்வீர்கள் என்றேன்.
அதற்கு அந்த மாணவன், தொழில் வேண்டாம். கையில் உள்ள பணத்தை கொண்டு ஒரு பங்களா மற்றும் கார் வாங்குவேன் என்றான்.
என்ன ஒரு தெளிவான, யதார்த்த சிந்தனை. இன்றைய மாணவர்களுக்கு என்று நினைத்துக் கொண்டேன்!!

4.11 50 வயது பிரச்சனை

அடுத்து பத்து ஆண்டு நகர்ந்து ஓடுகிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள்.
50 வது வயதில், 28 வருட தொழில் அனுபவம், மறுபடியும் பணம் சம்பாதித்தது 10 முதல் 15 லட்சம் வரை, 50ல் தொழில் ஆரம்பிக்கலாமா என்றேன்?

மனம் இல்லை. ஏன்?

அப்போதும் தொழில் இல்லை சார். மற்றொரு மாணவன் தெள்ளத் தெளிவாக சொன்னான், ஏற்கனவே என் வாழ்வில் என் உடம்பு என் கையில் இருந்தது. தற்போது என் உடம்பு என் மருத்துவ நிபுணர் அல்லது டாக்டரின் கையில் உள்ளது.

ஏன் என்று நான் வினவினேன்!

எனக்கு சர்க்கரை நோய், பிரஸர் நோய், மாரடைப்பு, மற்றும் பல நோய்கள் தொற்றிக் கொண்டு விட்டது.

அது தவிர, என்னுடைய வயதான தாய், தந்தயை மற்றும் வயதான மாமன், மாமியார் என்று அந்த வயதை சேர்ந்த வயோதிக அன்பர்களையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளேன்.

மற்றொருசெய்தி என்ன வென்றால், அந்த நபரின் மனைவியும் நல்ல உடலோடு ஆரோக்கியமாக இல்லை. தினம், தினம் ஒரு மருந்து, மருத்துவர், என்று சென்று கொண்டே இருந்தார்.

ஆம் உள்ளத்திலே களங்கம், உடலிலே நோய்

இதி தவிர, 50 வயதில், அந்த நபரின், மகள் மற்றும் மகன் பள்ளி படிப்பை முடிக்கும் மற்றும் கல்லூரி படிப்பை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளனர். இத்தகைய குடும்ப சூழ்நிலை மற்றும் பொறுப்புகளுக்கு நடுவில் தனி நபர் தன்னுடைய 50 வது வயதில் தொழில் ஆரம்பிக்கும் சிந்தனையை செய்ய முடியவில்லை.


4.12.60 வயது பிரச்சினை:


அடுத்த பத்து ஆண்டுகள் வாழ்க்கையில் உருண்டி ஓடுகிறது, என்று வைத்துக்கொள்வோம். அந்த நபரிடம் தங்களின் 60வது வயதில் தொழில் தொடங்க உத்தேசமா? என்று கேட்டால், அதற்கு அவரிடம் இருந்து கிடைத்த விடை...

58 என்பது ஓய்வு பெறும் வயது என்று ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுக்கு முன்னரே பதிப்பித்து உள்ளனர்.

நான் இப்போது 60வது வயதை கடந்து விட்டேன். இனி புற உலகை ரசிக்கும் வயது. நான் எந்த ஒரு சீரியஸான தொழிலையும் தொடங்க உத்தேசம் இல்லை. என் அடுத்த வாரிசுகள் தொழில் தொடங்கி வெற்றி பெறுவார்கள்.

எங்கே தவறு நிகழ்ந்தது மிஸ்டர் ('X') வாழ்க்கையில் ?


4.13 22வது வயதிலே?!

தொழில் தொடங்க பணம் ஒரு பிரச்சனையாக இல்லை பணம் ஒரு பிரட்சனையாக தொழில் தொடங்க இருந்திருந்தால் இந்த உலததில் நாம் பார்க்கும் இலட்சகணக்கான சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் உருவாகி இருக்க முடியாது?

அனுபவம் ஒரு பிரட்சனை இல்லை. அனுபவம் ஒரு பொருட்டாக இருந்து இருந்தால், திருபாய் அம்பானி பெட்ரோல் போடும் மனிதனாக தன் வாழ்நாளை முடித்து இருப்பார். ஒரு இலட்சம் கோடி வியாபாரம் செய்யும் ரிலையன்ஸ் குழுமத்தை தன் வாழ்நாளில் நிர்ணயித்து இருக்க முடியாது.

உண்மை என்னவென்றால் தன் சொந்த காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை 22வது வயதில் இல்லை!!.

தன்னால் 22வது வயதில், இந்த உலகத்தில் ஒரு சாதனையை செய்ய முடியும் என்ற தகர்க்க முடியாத மன உறுதி மற்றும் அதன் வெளிப்பாடன செயல் இல்லை!!.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.