வளரும் இந்தியா, வல்லரசு இந்தியாவாக...


இந்திய இளைஞனே உலகம் உன் காலடியில்

பலவீனத்தை பலம் என்ரும், பலத்தை பலவீனம் என்றும் நினைத்து, வாழ்நாள் முழுவதும் அதிகமான இந்திய இளைஞர்கள் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய இந்திய இளைஞனுக்குத் தேவை சிந்தனையோடு கூடிய கடின உழைப்பு.

இந்திய இளைஞனே சிந்திக்கப் பழகு ... தொலைநோக்கு சிந்தனையோடு சிந்திக்கப் பழகு.. அமெரிக்கா என்ன... உலகமே உன் காலடியில்.

உலகமான பந்தை உன் சிந்தனையால் உதைத்து உருட்டக் கற்றுக்கொள்.



உலகப் பொருளாதார வளர்ச்சி...... சிறப்புப் பார்வை

இந்திய இளைஞனே பொறுத்தது போதும்...

இந்திய இளைஞனே, வல்லரசு இந்தியா பிந்தங்கிய இந்தியாவாக 2000 ஆண்டுகளில் மாறிய கதை, மற்றும் பின்தங்கிய அமெரிக்கா 100 ஆண்டுகளில் வல்லரசு அமெரிக்காவாக மாறிய கதையை தெளிவாக புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

இந்திய இளைஞனே பொறுத்தது போதும்... பொங்கி எழு!
இந்திய சிங்க இளைஞனே, தின்று, திரிந்து, உறங்கியது போதும்.
இன்று முதல்... வீறு கொண்டு எழு.
இன்றே சாதிக்கப் புறப்படு
உலகம் உன் காலடியில்.. உதைக்கக் கற்றுக்கொள்...
உன் சிந்தனைக் கூற்மையால்.



இந்திய இளைஞனே உன் சக்தியை உணர்....

இந்திய இளைஞனே ! உன் கடமை என்ன ? இன்று முதல் வளரும் இந்தியாவை வல்லரசு இந்தியாவாக மாற்ற நீ என்ன செய்ய வேண்டும் ?

உன் பாரம்பரியத்தை முதலில் உணர்ந்து கொள் ! பிறகு உனது அபரிமித உடல் மற்றும் மன சக்தியைப் பற்றி விழிப்புணர்ச்சி கொள் !!
இந்தியா அடுத்த 41 ஆண்டுகளில் வல்லரசு இந்தியா என்ற உன்னத நிலையை அடைய அயராது தொலைநோக்கு சிந்தனை செய், சிந்தனை வழி செயல்களை அமைத்துக் கொள், உலகம் உன் காலடியில் .

கி.பி 2010-ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
இந்திய இளைஞனே, முதலில் தெளிவாக நாட்டுப் பற்றோடு கனவு காணத் தெரிந்து கொள். பிறகு கனவை நனவாக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்.

முண்டாசுக் கவிஞன் பாரதி சொல்கிறார். "எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ண வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்"

உலகப் பொருள் உற்பத்தியில் 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு வெறும் 6% மட்டுமே.இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பேச்சைக் குறைத்து சிந்தனையை உயர்த்தி இந்தியா உலகப் பொருள் உற்பத்தியில் 2010 ஆம் ஆண்டு 8% என்ற இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும்.

கி.பி 2020 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
உலகப் பொருள் உற்பத்தியில் 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு வெறும் 6% மட்டுமே.இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பேச்சைக் குறைத்து சிந்தனையை உயர்த்தி இந்தியா உலகப் பொருள் உற்பத்தியில் 2010 ஆம் ஆண்டு 8% என்ற இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும்.

மேலும் 2020-ஆம் ஆண்டில் " Made in India " என்ற அளவுக்கு உலக அளவில் மக்கள் தரம் வாய்ந்த இந்தியப் பொருட்களை நோக்கி ஈர்க்கப்படும் அளவிற்கு தரத்தை உயர்த்தி, விலையைக் குறைத்து உலகெங்கும் இந்தியப் பொருட்களை மக்கள் விரும்பி கேட்கும் அளவிற்கு உலக மக்களின் இதயத் துடிப்பை ஒவ்வொரு இந்திய இளைஞனும் புரிந்து கொண்டு 13% என்ற இலக்கை அடையப் பாடுபட வேண்டும்.

கி.பி 2030 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு

2030 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா அடைய, அதாவது 20% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக மேலும் அயராது பாடு பட வேண்டும்.

கி.பி 2040 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு

2030 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா அடைய, அதாவது 20% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக பாடு பட வேண்டும்.

2040 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 27% என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக மேலும் அயராது பாடு பட வேண்டும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. பாதங்கள் நடக்கத் தயாராக இருக்கும் பொழுது பாதைகள் மறுப்பது இல்லை.

கி.பி 2050 - ல் இந்தியா அடைய வேண்டிய இலக்கு
2050 - ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 33% என்ற இலக்கை இந்தியா அடைய, அதாவது உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா அடைய கடினமாக , சிந்தனையோடு கூடிய உழைப்பாக , ஒவ்வொரு இளைஞனும் முழு மூச்சாக பாடு பட வேண்டும்.

அத்தகைய சாதனை சாத்தியமே, இந்திய இளைஞனிடம் சிந்தனைத் தெளிவு மற்றும் தொலைநோக்கோடு கூடிய உழைப்பு இருந்தால் !!

உலகப் பொருளாதாரம் நேற்று... இன்று .......நாளை

நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
இன்றைய உலகம் சைனா கையில்......!
நாளைய உலகம் இந்தியா கையில்......!!
Waiting for your valuable feedback and criticisms.

Also, Read


View our famous series 


Don't forget to share this post if you like.
I am K.B.Dharun Krishna wanted any new post feel free to mail me at  kbdharunkrishna@gmail.com

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.