தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

வாழ்க்கைத் திறன் கல்வி

4.1 சுற்றுச்சூழல் கைதி - வளரிளம் பெண்:

இன்றைக்கு வளரிளம் பருவத்தினர் கேடு விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபட்டு, உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கி அல்லல்படுகின்றனர். அவர்களின் சூழலிலுள்ள திரைப்படம், தொலைக்காட்சி, தரம் தாழ்ந்த பத்திரிக்கைகள் முதலியவற்றில் வரும் கட்சிகள், நிகழ்வுகள், கருத்துக்களே காரணங்களாக உள்ளன.

4.2 உடல் மாற்றம்...உள்ள மாற்றம்....

மேலும் ஹார்மோங்களால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்; மனதில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியான எண்ணங்கள்; உடனிருக்கும் நண்பர்களின் வற்புறுத்தல்கள்; இவை எல்லாவற்றையும் இளையவர் கோணத்தில் பார்க்கத்தவறி, வளரிளம் பருவத்தினர் நடத்தை பற்றிய பயத்தினை, அக்க்றையாக வெளிப்படுத்தாமல் கட்டளையாக, கட்டாயத் திணிப்பாக வெளிப்படுத்தும் பெரியவர்களின் சொற்கள் முதலியனவும் காரணங்களாக விளங்குகின்றன.

4.3 வாழ்க்கையில் எது சரி?....எது தவறு?

இவ்வாறு நாலாப் பக்கங்களிலிருந்தும் வெவ்வேறு செய்திகளை வெவ்வேறு நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைப் பெறும் வளரிளம் பருவத்தினர் எது சரி, எது தவறு, எப்படி நடந்துகொள்வது என்று புரியாமல் திணறுகின்றனர்.

4.4 வாழ்க்கைத்திறன் கல்வி:

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது" என்பது நமது கிராமங்களில் நம் காதில் விழும் ஒரு கூற்று. ஆனால், இந்த வாழ்க்கைத்திறன் கல்வி சுரக்காய் கூட்டுக்கு உதவும்.

வாழ்க்கைத்திறன் கல்வியானது வளரிளம் பருவத்தினர் வாழ்க்கையை, அதன் இனிமையை, அபாயங்களை அதனதன் கோண்த்தில் பார்த்து கலத்துடன் வாழ உதவுகிறது.

4.5 எழுத்தறிவு....தொழில் அறிவு....

நாம் அனைவரும் பள்ளியில் வெவ்வேறு பாடத்திட்டங்களைப் படிக்கிறோம்; புரிந்து தேர்ச்சி பெறுகிறோம். இந்த கல்விமுறை கணக்கு, அறிவியல், வரலாறு போன்ற துறைகளில் நம்முடைய அறிவை அகலப்படுத்துவத்தோடு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரவும் உதவுகிறது.

4.6 வாழ்க்கை அறிவு:

இதைத்தவிர அன்றாட வாழ்க்கையைக் கையாளுவதற்கு நமக்கு சில திறன்கள் தேவைப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கைத் திறங்களை எந்தவொரு பிரிவினரும், அவர்களுடைய வயதிற்க்கும் பழகக்கூடிய சூழலுக்கும் எற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாழ்க்கை திறங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று, அவற்றை வள்ர்த்துக்கொண்டு, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடித்து நலத்துடன் வாழ்க்கையை வாழ வளரிளம் பெண் முற்பட வேண்டும்.

4.7 மூன்று பரிமாணங்கள்:

ஒரு வளரிளம் பெண்ணிற்கு, 1. சமூக திறங்கள், 2. சிந்திக்கும் திறங்கள், 3. உணர்வுகளுடனான சமரசத்திறங்கள் ஆகியன வாழ்க்கைத் திறன்களில் முப்பரிமாண கூறுகளாக அமைகின்றன.

4.8 சமூகத்திறங்கள்

4.8.1 தன்னை அறிதல் (Self Awarness):

ஒரு பெண் தன்னுடைய நிறைகள், குறைகள், மதிப்பீடுகள், பார்வைகள், குணங்கள், தேவைகள், ஆசைகள், கனவுகள், உணர்வுகள் என்று அனைத்தையும் உணர்ந்து கொள்ள உதவும் திறனே தன்னை அறிதல் திறன் ஆகும்.

ஒரு பெண் தன்னைப்பற்றி இவ்வாறு முழுமையாக அலசி, ஆராய்ந்த்து உண்ர்ந்த பின்னரே எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடமுடியும். தன் உணர்வுகளைப் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர்களால் தான் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ முடியும்.

4.8.2 பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல் (Empathy):

தன் உணர்வுகளை நன்கு உணர்ந்து கொண்ட ஒரு பெண்ணல் தான் மற்றவர்களின் உணர்வுகளை உணர இயலும். அப்படி உணரும் பொழுது அவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் சரிவரப் புரிந்துகொள்ளலாம். இதனால் நமக்கும் பிறருக்குமான புரிதல் வலுப்படுகிறது.

அனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு பிறரை விமர்சனம் செய்யாமல் இருப்பதாகும். எவரையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது மிகவும் எளிது, ஆனால், அது மிகவும் தவறான செயலாகும். ஒருவரைத் தெரிந்து கொள்வதற்கு அவர் நிலையில் நின்று, அவர் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதே சிறந்த வழியாகும்.

4.8.3 ஒருவருக்கொருவர் உறவுமுறை (Inter Personal Relationship):

எல்லாம் ஏதாவது ஒரு நெருக்கமான உறவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறோம். அம்மா-மகன், அப்பா-மகள், அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி, சித்தி, அத்தை, மாமா, நண்பர்கள் இவ்வாறு பல நெருக்கமான உறவுகளில் இருந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து ஆரோக்கியமான உறவாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உறவோடு பழகும் திறன் மூலம், நம்மால் நெருக்கமானவர்களுடன் தொடந்து நல்ல விதமாக உறவுகளைக் கையாள முடிகிறது. இது நம் மனதை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவுவதோடு, சமுதாயத்திலும் நன்மதிப்புடன் செயல்பட உதவுகிறது.

4.8.4 சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன் (Communication Skill):

நாம் மற்றவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறோம். இதை நம்மால் எல்லா நேரங்களிலும் சிறப்பாகச் செய்ய முடிகிறதா, நாம் நினைப்பதைச் சரியாக வெளிப்படுத்த நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றையும் வார்ததைகளால் தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நம்முடைய மெளனம் கூட ஒரு மொழியாகலாம். உடல் செய்கைகள், அசைவுகள் மூலம் நாம் நினைப்பதை வெளிப்படுத்தலாம்; வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்தலாம்.

உரையாடலுக்குச் சொற்களும், உடலசைவும் எவ்வளவு மக்கியமோ அவ்வளவு முக்கியம், பிறர் பேசும் பொழுது காது கொடுத்து கெட்டல் என்பது ஒரு கலை, உற்றுக்கேட்பது பேசுபவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

4.9 சிந்திக்கும் திறன்கள்:

4.9.1 கூர்சிந்தனைத் திறன் (Critical Thinking Skill)

வாழ்க்கை நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை எந்த சார்புமின்றி நடுநிலையோடு பகுப்பாயும் திறனே கூர்சிந்தனைத திறனாகும். நம்முடைய சிந்தனை, செயல்பாடு இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை எடை போட இக்கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

ஒத்த வயதினர் தாக்கம், மக்கள் தொடர்புச் சாதனங்களின் தாக்கம், ஆகியவற்றால் அலைபாயும் மனத்தை நன்னிலைப்படித்தக் கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த முடிவுகளை எடுப்பதற்க்கு கூர் சிந்தனைத்திறன் பயன்படும். எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்னென்ன, விளைவுகள் அனைத்தும் நம் விருப்பம் போல் அமையுமா, எனச் சிந்தித்து செயல்படக் கூர்சிந்தனைத் திறன் பயன்படுகிறது.

4.9.2 படைப்பாற்றல் (Creative Thinking Skill)


வாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகள், சூழல்கள், சவால்களை நம்முடைய நேரடிப் பட்டறிவின் வாயிலாக மட்டுமே கையாளாமல், அவற்றையும் தாண்டிய சிந்தனையோடு கையாள உதவும் திறனயே படைப்பாற்றல் திறன் என்கிறோம்.

எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்க்குப் படைப்பாற்றல் திறன் தேவைப்படுகிறது.


4.9.3 முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)


இந்த திறன் ஆக்கப்பூர்வமான முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நாம் எடுக்கும் வெவ்வேறு விதமான முடிவுகள், தெளிவுகள், இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் முடிவெடுக்கும் திறங்களைப் பொறுத்தே அமைகின்றன.

குறிப்பாக வளரிளம் பருவத்தினர், முன்பின் சிந்திக்காமல் செய்யக்கூடிய சில செயல்கள், அவர்களின் உடல் நலத்திற்க்குக் கேடு விளைவிக்கும். முடிவெடுக்கும் திறனை ஒருவர் பயிற்சியால் பெற்றுவிட்டால் அவருக்கு வானமும் வசப்படும்.

4.9.4. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்:

நம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமான வழியில் கையாளவும், தீர்க்கவும் இத்திறன் உதவுகிறது.

பிரச்சனைகளைக் கையாளாமலேயே விட்டுவிட்டால், அது பலவிதமான மன அழுத்தங்களையும், உடல் சார்ந்த சங்கடங்களையும் உருவாக்கும்.

இந்தத் திறன் நம் பிரச்சனைகளைக் கையாளும் வல்லமை அளிப்பதோடு. அவற்றை நம்முடைய வாய்ப்புகளாக மாற்றும் சந்தர்ப்பத்தையும் தருகிறது.

பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், நம் உணர்வுகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க உதவுவதோடு, முடிவுகள் எடுக்கவும் உந்துசக்தியாக அமையும்.


4.10 உணர்வுகளுடனான சமரசத் திறங்கள்

4.10.1 உணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல் (Coping with Emotions)

எண்ணங்களின் வெளிபாடுகளே உணர்வுகள். நமக்குள் இருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இத்திறன் உதவுகிறது. மேலும் நம் உணர்வுகளை, செயல்பாடுகளை எப்படி எல்லாம் பாதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளவும், உணர்வுகளைச் சரியான முறையில் எதிர்கொள்ளவும் இத்திறன் பெற்றிருப்பது இன்றியமையாததாகிறது

4.10.2 மன அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்தல் (Coping with Stress)

மன அழுத்தமென்பது ஒவ்வாத எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள்களால், ஏற்படும் மனநிலை. அதாவது ஒதுங்கியிருத்தல், கோபங்கொள்ளுதல், சமுதாய ஊட்டமின்மை, மன உளைச்சல் முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.

இவ்வாறு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், அறவே போக்கவும் அதற்கான காரண காரியத்தைச் சிந்திக்கும் ஆற்றல் வேண்டும். இம்மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கு மனத்தை நல்வழியில் திசை திருப்புவதும், சமுதாய நிகழ்வுகளில் கலந்துகொள்வது, படைப்பாற்றலில் ஈடுபடுவதுமே சிறந்து வழிகளாகும். இவ்வாறு செயல்படும் பொழுது மன அழுத்தத்தால் ஏற்படும் தீய விளைவுகளை குறையும்; மன அமைதிகிட்டும்.

4.11 வாழ்க்கைத்திறன்களை ஒருங்கிணைத்தல்

வாழ்க்கைத்திறன் கல்வியின் பத்து அடிப்படைத் திறன்களையும் தனித்தனியாகத் தெரிந்து கொண்டபின், அவற்றை ஒருங்கிணைத்தும் தொடர்புபடுத்தியும் செயல்படுத்தத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

எடுத்துக்காட்டாகத் தன்னை அறிதலும், கூர்சிந்தனைத் திறனுமாகிய இரண்டும் இணையும் பொழுதுதான் நம்மை நாம் புரிந்து கொள்ள முடியும். அதேபோல் நமக்கென்று இலக்குகளை வரையறுத்துக் கொள்வதற்குத் தன்னை அறிதல், கூர்சிந்தனைத்திறன், படைப்பாற்றல் திறன் ஆகிய மூன்றும் இணைந்த திறன் வெளிப்பாடு அவசியம்.

தன் உயர்வுகளைப் பிறருக்குச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவருக்குக் கூர்சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், தன்னைப் பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும்.


4.12 வாழ்க்கைத்திறன் கல்வியின் பயன்கள்

வளரிளம் பருவத்தினர் மனத்தையும், உடலையும் நலத்துடன் வைத்திருக்க வாழ்க்கைத்திறன் கல்வி பெரிதும் பயன்படுகிறது. இத்திறன்கள் பெறுவதால்,

ஆளுமை நிறைந்தவர்களாக உருவெடுப்பார்கள்.
பிறருடன் கருத்து ஒருமித்துப் பணியாற்றுவார்கள்.
சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வார்கள்.
இலக்குகளைஅமைத்துக் கொண்டு அவற்றை அடையப் பாடுபடுவார்கள்.

இலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சியின்போது ஏற்படும் மன அழுத்தங்களையும், சிக்கல்களையும் எதிர்நோக்கித் தீர்வுகாணும் வழிமுறைகளைக் கண்டறிந்து வெற்றிவாகை சூடுவார்கள்.

இரண்டு வழி காட்டப்பட்டுள்ளன
வழி - 1 :

ஒழுக்கம்
சுயமதிப்பு
பெற்றோரை மதித்தல், சொல் கேட்டல், படிப்பில் ஆர்வம், ஈடுபாடு, உழைப்பு, முயற்சி, உண்மை, இலக்கு நிர்ணயித்தல், மதிப்பு, நல்ல எண்ணங்கள்.
(11-18 வயது )
வெற்றி
பிரகாசமான வாழ்க்கை

வழி - 2 :

ஒழிக்கமின்மை
சுயமதிப்பின்மை
இனக்கவர்ச்சி, ஆத்திரம், பொய் பேசுதல், திருடுதல், மதிப்பின்மை, முயற்சியின்மை, பெற்றோருக்கு கீழ்படியாமை, படிப்பில் ஆர்வமின்மை, கோபம், ஆத்திரம், சோம்பல், பாட்டு-கேளிக்கைகளில் ஆர்வம்.
(11 வயது)
தோல்வி
இருள் அடைந்த வாழ்க்கை
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in