தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

நோயும் நோய்ப் பாதுகாப்பும்


5 .1 மனித உடல் - அற்புத இயந்திரம்


உடல் என்பது ஒரு அற்புதமான இயந்திரம். இந்த உடலுக்கு ஓர் அற்புதமான ஆற்றல் இருக்கிறது.

நாம் நடந்துகொண்டு இருக்கும் பொழுதே எதிரே ஒரு புழுதிப்படலம் வருகிறது. உடனே தனிச்சையாக நம் கண் இமைகள் மூடி கண்களைப் பாதுகாக்கின்றன. இதேபோல், நம் வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டால், அது மறுநாள் மலத்துடன் வெளியேறிவிடுகிறது.

சாதாரணக் காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் வரும் பொழுது, நாம் எந்தவித மருந்தையும் உட்கொள்ளாவிட்டால் கூட, ஒரு நாளில் உடல் தானாகவே சரியாகி விடுகிறது.

இதுதான் மனித உடலின் ஆற்றல். ஆனால், நாம் நம்முடைய பழக்கவழக்கங்கள் காரணமாகப் பல்வேறு வகையான நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.5.2 நோய் தொற்றும் முறை


நோய்க்குக் காரணம் கிருமிகள். கிருமிகள் மலம், மாசுபட்ட தண்ணீர், திறந்திருக்கும் உணவுப்பொருள்கள் இவற்றில் அதிகமாகக் காணப்படுகின்றன. கிருமிகள் பல்வேறு வழிகளில் நம் உடலுக்குள் செல்கின்றன.
மாசடைந்த நீரைக் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தும்போது
ஈக்கள் அமர்ந்த உணவை உண்ணும்போது
கீரைகள், காய்கறிகளை நன்கு கழுவி வேக வைக்காமல் உண்ணும் பொழுது
மண்ணில் விளையாடியபின் கைகளைச் சரியாகக் கழுவாமல் உணவு உண்ணும்போது
நகம் கடிக்கும்போது
மாசுக்காற்றை சுவாசிக்கும்போது
கிருமிகள் தோல், சளி சவ்வுப்படலம் மூலமாக
கொசுக்கடி


5.3 நோய்க்கிருமி உடலில் என்ன செய்கிறது?


நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகள் நம்மை எல்லா இடத்திலும் சூழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றின் பிடியிலிருந்து வெள்ளையணுக்கள் நம்மைக் காப்பாற்றுகின்றன.
இரத்தத்தில் தனித்தனிச் செல்களாக இருக்கும் வெள்ளையணுக்கள் இரத்தச் சுற்றோட்டத்துடன் கலந்து சுற்றி வருவதால் உடலினுள் கிருமிகள் நுழைந்ததும் இவற்றை அழிக்க நம் வெள்ளையனுக்களால் முடிகிறது.

வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு அணுக்களை (Antibodies) உற்பத்தி செய்து கிருமிகளை அழிக்க அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன. நம் உடலுக்கு நோயை எதிர்க்கும் திறன், இந்த நோய் எதிர்ப்பு அணுக்களின் அளவைப் பொறுத்தே உள்ளது. இதைத்தான் நோய் எதிர்ப்புத் திறன் (Immunity) என்கிறோம்.

இரத்தத்திலுள்ள இந்த நோய் எதிர்ப்பு அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு நோய் நம்மைப் பாதிக்குமா?
இல்லையா என்பது தீர்மானிக்கபடுகிறது. குறிப்பிட்ட வகை நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகமாக இருப்பின், அந்த வகை நோயை எதிர்க்கும் திறன் (Immunity) உள்ளது என்று சொல்கிறோம்.


5.4 நோய் எதிர்ப்புத்திறனை அடையும் வழிகள்


இயற்கையிலேயே சில நோய்களை எதிர்க்கும் திறன் நமக்குள்ளது. இதனை இயற்கை நோய் எதிர்ப்புத்திறன் என்கிறோம். வேறுவகைகளில் பெறப்படும் நோய் எதிர்ப்புத்திறன் (Artificial Immunity Power) என்கிறோம்.5.5 செயற்க்கை நோய் எதிர்ப்புத்திறனை பெறும் இரண்டு வழிமுறைகள்:

5.5.1 முதல் வழி

சில நோய்கள் வராமல் இருப்பதற்க்குத் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் அதிக அளவில் நோய் எதிர்ப்பு அணுக்களை
(Antibody ) உற்பத்தி செய்யும் திறனை வெள்ளையணுக்கள் பெறுகினறன. இத்தகைய நோய் எதிர்ப்புத்திறன் நீண்ட நாள்களுக்குப் பதுகாப்பு அளிக்கும். இதனை "இயங்கு நோய் எதிப்புத்திறன்" என்கிறோம்.

5.5.2 இரண்டாம் வழி:

நோய் எதிர்ப்பு அணுக்களை (Antibody ) நேரடியாக உடலுக்குள் செலுத்துவதை "இயங்கா நோய் எதிர்ப்புத்திறன்" என்கிறோம். இது அப்போதிருக்கும் நோயை எதிர்க்க மட்டுமே பயன்படும்; மற்ற நேரங்களில் பயன்தராது.


5.6 ஆண்டிபயாடிக் மாத்திரை:

டாக்டர்கள் ஆண்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்லும் பொழுது 3 நாள் அல்லது 5 நாள் என்று நாட்களைக் குறிப்பிட்டு சாப்பிடச் சொல்லுவார்கள். ஆனால் நம்மில் பலர், ஒரளவிற்க்கு நோயிலிருந்து குணமானவுடன் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிடுவர். இது மிகவும் தவறு. நோய்கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால்தான், அந்த நோய் திரும்பத் தொந்தரவு செய்யாது. சிகிச்சையைப் பாதியில் நிறுத்தினால் திரும்ப நோயின் பதிப்பு வரும்.


5.7 இரத்த வெள்ளை அணுக்கள்:

நாம் நோயில்லாமல் இருக்க வேண்டுமானால் கிருமிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம் வெள்ளையணுக்கள் பலம் குறைவாக இருந்தால் கூட நோய் வந்துவிடும்.5.8 காற்றின் மூலம் பரவும் நோய்கள்:

காசநோய், தட்டம்மை, கக்குவான், இருமல், தொண்டை அடைப்பான், சின்னம்மை, ப்ளு காய்ச்சல், ரணஜன்னி, மண்ணம்மை, கண்வலி, பொன்னுக்கு வீங்கி ஆகிய இந்நோய்கள் வைரஸ்களினாலும், பாக்டீரியாக்களினாலும் தோனறுகின்றன.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் பொழுதும், தும்மும் பொழுதும், துப்பும் சளியிலிருந்தும் அவர்கள் உடம்பிலிருந்து நோய்கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்கள் வௌடம்பினுக் நுழைகின்றன. நோய்த்தடிப்புச் சக்தி குன்றிய நிலையில் இக்கிருமிகள் நலத்துடன் இருப்போரையும் தூக்கி நோய்வாய்ப்படுத்தும்.


5.9 நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:

காலரா, டைபாய்டு, சீதபேதி ஆகியவை பாக்டீரியாக்களினால் ஏற்படுகின்றன. வயிற்றுப்போக்கு, இளம்பிள்ளைவாதம், மஞ்சள் காமாலை ஆகியவை வைரஸ்களினால் உண்டாகின்றன. சீதபேதி அமீபாவினால் உண்டாகிறது. குடற்புழுக்கள், உருளைப்புழுக்கள் போன்றவற்றாலும் நோய்கள் உண்டாகின்றன.


5.10 பூச்சிகள், விலங்க்குகள் வாயிலாக ஏற்படும் நோய்கள்:

மலேரியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் - கொசு மூலம் ஏற்படுகிறது.

ரேபிஸ் - வெறிநாய்கடி மூலம் ஏற்படுகிறது.5.11 நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்:

சொறி, சிரங்கு, தொழுநோய், பால்வினை நோய்கள் முதலியவை பிறர் தொடர்பால் ஏற்படுகின்றன.

நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:

1. நாள் தோறும் குளிக்கவேண்டும்.

2. தலைக்குக் குளித்து, எண்ணெய் தடவி, பேன், பொடுகு இல்லாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.

3. கை மற்றும் நகங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

4. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கைகளைச் சுத்தமாகக கழுவ வேண்டும்.

5. மலம் கழித்தபின் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும்.

6. கண்ட இடங்களில் மலம் கழிக்க கூடாது. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மலம் கழிக்கவேண்டும்.

7. மூக்கு நோண்டுவது, காது குடைவது போன்ற சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட வேண்டும்.

8. தும்மும்போதும், இருமும்போதும் வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

9. சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண்வேண்டும்.

10. சத்துணவு உட்கொண்டு நோய்த் தடுப்பாற்றலை வள்ர்த்துக்கொள்ள வேண்டும்.

11. தடுப்பு ஊசிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்க்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.

12. நோயின் அறிகுறி கண்ட உடனே நோய்வாய்ப்பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in