தமிழில் அரசியல், சினிமா கலப்படம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட, சிந்தனைக்கு உரமான, தன்னம்பிக்கை வலைப்பதிவான இந்த சிந்தனைசிற்பி வலைப்பதிவை கடந்த 4 வருடங்களாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000க்கும் அதிகமான மக்கள், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்து, படித்து அதன் மூலம் உலகில் தன்னம்பிக்கை விதையை தூவ இந்த வலைப்பதிவு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலக தமிழர்களுக்கு இந்த சிந்தனைசிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியனின் வேண்டுகோள் யாதெனில், உலக மக்கள் அனைவரும் துளசி செடி வளர்த்து, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்க வேண்டும். சிந்தனை சிற்பி, துளசி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் புத்தக காதலன் எனும் ஒப்பற்ற விருதை பெற்றிருக்கிறார்கள். பேராதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி... வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ! !

தினம் ஒரு சிந்தனை


வாசிப்பதை நேசி... நேசிப்பதை வாசி... இன்று உலக புத்தக தினம்.


உலக மக்கள் அனைவரும் நல்ல பயனுள்ள புத்தகங்களை


தவறாமல் வாங்கி படித்து அதன் படி நடந்து,


வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற


வாழ்த்தும் அடியேன் - சிந்தனை சிற்பி, திரு. க. பாலசுப்பிரமணியன்.

இந்திய இளைஞன் அறிவு ஜீவி.

பொதுவாக என்னுடைய தனிமனித மேம்பாட்டு வகுப்புகளில் கலந்து கொள்ளும் அன்பர்களைப் பார்த்து நான் கேட்கும் ஒரு கேள்வி, உங்களில் எத்தனை பேர் அறிவு ஜீவி, கையை உயர்த்துங்கள் என்பேன்.

என்னுடைய நூற்றுக்கணக்கான தனிமனித மேம்பாட்டு வகுப்புகளில் அதிகமான சமயம் ஒருவரோ அல்லது இருவரோ நான் அறிவு ஜீவி என்று முழுமையாக நம்பி, கையை உயர்த்துவார்கள்.

மற்றவர்கள் எல்லாம் அமைதியாக உட்கார்ந்து இருப்பார்கள். சிலர் அமைதியாக தலையைக் குனிந்து கொள்வார்கள்.அறிவு ஜீவி:

அமைதியாகக் கையை உயர்த்தாமல் 'நான் அறிவு ஜீவி இல்லை' என்ற தோரணையில் உட்கார்ந்து இருப்பவர்களைப் பார்த்துக் கேட்பேன். உங்களில் யாராவது அமெரிக்க நாட்டில் இருந்து வந்துள்ளீர்களா? அல்லது இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்துள்ளீர்களா? அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து வந்துள்ளீர்களா?

பதில் இல்லை....நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று ஒரே குரலில் பயிற்சி வகுப்பில் அமர்ந்துள்ள அனைவரும் சொல்லுவார்கள்.

கடைசியாக நான் சொல்லுவேன், அப்படி என்றால் நீங்கள் எல்லோரும் அறிவு ஜீவிகள் "ஒவ்வொரு இந்தியனும் ஒரு அறிவு ஜீவி". அதுதான் உண்மை. ஆனால் அந்த உண்மை நமக்குத் தெரியாது.இந்திய அறிவு ஜீவி:

ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே அறிவு ஜீவி
ஒவ்வொருவெளிநாட்டவரும் வளர்ப்பிலே அறிவு ஜீவி
இந்தியர்களாகிய நமக்கு நாம் ஒரு அறிவு ஜீவி என்ற உண்மை தெரியாது,

ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே அறிவு ஜீவி.......ஆனால், ஒவ்வொரு வெளினாட்டவரும் வளர்ப்பிலே அரிவு ஜீவியாக மாற்றப்படுகிறார்கள்.

பல இந்திய அறிவு ஜீவிகள் தான் ஒரு இந்திய ஜீவி என்ற விழிப்புணர்வு வாழ்நாள் முழுவதும் பெறாமல் வாழ்ந்து மடிகின்றனர்.

Indians are Born Genius
Western people are made Genius
We Indians do not know that we are Genius.


இந்தியன் சிறந்த மனிதன்:

ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே சிறந்த மனிதன்
ஒவ்வொருவெளிநாட்டவரும் வளர்ப்பிலே சிறந்த மனிதன்
இந்தியர்களாகிய நமக்கு நாம் ஒரு சிறந்த மனிதன் என்ற உண்மை தெரியாது, ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே சிறந்த மனிதன்
ஒவ்வொருவெளிநாட்டவரும் வளர்ப்பிலேயே சிறந்த மனிதனாக மாற்றப்படுகிறார்கள்.

Indians are born great
Western peoples are made Great
We Indians do not know that we are Great.


இந்தியன் தொன்மையான மனிதன்:

ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே தொன்மையான மனிதன்
ஒவ்வொருவெளிநாட்டவரும் வளர்ப்பிலேயே தொன்மையான மனிதனாகிறார்.
இந்தியர்களாகிய நமக்கு நாம் ஒரு தொன்மையான மனிதன் என்ற உண்மை தெரியாது.
ஒவ்வொரு இந்தியனும் பிறப்பிலேயே தொன்மையான மனிதன்....
ஒவ்வொருவெளிநாட்டவரும் வளர்ப்பிலேயே தொன்மையான மனிதனாகமாற்றப்படுகிறார்கள்.

Indians are born extradionary
Western peoples are made extradionary
We Indians do not know that we are extradionary


தன்னை ஆள்தல்...........தரணியை ஆள்தல்............

நேற்றைய இந்தியனின் அசைக்க முடியாத கோட்பாடு...
"தன்னை ஆண்டால், தரணியை ஆளலாம்!"

நேற்றைய மேலை நாட்டவரின் அசைக்க முடியாத கோட்பாடு...........
"தரணியை ஆண்டால், தன்னையும் மருத்துவர் மூலம் ஆளலாம்".

"Indians are fools, sitting on the Gold mine of Yoga"

- R. Ramamurthi, Neuro Surgen.


தரணியை ஆள்தல்............ தன்னை ஆள்தல்...........

இன்றைய இந்திய இளைஞனின் அசைக்க முடியாத கோட்பாடு............

"தரணியை ஆண்டால், தன்னை மருத்துவர் ஆள்வார் !

இன்றைய மேலை நாட்டு இளைஞனின் அசைக்க முடியாத கோட்பாடு.....

"தன்னை ஆண்டால், தரணியை ஆளலாம்".
0 Responses

.

சிந்தனை சிற்பியின் புத்தக சோலை


Tulasi International

C-176, Tenth Cross, Thillai Nagar, Trichy - 620 018

Contact: Chinthanai Cirpi K. Balasubramaniyan
H.P - +91 9843274012.
International Books

26B, NandhiKovil Street,
(LandMark: Canara Bank Basement)
Teppakulam,Trichy - 620 002

Contact: Mr. R. Swaminathan
Ph.no: 0431 - 2703743 & 2711599.
Hp: 9244549192
சிந்தனை சிற்பியின் புத்தகத்தை இணையதளத்தின் மூலம் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதளம்:
www.thannambikai.com www.thannambikai.net www.profkb.com www.tulasitulasi.org www.pathampathipagam.com www.tulasiinternational.com www.internationalbooks.co.in