வளரிளம் பருவப் பெண்களின் உரிமைகள்


வளரிளம் பருவம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பருவம். கவனக் குறைவாக இருத்தல், இன்னல்களை விளைவிக்கும் என்பதை உணர வேண்டும்.

இந்த வளரிளம் பருவத்தில் பிரச்சனைகளில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீள என்னென்ன சட்டங்கள் உள்ளது என்பதை குறித்து விழிப்புணர்வு வளரிளம் பெண்களுக்குத் தேவை. பெண்களுக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்த விழிப்புணர்வு தேவை.



7.1 பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு

1989 ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு சீர்திருத்தம்) சட்டப்படி 25
3-1989 க்குப் பிறகு திருமணமான பெண்களுக்கும் ஆண்களைப் போலவே
பரம்பரைச் சொத்தில் பங்குண்டு.

தந்தையின் சுய சம்பாத்தியச் சொத்து தந்தை உயில் எழுதி வைக்காமல் இருந்தால், அவர் காலத்திற்கு
பின்பு சகோதரனுக்குச் சமமான சொத்துரிமை
பெண்களுக்கும் உண்டு. அதாவது மகன்கள், மகள்கள், மனைவி எல்லோருக்கும் சொத்தில் சம பங்கு உண்டு.




7.2 இந்து திருமண விவாகச் சட்டம்

இந்து விவாகச் சட்டப்படி ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கக் கூடாது. கோர்ட்டின் மூலம் விவாகரத்து பெற்ற பின்தான் மறுமணம் செய்துக் கொள்ள முடியும்.



7.3 குழந்தை விவாகத் தடுப்புச் சட்டம்

1976 ம் வருட குழந்தை விவாகத் தடுப்பு சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கும் 21 வயதுக்குட்பட்ட ஆணுக்கும் விவாகம் செய்வது குற்றமாகும்.



7.4 திருமண வயது

திருமணத்தின் போது ஆண் 21 வயது நிரம்பியவராகவும் பெண் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

21 வயது நிரம்பாத ஆண்மகனும், 18 வயது நிரம்பாத பெண்மகளும் குழந்தைகள் எனப்படுவர். இவர்கள் திருமணம் செய்ய முடியாது, இது சட்டப்படி குற்றமாகும்.




7.5 குழந்தைத் திருமணம்:


குழந்தைகள் திருமணத்தை மணமக்கள் தாங்களே செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை உண்டு. 15 நாள் சிறைவாசம் அல்லது ரொக்க அபராதம் ரூ 1000 அல்லது இரண்டும் சேர்ந்து.

குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர்கள், சுற்றத்தார்கள் மற்றும் புரோகிதர்கள் ஆகியோர்களுக்கும் தண்டனை உண்டு. மூன்று மாத சிறைத் தண்டனை ரொக்க அபராதம் உண்டு.

ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படும் என்று அச்சுறுத்தி அவளுடைய சம்மதத்தைப் பெற்றும், பெண் பத்தி சுவாதீனமற்று இருந்தால் அல்லது ஒருவரால் போதையூட்டக்கூடிய மயக்கம் உண்டாகக்கூடிய பொருள் அளிக்கப்பட்டிருந்ததின் விளைவாக அவளுடைய சம்மதத்தைப் பெற்றும், பெறாமலும் மேற்கொல்லப்படும் உடலுறவு பாலியல் பலாத்காரமே ஆகும்.

தனக்குக் கீழ் பணியாற்றும் ஓர் அலுவலரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணிடம் அல்லது காவல் நிலையத்திற்க்கு விசாரணைக்கென்று பெண்களை அழைத்து தம் அதிகாரத்தை பயன்படுத்தி ஆசைகாட்டி மிரட்டி உடலுறவு கொள்ளுதல் பாலியல் பலாத்காரமே ஆகும்.




7.13 பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன்னல்களுக்கான தண்டனைகள்:


1. வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ஆயுள் தண்டனை.
2. தற்கொலை செய்ய தூண்டினால் 10 வருட சிறை தண்டனை.
3. பெண்களை கடத்தினால் 7 வருட கடுங்காவல் தண்டனை.
4. பெண்களைக் கற்பழித்தால் ஆயுள் தண்டனை.
5. இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் 7 வருட சிறை தண்டனை.
6. கணவன் துன்புறுத்தினால் 3 வருட சிறை தண்டனை.
7. பெண்களை இழிவாகப் பேசினால் 2 வருட தண்டனை.




7.14 பெண்களுக்கு உதவும் கரங்கள்:


பெண்கள் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள நமக்கு உதவும் நிறுவனங்கள்,

1. தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகம்.
2. குடும்ப நீதி மன்றம்.
3. குடும்ப ஆலோசனை மையம்.
4. இலவச சட்ட உதவி மையம்.
5. மகளிர் காவல் நிலையம்.
6. தொண்டு நிறுவனம்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.